கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2012
00:00

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தை இயக்கி வருகிறேன். இதில் விண்டோஸ் தரும் அப்டேட் பைல்கள் அனைத்தும் என் கம்ப்யூட்டரில் அப்டேட் ஆகிவிட்டதா என நாமாக அறிய முடியுமா? அதற்கான ஸ்டெப்ஸ் என்ன என்று விளக்கமாகக் கூறவும்.
-கே.அனுராதா, கோவை.
பதில்:விண்டோஸ் 7 சிஸ்டம் உங்கள் சிஸ்டம் இன்டர்நெட்டில் இணைக்கப் பட்டுள்ள நிலையில், தானாகவே மைக்ரோசாப்ட் தளம் சென்று, புதிய அப்டேட் பைல்களை டவுண்லோட் செய்து, அவற்றைக் கம்ப்யூட்டரில் நிறுவிக் கொள்கிறது. இந்த செயல்பாடு “Windows Updates” என அழைக்கப்படுகிறது. இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகையில், நாமாக அப்டேட் பைல் குறித்து சோதனை செய்திடவும், அவற்றை இன்ஸ்டால் செய்திடவும் ஆப்ஷன் தரப்படுகிறது. இதனை எப்படி மேற்கொண்டு, அப்டேட் பைல்களை இன்ஸ்டால் செய்வது எனப் பார்க்கலாம்.
முதலில் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட்டில் இணைந்துள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளவும். அடுத்து ஸ்டார்ட் மெனு திறந்து, சர்ச் கட்டத்தில் “Updates” என டைப் செய்திடவும். உடன் முக்கிய சில தேடல் முடிவுகளை விண்டோஸ் 7 உங்களுக்குக் காட்டும். இந்த முடிவுகளில் “Windows Updates” அல்லது “Check for Updates” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இந்த இரண்டு லிங்க்குகளில் கிளிக் செய்திடும்போதும் ஒரே விளைவு தான் ஏற்படும். இதன் பின்னர், கண்ட்ரோல் பேனலில் “Windows Update” என்ற திரை காட்டப்படும். இதில் இடது பக்க பிரிவில் காட்டப்படும் check for the Updates என்ற லிங்க்கில் நீங்கள் கிளிக் செய்திட வேண்டும். புதிய அப்டேட் பைல்களுக்காக, விண்டோஸ் மைக்ரோசாப்ட் சர்வரை அடைந்து சோதனை செய்திடும். அப்டேட் செய்யப் பட வேண்டிய பைல்கள் இருந்தால், அவை தரவிறக்கம் செய்யப்பட்டு உங்கள் அனுமதியோடு இன்ஸ்டால் செய்யப்படும். இல்லை எனில், “no important updates available” என்ற செய்தி காட்டப்படும்.

கேள்வி: கம்ப்யூட்டர் பைல்கள் குறித்த கட்டுரைகளில் டெம்ப்ளேட்டுகள் என எதனைக் குறிக்கிறீர்கள். இவற்றினால் என்ன பயன்?
-சா. குணசேகரன், மதுரை.
பதில்: நாம் பயன்படுத்தும் சாப்ட்வேர் புரோகிராம்களில், பைல்களை உருவாக்குகையில், அதற்கான அடிப்படைக் கட்டமைப்பினைத் தருவதற்காக அமைக்கப்பட்ட வடிவமைப்பினையே டெம்ப்ளேட்டுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதனால், பைலை வடிவமைக்கும் நேரம் நமக்கு மிச்சமாகிறது. ஆயத்தமாக உள்ள டெம்ப்ளேட்டுகளை நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்களே இவற்றை உருவாக்கலாம். அல்லது மாற்றி அமைக்கலாம். இதற்கான குறிப்புகளை http://office.microsoft.com/enus/templates/FX 100595491033.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தில் காணலாம்.

கேள்வி: இன்டர்நெட்டிலிருந்து ஏதேனும் பைல்களை டவுண்லோட் செய்திடுகையில், இதனை ரன் செய்திடவா? அல்லது சேவ் செய்திடவா? என்று ஆப்ஷன் தரப்படுகிறது. இவற்றில் எதனைத் தேர்ந்தெடுத்தால் நல்லது?
-பேரா.சா.ஆசைத்தம்பி, சென்னை.
பதில்:இந்த இரண்டில் எதனை செலக்ட் செய்தாலும் அது அந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடும் சரியான வழியையே தேர்ந்தெடுக்கும். இரண்டிற்கும் வேறுபாடு என்னவெனில் அந்த செட் அப் பைல் எந்த இடத்திலிருந்து திறக்கப்படுகிறது என்பதுதான். Save என்பதில் கிளிக் செய்தால் அந்த பைலை நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் எங்காவது பதிந்து வைத்து, பின்னர் வேண்டும்போது அல்லது நேரம் கிடைக்கும்போது இன்ஸ்டால் செய்திடலாம். சிடியில் காப்பி செய்து எடுத்துக் கொண்டு போய் சிடியில் வைத்தவாறே வேறு கம்ப்யூட்டரில் அல்லது நெட்வொர்க் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடலாம். Run என்பதில் கிளிக் செய்தால் பைல் சேவ் செய்யப்பட்டு உடனே இயங்கத் தொடங்கும்; இன்ஸ்டால் ஆகும். ஆனால் இந்த செட் அப் பைல் டெம்பரரி போல்டரில் தங்கும். உங்களுக்கு அது வேண்டும் என்றால் வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சிலர் டெம்பரரி பைல்களைக் காலி செய்திடக் கட்டளை கொடுத்திருப்பார்கள். அல்லது அவர்களே காலி செய்வார்கள். எனவே இதில் உங்கள் விருப்பம் தான் இறுதியாகும். நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் பல சாப்ட்வேர் புரோகிராம்களை டவுண்லோட் செய்திடும் பழக்கம் உள்ளவராக இருந்தால், சாப்ட்வேர் என்ற பெயரில் தனியே ஒரு ட்ரைவ் அல்லது போல்டரை உருவாக்கி, அதில் சேவ் செய்து வைக்கலாம். தேடி எடுக்க எளிதாக இருக்கும். மேலும், தேவை இல்லை எனில் அப்போது அழித்துக் கொள்ளலாம்.

கேள்வி: நான் தயாரித்த வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் page border கொடுத்து லேசர் பிரிண்டரில் அச்சடித்து எடுத்தேன். அதில் கீழ் பார்டர் மட்டும் அச்சாகவில்லை. என்ன காரணம்? சரியாக அமைக்க என்ன செட்டிங்ஸ் செய்திட வேண்டும்?
-நே. மஹேந்திரன், திருப்பூர்.
பதில்: காகிதத்தின் கீழ் விளிம்பில் இருந்து 0.67 அங்குல அளவில் உள்ள பகுதியை dead zone எனப் பல லேசர் பிரிண்டர்கள் எடுத்துக் கொள்ளும். எனவே Bottom Margin அளவை அதிகரியுங்கள். File => Page Setup கட்டளை கொடுங்கள். Layout டேபை அழுத்துங்கள். Borders பட்டனையும் அடுத்து Option பட்டனையும் அழுத்துங்கள். Measure from என்ற டிராப்- டவுனில் இருந்து Text என்பதை தேர்வு செய்து OK செய்யுங்கள். இனி நீங்கள் விரும்பியபடி அச்சில் டாகுமெண்ட் கிடைக்கும்.

கேள்வி: அலுவலக டேட்டா பைல்கள் பலவற்றை சிடிக்களில் பேக் அப் எடுத்து வைத்தேன். ஆனால் தற்போது கம்ப்யூட்டரில் சிடி ட்ரைவில் போட்டால், வெகு நேரம் சுழன்றுவிட்டு, படிக்க இயலவில்லை என்று செய்தி கிடைக்கிறது. சில வேளைகளில் பாதிவரை சென்று பைல்களைத் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கான தீர்வு என்ன? பைல்களில் உள்ள டேட்டாவினைப் பெற இயலுமா?
-என். கணேஷ் குமார், சிதம்பரம்.
பதில்: சிக்கல் தான். வெகுநாட்கள் கெடாமல் இருக்கும் என்று சிடிக்களில் பைல்களைப் பதிந்து வைக்கிறோம். ஆனால் இவை பல காரணங்களால் பின்னர் படிக்க இயலவில்லை. ஈரப்பதம் காரணமாக பூஞ்சை பிடித்து இயங்கா நிலை ஏற்படலாம். அல்லது காலப் போக்கில் அவற்றைக் கையாள்கையில் கெட்டுப் போகும் வாய்ப்பும் உண்டு. இத்தகைய சிடிக்களைப் படித்து அறிந்து பைல்களைப் பெற இலவச புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. இதன் பெயர் இஈஇடஞுஞிடு. இது சில நொடிகளில் உங்கள் சிடி அல்லது டிவிடியில் கெட்டுப் போன பைல்களை அடையாளம் காட்டுகிறது. அதில் உள்ள டேட்டாவினை மீட்க முடியுமா என்றும் காட்டுகிறது. பின்னர் அவற்றை மீட்டு ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து தருகிறது.இதைப் பெறக் கீழ்க் காணும் இணைய தளங்களை அணுகவும்.
http://download.cnet.com/CDCheck/30002086_410339637.html
http://www.freecodecs.com/download/ cdcheck.htm

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், ஒரு குறிப்பிட்ட சொல் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது என்று கணக்கிட வழி ஒன்று சொல்லுங்கள். நானும் பல டூல்களைத் தேடிப் பார்த்துவிட்டேன். கிடைக்கவில்லை.
-நி.முத்தரசு, புதுச்சேரி.
பதில்: தாராளமாகக் கண்டறியலாம். நீங்கள் குறிப்பிடுவது போல இதற்கென டூல் இல்லை. ஆனால் வேர்ட் தரும் வேறு ஒரு டூலைப் பயன்படுத்தி இதனைக் கண்டறிய லாம். கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்ற வும்.
1. முதலில் எந்த டெக்ஸ்ட் ஏரியாவில் இந்த சொல் இருக்கும் இடங்களைக் கண்டறிய வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
2. செலக்ஷன் முடிந்தவுடன் கண்ட்ரோல் + எச் கீகளை அழுத்தவும். அல்லது எடிட் மெனுவில் இருந்து Replace என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது Find and Replace dialog box கிடைக்கும். இதில் Find What பாக்ஸில் எந்த சொல் குறித்து நீங்கள் காண விரும்புகிறீர்களோ அந்த சொல்லை டைப் செய்திடவும்.
4. அடுத்து ரீ பிளேஸ் (Replace) பாக்ஸில் அதே சொல்லை டைப் செய்திடவும். முடிந்தால் அப்படியே முன்பு டைப் செய்ததனை காப்பி செய்து பேஸ்ட் செய்திடவும்.
5. இனி Replace All என்பதனைக் கிளிக் செய்திடவும்.
வேர்ட் தொகுப்பு, "உனக்கென்ன பைத்தியமா! ஏன் ஒரு சொல்லுக்குப் பதிலாக அதே சொல்லை மீண்டும் பேஸ்ட் செய்கிறாய்?' என்றெல்லாம் கேட்காது. அப்படியே அனைத்து இடங்களிலும் சொல்லை மாற்றிவிடும். எனவே உங்கள் டாகுமெண்ட்டில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஆனால் இந்த மாற்றங்கள் முடிந்த பின்னர் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் எத்தனை முறை மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்டது என்ற ஒரு எண் கிடைக்கும். இந்த எண் அந்த குறிப்பிட்ட சொல், நீங்கள் தேர்ந்தெடுத்த சொல், எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிக்கிறது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeya - dindigul,இந்தியா
24-பிப்-201215:10:32 IST Report Abuse
jeya இன்டர்நெட் ல வெப பில்ட்டர் செட்டிங் இருக்கும் ‌போது சில வெப்சைட் ஓபன் ஆக மாட்டேங்குது, கல்லூரி ல இது மாதுரி வெப் பில்ட்டர் யூஸ் பண்ணறாங்க. அத எப்படி நாம எடுக்கிறது. இலைன்னா நாம எப்டி எல்லா வெப்சைட் உம் ஓப்பன் பண்ணி பாக்கிறது, நான் உங்கள் answer காக wait பண்ணிட்டு இருப்பேன். விரைவில் answer s பண்ணுங்க.
Rate this:
Share this comment
Cancel
guru - Jurong,சிங்கப்பூர்
23-பிப்-201207:30:52 IST Report Abuse
guru நாம் எக்ஸ்டர்னல் ஹார்ட்டிஸ்கில் அண்டி வைரஸ் இன்ஸ்டால் செய்து கொள்ள லாமா ?அவ்வாறு செய்தால் எப்படி பயன்படுத்துவது ?
Rate this:
Share this comment
Cancel
சௌந்தரராஜன் - Udumalaipettai,இந்தியா
22-பிப்-201220:25:31 IST Report Abuse
சௌந்தரராஜன் சார், எனது லேப்டாப் compaq மாடல். விண்டோஸ் 7 இருந்தது. இப்போது கெட்டு விட்டது. பாக்கப் செய்து வைக்கவில்லை. இப்போது நான் விண்டோஸ் xp லோட் செய்ய விரும்புகிறேன். என்ன வழிமுறை? ஹர்ட் டிஸ்க் மொத்தமாக பார்மட் செய்ய வேண்டுமா அல்லது 7 மீது லோட் செய்ய முடியுமா? எப்படி செய்வது? தயவு செய்து விளக்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X