கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2012
00:00

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி இருந்த என் பழைய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை, கேம்ஸ் விளையாட என ஒதுக்கி வைத்துள்ளேன். சில கேம்ஸ் விளையாடிய பின்னர், கம்ப்யூட்டரின் கலர் ஸ்கீம் மாறிவிடுகிறது. இந்த மாற்றம் ஏற்படாமல் இருக்க என்ன செய்திட வேண்டும்?
-தா. ஜெயந்தி மகேஷ், சென்னை.
பதில்: நல்ல காரியம் செய்துள்ளீர்கள். கேம்ஸ் விளையாட மட்டும் என ஒதுக்கி வைத்ததன் மூலம், பழைய கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒரு வழியை மேற்கொண் டுள்ளீர்கள். இனி உங்கள் பிரச்னைக்கு வருவோம்.
கேம்ஸ் விளையாடி முடித்த பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் வகையில் கேம்ஸ் வடிவமைத்தவர்கள் செட் செய்திருக்க மாட்டார்கள். அதனால் தான் இந்த மாறுதலான சூழ்நிலை ஏற்படுகிறது.
உங்களுடைய டாஸ்க் பாரின் வலது மூலையில் மானிட்டர் அல்லது கிராபிக்ஸ் கார்டுக்கான ஐகான் இருந்தால், அதன் மீது ரைட்கிளிக் செய்து அதிலேயே பழைய நிலைக்கு மாற்றிவிடலாம். கேம்ஸ் கலர் சிஸ்டத்தினை 256 கலர் திட்டத்திற்கு மாற்றி இருக்கலாம். அதனை “High Colour” (16 bit) அல்லது “True Colour (32 Bit)” என்பதற்கு மாற்றவும். இல்லை என்றால் டெஸ்க் டாப் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties செலக்ட் செய்திடவும். அதில் Settings தேர்ந்தெடுத்து தேவையான ரெசல்யூசன் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

கேள்வி: பல ஒர்க்புக்குகளைத் தயாரிக்கையில், ஓரிரு ஒர்க்ஷீட்களை இன்னொன்றுக்கு மாற்ற விரும்புகிறேன். இதனை சிரமமின்றி மேற்கொள்வது எப்படி?
-சி. ஆறுமுக நேசன், சிவகாசி.
பதில்: இதற்கு எக்ஸெல் புரோகிராமில் வழி தரப்பட்டுள்ளது. முதலில் கடத்தி மாற்றப்பட வேண்டிய ஒர்க்ஷீட் உள்ள ஒர்க்புக், மற்றும் அதனை இணைக்க வேண்டிய ஒர்க்புக் ஆகிய இரண்டையும் திறந்து கொள்ளுங்கள். நகர்த்த வேண்டிய ஒர்க்புக்கினை பார்க்கும் வகையில் வைக்கவும். பின்னர் எடிட் மெனு சென்று, Move or Copy Sheet என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இனி Move or Copy Sheet டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அடுத்து To Book என்ற கீழ்விரி மெனுவினைப் பயன்படுத்தவும். இங்கு எந்த ஒர்க்புக்கிற்கு ஒர்க்ஷீட்டினை எடுத்துச் செல்ல வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் Before Sheet ஒர்க்ஷீட்டிற்கு ஏற்றபடி, ஏற்கனவே உள்ள ஒர்க்ஷீட்டுகள் மாற்றப்படும். இந்த Before Sheet பட்டியலில் நீங்கள் தேர்ந்தெடுத்த ஒர்க்ஷீட் எந்த ஒர்க்ஷீட்டிற்குப் பின்னர் வர வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், வேலை முடிந்துவிடும். நீங்கள் கேட்டுள்ளபடி, ஒர்க்ஷீட் மிக எளிதாக மாற்றப்படும்.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடக் கட்டளை கொடுக்கையில், அது மீண்டும் ரீபூட் ஆகிறது. இது எதனால் என்று என்ன தேடியும் கண்டறிய முடியவில்லை. சில வேளைகளில் இது மிகப் பெரும் தொல்லையாக உள்ளது. இதனை எப்படி நிவர்த்தி செய்யலாம்? பிரச்னை எங்குள்ளது?
-ஆ. நிஷா கண்ணன், சென்னை.
பதில்: இது ஒரு பொதுவான எரிச்சலூட்டும் பிரச்னைதான். இருந்தாலும், வரப்போகும் பெரிய சிக்கலுக்கான முன் அறிவிப்பு. எனவே சற்று கவனமாக இதனைக் கையாள வேண்டும். நீங்கள் ஷட் டவுண் செய்திடுகையில் என்ன நடக்கிறது என்று சற்று விளக்குகிறேன். நீங்கள் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுகையில், ஏதோ சிக்கல் ஏற்பட்டு, கம்ப்யூட்டர் கிராஷ் ஆகிறது. மாறா நிலையில், விண்டோஸ் சிஸ்டம், தான் கிராஷ் ஆகும் போது, தானாக ரீ பூட் ஆகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தான் உடனே ரீ பூட் ஆகிறது. ஆனால் இந்த கண்ணாமூச்சி விளையாட்டின் பின்னர் ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது என்பதே உண்மை. முதலில் இதனை எப்படி சரி செய்வது எனப் பார்ப்போம்.
ஸ்டார்ட் அழுத்தவும். எக்ஸ்பி எனில் ரன் விண்டோ பெறவும். பின்னர் வந்த சிஸ்டங்களில், கிடைக்கும் கட்டத்தில் sysdm.cpl என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் விண்டோவில் Advanced டேப் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ‘Startup and Recovery’ என்ற பிரிவில் Settings கிளிக் செய்திடவும். இங்கு Automatically restart என்பதில் உள்ள டிக் அடையாளத் தினை நீக்கிவிடவும்.

கேள்வி: சில வாரங்களுக்கு முன் ஆல்ட் கீ அழுத்தி சில குறியீடுகளை எப்படி அமைப்பது என எழுதி இருந்தீர்கள். வேர்ட் டாகுமெண்ட்டில் எம் டேஷ் மற்றும் என் டேஷ் அமைக்க என்ன எண்களை அழுத்த வேண்டும் எனத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-ஆ. கா. சிவகுரு, மதுரை.
பதில்: உங்கள் கேள்வி மற்றவர்களுக்கும் புரியும் வகையில் சிறு விளக்கம் தருகிறேன். டேஷ் கோடுகளைப் பொறுத்தவரை, அதன் அகலத்தில்தான் வேறுபாடு. சிறிது நீளமான டேஷ் கோடு endash என அழைக்கப்படுகிறது. எண்களின் தொடர்ச்சியைக் (6-19) குறிக்க இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அடுத்தது emdash. இது சற்று அகலம் கூடியது. எம் (m) என்ற ஆங்கில எழுத்தின் அகலம் இருக்கும். என் டேஷ் அமைக்க ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு நம் லாக் கீ பேடில் 0150 என்ற எண்களை அழுத்தவும். எம் டேஷ் அமைக்க 0151 அழுத்தவும். வேர்டில் மட்டுமின்றி, எக்ஸெல் தொகுப்பிலும் இவை கிடைக் கும். ஆனால் இவற்றைப் பயன்படுத்து கையில், எக்ஸெல் இணைந்துள்ள அனைத்தையும் டெக்ஸ்ட்டாக எடுத்துக் கொண்டு செயல்படும்.

கேள்வி: மொபைல் போன்களைப் பற்றி எழுதுகையில், புஷ் மெயில் என எழுது கின்றனர். இது எத்தகைய மெயில்? இதற்கும் இமெயிலுக்கும் என்ன வேறுபாடு?
-சி. மீனா, திருப்பூர்.
பதில்: மெயில் அக்கவுண்ட் வைத்திருக் கும் ஒருவருக்கு, அது இயங்கும் சர்வரில் அவருக்கு வரும் மெயிலை, ஏற்கனவே செட் செய்தபடி, அவரின் மொபைல் சாதனத்திற்கு "தள்ளிவிடுவதே' புஷ் மெயில். தள்ளி விட்டாலும், அந்த மெயிலை, அந்த சர்வர் தன்னிடத்திலும் வைத்துக் கொள்ளும். இதற்கு அந்த சர்வர் மற்றும் குறிப்பிட்ட மொபைல் சாதனத்திற்கு இடையே தொடர்பு உயிர்ப்புடன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட அக்கவுண்ட்டிற்கு மெயில் வந்தவுடனேயே, அந்த மெயில், மொபைல் சாதனத்திற்கு முன்னோக்கி தள்ளப்படும். இதற்கு மாறானது "புல்-மெயில்' (pull mail). இதில் பயன்படுத்துவோர் செட் செய்த கால இடைவெளியில், மொபைல் சாதனம் இயங்கி, குறிப்பிட்ட அந்த சர்வரிடமிருந்து மெயில்களைப் பெறும். மெயில் இல்லை என்றாலும், காத்திருந்து வந்தவுடன் கொத்திக் கொண்டு வந்து காட்டும்.

கேள்வி: இணையத்தில் பைல் அல்லது போட்டோ ஒன்றை அப்லோட் செய்திடுகையில், அது கம்ப்யூட்டரில் தங்கியுள்ள இடத்தை, அதன் வழிகளுடன் (Path) முழு முகவரியினத் தருமாறு தளங்கள் கேட்கின்றன. இதனை அமைப்பதில் பல தவறுகள் ஏற்படுகின்றன. இதனை அமைப்பதற்கு சுருக்கு வழி உள்ளதா?
-சி. ராஜேஸ், தாம்பரம்.
பதில்: சரியான தகவல் வாங்கும் அவசியமான கேள்வி. நீங்கள் சொல்வது உண்மைதான். நாம் குறிப்பிடும் பைலை அப்லோட் செய்திட எண்ணுகையில், அது ஏழு மலை தாண்டி வைக்கப்பட்ட மந்திரவாதியின் கிளி போல, பல போல்டர்கள் தாண்டி இருக்கும். ஒவ்வொன்றாகக் கிளிக் செய்து அதனை கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். அதிர்ஷ்டவசமாக, இதற்கென ஒரு எளிய வழி உள்ளது.
1. விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். அப்லோட் செய்யப்பட வேண்டிய பைல் அல்லது போட்டோவினைக் காணவும்.
2. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, பைல் மேலாக ரைட் கிளிக் செய்திடவும்.
3. அப்போது கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனு (context menu) வில், Copy as path என்பதில் கிளிக் செய்திடவும். இதனால், கிளிப் போர்டில், பைல் எங்கிருக்கிறது என்ற தகவல் அதன் வழிகளுடன் காப்பி செய்யப்படும். நீங்கள் ஷிப்ட் கீ அழுத்தாமல், ரைட் கிளிக் செய்தால், இந்த ஆப்ஷன் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. (சோதனை செய்து பார்க்க ஒருமுறை அழுத்தித்தான் பாருங்களேன்)
4. இப்போது உங்கள் பிரவுசரில் அப்லோட் டூலை ஏற்றுக் கொண்டு Browse என்பதில் கிளிக் செய்திடவும்.
5. பைலுக்கான இடத்தில் கண்ட்ரோல்+வி (Ctrl+V) அழுத்தி, ஏற்கனவே கிளிப் போர்டில் உள்ள முகவரியை ஒட்டவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும்.
அவ்வளவுதான்! ஒவ்வொரு போல்டராகச் சென்று தேடி, பைலைக் கண்டறிய வேண்டாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathish - muscat,ஓமன்
05-மார்ச்-201217:34:49 IST Report Abuse
sathish என்னுடைய கம்ப்யூட்டர் விண்டோஸ் xp os , எப்பொழுது எல்லாம் நெட்வொர்க் connection கட் ஆகின்றதோ அப்பொழுது எல்லாம் ரீஸ்டார்ட் கன்டினியூஸ் ஆகா ஆகிறது அடுத்து நெட்வொர்க் connection கிடைக்கும் வரை what i can do plz give me a solution ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X