சபிக்கப்பட்ட சகோதரிகளின் கண்ணீர் கதை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2012
00:00

மனித வாழ்வில் சோகங்கள் நிகழ்வது வழக்கமானது தான். ஆனால், வாழ்க்கை முழுவதுமே சோகமயமாக இருந்தால்... அப்படி ஒரு சோகமயமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த, மூன்று ஏழைச் சகோதரிகள். சவிதா வயது 23, மோனிஷா வயது 18, சாவித்திரி வயது 16 ஆகிய மூன்று சகோதரிகளும், புனே அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கின்றனர். ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். தந்தை இல்லை. தாயாரும், இன்னும் மூன்று சகோதரிகளும், இவர்களுக்கு உண்டு.
சவிதா, மோனிஷா, சாவித்திரி ஆகிய மூன்று சகோதரிகளும், மயிர் மிகைப்பு (ஹைபர்ட்ரிசோசிஸ்) என்ற விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேருக்கும், உச்சியிலிருந்து, உள்ளங்கால் வரை, அடர்த்தியாக ரோமங்கள் வளர்ந்துள்ளன. புருவம், தாடை, கன்னம், மூக்கின் கீழ் பகுதி உள்ளிட்ட பகுதிகளில், அடர்த்தியான ரோமங்கள் உள்ளன. திடீரென இவர்களின் முகங்களை பார்த்தால், ஓநாய்களை பார்ப்பது போல் இருக்கும்.
இவர்கள் வெளியில் சென்றாலே, "ஓநாய் சகோதரிகள் வந்து விட்டனர்' என, வயது வித்தியாசம் இல்லாமல், அனைவரும் கிண்டலடிப்பது வழக்கமாகி விட்டது. உடலின் மற்ற பகுதிகளை மறைத்து விட்டாலும், முகத்தை மறைக்க முடியாதல்லவா? இதனால், இவர்களது வாழ்க்கையின் பெரும்பாலான நாட்கள், நான்கு சுவர்களுக்குள் முடங்கி விட்டன.
ரோமங்களை நீக்குவதற்கு எத்தனையோ, மருந்துகள், பசைகள் உள்ளன. ஆனாலும், இவர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. பலமுறை இவற்றை பயன்படுத்தியும், ரோமங்கள் வளர்வதை தடுக்க முடியவில்லை. இவர்களின் திருமணமும் கேள்விக் குறியாகி விட்டது.
லேசர் சிகிச்சை மூலம், ரோமங்களை நீக்கி விடலாம் என, ஒரு சிலர் தெரிவித்ததை அடுத்து, மருத்துவர்களை நாடினர். ஆனால், இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்கு, 3.5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அப்படியானால், மூவருக்கும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும். அடுத்த வேளை உணவுக்கே உத்தரவாதம் இல்லாத போது, இவ்வளவு பெரிய தொகைக்கு இந்த ஏழைச் சகோதரிகள் எங்கு போவர்.
"திருமணம் ஒரு பக்கம் இருந்தாலும், சக மனிதர்களை போல், நாங்களும் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதே, எங்களின் ஆசை. இந்த சாதாரண ஆசை கூட, நிராசை ஆகி விடும் போல் இருக்கிறது...' என, கண்ணீர் விடுகின்றனர், இந்த சகோதரிகள். இவர்களைப் பற்றி தகவல் அறிந்த ஸ்நெ குப்தா என்பவர், இவர்களை மையமாக வைத்து, ஆவணப் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதில் கிடைக்கும் பணத்தை வைத்து, இவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவர் முடிவு செய்துள்ளார்.
இந்த விசித்திரமான நோய், இவர்களுக்கு எப்படி வந்தது என்பது குறித்து, அவர்களின் தாயார் அனிதா கூறுகையில்,"எனக்கு 12 வயதிலேயே திருமணம் முடிந்து விட்டது. என் கணவருக்கு இந்த நோய் இருந்தது, இந்த விஷயம் திருமணத்தன்று தான் எனக்கு தெரிந்தது. அதற்கு முன் தெரிந்திருந்தால், திருமணத்துக்கு சம்மதித்திருக்க மாட்டேன். இந்த நோய், மரபு வழியாக வருவதால், என் மூன்று மகள்களுக்கும் வந்து விட்டது. சில ஆண்டுகளுக்கு முன், என் கணவரும் போய்ச் சேர்ந்து விட்டார். இவர்களை பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும், எனக்குள் குற்ற உணர்வு உறுத்துகிறது. காலம் கடந்து விட்டது. இனிமேல் என்ன செய்ய முடியும்...' என, விழிகளில் வழிந்தோடும் கண்ணீரை துடைக்க கூட மனம் இல்லாமல், வெறித்துப் பார்க்கிறார். அந்த பார்வையில், வார்த்தைகளில் விவரிக்க முடியாத சோகம் தெரிந்தது.
***

சி. சண்முகநாதன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயா - சென்னை,இந்தியா
06-மார்ச்-201216:32:27 IST Report Abuse
ஜெயா என்னால் இவர்களுக்கு பணம் உதவி செய்ய முடியாது. ஆனால் இவர்களுக்காக கடவுளிடம் நன்கு பிரார்த்தனை செய்ய முடியும்.
Rate this:
Share this comment
Cancel
சுப்ரமணியம் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
05-மார்ச்-201222:11:10 IST Report Abuse
சுப்ரமணியம் எனக்கு அவங்க விலாசம் கிடைக்குமா? ப்ளீஸ் 00971558272122
Rate this:
Share this comment
Cancel
வீர சரோ முனி வெங்கடேசன் - துபாய்,இந்தியா
04-மார்ச்-201222:03:26 IST Report Abuse
வீர சரோ முனி வெங்கடேசன் அன்புள்ள பத்திரிகை நண்பருக்கு இது போன்ற வறுமை மற்றும் உடல் கோளாறு உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கு சில வலைத்தளங்கள் உள்ளன என்று என் நண்பர்கள் சொல்ல அறிந்திருக்கிறேன் வலைத்தளம் முகவரி நினைவில் இல்லை. பத்திரிகை உலகில் உள்ள உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இவர்களை பற்றி அதில் வெளியிட்டால் கருணை மனம் கொண்டவர்கள் நிச்சயம் உதவி புரிவார்கள்.அவர்களுக்கும் வழி பிறக்கும். உதவி பெற்ற பின் கிடைத்த சேதியை பத்திரிகையில் வெளியானால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X