இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2012
00:00

சாலை விதிகள் வகுப்புக்கு சபாஷ்!
நானும், என் தோழியும், மார்க்கெட்டிற்கு சென்று திரும்பிய போது, என் மகள் படிக்கும் பள்ளியைச் சேர்ந்த, மாணவ - மாணவியர் நெடுஞ்சாலையின் ஒரு பக்கமாக நின்றபடி, நோட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தனர்.
ஏன், எதற்காக என, தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், அங்கு சென்று, ஒரு மாணவியை அணுகி, "என்ன விஷயம்?' என்று கேட்டேன். அதற்கு அந்த மாணவி, "எங்கள் பள்ளியில், ஒவ்வொரு வாரமும், ஒரு வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை, இது போல அழைத்து வந்து, சாலை விதிகள், விதிமீறல்கள், விபத்திற்கான காரணங்கள், முதலுதவி நடவடிக்கைகள் போன்ற விவரங்களை நேரடி விளக்கமாக கொடுத்து, அதைப் பற்றி குறிப்பு எடுக்கச் செய்கின்றனர்...' என்றாள்.
இதற்காக, ஒரு ஆசிரியரும், போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவரும், மாணவர்களுக்கு விளக்கப்பாடம் நடத்திக் கொண்டிருப்பதை, நாங்கள் காண முடிந்தது.
எதிர்கால சந்ததிகளான மாணவ சமுதாயத்திற்கு, இது போன்ற சாலை விதிகள், விபத்துகள் குறித்த விழிப்புணர்ச்சிகளை, இப்படி நேரடியாக விளக்கம் கொடுப்பது அவசியம் தான் என எனக்கும் பட்டது.
கல்வியையும் போதித்து, சமூக அக்கறையோடு, இது போன்ற நேரடி விளக்கங்கள் கொடுப்பது, மாணவர்களை மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினரையும் நெறிப்படுத்தும் என நம்புகிறேன். அதோடு, பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடலின் போது, பள்ளி நிர்வாகத்தின் இச்செயலை கட்டாயம் பாராட்ட வேண்டும் எனவும் முடிவு செய்தேன்.
இது போல மற்ற பள்ளி, கல்லூரிகளும் முயற்சி செய்யலாமே!
ஆர்.கவிதா, மதுரை.

இப்படியும் ஒரு மருத்துவமனை!
என் மனைவியை, கண்புரை நீக்கும் சிகிச்சைக்காக, கோவையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அறுவை சிகிச்சை முடிந்தவுடன், ஒரு நர்ஸ், என் மனைவியின் கையைப் பிடித்து அழைத்து வந்து, பக்கத்திலுள்ள அறையில் அமர வைத்தார்.
சில நிமிடங்களில் அங்கு வந்த சீருடை அணிந்த ஒரு பெண், என் மனைவியிடம் இரண்டு பிஸ்கட், டீயை கொடுத்து சாப்பிடச் சொன்னார். "அரை மணிநேரம் இங்கு ஓய்வு எடுத்துக் கொண்டு, வீட்டுக்கு செல்லலாம்...' என்று சொல்லிவிட்டு சென்றார்.
சரியாக அரை மணி நேரத்தில் மீண்டும் வந்தவர், என் மனைவியிடம், "அம்மா... உங்கள் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. இனி, கண்ணில் எந்த பிரச்னையும் வராது. டாக்டர் சொன்ன மருந்துகளை மட்டும், சில நாட்கள் கண்ணில் போட்டு கொள்ளுங்கள்...' என்று சொல்லி, கையில் வைத்திருந்த சால்வை ஒன்றை, என் மனைவியின் தோளில் போர்த்தி, சிறிய பூங்கொத்து ஒன்றையும் கொடுத்தார். அத்துடன், பழங்கள் அடங்கிய சிறிய பை ஒன்றை கொடுத்து, நன்றி கூறி, விடை கொடுத்தார்.
அந்த மருத்துவமனையின், கனிவான அணுகுமுறை, எங்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆபரேஷனுக்குப் பின், கண்பார்வை எப்படி இருக்குமோ என்ற என் லேசான பயமும், அவர்களது அன்பான உபசரிப்பால் விலகிப் போனது. முழு நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் வீடு திரும்பினோம்.
மற்ற மருத்துவமனைகளும், இது போன்று நடந்து கொண்டால், நன்றாக இருக்குமே!
சுப.சிவாஜி, கோவை.

தனி அறையா... வேண்டாமே!
நண்பரை காண, அவரது வீட்டிற்கு சென்றேன். மனைவி, குழந்தைகளுடன் அவரது தந்தையும் வசிக்கிறார். சமீபத்தில், சில மாதங்களுக்கு முன் தான், அவரது தாயார் காலமானார். அவரது தந்தை பற்றி விசாரித்தேன்.
அவரது அப்பாவுக்காக, தனி அறை தந்து, அதில், "டிவி' , "ஏசி' என, சகல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதை உயர்வாக கூறினார். தாயார் இறந்த பின், அப்பா எந்த வேலையும் செய்யாத வகையில், சவுகரியமும், அவரது நிம்மதியான சுதந்திரத்திற்காக, தனி அறை ஒதுக்கி தந்துள்ளதையும் பெருமையாகக் கூறினார்.
பின், சாப்பிட அழைத்தார். "அப்பாவும் நம்முடன் சேர்ந்து சாப்பிடலாமே... பல முறை அம்மா இருக்கும் போதெல்லாம், எல்லாரும் ஒன்றாக, ஒரே நேரத்தில் சாப்பிட்டது போல், இப்போதும் சாப்பிடலாம்...' எனக் கூறினேன். நண்பர், "சாப்பாடு தயாரானதும், அவரது அறைக்கு சென்று வைத்து விடுவோம். இந்நேரம் சாப்பிட்டிருப்பார்...' என கூறினார்.
நாங்கள், தந்தை இருக்கும் அறைக்கு சென்று பார்த்தபோது, சாப்பாடு அப்படியே இருந்தது. அவரது அப்பா, "டிவி' சீரியலில் மூழ்கி இருந்தார். அவரிடம் நலம் விசாரித்து, "என்னுடன் சேர்ந்து சாப்பிட வாங்க...' என்ற என் வற்புறுத்தலில், சாப்பிட வந்தார்.
கலகலப்பான உபசரிப்பில் விருந்து முடிந்து, விடை பெறும் போது, அவரது தந்தை, என் இரு கைகளையும் பிடித்து, "ரொம்ப நாளைக்கு பிறகு, இன்னிக்கு தான், என் மனது ரொம்ப அமைதியாகவும், சந்தோஷமாகவும் உள்ளது...' என்றார், கண்ணீர் துளிக்க. "அடிக்கடி வீட்டுக்கு வாப்பா...' என்ற வேண்டுகோளையும் வைத்தார்.
பெற்றோரை எப்படித்தான் தனியறையில் வைத்து, சொகுசாக கவனித்துக் கொண்டாலும், அவர்களுக்குள் சிறை உணர்வே இருக்கும். குடும்பத்தாருடன் பேசி, உண்டு களித்து, ஒன்றாக கலந்து, அளவளாவி, ஆலோசனை பெற்று வாழ்தலே நலம் தரும்.
இதை நண்பரும் உணர்ந்து கொண்டார். தற்போது, தனியறையை தவிர்த்து, எல்லாருடனும் கலந்து பழகியதில், முன்பு இருந்ததை விட, அவரது அப்பா கலகலப்பான இயல்பு நிலைக்கு, கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதாகக் கூறினார்.
பெ.சக்திவேல், முத்தியால்பேட்டை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHELDER,நெதர்லாந்து
09-மார்ச்-201203:24:39 IST Report Abuse
GOWSALYA DR .ஜோசப் சொன்னாப்போல எல்லாக் கடிதங்களும் மிக முக்கியமே....அதிலும் 3 வது கருத்து மிக மிக முக்கியம்.ஏனெனில்,ஒரு நோயாளியையோ,வயோதிபரையோ நிறைவு செய்வது அன்பு,பாசம்,கனிவான பேச்சுகள்.தனி டிவி ,AC ..அறையோடு சேர்ந்த BATHROOM எல்லாம் இருந்தென்ன :அவருக்கு மன சந்தோஷம் இல்லையே ???...இப்போ அவருக்குத் தேவை,பேரப்பிள்ளைகளுடன் சிரித்துப் பேசி வெளியே உலாவி,சந்தோஷப்படணும்...அதைவிட்டு மகன் ,தங்கத் தொட்டிலில் படுக்கவிட்டாலும் ,அவர் மனம் நிறையாது....
Rate this:
Share this comment
Cancel
அருண் பிரசாத் rlins - மதுரை,இந்தியா
08-மார்ச்-201210:56:23 IST Report Abuse
அருண் பிரசாத் rlins nandri
Rate this:
Share this comment
Cancel
ஜாஸ்மின் - CO,யூ.எஸ்.ஏ
05-மார்ச்-201220:48:07 IST Report Abuse
ஜாஸ்மின் மூன்றாவது கடிதம் : வயதான தாய் தந்தைக்கு இருக்க இடம் கொடுக்க மனம் இல்லாமல், தெருவில் தள்ளும் இந்த காலத்தில், சகல வசதியும் செய்து கொடுத்து பார்த்து கொள்ளும் மகன் கிடைத்தது பெரிய விஷயம். ஒரு வேளை தனி அறை கொடுக்காமல் பேரன் பேத்தியோடு தங்க சொன்னாலும் சில பிரச்னை வரும். கடிதம் எழுதிய நண்பர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் சிறிது நேரம் விருந்தாளியாக போய் வரும் பொது அவர்கள் உண்மையான பிரச்சனைகள் நமக்கு தெரியாது. அதனால் நாம் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் நுழைய கூடாது. ஒரு வேளை அவர்கள் அந்த முதியவரை எதாவது கொடுமை செய்வதை நீங்கள் காண நேர்ந்தால் அதை சரி செய்லாம். மற்றபடி சில முதியோர் தனிமையை தான் விரும்புகின்றனர். சிலருக்கு சீகிரமே சாப்பிடும் பழக்கம் இருக்கும் அல்லது சர்க்கரை போன்ற நோயால் விருந்து சாப்பாட்டை கண்டு ஆசை ஏற்படுவதை தடுக்க இப்படி அவரே தனியாக உணவு கேட்டிருக்கலாம். என்ன காரணம் என்று கேட்டீர்கள? சில வீடுகளில் இப்படி நடப்பதை பார்த்திருக்கிறேன், அனால் எதாவது காரணம் இருக்கும் . தவறாக நினைக்க வேண்டாம் . இவ்வளவு வசதி செய்து கொடுத்துள்ள மகனுக்கும் மருமகளுக்கும் , அந்த முதியவருடன் உணவு உண்பதா கடினமாக இருக்க போகிறது? நம்மை விருந்துக்கு அழைத்து கெளரவித்தவரை புகழாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை பற்றி தவறான செய்திகளை சொல்ல வேண்டாம் விருந்தாளிகளே! குறைகளை பேசாமல் நிறைவுகளை பேசலாமே!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X