கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 பிப்
2012
00:00

கேள்வி: நான் நோக்கியா மொபைல் போன் ஒன்றை பயன்படுத்தி வருகிறேன். இந்த மொபைல் போன் பேக்டரியில் எப்போது தயாரிக்கப்பட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது. இணைய தளம் இதற்கு உதவிடுமா?
-ஆர். கலையரசி, திருச்சி.
பதில்: இணைய தளம் சென்றால், அந்த குறிப்பிட்ட மாடல் எந்த ஆண்டில் வெளியானது என்ற தகவல் கிடைக்கும். ஆனால், நீங்கள் வைத்துள்ள போன் எப்போது தயாரிக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்காது. அதற்கு போனிலேயே ஒரு வசதி உண்டு. *#3283# என்ற குறியீடு களையும் எண்களையும் அழுத்தவும். போன் தயாரான தேதி கிடைக்கும். *#92702689# என்ற குறியீடுகளுக்கு, கூடுதலாகப் பல தகவல்கள் கிடைக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். அதில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்தவுடன், அது லைப்ரரீஸ் என்ற போல்டருக்குச் செல்கிறது. இதற்குப் பதிலாக, நான் விரும்பும் போல்டருக்கு செல்ல என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்?
-சி. கிருஷ்ண ராஜ், புதுச்சேரி.
பதில்: டாஸ்க் பாரில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஐகானைக் கண்டறியவும். அல்லது சர்ச் பாக்ஸில், Windows Explorer என டைப் செய்திடவும். கிடைக்கும் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு ஷார்ட்கட் (Shortcut) டேப்பில் கிளிக் செய்தால், அதில் Target என்பதனை அடுத்து ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் கிடைக்கும். இதில் %windir%\explorer.exe என்று டைப் செய்து, பின் எந்த போல்டரில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட வேண்டுமோ, அதனை டைப் செய்து Path அமைக்கவும். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. எந்த போல்டரில் திறக்கப்பட வேண்டுமோ, அந்த போல்டர் செல்லவும். அட்ரஸ் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு Copy address as text என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், Target பாக்ஸில் இதனை பேஸ்ட் செய்திடவும். பின்னர் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். இப்போது விண்டோஸ் எக்ஸ்புளோரர் இயக்கினால், நீங்கள் தேர்ந்தெடுத்த போல்டரில் விண்டோ திறக்கப்படும்.

கேள்வி: வின்டோஸ் 7 சிஸ்டத்திலேயே பைல்களை ஸ்கேனரில் ஸ்கேன் செய்திடும் வசதி உள்ளதாகப் படித்தேன். இதனை எப்படி இயக்குவது?
-சி. நடராஜன், மதுரை.
பதில்: நல்ல கேள்வி. விண்டோஸ் 7 சிஸ்டம் இந்த வசதியைக் கொண்டுள்ளது. ஒரு பைலை ஸ்கேனரில் ஸ்கேன் செய்து பார்க்க, நீங்கள் வைத்திருக்கும் தர்ட் பார்ட்டி புரோகிராம்களை இயக்க வேண்டியதில்லை. கீழ்க்கண்டபடி செயல்படவும். ஸ்கேனரில் உங்கள் டாகுமெண்ட்டினை வைத்திடவும். அடுத்து Start>Devices and Printers எனச் செல்லவும். இங்கு உங்கள் ஸ்கேனரை தேடிக் கண்டறியவும். அதன் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் startscan என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு விண்டோ கிடைக்கும். இதில் என்ன வண்ணம், எந்த வடிவம், ரெசல்யூசன் தேவை என பல ஆப்ஷன்கள் தரப்படும். இவற்றை ஒதுக்கிவிட்டு, Scan பட்டனில் கிளிக் செய்திடவும். டாகுமெண்ட் ஸ்கேன் செய்யபப்டும். இது முடிந்தவுடன் உங்களுக்கு சில ஆப்ஷன்கள் தரப்படும். இதில் Import என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடலாம். விண்டோஸ் நீங்கள் ஸ்கேனரில் ஸ்கேன் செய்திடும் டாகுமெண்ட்களுக்காக மட்டும் ஒரு போல்டரைத் தயார் செய்து அதில் போட்டு வைக்கும். அல்லது Import Settings என்பதில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் போல்டரில், ஸ்கேன் செய்யப் பட்ட டாகுமெண்ட்டை சேவ் செய்து வைத்திடலாம். இதை Fantastic என்று சொல்வதா! இல்லை Scantastic என்று சொல்வதா!!

கேள்வி: இணையத்தில் தளம் ஒன்றைப் பெற யு.ஆர்.எல். என ஒரு தொடரைப் பயன்படுத்துகிறோம். இந்த இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
-க. வினோத் குமார், தாம்பரம்.
பதில்: இணைய தளம் ஒவ்வொன்றும் ஒரு சர்வரில் பதிந்து வைக்கப்பட்டு நமக்கு இணைய தொடர்பின் மூலம் கிடைக்கிறது. அந்த சர்வரின் பெயர், தன்மையைக் காட்டுவதே அதன் யு.ஆர்.எல். இணைய தளம் என்பது ஒரு வீடு என்றால் அதன் அஞ்சல் முகவரி தான் யு.ஆர்.எல்.

கேள்வி: மிர்ரர் சைட் என ஏன் ஒரு இணைய தளத்தை அழைக்கின்றனர். இது எதற்கான கண்ணாடி?
-செ.உமையாள், மதுரை.
பதில்: ஓர் இணைய தளம் அல்லது எப்.டி.பி. முறையில் அமைக்கப்பட்ட தளத்தின் இன்னொரு நகலே மிர்ரர் சைட். ஒரிஜினல் தளமானது அதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது கேட்கப்படும் தகவல்களைத் தர இயலாமல் தடுமாறும். அப்போது இந்த மிர்ரர் சைட் எனப்படும் நகல் தளம் தொடர்பு கொள்ளப்பட்டு தகவல்கள் அளிக்கப்படும். பெரும் எண்ணிக்கையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகையில், முதன்மை தளத்திற்கு இது போன்ற மிர்ரர் சைட்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்குவதனைக் காணலாம். அதே போல அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்படும் புரோகிராம்களை வைத்திருக்கும் தளங்களுக்கும் அதன் நிர்வாகிகள் இது போல நகல் தளங்களை அமைத்து இயக்குகின்றனர்.

கேள்வி: வேர்டில் புதிதாக உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டை சேவ் செய்திட Save/Save As இரண்டில் எதனைப் பயன்படுத்த வேண்டும்? வித்தியாசமாக இவை டாகுமெண்ட்டை சேவ் செய்திடுமா?
-சி.கே. செல்வராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.
பதில்: புதிதாக உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டினை சேவ் செய்திட, நீங்கள் குறிப்பிட்ட எந்த கட்டளையையும் பயன்படுத்தலாம். ஏற்கனவே உருவாக்கி சேவ் செய்யப்பட்ட டாகுமெண்ட்டினை சேவ் செய்திடவும் இரண்டையும் பயன்படுத்தலாம். ஆனால் இதில் வேறுபாடான வகையில் டாகுமெண்ட் சேவ் செய்யப்படும். Save கட்டளை பயன்படுத்துகையில், மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அல்லது மாற்றங்களுடன், ஏற்கனவே உள்ள பெயரில் டாகுமெண்ட் சேவ் செய்யப்படும். Save As கட்டளை பயன்படுத்தினால், புதிய பெயரில், புதிய மாற்றங்களுடன் டாகுமெண்ட் சேவ் செய்யப்படும். Save As கட்டளை கொடுத்து சேவ் செய்திட முயற்சிக்கையில், பைலுக்கு புதிய பெயர் கேட்கப்படும். நீங்கள் பழைய பெயரைக் கொடுத்தால், இந்த பெயரில் ஏற்கனவே ஒரு பைல் உள்ளது. அதன் இடத்தில் இதனை சேவ் செய்துவிடவா? என்று கேள்வி கேட்கப்பட்டு, உங்கள் பதில் படி சேவ் செய்யப்படும்.

கேள்வி: எக்ஸெல் சார்ட்களைப் பொறுத்த வரை நான் வண்ணத்தில் ஏற்படுத்துவதனையே விரும்புகிறேன். ஆனால் அவை சாலிட் கலராக இருக்கின்றன. Fill Effects டயலாக் பாக்ஸில் ட்ரான்ஸ்பரன்ஸி கண்ட்ரோல் இருந்தாலும் அவை செயல்படா வண்ணம் உள்ளன. ட்ரான்ஸ்பரன்ஸியுடன் கூடிய கலர் அமைக்க என்ன செய்யலாம்?
-பேரா. என். கண்ணன், மதுரை.
பதில்: நல்ல அருமையான அனுபவத்தில் இந்த கேள்வியினை அனுப்பி உள்ளீர்கள். பாராட்டுக்கள். இதோ கேள்வி குறித்த விளக்கத்தினைத் தருகிறேன். இங்கு ஒரு பார் அல்லது கால வரிசையினை ஒரு படத்தை ஒட்டி அதனை ட்ரான்ஸ்பரன்ட் ஆக வைத்துக் கொள்வது குறித்து டிப்ஸ் தருகிறேன்.
1. முதலில் வழக்கம் போல சார்ட் தயார் செய்து கொள்ளுங்கள். அது பார் சார்ட் அல்லது காலம் சார்ட் ஆக இருக்க வேண்டும்.
2. டிராயிங் டூல் பாரினைக் கொண்டு வரவும். ஒர்க் ஷீட்டில் ஒரு செவ்வக (Rectangle AutoShape) ஆட்டோ ஷேப்பினை இணைக்கவும்.
3. இனி செவ்வக ஆட்டோ ஷேப்பின் உள்ளாக டபுள் கிளிக் செய்திடவும். இப்போது Format AutoShape டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. ஆட்டோ ஷேப் டயலாக் பாக்ஸில் Colors and Lines என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
5. கலர் கண்ட்ரோலைப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு கலரைத் தேர்ந்தெடுக்கவும்.
6. அதன்பின் Transparency ஸ்குரோல் பாரினைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட அளவு ட்ரான்ஸ்பரன்சி செட்டிங்கை அமைக்கவும்.
7. நல்ல ரிசல்ட் வர வேண்டும் என்றால் கண்ட்ரோலினைப் பயன்படுத்தவும். NoLine என்பதை அமைக்கவும்.
8. AutoShape டயலாக் பாக்ஸை இனி மூடவும்.
9. இனி AutoShape தேர்ந்தெடுக்கவும். Shift செலக்ட் செய்து Copy Picture தேர்ந்தெடுக்கவும். இந்த கட்டளை ஷிப்ட் கீயை அழுத்தினால் தான் கிடைக்கும். அதில் தரப்பட்டுள்ள டிபால்ட் செட்டிங்ஸை ஒத்துக் கொள்ளவும்.
10. உங்கள் சார்ட்டை இயக்கவும். பாரில் கிளிக் செய்திடவும். அல்லது நெட்டு வரிசையில் வரிசையில் கிளிக் செய்திடவும்.
11. Edit Paste தேர்ந்தெடுத்து காப்பி செய்து வைத்திருக்கின்ற AutoShapeனை பேஸ்ட் செய்திடவும்.
12. AutoShapeனை பார்டர் இன்றி பார்மட் செய்திருந்தால் உங்கள் சார்ட் வரிசைக்கு பார்டர் சேர்க்கலாம். வரிசையில் டபுள் கிளிக் செய்து Format Data Series டயலாக் பாக்ஸில் Patterns டேப்பினைப் பயன்படுத்தவும்.
இத்தனையும் பொறுமையாக மாற்றாமல் மேற்கொண்டால் நீங்கள் கேட்டுக் கொண்ட எபக்ட் கிடைக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஹாரிஸ் - chennai,இந்தியா
16-பிப்-201214:00:32 IST Report Abuse
ஹாரிஸ் I Bought a Bluetooth device, when i pluged in tem but it showing bluethooth peripheral failed, Driver installing failed. where i can get the driver software. i am using Windows 7 os. please give me the solution.
Rate this:
Share this comment
Cancel
ச.முரளி - சென்னை,இந்தியா
15-பிப்-201214:03:26 IST Report Abuse
ச.முரளி நான் முன்பெல்லாம் கம்ப்யூட்டர் மலரை புத்தகமாக டவுன்லோட் பண்ண முடிந்தது . ஆனால் இப்பொழுது அப்படி பண்ண முடியவில்லை . ஏன் . தயவுசெய்து வேறு ஏதேனும் வழி உள்ளதா என்று சொல்லவும் .அதை நான் எப்படி பண்ணுவது .நன்றி
Rate this:
Share this comment
Cancel
ச.கோவிண்டச்வாமி - Coimbatore,இந்தியா
14-பிப்-201205:34:27 IST Report Abuse
ச.கோவிண்டச்வாமி கம்யூட்டர் மலரை டௌன்லோட் செய்யும் போது சில English வார்த்தைகள் இப்படி ஜம்பிள் (“ஐட்ணீதடூண்ஞு”) ஆகி வருகின்றன. இதை முன்பே உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன். கோவிந்தசாமி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X