அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2012
00:00

கடந்த வாரம் சேலம் கேம்ப்! திடீரென, பெரியசாமி அண்ணாச்சியிடமிருந்து போன்!
"ஏம்ப்பா மணி... நானும், மயினியும் (அண்ணி - அதாவது எனக்கு அண்ணி - நான் இவரை அண்ணாச்சி என அழைப்பதால்...) சேலம் வந்திருக்கோம்... மதியால (மதிய) சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர்றீயா?' என அழைப்பு விடுத்தார்.
அண்ணாச்சி வாசம் செய்வதென்னவோ சென்னைதான் என்றாலும், அவரது மாட்டுத் தீவன தொழிற்சாலை சேலத்தில் தான் உள்ளது. சேலம், பெங்களூரு பை - பாஸ் சாலையில், திருச்சி - சென்னை போகும் வழியில், ரயில்வே மேம்பால இறக்கத்தில், இடது புறமாக ஆர்.பி., என, பெரிய அளவில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் தொழிற்சாலை தான் அவருடையது.
சமீபத்தில் தான் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் தம் மனைவியுடன், டூர் சென்று, வந்திருந்தார்... அந்தக் கதைகளைச் சொல்லத்தான் விருந்து வைத்து அழைக்கிறார் என்பது புரிந்து போக, "மதிய சாப்பாட்டுக்கு வந்து விடுகிறேன்... என்னோடு லென்ஸ் மாமாவும் இருக்கிறார்... அவரும் வருவார்...' எனக்கூறி போனை வைத்தேன்.
அண்ணாச்சி வீட்டு விருந்து என்றதும், லென்ஸ் மாமாவின் நாக்கில், "ஜொள்' கொட்ட ஆரம்பித்தது... அண்ணாச்சியின் மனைவி, அசைவம் சமைப்பதில் எக்ஸ்பர்ட்...
"மணி, "கடிக்க' வகை, வகையா கிடைக்கப் போகுது... அதை ரசித்து, ருசித்து சாப்பிடணுமுன்னா கொஞ்சமா உ.பா., ஏத்திக்கிட்டே
ஆகணும்... ஒரு மணிக்கெல்லாம் நான் நேரே அண்ணாச்சி வீட்டுக்கு வந்து விடுகிறேன்...' என்றார்.
அதே ஏற்பாட்டின்படி, மதியம் ஒரு மணிக்கு இருவருமே அண்ணாச்சி வீட்டை அடைந்தோம்.
தடபுடல் வரவேற்புக்குப் பின், தலைவாழை இலை போட்டு, பரிமாற ஆரம்பித்தார் அண்ணாச்சியின் மனைவி.
முதலில் லட்டு, பின்னர், தயிர் பச்சடி, ஸ்வீட் பச்சடி, கீரை, புடலங்காய் கூட்டு, உருளைக்கிழங்கு பொரியல் வைத்துவிட்டு, "ரைஸ்' பரிமாறவும், விழிக்க ஆரம்பித்தார் லென்ஸ் மாமா...
"அண்ணாச்சி... என்ன இது... எல்லாம் சைவமா இருக்கு... கடிக்க... கொள்ள ஒண்ணும் கிடையாதா?' என வாய்விட்டே கேட்டு விட்டார்.
"கூறுகெட்ட ஆளா இருக்கீரே... இன்னிக்கு என்ன கிழமை. வெள்ளி... வியாழனும், வெள்ளியும் மயினி விரதம்! பால், பழம் தவிர எதையும் தொட மாட்டாக...' என்றார்.
லென்ஸ் மாமாவின் கனவுக் கோட்டை இடிந்து விழ, சைவ சாப்பாட்டை கடனே என சாப்பிட்டு முடித்தார்...
"அண்ணாச்சி, ஐரோப்பா கதை சொல்லுங்க...' என நான் கேட்டதும், விலாவாரியாக விவரிக்க ஆரம்பித்தார்.
அவர் கூறியதில், பைசா நகர சாய்ந்த கோபுர விஷயம் சுவையானது...
போனானோ பிஸ்ஸானோ என்பவர் 1173ல் இந்த கோபுரத்தை கட்ட ஆரம்பிச்சாராம்ப்பா... சதுப்பு நிலத்தில் கட்டப்
பட்டதால், பத்தரை மீட்டர் உயரம் எழும்பியதுமே, கோபுரம் லேசாகச் சரிய ஆரம்பித்து விட்டதாம்... என்றாலும், இந்தச்
சரிவை, கட்டடம் உயர, உயரச் சரி செய்து விடலாம் என்ற நோக்கில் மூன்று மாடிகள் வரை கட்டி விட்டாராம் போனானோ... அத்துடன் நிறுத்தி விட்டாராம்...
பின்னால், டோமாஸ்ஸோ என்பவர் இந்தப் வேலையை தொடர்ந்து மேற்கொண்டு, சாமர்த்தியமாக எட்டு மாடிகள் வரை கட்டினாராம்... 1300ல் இது முற்றுப் பெற்றதாம்... மொத்தம், 54 மீட்டர் உயரம். வட்ட வடிவில் அமைந்த எட்டு மாடிகளுக்கும் வெளித் தாழ்வாரங்கள் உண்டு.
ஒவ்வொரு மாடியிலும் உள்ள பால்கனித்தூண்கள், அதற்கு மேல் உள்ள மாடிகளைத் தாங்குகின்றன. விசித்திரம் என்னவென்றால், இத்தனை உயர கோபுரத்துக்கு, மூன்று மீட்டர் ஆழம் தான் அஸ்திவாரம் போட்டாங்களாம்.
கோபுரம் இன்று செங்குத்து நிலையிலிருந்து நாலு மீட்டர் சாய்ந்து நிற்கிறது. உள்ளுக்குள், 293 படிகளைக் கொண்ட சுழல் மாடிப்படி அமைந்திருக்கிறது. உச்சியில் ஒரு மணிக்கூண்டு இருக்கிறது...
சாய்ந்த கோபுரத்தை இன்று ஆராய்ந்து பார்க்கிற விஞ்ஞானிகள், அதைக் கட்டி முடித்தவனின் மேதா விலாசத்தை எண்ணி, எண்ணி பிரமித்துப் போகிறாங்களாம்...
பேராசிரியர் பர்லண்டு என்பவர் சொல்கிறார்... "கோபுரம் சரியும் என்பது, இதைக் கட்டியவர்களுக்கு தெரிந்தே இருந்தது. சாய்ந்தாலும், சரிந்து விடக் கூடாது என்று திட்டமிட்டு வேலை செய்திருக்கின்றனர் என்பது இக்கட்டடத்தை ஆராயும் போது புரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக, தென் பகுதியில் இருப்பதை விடவும், வடக்குப் பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கல் பாளங்கள், ஒரு செ.மீ., மெல்லியதாக உள்ளன. நாலாவது மாடியை அவர்கள் அடைந்தபோது, திட்டமிட்டுப் பத்து செ.மீ., கனம் குறைவான பாளங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்... இதிலிருந்தே சாய்மானத்தைத் தடுக்க முயன்றிருக்கின்றனர் என்பது புரிகிறது...' என்றாராம்!
ஐந்தாவது மாடியைக் கட்டும் போது, ஒரு விசித்திரம் நிகழ்ந்ததாம்... கோபுரம் நேராக நிமிர ஆரம்பித்ததாம்... இதன் காரணம் உறுதியாகத் தெரியவில்லையாம். ஒருவேளை, சதுப்பு நிலத்தின் களிமண் கெட்டிப்பட்டிருக்கலாம் என்கின்றனர்... கட்டி முடிக்கப்பட்ட போது கோபுரம் வடக்குப் புறமாகத்தான் லேசாகச் சாய்ந்திருந்ததாம்... இப்போது உள்ளது போல் தெற்குப்புறம் அல்லவாம்...
சரிவை சரி செய்து விடலாம் என்று சிலர் முயற்சி எடுத்த போதெல்லாம், கோபுரம் மேலும் சற்றுச் சரிந்து பீதி கிளப்பியிருக்கிறதாம்... உதாரணமாக, 1920ல் கோபுரத்தைச் சுற்றி, ஒரு நடைபாதை தோண்டினார்களாம்... உடனே, கோபுரத்தின் சரிவு கூடியது. 1930ல் முசோலினி இந்த கோபுரத்தின் அஸ்திவாரத்துக்குள், 800 டன் சிமென்ட்டை, விசைப்பம்புகளை பயன்படுத்திச் செலுத்தினாராம்.
அஸ்திவாரத்தைப் பலப்படுத்தலாம் என்ற கருத்தில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி, கோபுரம் மேலும் சற்று சரியவே காரணமாயிற்றாம்... சமீபத்தில், கோபுரத்தில் பல நவீன கருவிகளைப் பொருத்தி ஆராய்ந்தனராம்... கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்பட்ட இந்த அதி நவீன தானியங்கிக் கருவிகள், மேலும், பல அதிசயத் தகவல்களை விஞ்ஞானிகளுக்குத் தெரிவித்தனவாம்...
அதாவது, சூரியோதயத்துக்குப் பிறகு, வெயில் ஏற, ஏற, கோபுரம் லேசாக - அரை மில்லி மீட்டர் அளவுக்கு - சுழல்கிறது என்பது தான். இதன் காரணமாகவே கோபுரம் அதிர்கிறது என்றும் கண்டுபிடித்தார்களாம்!
தற்போது, இரண்டு தற்காலிக ஏற்பாடுகளையும் செய்துள்ளனர் கோபுரம் சாயாமல்இருக்க! இரும்பு கம்பிகளை பிளாஸ்டிக் உறையிட்டுத் தயாரித்து, அவற்றை அடிவாரத்தில், கோபுரத்தைச் சுற்றிப் பிணைத்திருக்கின்றனர். இது கோபுரத்தின் சாய்மானத்தைக் கணிசமாகத் தடுக்கும் என்று கருதப்படுகிறது.
பிளாஸ்டிக் உறையிலிருப்பதால், கம்பி சுற்றியிருப்பதே பார்வையாளருக்குத் தெரியாது. தவிர, தென்புறம் அஸ்திவாரத்தின் மீது ஏற்படும் அழுத்தத்தைச் சமன் செய்ய, வடக்குப்புறம், 800 டன் எடையில் ஈயம் பூமிக்குள் இறக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்...'
— ஆச்சரியமாக இருந்தது!
அண்ணாதுரையை நேரில் பார்த்திராத இன்றைய தலைமுறையினருக்கு...
ஒரு கட்டுரையில் ரா.நெடுஞ்செழியன், தங்கள் தலைவரை இப்படி சித்தரிக்கிறார்... படியுங்கள்...
குள்ள உருவம்... குறும்புப் பார்வை... விரிந்த நெற்றி... பரந்த மார்பு... கறை படிந்த பற்கள்!
கவலையில்லாத தோற்றம்; நறுக்கப்பட்ட மீசை. நகை தவழும் முகம்; சீவாத தலை. சிறிதளவு வெளி வந்த தொப்பை.
செருப்பில்லாத கால்; பொருத்தமில்லாத உடைகள். இடுப்பில் பொடிமட்டை; கையில் வெற்றிலை பாக்குப் பொட்டலம். இந்தத்
தோற்றத்தோடு அதோ காட்சி அளித்து நிற்கிறாரே... அவர் தான் அண்ணாதுரை!
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X