இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2012
00:00

இரவில் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் ஜாக்கிரதை!
நான் மற்றும் என் இரண்டு நண்பர்கள், மைசூரிலிருந்து பெங்களூருக்கு வந்தோம். அது இரவு நேரம், 12:00 மணி என்பதால், பஸ் கிடைக்கவில்லை. பஸ் கிடைக்காததால், இருநூறு ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டு, ஒரு ஆட்டோவில் சென்றோம்.
நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது, என் நண்பன் அப்போது தான், ஏ.டி.எம்.,லிருந்து, இருநூறு ரூபாய் எடுத்திருந்தான். அந்த, இருநூறு ரூபாயை தான், ஆட்டோவிலிருந்து இறங்கியதும் கொடுத்தான். அப்போது நான், ஆட்டோக்காரனை கவனித்து கொண்டிருந்தேன்.
அவன், ஒரு நூறு ரூபாய் நோட்டை, சட்டையின் உள்பாக்கெட்டில் வைத்து விட்டு, மேல் பாக் கெட்டிலிருந்து எடுத்த ஒரு 10 ரூபாய் சேர்த்து, 110 ரூபாயாக என் நண்பனிடம் திருப்பி கொடுத்து, 200 ரூபாய் தரும்படி கேட்டான்.
என் கண் முன்னாடி அந்த ஆட்டோக்காரன், மாற்றியதை சொல்லியும், அவன் ஒத்துக்கொள்ளவில்லை. அவன் இரண்டு, மூன்று சட்டை போட்டு இருந்ததால், 100 ரூபாயை எங்கு மறைத்து வைத்தான் என்று, தெரியவில்லை. அப்போது, இரவு 2:00 மணி. அவனிடம் அரை மணி நேரம் வாதாடினோம்.
அவன், எங்கள் சட்டையை பிடித்து சண்டைக்கு இழுக்க, நாங்கள் பிரச்னை வேண்டாம் என்று, இருநூறு ரூபாய் (மொத்தமாக, முன்னூறு ரூபாய்) கொடுத்து விட்டோம். இரவு நேரத்தில், நாம் தூக்கத்தில் இருப்பதை தெரிந்து, சில ஆட்டோக்காரர்கள் இவ்வாறு ஏமாற்றுகின்றனர். இரவு நேரத்தில் பணம் கொடுக்கும் போது, ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.
கே.கே.ராம்ஜி, மதுரை.

அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி!
எங்கள் வீட்டிற்கருகே, பாட்டி ஒருவர் குடித்தனம் வந்துள்ளார். அவரிடம் பேசிக் கொண்டிருப்பதே, படு சுவாரசியமாக இருக்கும். பேச்சினிடையே, பல பழமொழிகளை அள்ளி வீசுவார். 83 வயதான அந்த பாட்டிக்கு, கை வைத்தியம், கை வந்த கலை.
ஓய்வு நேரத்தில், நானும், என் தோழிகள் சிலரும், அவர் முன், நோட்டும், பேனாவுமாக அமர்ந்து விடுவோம். நிறைய வைத்தியக் குறிப்புகளை சொல்வார். தலைவலி, வயிற்றுவலி, உடம்புவலி, காதுவலி, பல்வலி, காய்ச்சல், வாந்தி, மலச்சிக்கல், பசிமந்தம், கண் எரிச்சல் முதலிய சாதாரண நோய்களுக்கான, கை வைத்தியங்களை, அவர் மூலம் அறிந்து, பயனடைந்து வருகிறோம்.
பாட்டி வைத்தியம், குறைந்த செலவுடையது. பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. அவர் சொல்லும் வைத்தியக் குறிப்புகளை எழுதியும் வைத்துக் கொள்வோம். சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம், கடுக்காய் ஆகியவற்றுக்கு, அ@நக மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை, அவர் மூலம் தான் அறிந்து கொண்டோம்.
மேலும், உணவையே மருந்தாக்கும் ஓம குழம்பு, வேப்பம்பூ ரசம், தூதுவளை துவையல், வேப்பம்பூ துவையல், கஞ்சி, களி இவைகளின் செய்முறையும் சொல்லி தருவார்.
வயதானவர்களை புறக்கணிக்காமல், மதித்து, அவர்கள் வார்த்தைகளை செவிமடுத்தால், அவர்களிடமிருந்து பல புதையல்களை நாம் அள்ளலாம். அவர்கள், அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபிகள்; பொக்கிஷங்கள்!
சியாமளா ராஜகோபால், சென்னை.

பிழைக்கத் தெரிந்தவன்!
எனக்குத் தெரிந்த, வசதி படைத்த கல்லூரி மாணவன் ஒருவன், விடுமுறையில் கார் மெக்கானிக் ஷாப்பில், வேலை செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
"உனக்கு இருக்கும் வசதிக்கு, ஏன் இந்த வேலை பார்க்கிறாய்?' என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்ன பதில், வித்தியாசமாக வும், சிந்திக்கும்படி யும் இருந்தது.
"பள்ளியில் படிக்கும் காலத்து லேயே, கோடை விடுமுறையில கம்ப்யூட்டர், கராத்தே எல்லாம் கத்துக்கிட்டேன். இப்ப காலேஜ் முடிச்ச பிறகு, அப்பாவோட பிசினசை, நான் தான் கவனிக் கணும். எங்கே போனாலும், நான் காரைத் தான் பயன்படுத்தணும். கார் எப்படி இயங்கும்ன்னு தெரிஞ்சுக்கிட்டா, அதை நல்ல படியா பயன்படுத்த முடியும்...
"அதுல முக்கியமா, அவசர வேலையா வெளியே கிளம்பிப் போகும் போது, கார் சின்ன கோளாறால் வழியில் நின்றால், மெக்கானிக்கை எதிர்ப்பார்த்து காத்துக்கிட்டு இருந்து, நேரத்தை வீணாக்காம, நானே சரி செய்து, உடனே பயணத்தைத் தொடர முடியும். அது மட்டுமில்லாம, காரை மெக்கானிக் ஷாப்புல விட்டா, மெக்கானிக் சரியான பில் போடுறாரான்னு தெரிஞ்சுக்க முடியும்...' என்று சொல்லிக் கொண்டே சென் றான்.
பிழைக்கத் தெரிந்தவன் தான் என்று பிரமித்துப் போனேன்.
எஸ்.எஸ்.குமார், வேப்பங்குளம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சென்னைவாசி - chennai,இந்தியா
03-மார்ச்-201223:50:17 IST Report Abuse
சென்னைவாசி என் மகளின் வைத்தியத்திற்காக கருத்து எழுதிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள்.
Rate this:
Share this comment
Cancel
சங்கிமங்கி - மும்பை,இந்தியா
29-பிப்-201218:16:45 IST Report Abuse
சங்கிமங்கி சென்னை வாசி அவர்களே, தங்கள் குழந்தைக்கு தினமும் இளநீர் கொடுத்து வாருங்கள். அது உடல் சூட்டை தணித்து சீரான மலம் வர உதவும். தொடர்ந்து பசியும் எடுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ரிஷிகேஷ் - சென்னை,இந்தியா
28-பிப்-201220:05:49 IST Report Abuse
ரிஷிகேஷ் Mr. Chennaivasi, i know a famous acupressure doctor in pallavaram, his name is Abu Mohammed and you can contact this number for appointment. 9944993860.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X