அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2012
00:00

*வே.ராஜமாணிக்கம், புல்லரம்பாக்கம்: கேரள மக்கள் பயங்கர குடிகாரர்களாமே...
இந்தியாவிலேயே நம்பர் ஒன் குடிகார மாநிலம், கேரளா என்பது உண்மைதான். இந்தியாவில், மற்ற மாநில மக்கள் ஆண்டுக்கு, 3.1 லிட்டர், "சரக்கு' தான் சாப்பிடுகின்றனராம்! மலை யாளிகளோ, ஆண்டுக்கு, 8.3 லிட்டர் உ.பா., அடிக்கின்றனர் என்கிறது கேரள, "சரக்கு' உற்பத்தியாளர்கள் சங்கம்.
***

*வி.ஆறுமுகம், சத்தியமூர்த்தி நகர்: ஷாக் அடிக்க வைத்த செய்தி ஏதும், சமீபத்தில் படித்தீர்களா?
படித்தேனே... அது, இங்கிலாந்து செய்தி! அங்கே, ஒரு நாயை, அதன் ஆயுட்காலம் வரை வளர்த்து, பராமரிக்க ஆகும் செலவு என்ன தெரியுமா? சராசரியாக, 17 லட்ச ரூபாயாம். இங்கே, ஒரு சராசரி மனிதன், தன் ஆயுட்காலம் முழுமைக்கும் கூட, இப்படி சம்பளம் வாங்கி விட முடியுமா?
***

** ஜி.பட்டாபிராமன், அயப்பாக்கம்: இன்றைய குழந்தைகள் அனைத்தும், புத்திசாலிகளாக இருப்பது எதனால்?
எக்ஸ்போஷர் - ஏராளமாக அறிந்து கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளால்... கம்ப்யூட்டர், இன்டர்நெட், உருப் படியான, "டிவி' நிகழ்ச்சிகள், பத்திரி கைகள், புத்தகங்கள் என, இரண்டு தலைமுறைக்கு முன் பிறந்தவர்களுக்கும் கிடைக்காத வாய்ப்பு, இப்போதைய பொடிசுகளுக்கு தாராளமாக கிடைக்கிறது... புத்திசாலித்தனம் வளர்கிறது.
***

*எஸ்.சின்னத்தம்பி, காரைக்குடி: திருமணத் திற்குப் பின், நடிகைகள் மட்டும் வாய்ப்புகளை இழக்கின்றனரே... ஏன்?
லட்டு, லட்டாக புது முகங்கள், "க்யூ'வில் காத்திருக்கின்றனர்... எந்த உடையும் அணிய தயாராக உள்ளனர்... எதைக் காட்டவும் உடன்படுகின்றனர்; அவர்களை விட்டு, திருமணத் தால், ரசிகர்களின் மனதை விட்டு போன நடிகைக்கு வாய்ப் பளிக்க, தயாரிப் பாளரென்ன ஒன்றும் தெரியாத பாப்பாவா?
***

** ஜெ.கல்யாணி, பரங்கிப்பேட்டை: பொய் எங்கே பிறக்கிறது?
அரசியல் மேடைகளிலேயே, பொய் முதலில் பிறக்கிறது! பொதுக் கூட்ட மேடை என்ற பெயரை உடனே மாற்றி, "புளுகு மேடை' என, பெயர் வைக்க வேண்டும்.
***

*கே.குணா, பெண்ணாடம்: உலகில் மிகவும் கடினமானது, சுலபமானது எது?
ரொம்பவும் எளிதானது, உபதேசம் செய்வது; கடினமானது, செய்த உபதேசத்தை தானும் மதித்து நடப்பது!
***

** ஆர்.அமுதன், கழுகுமலை: ஒரு மனிதன் முன்னேற, தடையாக இருப்பது எது?
முன்னேறுவோமா, மாட்டோமா என்ற சந்தேகம் தான்! சந்தேகப்படும் பழக்கம் உள்ளவர்களால், எந்தக் காலத்திலும் முன்னேற முடியாது!
***

*அ.பாரதி, மயிலம்: படித்தவரிடையே மண முறிவு அதிகமா, பாமரரிடமா?
பாமரர் கோர்ட்டுக்கு போய், விவாகரத்து பெரும்பாலும் பெறு வதில்லை... தாலியை கழற்றி கொடுத்து விட்டு போய் விடுவதால், அவர்கள் பற்றிய ஆதாரப்பூர்வ கணக்கு ஏதும் கிடைப்பதில்லை. படித்தவர் களிடையே, அதுவும், அறிவு ஜீவியாக தம்மை கருதிக் கொள்ளும் வங்காளிகளிடையே, விவாகரத்து அதிகரித்துள்ளது.
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவி.கு - Bangalore,இந்தியா
02-மார்ச்-201216:26:31 IST Report Abuse
ரவி.கு சகோதரி மல்லிகா , தொடர்ந்து திறமைகளை வெளிபடுத்து ங்கள். ஒருநாள் உங்கள் திறமைக்கு தக்க பரிசு நிச்சயம் கிடைக்கும் !.. வாழ்க வளமுடன் !
Rate this:
Share this comment
Cancel
raja - chidambaram,இந்தியா
29-பிப்-201212:03:14 IST Report Abuse
raja புள்ளிவிபரம் பற்றிய செய்தியில் வெறுமனே லிட்டர் என்று கூறி உள்ளீர்கள்.அது ஆயிரதிலா அல்லது லட்சத்திலா என்பதை சொல்ல மறந்துவிட்டிர்கள்
Rate this:
Share this comment
Cancel
ராதிகா சரண் - madurai,இந்தியா
28-பிப்-201217:02:05 IST Report Abuse
ராதிகா  சரண் காயத்திரி வெங்கட் நல்ல பதில், ஒரு தாய் அப்படி சொல்வது தன் குழந்தைகளை நல்ல வழியில் அவர்களை கொண்டு செல்லவே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X