நானா போனதும்; தானா வந்ததும்! (17)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2012
00:00

வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும், கிடைக்கிற பிராவிடண்ட் பண்ட், கிராஜுவிட்டி பணத்தை உடனே செலவழித்துத் தீருவது என்று எண்ணுவது, மானிடருக்கே ஏற்பட்ட சாபக்கேடு.
சில அதிபுத்திசாலிகள், வட்டியால் வாழலாம் என்று, எந்த பண்டிலாவது போட்டுவிட்டுக் கையைப் பிசைவர். (கை என்பதே, பிசைவதற்கு வசதியாகத்தான், கடவுள் படைத்திருக்கிறார். பணத்தை சேர்த்து, பண்டில் போட்டு விட்டு தான், பிசைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை!)
நான் பத்திரிகையாளனாதலால், காசு பண விஷயத்தை எப்படி காப்பாற்றுவது என்றெல்லாம், கட்டுரை எழுதியிருக்கிறேன். ஆனால், கையில் பணம் கணிசமாக வந்தவுடன், எழுதினது எல்லாம் மறந்து விட்டது. "புது நெல் புது நாத்து' போல, புது மூளை; புது பணம்!
வைப்புத் தொகையாவது, வைக்காத தொகை யாவது... "ஏற்கனவே, கர்ப்பவதி, இதில்,தேளும் கொட்டினார்போல...' என்பதற்கேற்ப பதிப்பகமும் தொடங்கி விட்டேன்.
இறுதியாக, விடைபெறும் முன், ஆசிரியரிடம், "லாபமும் இல்லாமல், நஷ்டமும் இல்லாமல், பதிப்பகம் நடத்தப் போகிறேன்...' என்றதும், அவர், "இரண்டில் ஒன்றுதானே இருக்க முடியும். லாபம் இல்லாவிட்டால், நஷ்டம் தானே?' என்றார்.
பதிப்பகம் ஆரம்பிக்கும் சூரத்தனத்தில், யார் சொல்வதும் காதில் ஏறாது. புத்தகம் போடுவதில் உள்ள முதல் சிரமம், இடப் பிரச்னை. அச்சடித்து வந்த புத்தகங்களை அடுக்கி, பிரவுன் பேப்பரில் சுற்றி, கட்டுக் கட்டாகக் கட்டி, மகனின் அறையில் பதுக்கி விட்டேன். அந்த அறையில்தான், அவன் படுப்பது வழக்கம். தினமும் காலையில் எழுந்ததும், புத்தகங்கள் ஏதாவது விற்றிருக்கிறதா என்று பார்ப்பான்.
"ஒரு கட்டுக்கூடப் போக வில்லை யே...' என்பான். "எல்லாம் போயிருக்கு...' என்று, நான் மனசார ஒரு பொய்யைச் சொல்லுவது உண்டு.
ஆனால், அடுக்கி வைத்திருந்த புத்தகக் கட்டுகளின் உயரத்தை அளக்க என்று ஒரு நாடா, (தையல்காரர் வைத்திருப்பது மாதிரி) பையன் வாங்கி வைத்திருந்தான். ஆகவே, அவனிடம் நான், "ஒரு கட்டு குறைந்திருக்கிறது...' என்றெல்லாம், அளக்க முடியாது.
எனக்கும், என் புத்தகங்களுக்கும் வயதாகிக் கொண்டேயிருந்தது. சில, பல எலிகள் மற்றும் சலங்கைப் பூரான், சலங்கைக்கு வழியற்ற சாதாப் பூரான் போன்ற ஊர்வன, புத்தகக் கட்டு இடுக்குகளில் குடியேறின. வாடகையாவது, கீடகையாவது. அவற்றை ஒழிப்பது, பெரிய காரியம் அல்ல; ஆனால், அந்தப் புத்தகக் கட்டுக்களை என்ன செய்வது?
ஒரு பிரபல புத்தகக் கடையில், கெஞ்சிக் கூத்தாடி, அறுபதுக்கு - நாற்பது என்ற ஒப்பந்தத்தில், பாதிக் கட்டுகளை இறக்கியாயிற்று. அதாவது, விற்பவர்களுக்கு அறுபது; தயாரித்தவனுக்கு நாற்பது.
நான் பதிப்பகம் நடத்தியதில், ஒரு கணக்குத் தெரிந்து கொண்டிருந்தேன். ஒரு புத்தகம் நூறு ரூபாய் என்றால், மூன்றில் ஓரு பங்கு பிரின்டிங் முதலிய தயாரிக்கும் செலவு. அடுத்த ஒரு பங்கு, கமிஷன் தொகை. இன்னும் ஒரு பங்குதான் லாபம். ஆனால், கணக்குப்படி எங்கே நடக்கிறது? விற்கிற ஏஜன்ட்டே, அறுபது பர்சன்ட் வேண்டுகிறார்; மீதி நாற்பதில், முப்பத்தி மூன்று பர்சன்ட் தயாரிப்புச் செலவு; வெறும் ஏழு பர்சன்ட்தான் லாபம். எழுதியவனுக்கு ஏழு பர்சன்ட்; எழுதாதவர்களுக்கு அறுபது பர்சன்ட்!
ஏஜன்டுகளை விரட்டினால், எதிர்பாராத வம்புகள் வருகின்றன. பிரபல புத்தக விற்பனைக் கம்பெனியிடம், "ஏன் சரியாக விற்க மாட்டீர்களா?' என்று கேட்டதற்கு, அந்த மானேஜர், "உங்களுடைய புத்தகங்களை இங்கே வைத்திருக்க, நீங்கள் வாடகை தர வேண்டும். வெறும் கமிஷன் தந்தால் போதாது. கமிஷன் என்பது விற்றபின் வருவது...' என்று, தெளிவுபடுத்தினார்.
புத்தகங்களைக் கரைக்க, கடைசியில் ஒரு வழி கண்டுபிடித்தேன். எல்லா வீட்டுக் கல்யாணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், குழந்தைகள் பிறந்த நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்,என்று சகல சடங்குகளுக்கும் ஆஜராகி, புத்தகங்களை அன்பளிப்பாகத் தருவது என்று தீர்மானித்தேன்.
அதிலும் சங்கடம், "எங்கள் வீட்டு எல்லா விசேஷத்துக்கும், பல வருஷங்களாக, இதே புத்தகத்தைத்தான் தருகிறீர்கள். வேறு புதியது எழுதக் கூடாதா?' என்று கேட்டனர்.
ஆகவே, அந்த ஊற்றுக் கண்ணும் அடைப்பட்டுப் போயிற்று. என் கையில் புத்தகத்தைப் பார்த்தாலே, கூட்டத்தை கலைக்க வந்த குதிரையைக் கண்டு மிரளுவது போல, மக்கள் மிரண்டு ஓடினர்.
ஆகவே, யாரால் வியாபாரம் செய்ய முடியுமோ, அவர்கள்தான் புத்தகம் வெளியிட வேண்டும்; பதிப்பகம் நடத்த வேண்டும். இப்படியாக, என் பதிப்பக தாகம் ஒடுக்கப்பட்டு அடங்கியது. ஒவ்வொரு வருடமும், புத்தகக் கண் காட்சியைப் பார்க்கும் போது, "கெட்டிக்காரர்களும், விவேகிகளும், அறிவாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்...' என்பதை உணர்கிறேன்.
எந்தத் தொழிலுக்குமே ஒரு நேக், கெட்டிக் காரத்தனம் இருக்கிறது. (சேலம் மாவட்டத்தில் கெட்டிக் காரத்தனத்திற்கு, "சுனாயுதம்' என்ற ஒரு சொல்லை உபயோகப் படுத்துவர்!)
எந்தத் தொழிலையுமே, அனுபவத்தாலும், தொழில் தெரிந்தோரிடம் பழகியும் தெரிந்து கொண்டு, காரியத்தில் இறங்க வேண்டும்.
கீதையில் பகவான் சொன்னது...
"தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா, உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வதர்சின...' அதாவது, பணிந்தும், கேட்டும், பணிவிடை செய்தும், நீ அதை அறிக, உண்மையை உணர்ந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பர் என்பது பொருள்.
கல்யாணம் செய்து கொண்டால், பிள்ளை குட்டிகள் பிறக்கும் என்பது இயற்கை. ஆனால், அது நூறு சதவீதம் சாத்தியம் அல்ல. அதுமாதிரிதான் உழைத்தால், புத்தகம் விற்று விடலாம் என்பதும். நான் உழைக்காத உழைப்பா? மூளை சற்று மட்டு என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்வேன்!
தொடரும்.
பாக்கியம் ராமசாமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
09-மார்ச்-201212:32:00 IST Report Abuse
சகுனி அது ஒண்ணுமில்ல கனிமொழி, நீங்க திகாருக்கு போனதும் இந்த அபத்தம் முடிஞ்சிடும் ......
Rate this:
Share this comment
Cancel
soundar - Chennai,இந்தியா
08-மார்ச்-201221:19:58 IST Report Abuse
soundar மிக அருமையான கட்டுரை. தன வாழ்வியல் அனுபவங்களை நேர்த்தியாக ஆசிரியர் சொல்கிறார்
Rate this:
Share this comment
Cancel
வினோத் குமார் - மதுரை,இந்தியா
07-மார்ச்-201212:02:41 IST Report Abuse
வினோத் குமார் ஒரு புத்தகம் வாசகரிடம் போய் சேருவது சாதாரண வேலை இல்லை என்று தெரியும். ஆனால் அதை லாபகரமாக மாற்றுவது இவ்வளவு கடினம் என்பதை உணர முடிகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X