சென்ற டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலத்தில், இந்திய ஜி.எஸ்.எம். வகை மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 64 கோடியாக உயர்ந் துள்ளது. நவம்பரில் இந்த எண்ணிக்கை 63.21 கோடியாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் மட்டும், புதிதாக 75 லட்சத்து 50 ஆயிரம் பேர், ஜி.எஸ்.எம். வகை இணைப்பினைப் பெற்றனர். ஐடியா செல்லுலர் நிறுவனம், அதிக பட்சமாக 23 லட்சத்து 90 ஆயிரம் புதிய வாடிக்கையாளர் களை இணைத்தது. இவர்களுடன் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 10.64 கோடியாக உயர்ந்தது. பார்தி ஏர்டெல் நிறுவனம் 9.20 லட்சம் புதிய சந்தாதாரர்களைப் பெற்று, தன் வாடிக்கை யாளர்கள் எண்ணிக்கையை 17.57லட்சமாக உயர்த்தியது. வோடபோன் எஸ்ஸார் நிறுவனம் 9 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து, மொத்த எண்ணிக்கையை 14.77 லட்சமாக உயர்த்தியது.
இந்த பிரிவில் பொதுத்துறையில் இயங்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்களிப்பு குறைவாகவே இருந்தது. இந்நிறுவனம் 4.20 லட்சம் வாடிக்கையாளர்களைப் புதியதாக இணைத்துக் கொண்டது. இவர்களையும் சேர்த்து, பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 9.27 கோடியானது.
யூனிநார் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் 21.20 லட்சமாக இருந்தது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.