நடிகரின் மகளும், வருமான வரி ரெய்டும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2012
00:00

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான ராம்குமாரின் வீடு, அந்த அதிகாலை வேளையிலும் பரபரப்பாக இருந்தது. வீட்டின் உள்ளேயிருந்த ஒரு ரகசிய அறையில், நடிகரும், ஒரு அரசியல் தலைவரும், கிசுகிசுப்பான குரலில் பேசிக் கொண்டிருந்தனர்.
""தம்பி... உங்க பிரச்னையை நேரடியா நிதியமைச்சர் கிட்டயே சொல்லி விட்டேன். அவர் உங்க பேரக் கேட்டதுமே, "கவலைப்பட வேண்டாம். நான் பாத்துக்கறேன்'னு சொல்லிட்டாரு. ஆனா, தம்பி... இப்ப அரசியலும், சினிமா மாதிரி, ஒரு பெரிய வியாபாரமாப் போச்சு!''
""உங்களுக்கு எவ்வளவு வேணுமோ தயக்கமில்லாமக் கேட்டு வாங்கிக்கங்கண்ணே...''
""ஐயோ தம்பி... என்ன வார்த்த சொல்லிப்புட்டீங்க... எங்க கட்சி, பணத்துக்குக் காய்ஞ்Œ கட்சி இல்ல தம்பி... பல வருஷமா, மத்தியில ஆட்சியில இருந்திருக்கோம். பல மாநிலங்கள்ல எங்க ஆட்சி நடக்குது. ஆளுங்கட்சிக் கூட்டணில இருக்கோம். பணத்துக்கு குறைச்சல் இல்ல தம்பி.
""இன்னும் கொஞ்ச நாள்ல, தமிழகத்துல தேர்தல் வருதுல்ல... அதுல எங்க கட்சி ஜெயிக்கணுமேன்னு மினிஸ்டர் கவலைப்படறாரு... "நான் இந்தக் கட்சிய ஆதரிக்கறேன். எல்லாரும் இந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்கன்'னு சும்மா ஒரு நிமிஷம் ஓடற மாதிரி, ஒரு வீடியோ பண்ணிக் கொடுங்க தம்பி. அத வச்சே, நாங்க தேர்தல்ல ஜெயிச்சிருவோம். உங்க, "பவர்' என்னன்னு உங்களுக்கே தெரியாது தம்பி!''
""அதுக்கு என்னண்ணே... நீங்க சொல்றபடி செய்து தர்றேன்.''
""அது போதும் தம்பி... போன வாரம் இன்கம்டாக்ஸ்காரங்க உங்க வீட்டுலருந்து எடுத்துட்டுப் போன ரெண்டு கோடி ரூபாய் ரொக்கம், நகை, சொத்து பத்திரம் எல்லாத்தையும், சேதாரமில்லாம வாங்கித்தர வேண்டியது என் பொறுப்பு.''
""ஹாய் சவும்யா... நீ எப்பம்மா மும்பை யிலிருந்து வந்த... சொல்லி ருந்தா ஏர் போர்ட்டுக்கு கார் அனுப்பிச்சிருப்பேன்ல.''
""திடீர்னு, மூணு நாள் சேந்தாப்புல லீவ் கிடைச்சுதுப்பா; அதான்.''
""நீ மெட்ராஸ்ல இருந்தா நல்லாருக்கும்ல... உனக்காக ஒரு பத்திரிகையே ஆரம்பிச்சித் தர்றேம்மா!''
""தேங்க்ஸ்ப்பா... ஆனா, நான் இங்கிருந்து என்ன செஞ்சாலும், பிரபல நடிகர் ராம்குமாரின் மகள்ங்கற முத்திரை, அதுல அழுத்தமா விழுந்துரும். அங்க யாருக்கும் என்னத் தெரியாது. அங்க, என் வேலைய மட்டும் தான் பாப்பாங்கப்பா!''
""உன்னோட பேசி, என்னால ஜெயிக்க முடியாதும்மா.''
""அப்பா... எனக்கு நீங்க ஒரு பெரிய ஹெல்ப் பண்ணனும்!''
""சொல்லும்மா...''
""என்னை, இப்போ சீனியர் ரிப்போர்ட்டராக்கியிருக்காங்க... அடுத்த வாரம், நான் பிரபல இந்தி நடிகர் அமீர்கானைப் பேட்டி எடுக்கப் போறேன்.''
""கன்கிராஜுலேஷன்ஸ். அவரு பெரிய ஆளும்மா. பாத்து ஜாக்ரதையாப் பேசணும். ஏதாவது துடுக்குத்தனமாப் பேசி, அவரக் காயப்படுத்திடக் கூடாது.''
""அந்த பயம் எனக்கும் இருக்குப்பா... ஆனா, எங்க ஆபீசுல வித்தியாசமா கேள்வி கேட்கக் சொல்றாங்க. அவரு திணருற மாதிரி கேள்வி கேட்கணுமாம். அதான் மண்டையப் போட்டு உடச்சிக்கிட்டு இருக்கேன்.''
""அதுக்கு நான் எப்படிம்மா உதவி பண்ண முடியும்?''
""நீங்களும் பெரிய நடிகர் தானே. நான் உங்களையே பேட்டி எடுக்கறேனே... சும்மா ஒரு பயிற்சிக்காகத்தான். நான் ஏதாவது தப்பாக் கேள்வி கேட்டா, நீங்க என்னத் திருத்தலாம்ல.''
""நல்ல ஐடியா தான். ஆனா, இன்னிக்கு நேரம் இருக்குமான்னு தெரியல.''
""நான் உங்க பி.ஏ.,கிட்ட பேசிட்டுத்தான் வர்றேன். இன்னிக்கு மத்தியானம், ரெண்டு மணியிலிருந்து, ஆறு மணி வரைக்கும், நீங்க வீட்டுலதான் இருக்கப் போறீங்க. மூணு மணியிலிருந்து, நாலு மணி வரைக்கும், ஒரே ஒரு மணி நேரம், உங்க ஒரே ஒரு பொண்ணுக்காக, கால்ஷீட் தர மாட்டிங்களாப்பா?''
""நிச்சயமாத் தர்றேம்மா.''
மூன்று மணிக்கு, கையில் மைக் பொருத்தப்பட்ட, ஒரு ஒலிப்பதிவுக் கருவியுடன், தன் தந்தையின் அறைக்குள் நுழைந்தாள் சவும்யா.
""இந்த பேட்டி முடியற வரைக்கும், நீங்க ஒரு நடிகர்; நான் ஒரு ரிப்போர்ட்டர்... அவ்வளவு தான். நான் வேணும்ன்னே சில தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்பேன். உங்களுக்குப் பதில் சொல்ல முடியலேன்னா விட்ரலாம். ஆனா, எந்தக் காரணத்தக் கொண்டும், பேட்டிய பாதில நிறுத்தக் கூடாது; ப்ராமிஸ்?''
தன் செல்ல மகள் நீட்டிய கையில், மெதுவாக அடித்து, சத்தியம் செய்தார், ராம்குமார்.
""மிஸ்டர் ராம்குமார்...''
""என்னம்மா பேரெல்லாம் சொல்லிக்கிட்டு?''
""பாம்பே ரிப்போர்ட்டர்ஸ், பிரதமரையே, "மிஸ்டர் மன்மோகன் சிங்'ன்னு கூப்பிட்டுத்தான் பேசறாங்க.''
""சரிம்மா!''
""மிஸ்டர் ராம்குமார்... உங்க அபாரமான நடிப்புத் திறமையால, தமிழக மக்களையே மயக்கிட்டீங்க. அதுவும், பண முதலைங்கற படத்துல, உங்க நடிப்பு சூப்பர். அவ்வளவு சிறப்பா உங்களால எப்படி நடிக்க முடியுது?''
""மிஸ் சவும்யா... நடிக்கறது எனக்கு ஒரு பொழுது போக்கோ, பணம் சம்பாதிக்கிற வழியோ இல்ல; அது ஒரு தவம். எந்தப் பாத்திரத்தில் நடிக்கறேனோ, அதாவே மாறிடுவேன். நீங்க சொன்ன, பண முதலை படத்துல, எனக்குக் கருப்புப் பண முதலைகளை எதிர்த்துப் போராடற, சி.பி.ஐ., அதிகாரியோட பாத்திரம். சிவாஜி படத்துல, நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்சதவிட, கஷ்டமான பாத்திரம்.
""அதுக்காக, டில்லில ஒரு, சி.பி.ஐ., அதிகாரியோடு ரெண்டு நாள் தங்கியிருந்து, அவரோட நடை, உடை, பாவனைகளைப் பாத்துப் பாத்து, அந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தேன். அதனால் தான், அந்தப் படம் பெரிய அளவுல வெற்றியடைஞ்சது. அதுக்காக, எனக்குத் தேசிய விருது கூட கெடச்Œது!''
""உங்க தொழில் பக்திய பாராட்டறேன். எனக்கு ஒரு சின்ன சந்தேகம். பொதுவா ஒரு நடிகர்னா படத்துல, பல இடங்கள்ல, பல பேருக்கு, நேர்மையா, ஒழுங்கா இருக்கணும்ன்னு, "அட்வைஸ்' கொடுப்பீங்க. "அடுத்தவன ஏமாத்தாத... பணத்தை விட, மனசுதான் முக்கியம்'ன்னு சகட்டு மேனிக்கு, பஞ்ச் டயலாக் பேசுவீங்க. சொந்த வாழ்க்கையில, அதுக்கு நேர் எதிரா நடந்துப்பீங்க...
""ஆமா, நீங்க எப்படி மிஸ்டர் ராம்குமார்... சினிமா வேற, யதார்த்த வாழ்க்கை வேறன்னு கோடு போட்ருவீங்களா... இல்ல, சொந்த வாழ்க்கையிலயும் கடைப்பிடிப்பீங்களா?''
""மத்த நடிகருங்களப் பத்தி எனக்கு தெரியாது. என்னப் பொறுத்தமட்டில், நான் கடைப்பிடிக்காத எந்த விஷயத்தையும், வசனமாகப் பேசறதுல்ல... உடச்சிச் சொல்றேனே! எனக்குக் குடிக்கற பழக்கம் இருக்கு. அதனால, எந்தப் படத்துலயும், "மது குடிக்கக் கூடாது'ன்னு ஆஷாடபூதித்தனமா "அட்வைஸ்' செஞ்சதேயில்லை!''
""சபாஷ்... இப்ப உங்க நேர்மையப் பாராட்டறேன். பண முதலை படத்துல கருப்புப் பணத்த எதிர்த்துப் போராடற வேஷத்துக்காக, உங்களுக்கு தேசிய அளவில் விருது கிடைச்சிருக்கு. உங்ககிட்ட கருப்புப் பணமேயில்லன்னு உங்களால உறுதியாச் சொல்ல முடியுமா?''
""சவும்யா... என்னது இது?''
""அப்பா... கண்டிஷன் மறக்காதீங்க. நீங்க நடிகர்; நான் ரிப்போர்ட்டர். இது பேட்டி... சத்தியம் செய்து கொடுத்திருக்கீங்க!''
""ஒத்துக்கறேன் மிஸ் சவும்யா... சில விஷயங்கள்ல, நான் படத்துல சொல்றது மாதிரி செய்ய முடியல. ஆனா, யாரும் செய்யாதத நான் செய்யலையே. கருப்புப் பணம் இல்லாத நடிகர், நடிகை, அரசியல் தலைவர், அரசு அதிகாரி, தொழிலதிபர் யார் இருக்கான்னு சொல்லுங்க பார்ப்போம்?''
""அது போகட்டும்... போன வாரம், உங்க வீட்டுல இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்துதா?''
""அது என்னோட சொந்த விஷயம்!''
""ஒரு காமெடி நடிகர், தன்னோட மனைவிய விட்டுட்டு, ஒரு கவர்ச்சி நடிகையக் கல்யாணம் செஞ்சிக்க தீர்மானிச்சிட்டாரு. அந்த நடிகருடைய மனைவி, நடிகர் சங்கத்துல புகார் கொடுத்தாங்க. நீங்க அந்த நடிகர கூப்பிட்டு விசாரிச்சிங்க. அவர், "அண்ணே அது சொந்த விஷயம்ண்ணே. விட்டுருங்கன்'னு சொன்னாரு...
""அப்ப நீங்க என்ன சொன்னீங்க... "பொது வாழ்க்கைக்கு வந்தாச்சன்னா, சொந்த விஷயம்ன்னு எதுவுமே இருக்கக் கூடாது'ன்னு அவருக்குச் சொன்னீங்களா இல்லையா... "எவளோட வேணும்ன்னாலும் தொடர்பு வச்சிக்க. ஆனா, கல்யாணம், அது, இதெல்லாம் வேண்டாம்'ன்னு, "அட்வைஸ்' செய்தீர்களா இல்லையா?''
""கட்டின மனைவி உயிரோட இருக்கும் போது, இன்னொருத்தியக் கல்யாணம் செஞ்சிக்கறது சட்டப்படி குற்றம். அதனால தான் அப்படிச் சொன்னேன்.''
""கணக்குல காட்டாம, கருப்புப் பணம் வச்சிக்கறது மட்டும், சட்டப்படி குற்றம் இல்லையா... அந்த நடிகர் செஞ்ச குற்றம், ஒரு குடும்பத்தத்தான் பாதிக்கும்; வரி கட்டாம ஏமாத்தறது, நாட்டையே பாதிக்கும் இல்லையா?''
திணறினார் ராம்குமார்.
""ஆமாம்... ரெய்டு வந்தாங்க, ரெண்டு கோடி ரூபாய் ரொக்கம், ஏராளமான தங்க, வைர நகைகள், சொத்துப் பத்திரங்களை அள்ளிக்கிட்டுப் போய்ட்டாங்க. அதத் திருப்பி வாங்க, நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.''
""சபாஷ்... நீங்க எப்படி முயற்சி செய்யறீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா. பெரிய, பெரிய ஆடிட்டர்கள வச்சி, அதெல்லாம் கணக்குல வந்த தொகைதான்னு, அரசுக்கு நிரூபிச்சி, ரெய்டு வந்ததே தப்புன்னு அவங்களுக்குப் புரியவச்சி, நீங்க ஒழுங்கா வருமானவரி கட்டற இந்தியக் குடி மகன்னு எடுத்துச் சொல்லி, உங்க பணத்தை திருப்பி வாங்கப் போறீங்களா மிஸ்டர் ராம்குமார்? இல்ல ஆளுங் கட்சிக்கு, ஓட்டுப் போடுங் கன்னு ஒரு வீடியோ பண்ணிக் கொடுத்து, உங்க கருப்புப் பணத்தத் திருப்பி வாங்கப் போறீங்களா?''
""சவும்யா... நீ எல்லையத் தாண்டற!''
""அப்பா... நீங்க எனக்குக் கொடுத்த டயத்துல, இன்னும் அரைமணி நேரம் பாக்கியிருக்கு.''
""ஆமா... பண்ணப் போறேன். அதுல என்ன தப்பு? நான் பல வருஷமா ராத்திரி பகல்ன்னு, மூணு ஷிப்ட் நடிச்சி சம்பாதிச்ச பணத்தத் திருப்பி வாங்கறதுக்காக, ஒரு நிமிஷம் வீடியோவுல நடிக்கப் போறேன். என் ஒரே மகளுக்குன்னு, ஆசை ஆசையா செஞ்சி வச்ச நகைகளைத் திருப்பி வாங்கறதுக்காக, அதச் செய்யப் போறேன். அதுல என்ன தப்பு?''
""சரி அத விடுங்க... நீங்க ஒரு கட்சிய ஆதரிச்சி, வீடியோ பண்ணித் தரப்போறீங்களே, அதப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?''
""எனக்கு அரசியல்ல அவ்வளவு ஆர்வம் கிடையாது.''
""திருப்பியும் உங்க நேர்மையை பாராட்டறேன். உங்களுக்கு எதுக்கு அரசியல்ல ஆர்வம் இருக்கணும். அரசியல்ல நடக்கிற மாற்றங்கள் உங்கள பாதிக்காது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், உங்களுக்கு ஒரு படத்துல கெடைக்கப் போற சில கோடிகள், கெடச்சிக்கிட்டுத்தான் இருக்கும்.
""ஆனா, மிஸ்டர் ராம்குமார்... சாதாரண மக்களுக்கு அப்படியில்லை. உங்க வீடியோவப் பாக்கப் போற, லட்சக்கணக்கான மக்கள நெனச்சிப் பாருங்க.... அவங்கள பொறுத்தமட்டில், ஒரு நல்ல வலுவான கட்சி ஆட்சியில இருந்தாத்தான், ஊழல் இல்லாத நிர்வாகம் இருக்கும், விலைவாசி கட்டுக்கடங்கியிருக்கும், சட்டம் - ஒழுங்கு சரியா இருக்கும், வாழ்க்கை பாதுகாப்பா இருக்கும், ரேஷன் கடையில, அரிசி, மண்ணெண்ணெய் தாராளமா கெடைக்கும். நீங்க ஆதரிக்கிற கட்சி, இதையெல்லாம் கொடுக்கும்ன்னு நீங்க நம்பறீங்களா?
""மிஸ்டர் ராம்குமார்... நீங்க ஆதரிக்கிற கட்சி சரியில்லன்னு நான் சொல்ல வரல, இல்ல எதிர்க்கட்சி தான், சரின்னும் நான் சொல்லல... மக்கள் பல விஷயங்கள ஆராய்ஞ்” பாத்து, சிந்திச்சி முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. இத விட்டுட்டா, அடுத்த வாய்ப்பு அஞ்சு வருஷம் கழிச்சுத்தான்.
""எப்படி முடிவெடுக்கறதுன்னு, ஏற்கனவே குழம்பிப் போயிருக்கற மக்கள்கிட்ட, உங்க வீடியோவை போட்டு காட்டினாங்கன்னா, அவங்க எல்லாம் உங்கமேல இருக்கிற மயக்கத்தில, கண்ண மூடிக்கிட்டு, நீங்க சொல்ற சின்னத்துல, ஓட்டுப் போட்ருவாங்க. ஒரு வேளை, அது தப்பான தேர்வா இருந்தா, அடுத்த அஞ்சு வருஷம் அவங்க கஷ்டப்படறதுக்கு, நீங்க மறைமுகமா காரணமாயிருவீங்க.
""கருப்பு பணம் வச்சிக்கறதும் தப்புத்தான். ஆனா, அந்தக் கருப்புக் பணத்தக் காப்பாத்துறதுக்காக, உங்களேயே நம்பியிருக்கற, உங்க ரசிகர்களை, ஒரு அரசியல் கட்சிக்கு அடகு வைக்கறீங்க பாருங்க; அது, அதைவிடப் பயங்கரமான தப்பு!''
""அப்ப நான் என்னதான் செய்யறது?''
""வருமானவரி ரெய்டு தப்புன்னு தோணிச்சின்னா, அத சட்டப் பூர்வமா எதிர்த்துப் போராடுங்க. பெரிய ஆடிட்டர்களை வச்சி, பல வருஷக் கணக்கச் சரிபார்க்கச் சொல்லுங்க. சட்டப்படி நீங்க கட்ட வேண்டிய, வரி போக, பாக்கித் தொகைய, அரசாங்கத்திடமிருந்து சண்டை போட்டு வாங்குங்க. அத விட்டுட்டு, உங்களுக்கு ஆனா, ஆவன்னா கூடத் தெரியாத அரசியல் துறையில மூக்க நுழைச்சி, மக்கள் வாழ்க்கையச் சிக்கலாக்காதீங்க. லட்சக்கணக்கான மக்களை அடகு வச்சி, உங்க கருப்புப் பணத்த மீட்கணுமான்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.
""அப்பா... நான் ஒரு ரிப்போர்ட்டரா சொல்லல... உங்க மேல உயிரையே வச்சிருக்கற, ஒரு மகளா இருந்து சொல்றேன். நாளைக்கு யாராவது, "நடிகர் ராம்குமார் இன்கம்டாக்ஸ் ரெய்டுலருந்து தப்பிக்கறதுக்காக, மக்களக் காட்டிக் கொடுத்துட்டாரு'ன்னு சொன்னா, அத என்னால தாங்கிக்க முடியாதுப்பா. அந்த ஆதங்கத்திலதான், நான் இப்படிக் கண்மூடித்தனமாக் கேள்வி கேட்டுட்டேன். என்ன அறியாம, உங்க மனச புண்படுத்தியிருந்தா என்ன மன்னிச்சிருங்கப்பா.''
கண்ணில் நீர் பெருக, காலில் விழப் போன, தன் அருமை மகளை அணைத்துக் கொண்டார் ராம்குமார். அவர் மனதில், பல தீர்க்கமான முடிவுகள் உருவாகிக் கொண்டிருந்தன.
***

வரலொட்டி ரெங்கசாமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ngn - salem,இந்தியா
10-மார்ச்-201207:12:09 IST Report Abuse
ngn மிகவும் நன்றாக உள்ளது
Rate this:
Share this comment
Cancel
போ ந balasubramanian - chrompet,இந்தியா
09-மார்ச்-201213:25:10 IST Report Abuse
போ ந balasubramanian நம்ப முடியவில்லை ஆயினும் அழகாக சொல்லப்பட்ட கதை வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
பாலா - chennai,இந்தியா
06-மார்ச்-201219:37:20 IST Report Abuse
பாலா ரொம்ப கேவலமா இருக்கு கதை. . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X