இந்த வார இணையதளம் இந்தி திரைப்படப் பாடல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2012
00:00

மொழி, தேசம் இவற்றைக் கடந்து நாம் அனுபவிக்கும் சுகம் இசை தான். அதுவும் திரைப்படப் பாடல்கள் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் அளவிற்கு வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். இதனை உணர்ந்த ஒரு ரசிகர், இந்தி திரைப்படப் பாடல்களில் மக்கள் மனதிற்குப் பிடித்த பாடல்களாகத் தேர்ந்தெடுத்து அவற்றின் வீடியோ காட்சிகளுடன் ஓர் இணைய தளத்தில் பதிந்து வைத்துள்ளார். ஏறத்தாழ 19 ஆயிரம் பாடல்களுக்கு மேலாக இந்த தளத்தில் பதியப்பட்டுள்ளன. இந்த தளத்தின் முகவரி http://www.hindigeetmala.com.
இந்த தளத்திற்குச் சென்றவுடன் நம்மை வரவேற்பது எளிமையான இதன் இடைமுகம் (Interface) தான். இந்தி திரைப்படங்கள் வழியாகத் தேர்ந்தெடுக்க, ஆங்கில எழுத்துக்கள் வகையில் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, எஸ் (SSholay) என்ற எழுத்தில் தொடங்கும் ஒரு படத்தின் பாடல் வேண்டும் எனில், எஸ் எழுத்தில் அழுத்த, அந்த எழுத்தில் தொடங்கி, இந்த தளத்தில் பதியப்பட்டுள்ள படங்களின் வரிசை, அவற்றின் போஸ்டர்களுடன் காட்டப்படுகிறது. அதில் கிளிக் செய்தால், அந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் எவை எல்லாம், தளத்தில் உள்ளனவோ, அவை எல்லாவற்றிற்கும் லிங்க் தரப்பட்டுள்ளன. கிளிக் செய்தால், சிறிய வீடியோ திரையில் பாடல் காட்சி காட்டப்படுகிறது. பெரும்பாலும் இவை யு-ட்யூப் தளத்திலிருந்தே காட்டப்படுகின்றனர். அதன் கீழாக, அப்பாடல் வரிகள் ஆங்கில எழுத்துக்களில் பதியப்பட்டுள்ளன. உடன் அந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் வெளியான ஆண்டு, பாடல் ஆசிரியர், இசையமைத்தவர், பாடலைப் பாடியவர், நடித்தவர் என அனைத்து தகவல்களும் தரப்பட்டுள்ளன.
இந்த வகை இல்லாமல், பாடியவர்கள், படம் வெளியான ஆண்டு மற்றும் இசை அமைத்தவர் என்ற வகையிலும் தேடும் வகையில் லிங்க்குகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, லதா மங்கேஸ்கர் பாடிய பாடல் ஒன்றைத் தேடினீர்கள் என்றால், அதில் கிளிக் செய்தால், அவர் தனியே மற்றும் பிறருடன் பாடிய பாடல் காட்சிகள் கிடைக்கின்றன. இதே போல இசையமைப்பாளர் வகையிலும் தேடிப் பெறலாம்.
யு-ட்யூப்பில் பதியப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் என்பதால், எளிதாக இவற்றை டவுண்லோட் செய்திடலாம்.
பாடகர்களின் இள வயது படங்களுடன் மொத்தம் எத்தனை பாடல்கள் அத்தளத்தில் கிடைக்கின்றன என்று காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக, லதா மங்கேஸ்கரின் இளவயது புகைப்படத்துடன், அவர் பாடிய 2522 பாடல்களின் காட்சிகள் உள்ளதாக தகவல் முகப்புப் பக்கத்திலேயே தரப்படுகிறது. மொகமத் ரபி (1526), ஆஷா போஸ்லே (1,341), கி÷ஷார் குமார் (1062), உதித் நாராயண் (852) என இந்தப் பட்டியல் நீள்கிறது. மேலும் நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் படங்களுடன் லிங்க் தரப்பட்டுள்ளது. சோகப்பாடல்கள் (1163), காதல் பாடல்கள் (2,891), ஆடல் பாடல்கள் (1370) எனவும் பட்டியல் தரப்பட்டுள்ளது. கண்களைப் பற்றிய பாடல்கள், மழை குறித்த பாடல்கள் என்று ஒரு வகை பிரிவும் தரப்பட்டுள்ளன.
இடது புறம் உள்ள தேடல் கட்டத்தில், பாடல் வரிகளில் உள்ள சில சொற்களையும், பாடல் தலைப்பினையும் கொடுத்து தேடும் வசதியும் உள்ளது. பாடல் தலைப்பு என்ற வகையில், படத்தின் பெயர், படம் வெளியான ஆண்டு, பாடியவர், இசை அமைத்தவர், நடித்த முதன்மை நடிகர், பாடல் ஆசிரியர் ஆகிய தகவல்களைக் கொடுத்துத் தேடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இது போல யாராவது தமிழ்த் திரைப்படங்களூக்கான தளத்தையும் அமைத்தால் நல்லது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani.Pangan - Obajana,நைஜீரியா
09-மார்ச்-201203:01:57 IST Report Abuse
Mani.Pangan computer malar needs some care in formatting and hyper linking! Whenever the article writers mention a link to a web site/ web page, the clicking closes the Dinamalar page and s the linked page. Do u want to force the Dinamalar page? Eg: In this Computer Malar page alink to www hindigeetmala dot com. is given. If I click, the Computer malar page disappears and the linked page s. I do not want to close Dinamalar page, which is already in condition. Instead, the new link should be ed in a NEW TAB
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X