இதப்படிங்க முதல்ல!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2012
00:00

கொலை வெறியின் புது வடிவம்!
கொலைவெறி பாடலை, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம்பெறும் விளம்பர படத்துக்காக, புதிய வடிவில் தயார் செய்து வருகிறார் தனுஷ். மேலும், இந்த விளம்பரத்தில், தன்னுடன் இணைந்து நடிக்க, அனுஷ்கா வையும், "புக்' செய்துள்ள தனுஷ், இந்த விளம்பர வேலைகள் முடிந்த பிறகு, சச்சினை நேரில் சந்திக்க இருக்கிறார். "சச்சினின் ரசிகனாக இருந்தும், இப்போது தான், நான் அவரை முதன்முதலாக நேரில் சந்திக்கப் போகிறேன்...' என்கிறார் தனுஷ்.
சினிமா பொன்னையா.

மீண்டும் சிம்பு - நயன்தாரா!
ஒஸ்தி படத்தில், மல்லிகா ஷெராவத் ஆடிய பாடலுக்கு ஆட, முதலில் நயன்தாராவை தான் அழைத்தார் சிம்பு. ஆனால், தான் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளப் போவதை காரணம் காட்டி தவிர்த்தார் நயன். தற்போது, பிரபுதேவா-நயன்தாரா இருவரும் பிரிந்து விட்டதால், மீண்டும் தன் புதிய படத்தில் நடிக்க, நயன்தாராவிடம் பேசி வருகிறார் சிம்பு. முன்னதாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவை, "புக்' பண்ணி விட்டனர்.
எலீசா.

மீண்டும் தாரா!
இங்கேயும் ஒரு கங்கை, நாயகன், பறவை கள் பலவிதம் உட்பட பல படங்களில் நடித்தவர் தாரா. தமிழில், 18 வருடங்களுக்கு பின், அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கும், மாற்றான் படத்தில், அம்மா வேடத்தில் நடிக்கும் இந்த தாரா, 2005ல் ஹசினா என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காக, தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இராது.
எலீசா.

சத்யன் மார்க்கெட் எகிறியது!
நண்பன் படத்துக்குப் பிறகு, சத்யனின் காமெடி மார்க்கெட் எகிறி நிற்கிறது. கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருக்கும் அவர், முன்னணி ஹீரோக்களின் படங் களுக்கே முதலிடம் கொடுக்கிறார். அதோடு, இதுவரை படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று வாங்கி வந்த சத்யனும், சந்தானம் போன்றே, நாள் சம்பளம் பேசி வருகிறார்.
— சி.பொ.,

கமல் படத்தில் ப்ரியா ஆனந்த்!
சித்தார்த் நடித்த, 180 படத்தில் நடித்திருந்தவர் ப்ரியா ஆனந்த். தமிழ் நடிகையான இவருக்கு, தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால், அந்த படத்துக்குப் பிறகு யாரும் பட வாய்ப்புத் தரவில்லை. இந்நிலையில், கமல்ஹாசன் தன் விஸ்வரூபம் படத்திற்கு, ப்ரியாவை, "கமிட்' பண்ணியுள்ளார். அதனால், "அந்த படத்தை வைத்தே, தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விடுவேன்...' என்று உற்சாகமாக சொல்கிறார். நினைத்தது இருக்க, நினையாதது வந்தாலும் வந்து சேரும்.
— சி.பொ.,

பிரேசில் நாட்டில் இரண்டாம் உலகம்!
ஆயிரத்தில் ஒருவன் படத்தை விடவும், இரண்டாம் உலகம் படத்தை பிரமாண்டமாக இயக்குகிறார் செல்வராகவன். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை, பிரேசில் நாட்டில் நடத்தவிருக்கும் செல்வராகவன், முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆர்யா - அனுஷ்கா ஆகியோரை, இரண்டு மாதங்களாவது பிரேசில் நாட்டில் முகாமிட வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளார்.
சி.பொ.,

பத்தாவது இடத்தில் ஐஸ்வர்யா ராய்!
கடந்த 2011ல் எந்த நடிகை, அதிக ரசிகர்களை பெற்றிருக்கிறார் என்று, இந்திய அளவில் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில் முதலிடம் பெற்றிருக்கிறார் இந்தி நடிகை கரீனா கபூர். முதலிடம் பிடித்து வந்த ஐஸ்வர்யா ராய், இந்த முறை பத்தாம் இடத்துக்கு தள்ளப் பட்டுள்ளார். மேலும், இதில் தென்னிந்திய நடிகைகளான ஸ்ருதி ஹாசன், 15வது இடத்தையும், அசின், 17வது இடத்தையும், த்ரிஷா, 19வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.
— எலீசா.

வில்லி வேடத்தில் ரம்யா நம்பீசன்!
இது வரை ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த ரம்யா நம்பீசன், முதன் முறையாக மலையாளத்தில் உருவான டிராபிக் படத்தில், கணவனுக்கு துரோகம் செய்யும் வில்லித்தனமான வேடத்தில் நடித்துள்ளார். இதன் தமிழ் ரீ - மேக்கில் நடிக்க, தமிழ் நடிகைகள் தயங்குவதை கேள்விப்பட்டு, மீண்டும் அதே வேடத்தில், நடிக்க முன்வந்துள்ள ரம்யா நம்பீசன், இனி ஹீரோயினாக மட்டுமின்றி, மாறுபட்ட கதாபாத்திரங் களில் நடிக்கவும் தயாராகி விட்டதாக சொல்கிறார்.
— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுவாமி - Thanjavur,இந்தியா
04-மார்ச்-201222:33:29 IST Report Abuse
சுவாமி ஏய் லூசு தனுஷு விவேக் காமெடி வசனம் மாதிரி " நீ ஒரு உருபடடாத முண்டம், அறிவு கேட்ட தண்டம் " சச்சின் ஒரு தண்டம் ரெண்டு தண்டமும் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் பண்ணுது அட கொடுமையே.கொடும கொடுமன்னு கோவிலுக்கு போன அங்க சாமி கோபுரத்து மேல நின்னு ஆடிகிட்டு ninnuchaam.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X