கவிதைச்சோலை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2012
00:00

நாளை என்பது....

* நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டி வைக்கும் நம்பிக்கை!

* இன்றைய பசியை,
நாளை கிடைக்கப்போகும்
உணவு பசியாற்றாது...
ஆனால்,
நம்பிக்கையூட்டும்!

* நாளை
விருட்சமாவோம் என்ற
நம்பிக்கையில் தான்
பிரமாண்ட மரம் கூட,
சிறு விதையுள்
தன்னை சுருக்கி
தவம் கிடக்கிறது!

* நாளைய நம்பிக்கைதான்
இன்றைய அவமான
வலிகளுக்கெல்லாம் மருந்து!

* நம்பிக்கை இழந்தவன்
தன்னை இழந்தவன்!

* நேற்றைய விதைப்பே
இன்றைய உணவு!

* அறுவடைகள்
காலதாமதமாகலாம்
ஆனால்,
பொய்ப்பதில்லை!

* மரத்திற்கு பழம்
சுமையாகலாம்
ஆனால்,
நீ, உனக்கு சுமையாகக் கூடாது!

* அடுத்த நொடியும்
உயிர் வாழ்வோம் என்ற
நம்பிக்கைதான்
வெளிவிட்ட காற்றை
மீண்டும் நுரையீரல்
நிறைக்கிறது!

* நம்முன், தட்டில் கிடக்கும்
ஒவ்வொரு பருக்கையும்
அடுத்த நொடி நாம்
உயிரோடு இருந்து
உண்ணப் போகிறோம்
என்ற நம்பிக்கையின்
வெளிப்பாடு!

* வா... நாளையை
ஒரு கை பார்ப்போம்...
உள்ளர்ப்பணத்தோடு
உழைப்போம்!

* நாளை - உன் வீட்டு
வேலைக்காரனாகும்!

* நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டி வைக்கும்
நம்பிக்கை பசை!

எஸ்.ஏ.சரவணக்குமார், சென்னை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மக்கள் குரல் - முத்து நகர் / இந்தியா,மாலத்தீவு
10-மார்ச்-201216:31:29 IST Report Abuse
மக்கள் குரல் அருமையான கவிதை அல்ல வாழ்க்கைக்கு தேவையான மிக அழகான கருத்து சோலை . BY போ.தி.செல்வன்
Rate this:
Share this comment
Cancel
ராமநானந்தன்.வப் - uae,ஐக்கிய அரபு நாடுகள்
08-மார்ச்-201210:08:47 IST Report Abuse
ராமநானந்தன்.வப் அருமை..............!!!!
Rate this:
Share this comment
Cancel
SANGEETHA - chennai,இந்தியா
07-மார்ச்-201219:12:00 IST Report Abuse
SANGEETHA That is very nice
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X