சம்சார பந்தத்தில் இருந்து விடுபட முடியுமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 பிப்
2012
00:00

மனிதர்கள் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, முக்தி பெற வேண்டும் என்பதுதான் மகான்களின் வாக்கு. இது, எல்லாருக்கும் சாத்தியமா என்பது கேள்வி! ஒரு மரம் இருக்கிறது. அதில், ஒரு மாடு கட்டப்பட்டுள்ளது; அந்த மாடு மரத்தைச் சுற்றி, சுற்றி தான் வர முடியும்; அது வேறு எங்கும் இஷ்டம் போல் ஓடியாடி திரிய முடியாது.
அதேபோல் மனிதனும், சம்சாரம் என்னும் மரத்தில், பந்த பாசம் என்ற கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறான். மனிதனாகிய பசு, சம்சாரம் என்ற மரத்திலிருந்து விடுபட வேண்டுமானால் பந்தபாசம் என்ற கயிற்றை அறுத்து விட வேண்டும்.
வைராக்கியம் என்ற கத்தியால் பந்தபாசம் என்ற கயிற்றை அறுத்து விட வேண்டும். அப்படி செய்து விட்டால், சம்சாரம் என்ற மரத்திலிருந்து விடுபட்டு, பக்தி மார்க் கத்தைத் தேடிப் போக முடியும். ஆனால், சம்சாரம் என்பதை சுலபமாக விட்டுவிட முடிவதில்லை. எல்லாருமே சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு விட முடியுமா? முடியாது!
அதாவது, இவனை பந்தபாசம் என்ற கயிறு கட்டிப்போட்டுள்ளது. எல்லாருமே சம்சாரத்தை விட்டுவிட்டு சன்னியாசியாகி விட முடியாது. குடும்பத்தையும் விட்டு விட வேண்டியதில்லை. அதில் இருந்து கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக பந்த பாசங்களை குறைத்து, பக்தியில் ஈடுபட்டு, பக்தி மார்க்கத்துக்குப் போகலாம்.
இதற்குதான் வைராக்கியம் வேண்டும். வீட்டையும், சம்சாரத்தையும் விட்டு விட்டு சன்னியாசியாகி தேசாந்திரம் போவது ரொம்பவும் சிரமமானது. வீட்டில் மனைவியிடம் கோபித்துக் கொண்டு, "நான் சன்னியாசியாகி, எங்கேயாவது போய் விடுகிறேன்...' என்பான்.
ஆனால், போக மாட்டான். தெருக்கோடி வரை போய், திரும்பி விடுவான். காரணம், அவனிடம் வைராக்கியம் இல்லை. வைராக்கியம் என்ற கத்தி இல்லாதபோது, பந்தபாசம் என்ற கயிற்றை வெட்ட முடியாது.
பந்தபாசம் உள்ளவரையில் மனிதன் அதற்கு ஆட்பட்டு, சம்சாரத்திலேயே உழன்று கொண்டே இருக்க வேண்டியதுதான். இப்படியே இருந்தால் முக்தி எப்படி கிடைக்கும்? பந்தபாசங்களிலிருந்து விடுபட வேண்டும்; முடியுமா?
***

ஆன்மிக வினா-விடை!
வேலைக்கு போகும் பெண்கள், கோவிலுக்கு எந்த நேரம் செல்வது நல்லது?
கோவில் வழிபாட்டுக்கு அதிகாலையிலும், மாலை வேளைகளிலும் செல்வதே முறையானது; உகந்தது.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சூர்யா - Riyadh,சவுதி அரேபியா
03-மார்ச்-201223:00:52 IST Report Abuse
சூர்யா விஜய் -நீங்க சொன்னது சரி - இல்லறத்தில் இருந்து கொண்டே இறைவனை அடைந்த எத்தனையோ மகான்கள் உள்ளார்கள், வாழ்ந்தும் காட்டினார்கள் - அவர்கள் வழியை பின்பற்றினால் போதும் . எளிமையும் நேர்மையும் உண்மையும் கலந்த கடமையை சரிவர செய்வதே கடவுளை அடையும் வழி..... இதற்கு எந்த மடத்திற்கும் செல்ல தேவை இல்லை யார் பேச்சையும் கேட்க வேண்டியதில்லை .............
Rate this:
Share this comment
Cancel
சுந்தர் - ஆஸ்டின்,யூ.எஸ்.ஏ
03-மார்ச்-201200:25:09 IST Report Abuse
சுந்தர் I am not sure if every one read the article before commenting. He clearly told that you can change towards bakthi marg while you lead family life. He says if only it is possible to leave your family and lead sanyasi life, do that, but it is not possible for most. So just try to change when you get old.
Rate this:
Share this comment
Cancel
லேடி - ராஹ்வே,யூ.எஸ்.ஏ
28-பிப்-201214:08:20 IST Report Abuse
லேடி அப்போ சம்சாரம் (அ) பொண்டாட்டி துறவறம் போகணும்னா என்ன பண்றது? This article is a piece of crap! Who said one has to leave the family to attain salvation...then why marry in the first place?? It's just like old wives tale ...the editor just wrote everything that was being told for ages. If someone has to attain salvation they've to think good and do good and எல்லாத்துக்கும் மேல உன்னையே நீ உணர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X