அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2012
00:00

** கே.சுந்தர், உத்திரமேரூர்: எப்படிப்பட்டவர்களை நம்பக் கூடாது?
நீங்க நல்லா இருந்தா அதுவே போதும் என்கிறார்களே... அவர்களை நம்பவே கூடாது! "உங்களால் சில நன்மைகள் கிடைக்கும் என்பதால் தான், உங்களோடு பழகிக் கொண்டிருக்கிறேன்...' என நேரடியாக சொல்கிறார்களே அவர்களை முழுமையாக நம்பலாம்!
***

*சு.குணசேகரன், திண்டுக்கல்: மனிதனுக்கும், குரங்குக்கும் என்ன வித்தியாசம்?
வித்தியாசம் ஒன்றே ஒன்றுதான்; அதன் வால் வெளியே தெரியுது... இவனுக்கு உள்ளே இருக்கு! ஆனால், ஒற்றுமைகள் அதிகம், அதில் ஒன்று, பிடுங்கித் தின்னுவது!
***

*எம்.ஆனந்தன், பழைய பல்லாவரம்: விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகம் இருக்க வேண்டியது மாமியாரிடமா, மருமகளிடமா?
முதலாமவரிடம் தான்! மருமகளுக்கு என்ன அனுபவம் இருக்கப் போகிறது. ஒரு தாயின் அன்புடனும், பரிவுடனும், மருமகளை ஆரம்பம் முதலே நடத்த ஆரம்பித்தால், தன்னாலே வந்து விடாதோ, விட்டுக் கொடுக்கும் குணம் மருமகளிடம்.
***

*எஸ்.மகேஸ்வரன், திருமங்கலம்: அரசியல், சினிமா... எந்த துறையில், அதிக பணம் ஈட்ட முடியும்?
இரண்டிலுமே கோடிகளைக் காணலாம். முன்னதற்கு உழைப்பு தேவையில்லை; சினிமாவில் உடல் உழைப்பும் வேண்டும். பெண் ஆனால், அதை வெளிச்சம் போட்டு வெளியே காட்டவும் வேண்டியது இருக்கும்.
***

*என்.ராமர்பிள்ளை, பண்ருட்டி: உண்மையான நண்பர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது? என் நண்பர்கள் வட்டம் பெரிது; கூட இருந்தே குழிப் பறிக்கின்றனர்...
பெரிய சிக்கல் ஒன்று வந்திருப்பதாக கற்பனையாகக் கூறி, "உன் உதவி இருந்தால் தான் இதிலிருந்து வெளியேற முடியும்...' எனக் கேளுங்கள்... ரியாக்ஷனைப் பாருங்கள், நீங்களே... தீர்மானத்திற்கு வந்து விடுவீர்கள்.
***

* ஆ.துளசிதாஸ், பெரிய நாயக்கன்பாளையம்: இந்தியாவில் எந்த மாநில ஆட்சியை, நல்லாட்சி என்பதற்கு உதாரணமாக கூறலாம்?
ஒன்றைக் கூட கூற முடியாது. தங்கள் பதவியை காத்துக் கொள்வதிலேயே, கவனத்தை செலவழித்துக் கொண்டுள்ளனர் ஆட்சியாளர்கள். வாங்கும் சம்பளத்தில், குடும்பத்தை நடத்திச் செல்ல இயலாத அளவில், விலைவாசி ஏறிக் கொண்டே போகிறது. ஏமாளிகளாக, "வாழ்க, ஒழிக...' என, கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறோம் நாம்!
***

*ஜி.சந்தியா, திருநகர்: பிறமொழி கலப்பில்லாமல், தமிழில் பேச முடியுமா?
ரொம்ப சிரமம்! பிறரது நகைப்பை பொருட்படுத்தாதவராக இருந்தால், அறிவியல், மருத்துவம், பொறியியல், விவசாயம் போன்றவை தவிர்த்த விஷயங்களில் பேச முயலலாம்.
***

** ஆர்.மணி, கொளத்தூர்: சம்பாதிக்கும் பெண்கள், ஆண்களை, கணவனை மதிக்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பற்றி...
சுய சம்பாத்தியம், தன்னம்பிக்கையை அளிக்கிறது பெண்களுக்கு! இவர்கள் சாதாரணமாக ஒரு நியாயத்தை கேட்டாலே கணவன்மார்களுக்கும், ஆண்களுக்கும், "ஈகோ' பஞ்சராகி விடுகிறது. "ஆங்... இவள் கேள்வி கேட்டு விட்டாளே...' என ஆத்திரம் கொள்கின்றனர். சம்பாதிப்பதால் வந்த திமிர் என, "ஸ்டேட்மென்ட்' விட்டு விடுகின்றனர். இதுதான் நடைமுறையே தவிர, "சம்பாதிக்கும் பெண்களுக்கு திமிர் வந்து விடும்!' என்பது அபத்தம்.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோ.செழியன் - Uthamapalayam,இந்தியா
09-மார்ச்-201222:02:47 IST Report Abuse
கோ.செழியன் சங்கரன்கோவில்ல அதிமுகவ மக்கள் தேர்ந்து எடுக்க போறதுக்கான காரணம் என்ன?
Rate this:
Share this comment
Cancel
அ.சு.VENKATESH - Chennai,இந்தியா
06-மார்ச்-201219:13:12 IST Report Abuse
அ.சு.VENKATESH நான் எத்தனையோ வருடங்களாக தினமலரில் அந்துமணி பதில்களை படித்து வருகிறேன், அவற்றில் குறிப்பாக எல்லா கேள்விகளும் எனக்குள்ளே இருந்தது. பதில்களும் நான் எதிர்பார்த்தது போலவே அற்புதமாய் இருந்தது. தற்போதைய உலக அறிவு பெற இந்த வார பகுதியை படித்தால் போதும். குறிப்பாக எப்படிப்பட்டவர்களை நம்பகூடாது, பணம் பண்ணகூடிய துறைகள்,நண்பர்களை அடையாளம் காண்பது, எந்த மாநில ஆட்சி நல்லாட்சி, தமிழில் கலப்பிலாமல் பேச முடியுமா- இது போன்ற கேள்விகளின் பதில்கள் மிக அருமை. மிகவும் உண்மை. மிக எதார்த்தம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X