ஐ.டி., பணி கிடைக்க தேவைப்படுவது என்னென்ன
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2012
00:00

ஐ.டி., என்பது இன்று எந்தத் துறையிலும் தேவைப்படும் தொழில்நுட்பமாக மாறியுள்ளதை அறிவோம்.
இன்றைய இளைஞர்களின் கனவுக் கோட்டையாகவும், லட்சிய இலக்காகவும் இத் துறை திகழ்கிறது. இந்தத் துறையின் வளர்ச்சியானது மற்ற பல துறைகளுக்கான விருப்பங்களை புரட்டிப் போட்டுள்ளது. ஆனால் இந்தத் துறையில் நுழைவது நாம் நினைப்பது போல் மிகவும் எளிதானதல்ல.
இந்தத் துறையின் சிறந்த அடையாளங்களாகக் கருதப்படும் டைஸ்.காம், மான்ஸ்டர். காம், நவ்க்ரி.காம், ஜாப்ஸ்.சிலிகன் இந்தியா.காம் போன்றவற்றின் மூலமாகவே இன்றைய இளைஞர்கள் தங்கள் பணி வாய்ப்பைத் தேடுகிறார்கள். ஐ.டி., நிறுவனங்களில் உள்ள டெக்னிகல் பதவிகளை பல்வேறு ஐ.டி., முடித்த இளைஞர்கள் ஏன் பெற முடிவதில்லை என்பதற்கு முக்கிய காரணங்களாக சிலவற்றை எச்.ஆர்., நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அவை இதோ...
பயிற்சித் திறன் : இன்றைய சூழலில் கல்லூரிகளில் ஐ.டி., குறித்து அதிக பாட திட்டத்தை குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் முடிக்க வேண்டியிருப்பதால் முழுமையான பயிற்சியளிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால் இத்துறை சார்ந்த நிறுவனங்களோ தங்கள் பணிச் சூழலுக்குத் தேவையான திறன்கள் கொண்டவர்களை மட்டுமே பதவியில் நியமனம் செய்ய விரும்புகின்றன.
எனவே ஐ.டி., துறையில் நீங்கள் நுழைய விரும்பும் பட்சத்தில் இத்துறை சார்ந்த அறிவை நீங்கள் மேலும் அப்டேட் செய்வது முக்கியமானதாகும். எதிர்காலப் பணித் தேவைகளுக்காக பயிற்சி பெறுவதை குறைந்த நபர்களே விரும்புகிறார்கள். உங்கள் நடத்தை, ஆளுமைத் தன்மை, பணி குறித்த அறிவு ஆகியவற்றைப் பொறுத்தே உங்களுக்கு இந்த ஐ.டி., நிறுவனங்களில் பணி கிடைக்கும் என்பதால் இவற்றை மேம்படுத்து மிக முக்கியமானதாகும்.
படித்தவற்றை செயல்படுத்துவது : இன்றைய கல்வித் திட்டத்தின் பொருள் நடைமுறைப் பணிச் சூழலில் அவற்றை செயல்படுத்துவது குறித்து முழுமையாக விளக்குவதில்லை. இதனால் தேவையற்ற பல்வேறு பகுதிகளைப் படித்த போதும், அன்றாட அலுவலக சூழலில் படித்தவற்றில் பலவற்றையும் செயல்படுத்தத் தெரியாமல் திணறுவதை காண முடிகிறது. படித்தவற்றை நடைமுறைப் படுத்தும் திறன் இருக்கிறதா என்பதை ஐ.டி., நிறுவனங்கள் உங்களிடன் நிச்சயமாக பரிசோதிக்கும் என்பதால் இந்தப் பிரிவில் உங்கள் திறமைகளை மேம்படுத்துவது நல்ல பலன்களைத் தரும்.
உங்கள் ரெஸ்யூமின் தன்மை : சில ஐ.டி., துறை நாட்டம் கொண்ட பட்டதாரிகள், மிகச் சிறந்த திறமைகள் இருந்தும் கூட அவற்றை வேலை வாய்ப்பு சந்தையில் விற்பதில் தோல்வி அடைகிறார்கள். எனவே உங்கள் ரெஸ்யூம் மிகவும் பலம் வாய்ந்தபடியாக அமைப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
உங்கள் திறமைகள், அனுபவம், அறிவு போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் கூர்மையுடன் வடிவமைப்பது நல்லது. உங்களுக்கு பல்வேறுபட்ட திறமைகள் இருந்தாலும் ஒரு குவிப்புடன் ஒரு துறை சார்ந்ததாக ரெஸ்யூமை வடிவமைப்பதே நல்லது. உங்கள் ரெஸ்யூம் பொதுவானதாக வடிவமைக்கப்பட்டால் உங்கள் வாய்ப்புகள் மங்கிவிடும்.
பணி தேடும் திறமை : இன்று இருக்கும் பல்வேறு பணி தேடும் வாய்ப்புகளுக்கிடையே எப்படி உங்களுக்கான பணியைத் தேர்ந்தெடுப்பது என்ற வழிமுறைகளை ஐ.டி., பணி தேடும் ஒருவர் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். வழக்கமாக பணி தேடுவதற்கு நாம் உபயோகிக்கும் இணையதள போர்ட்டல்களுடன் நமது தனிமனித வலையமைப்பு மற்றும் சோசியல் மீடியாக்களின் மூலமாக நமது கனவுப் பணியை அடைய முடியும். எந்த நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு செல்ல இருக்கிறோமோ அந்த நிறுவனத்துடன் நமது தகவல் உறவை முன்னரே ஏற்படுத்துவது நல்ல பலன் தரும் என்று கூறுகிறார்கள்.
என்னென்ன பதவிகள் காலியாக உள்ளது, அவை எப்போது, எப்படி நிரப்பப்பட உள்ளன என்பது போன்ற தகவல்களை நீங்கள் பலப்படுத்துவதன் மூலம் பதவியைப் பெறத் தேவையான தகுதிகள் உங்களுக்குத் தெளிவாகப் புரிய வரும். இந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் ஐ.டி., துறையில் நல்ல மற்றும் எதிர்பார்த்த பணி வாய்ப்பினைப் பெற முடியும் என்பதே இத்துறை சார்ந்த எச்.ஆர்., நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X