இந்த ஆண்டின் வெளியான நோக்கியா மொபைல் போன்களில் எக்ஸ்2-02 மொபைல் அதன் விலை, பயன்பாடு, தோற்றம் ஆகியவற்றால் மக்களைக் கவரத் தொடங்கி உள்ளது. இரண்டு பேண்ட் அலை வரிசையில் இரண்டு சிம்களில் இயங்கும் இந்த மொபைல், ஒரு பார் டைப் போனாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் பரிமாணம் 113x50x15 மிமீ. எடை 71 கிராம். திரை 2.2. அங்குல அகலம் கொண்டுள்ளது. போன் மெமரி 32 எம்பி தரப்பட்டு, அதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மாறா நினைவகம் 64 எம்பி. டிஜிட்டல் ஸூம் கொண்ட 2 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது. வீடியோ பதிந்து இயக்குகிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், மின்னஞ்சல் ஆகிய வசதிகள் கிடைக் கின்றன. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எம்பி3 பிளேயர், A2DP இணைந்த புளுடூத் ஆகியன தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.3,300.