திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2012
00:00

கண்ணதாசன் எழுதியது...
என்னைப் பற்றி ஏராளமான வதந்திகள்; நான் குடித்துவிட்டுத் தான் எழுதுவேன் என்றும், குடித்துவிட்டுத் தான் மேடையில் பேசுவேன் என்றும், குடித்தால் தான், என் மனநிலை சரியாக இருக்கும் என்றும், விதவிதமான கதைகள்.
ஆந்திராவிலிருந்து, லதா என்ற ஒரு பத்திரிகை ஆசிரியர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், என்னைப் பார்க்க வந்தபோது, கையில் இரண்டு விஸ்கி பாட்டில்களையே வாங்கி வந்து விட்டார்.
ஒரு தடவை, நான் மலேசியாவில், ஓரு ஊரில் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு டம்ளரைக் கொண்டு வந்து வைத்தனர். நான் சோடா என்று எண்ணிக் குடித்த போது, அது விஸ்கியாக இருந்தது.
பொதுவாக நான் எழுதிவிட்டு, பேசிவிட்டுத்தான் குடிப்பேன்.
நான், தி.மு.க.,வில் இருந்த போது, செல்லும் ஊர்களிலெல்லாம், என்னை குடிகாரன் என்று ஏசுவர் காங்கிரஸ்காரர்கள். அதன் பலனாக, உத்தமமான கழகத் தொண்டர்கள், நான் போகும் போது, முன்னேற்பாடாக விஸ்கி வாங்கி வைத்திருப்பர்.
தலைவர் காமராஜரோடு, வெளியூர் கூட்டங்களுக்கு செல்லும் போது, இரவில் தலைமறைவாகி விடுவேன். அவர், "கண்ணதாசன் எங்கே, எங்கே?' என்று தேடுவார். பிறகு, சிரித்துக் கொண்டே, "சரிதான் புரிகிறது!' என்று சொல்லி விடுவார்.
டில்லியில் ஒரு தடவை நான், "பிரதமரை பார்க்க வேண்டும்' என்று, நந்தினி சத்பதியிடம் சொல்லியிருந்தேன். மதியம், ஒரு மணிக்கு அசோகா ஓட்டலுக்கு நந்தினி சத்பதி போன் செய்து, "மாலை 4:30க்கு வாருங்கள்' என்றார்; நான் நன்றாகக் குடித்துவிட்டு, தூங்கி விட்டேன். நந்தினி வருத்தப்பட்டார்.
டில்லியில் ஒரு முறை, "குழந்தைக்காக' படத்தில், நான் எழுதிய பாடல் ஒன்றுக்காக, அகில இந்தியப் பரிசு கொடுத்தனர். மாலை, 5:00 மணிக்குப் பரிசளிப்பு விழா; நானோ வழக்கம் போல் தூங்கி விட்டேன். வழக்கம் போலவே, அங்கு வந்திருந்த என் சகோதரர், ஏ.எல்.சீனிவாசன் பரிசைப் பெற்றுக் கொண்டார்.
***

தமிழ் எழுத்துக்கள், "அ' முதல், "ஒள'வரை, வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன.
முதல் இரண்டு எழுத்துக்களான, "அ, ஆ' மனிதன் குழந்தையாகவும், பாலகனாகவும் உலக நடப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமல், "அ... ஆ!' என்று வாய் பிளந்து அதிசயிக்கும் காட்சியைக் குறிக்கும்.
பாலகன் இளைஞனாகி வாலிப முறுக்கில், பெண்ணின் மையலில் அசடாகி, "இ...ஈ...' என்று இளிக்கிறான்.
தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் நிலையில், "உ...ஊ...ம்... இது தானா?' என்று புதிரைப் புரிந்து கொள்கிறான்.
"ஊ'வின் முதுகில் ஏறியிருக்கும், "ள' குடும்பச் சுமை குடியிருப்பதைக் காட்டும்.
அடுத்து, குடும்பத் தலைவனாக, "ஏ... ஏய்!' என்று பிள்ளைகளையும், மற்றவரையும் ஆட்சி செய்கிறான்.
மகனுக்கு, மனைவி வருகிறாள். தந்தை, பெரியவராகி, தன்னை அடக்கிச் சுருட்டிக் கொண்டு, "ஐ' என்று உட்கார நேருகிறது.
மகன், இளம் மனைவியின் புது மயக்கத்தில், தலை கால் புரியாமல் ஆடுகிறான். பெரியவர், "ஒ...ஓ...' அவ்வளவு தூரத்துக்கு ஆயிட்டுதா!' என்று ஈன ஸ்வரத்தில் அங்கலாய்க்கிறார்.
பெரியவர் தாத்தாவாகிறார். வளைந்து, குடும்பத்தில் தனித்து தேவையற்ற பொருளாகி விடுகிறார். "ஒள' வில், "ள' போல.
எதையும் மும்முறை செய்துவிட்டால், இறுதியாகச் செய்து விட்டதாக அர்த்தம். பிறப்பில் தொடங்கிய வாழ்க்கை, இறப்பில் இறுதி நிலை அடைந்து, "முக்தி' பெறுவதற்கு இந்தப் பிராயம் சாதனம் என்பதை, மூன்று புள்ளியிட்ட ஆயுத எழுத்து உணர்த்தும்.
ஒரு உபன்யாசத்தில் கேட்டது.
***

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - houston,யூ.எஸ்.ஏ
27-பிப்-201223:37:04 IST Report Abuse
kannan To have a legary song writer, whose songs are a treasure to us, these minor experiences of yours will never erase your reputation.
Rate this:
Share this comment
Cancel
kalyani - chennai,இந்தியா
26-பிப்-201212:49:32 IST Report Abuse
kalyani உங்கள மாதிரி ஒரு கவிஞன் இனி எப்பவும் பொறக்க போறது இல்ல.உங்கள் பாடல்கள் மூலமா எங்களோடவாழ்ந்துகிட்டு இருக்கீங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X