நானா போனதும் தானா வந்ததும் (16)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2012
00:00

நண்பர்கள் அல்லது தூரத்து உறவினர்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு, இப்பவெல்லாம் மொய் ரேட் இருநூறாகி விட்டது. (மொய் மார்க்கெட் புலட்டினுக்கு நீங்கள் சந்தா கட்டியிருந்தால் தெரிந்திருக்கும்) ரூபாய் நோட்டுகளைத் தர மனமில்லாதவர்கள், காசோலையாக தருவது, மனசுக்கு (தருகிறவரின் மனசுக்கு) ஆறுதலாக இருக்கும்.
கவருக்குள் ரூபாய் போட்டு, ஒட்டி, கவர் மேலே, "இருநூறு' என்று எண்ணாலோ, சில பொடி எழுத்தாலோ எழுதியும், கூச்சப்பட்டுக் கொண்டு, ஒன்றுமே எழுதாமல் விடுவதும், சில சமயம் ஒட்டியும், ஒட்டாமல் தந்து விட்டு, ராத்தூக்கமில்லாமல் கஷ்டப்படுவர்.
"நம்ம மொய், ஒழுங்காக உரியவருக்கு கிடைத்திருக்குமா? இடையில், "பில்பரேஜ்' நடந்து, யாராவது முழுசையுமோ, கொஞ்சத்தையோ எடுத்துக் கொண்டிருப்பரோ...' மொய் எழுதுவதில், என்ன ஒளிவு மறைவு? பகிரங்கமாக நோட்டுக்களை எடுத்து, உரியவருக்கு நீட்ட வேண்டியது தானே.
பழைய காலத்தில், இந்தச் சங்கடத்தைத் தவிர்க்கத்தான், "ஓதி இடுவது', "ஆசிர்வாதம் பண்ணுவது' என்று, கல்யாணத்தில் ஓர் அங்கம் இருந்தது. நாம் ரூபாயை கொண்டு போய், மாப்பிள்ளை அல்லது பெண்ணின் கையில் தரக் கூடாது. அவர்கள் அப்போதிருக்கும், "ஜிலுஜிலு' நிலையில், உலகத்தையே மறந்திருப்பர். உங்கள் மொய் பணத்தையா ஞாபகம் வைத்துக் கொள்ள போகின்றனர். எந்திரம் போல் வாங்கி, பின்னால் யாரிடமாவது தருவர்.
முன் காலத்திலெல்லாம், ஒரு பழக்கம் இருந்தது. மொய் எழுதப் போகிறவர் இருபதையோ, முப்பதையோ, ஐம்பதையோ, நூறையோ புரோகிதர் வைத்திருக்கும் தட்டில் வைத்து, "பிள்ளைக்கு...' என்பார். "நீங்க?' என்பார் புரோகிதர்.
அப்படிக் கேட்டால், பையனுக்கோ, பெண்ணுக்கோ, யாருக்கு நாம் மொய் தர விரும்புகிறோமோ, அவருக்கு நாம் என்ன என்று உறவுமுறையை சொல்ல வேண்டும்.
"பையனுக்கு ஒன்றுவிட்ட அத்தான், பைங்காநாடு சுப்பிரமணியன்...' என்று மொய்தாரர், தன் உறவையும், பெயரையும் வாத்தியார் காதில் கேட்கும்படி சொல்வார். வாத்தியார் உடனே, "லவுட் ஸ்பீக்கர்' வேலையைச் செய்வார்.
தன் பெருங்குரலில், "மகாராஜஸ்ரீ பைங்காநாடு ஒன்றுவிட்ட சுப்பிரமணிய அத்தான், மாப்பிள்ளை சிரஞ்சீவி ராமுவை ஆசிர்வதித்து, ஆயிரம் கட்டி வராகன் ஐம்பத்தோரு ரூபாய்...' என்பார். (வெறும் ஐந்து ரூபாய் கொடுத்தவருக்கும், ஆயிரம் கட்டி வராகன் மரியாதை உண்டு!)
கல்யாணத்தில் எவ்வளவுதான் சந்தடி இருந்தாலு<ம், இந்த மொய் சமாசாரம் மட்டும், எப்படியோ எல்லார் காதிலும், ஸ்பஷ்டமாக விழுந்து விடும்.
சில வம்பர்களுக்கு, போவதற்கு ஒரு டாபிக்காக அமைந்து, சுடச்சுட வெளியிடப்படும் மாலைப் பத்திரிகைச் செய்திபோல, "என்ன பைங்காநாடு முன்சீப்புக்கு பணம் காசே இல்லையாக்கும்... திவாலாயிட்டானோ... கஞ்சப் பிசினாறியாட்டம், ஐம்பத்@தாரு ரூபாய் ஓதிட்டிருக்கான்...' என்பார் ஒருத்தர்.
அதை ஆமோதித்து, மற்றவர் குரலைத் தாழ்த்தி, "புள்ளையை அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கான்... தெரியுமோ உமக்கு?' என்பார்.
"ஓ... அது வேறயா... பணம் யாருக்கு சேர்றது... கஞ்சப் பிசாசுகளுக்குத்தான் சேர்றது...' இப்படியாக, ஒரு சின்ன ஓரங்க வயிற்றெரிச்சல் நாடகம் ஒருபுறம் அரங்கேற்றமானா<<<லும், மாப்பிள்ளைக்கு யார், எவ்வளவு ரூபாய் மொய் தருகின்றனர் என்பது, அனைவருக்கும் தெரிந்து விடும்.
இப்போது, எல்லாப் பொருளுமே விலை <உயர்ந்து விட்டதால், மொய் மரியாதையும் கொஞ்சம் கணிசமாகத்தான் செய்ய வேண்டியதாகி விட்டது. குறைந்தது, இருநூறு ரூபாயாவது வைத்தால் தான், மரியாதை, என்று மனச்சாட்சி குத்துகிறது.
மனசு கணக்குப் போட்டுத் தொலைக்கிறது. சாப்பாடு ஒரு இலை சாதாரணமான விருந்தானால் கூட, இருநூறு ரூபாயாகிறது. போனதும், "வெல்கம் டிரிங்'குன்னு, சப்போட்டா ஜுஸோ, பைனாப்பிள் ஜுஸோ, கொண்டு வந்து நீட்டிடறாங்க, மறுக்க முடிகிறதா! ஒரு ரவுண்டோ, இரண்டு ரவுண்டோ ஊற்றிக்க வேண்டியிருக்கிறது.
முகூர்த்தம், பதினொண்ணரையிலிருந்து பனிரெண்டுன்னா, அது ஒரு ரெண்டுங் கெட்டான் நேரம். டிபன் சாப்பிட்டே தீரணும், டிபன்னா மாமூல் பொங்கல், வடை, இட்லி, தோசை, பூரின்னு ஒரே, "ஜபர்தஸ்த்' டிபனாகப் போட்டு விடுகின்றனர். இருக்கு போடறான். நமக்கும் ஆசை இருக்கு; சாப்பிட்டு வைக்கிறோம். ஒரு டிபன் விலையே, சத்தியமாக நூற்றிருபது ரூபாய் ஆகும். அதுவும், சுடச்சுட நெய் தோசை வந்து கொண்டேயிருந்தால், ஒன்றுக்கு ரெண்டாகவோ, மூணாகவோ, தின்னு தொலைக்க வேண்டியிருக்கு.
(ஓட்டலில் ஒரு நெய் தோசை நாற்பது ரூபாய் என்பது, வாசகர்கள் அறிந்ததே!)
இப்படியாக நாஷ்டா, சாப்பாடு என்று, கல்யாண வீட்டாருக்கு, நாம் ஒரு டிக்கெட்டே, ஏறக்குறைய முன்னூறு, முன்னூற்றைம்பது ரூபாய்க்கு சேதாரம் விளைவித்த பின், வெறும் ஐம்பது அல்லது நூறு தந்து விட்டு வந்தால், அந்த டிபனும், சாப்பாடும் ஜீரணமாகுமா; தர்ம தேவதை அதை செரிக்குமா?
அதுவுமில்லாமல், கல்யாணத்துக்கு ஒண்டியாகவா போகிறோம். நாம் இருவர் நமக்கு ஒருவரோ, இருவரோ, ரொம்பக் கணக்கு போட்டால், கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் நஷ்டப்படுத்திவிட்டு, வெற்றிலை பாக்கு தேங்காய், தாம்பூலப் பையுடன் திரும்புகிறோம்.
சில அசடுகள், பெண்களுக்கு ரவிக்கைத் துணிவேறு வைத்துக் கொடுத்து விடுவர். என்னதான் கட்பீஸ் என்றாலும் கூட, ரவிக்கைத் துணி, அறுபது, எழுபதுக்குக் குறைச்சலில்லை. "ஹும்...' பெருமூச்சுதான் விட முடிந்தது.
நாளைக்கு நம்ம வீட்டிலே, ஒரு கல்யாணம் காட்சி நடந்தால், இதே மாதிரிதான் நாம் செய்யப் போகிறோம். வர்றவங்க இதே மாதிரி ஐம்பதோ, நூறோதான் தருவர்.
"கணக்கு சரியாப் போயிடும்... கவலைப்படாதீங்க, தாம்பூலப் பையை தந்தாங்களே தவிர, எனக்கு முறுக்கு, தேன்குழல் பட்சணப் பை தரவேயில்லை...' என்று, மனைவி அங்கலாய்த்தாலும், இந்த மொய் எழுதறது, நம்ம சுயமரியாதையை ரொம்பத்தான், "சாலஞ்ச்' செய்ற நிலை மாற வேண்டும் என்கின்றனர், சமூக அக்கறையுள்ளவர்கள்.
லட்சக்கணக்கில் செலவு செய்யும் கல்யாண வீட்டுக்காரர்களுக்கு, மொய்யால் ஆவது ஒன்றுமில்லைதான்.
சில பேர், "கண்டிப்பாக, பரிசுகள் பெறப்பட மாட்டாது; தயவு செய்து மொய் வேண்டாம்!' என்று, கல்யாணப் பத்திரிகையின் கடைசி வரியில் கெஞ்சுவர்.
மொய்யன்பர்களே... உங்களுக்கு ஒரு விஷயம் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
மொய் என்பது, வாயால் சொல்லப்படுவதல்ல; பேனாவால் எழுதப்பட வேண்டிய ஒரு சமாசாரம், "மொய் எழுதல்' என்ற சொலவடை கூறப்படுவது. மொய்யை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிக்கத் தான். இந்த அவசர காலத்தில், அந்த வழக்கம் மெதுவாகவே வழக்கொழிந்து வருகிறது.
பேனாவும், பேப்பருமாக ஒரு சாதாரணப் பேர்வழி, மாப்பிள்ளை, பெண் இருவருக்குமிடையே ஒரு பொந்து, சந்திலோ பின்பக்கமோ அமர்ந்து, வரும் பணத்துக்கெல்லாம், பைசா பிசகாமல் கணக்கு எழுதிக் கொண்டிருப்பார். வேலியில் ஒளிந்திருக்கும் ஓணான் @பால, அவர் சட்டென்று அடையாளம் தெரிந்துவிட மாட்டார்.
ஏன் எழுதிக் கொள்ள வேண்டுமெனில், பிற்காலத்தில், பதில் மரியாதை செய்யவும், இப்போது, அவர் செய்திருப்பதற்குக் குறைவாக நாம் செய்துவிடக் கூடாது என்பதற்குத்தான்.
செட்டி நாட்டு திருமணங்களில், மொய் எழுதும் தொகையை முதன்முதலில் அறிந்த போது, மயக்கமே போட்டு விட்டேன்.
"கோடீஸ்வரரான செல்வந்தர்கள், யானையும், குதிரையுமாக, தங்கமும், வெள்ளியுமாக, அந்தக் கால அரசர்கள் மாதிரி கல்யாணப்பரிசு வழங்கிக் கொள்வர்...' என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர்கள் மொய் எழுதுவது என்றால், "நாலணாதான்' (கால் ரூபா தான்) வழங்கிக் கொள்கின்றனர். ஆனால், வழங்கியவர் பெயர், ஊர், கண்டிப்பாக நோட்டுப் புத்தகத்தில் எழுதி விடுவர்.
மொய் எழுதாமல் போனாலோ, கல்யாணத்துக்கே வராவிட்டாலோ பெரிய தப்பாக, அவமரியாதையாக கல்யாண வீட்டார் எடுத்துக் கொள்வர். ஆகவே, நகரத்தார் நடத்தும் கம்பெனி களிலோ, ஆபீஸ்களிலோ முதலாளியாகப் பட்டவர், செட்டி நாட்டுக்கு ஏதாவது திருமணத்துக்குப் போய்க் கொண்டேயிருப்பார்.
போய் ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, ஒரு நாலணா மொய் எழுதிவிட்டு, மறுநாளோ, அன்றோ புறப்பட்டு, கம்பெனிக்குத் திரும்புவார். போக வர, காருக்கு பெட்ரோலே, ஐந்நூறு, அறுநூறு ரூபாயாகும். ஒரு நாலணா பரிசளித்துவிட்டு வர, இவ்வளவு செலவழிக்கணுமா என்று சிலருக்குத் தோன்றும். ஆனால், கோடீஸ்வரர்களின் மரியாதையோ, மதிப்போ, உறவோ அந்த நாலணாவில்தான் இருக்கு என்பது ஆச்சரியமல்லவா?
(துருவியதில் உருவிய சமாசாரம், ஏழை, கோடீஸ்வரர் என்று பாகுபாடு, கல்யாண சமயத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக, மினிமம் மொய்த் தொகையாக நாலணா முறை ஏற்பட்டது என்று நம்பத்தக்க வட்டாரத்திலிருந்து தெரிய வருகிறது.)
தொடரும்.
பாக்கியம் ராமசாமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுரேஷ் - தமிழ்நாடுதேனீ,இந்தியா
29-பிப்-201220:58:50 IST Report Abuse
சுரேஷ் not only for collect the money,all persons meet in one place.
Rate this:
Share this comment
Cancel
narayanan - chennai,இந்தியா
29-பிப்-201217:09:32 IST Report Abuse
narayanan நகரத்தார் வழக்கம் நல்லதே . ஆனால் நம் திருமணங்களில் மண்டபத்துக்கும், சாப்பாட்டுக்கும் செலவிடப்படும் பணம் அநியாயத்துக்கும் வீண் என்றுதான் சொல்லுவேன். இன்னொன்று பட்டுப்புடவை காஞ்சி மகான் பலமுறை சொல்லியும் இவர்கள் கேட்பதாயில்லை. பாக்கியம் ராமசாமி அவர்கள் ஒரு இயக்கம் மாதிரி ஏதாவது செய்யப்படாதா.?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Krishnaveni skv - cbe,இந்தியா
29-பிப்-201215:42:24 IST Report Abuse
Srinivasan Krishnaveni     skv இது என் வழக்கம் . வசதி இல்லாதவா வீட்டு திருமணம் என்றால் அதுவும பெண் க்கு என்றால் 1001 /ம பிள்ளைக்கு என்றால் 501 / முறையாக செய்து வருகிறேன். ஏழைகள் என்றால் kuudave உதவுகிறேன். என் தந்தை பல வருமையான நிலையிலே இருந்த உறவு பெண்களுக்கு தாலியே செஞ்சு தருவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X