எக்ஸெல் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 மார்
2012
00:00

செல் ரேஞ்ச் - சில விளக்கங்கள்
எக்ஸெல் தொகுப்பில் பார்முலாக்களில் செல்களின் ரேஞ்சினைக் குறிப்பிட வேண்டும். ரேஞ்ச் குறிப்பிடுகையில் கமா, கோலன் (இரு புள்ளி) ஸ்பேஸ் எனப் பலவகைகளைப் பயன்படுத்தப்படு கின்றன. ஆனால் இதனை அமைப்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது என்பது நமக்கு வரும் கடிதங்களிலிருந்து தெரிகிறது. இந்த வகையில் சில அடிப்படையான விஷயங்கள் இங்கு காட்டப்படுகின்றன.
முதலில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிறுத்தக் குறியீடுகள் சாதாரண டெக்ஸ்ட்டில் வருவது போல சொற்களுக்கிடையேயான நிறுத்தக் குறிகள் அல்ல. இவை பார்முலாவின் ஓர் அங்கமாகும். எனவே இவற்றைக் கவனமுடன் அமைக்க வேண்டும்.
( : ) : கோலன். இது ஒரு சிங்கிள் ரேஞ்சினைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக A1:C2 என்பது A1 முதல் C2 வரையிலான செல்களைக் குறிக்கிறது.
(,) : கமா என்னும் காற்புள்ளி இரண்டு ரேஞ்ச் செல்கள் இணைந்ததைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக A1:C2, B1:B4 என்பது ஏ1 முதல் சி2 வரையிலான ரேஞ்சையும் பி1 முதல் பி4 வரையிலான ரேஞ்ச் செல்களையும் இணைந்த தொகுதியைக் குறிக்கிறது. இது போன்ற இணைப்பு செல்களைக் குறிப்பிடுகையில் கவனமாகக் கண்காணித்துக் கொள்வது நல்லது. நீங்கள் விரும்புகின்ற வகையில் பார்முலா செயல்படுகிறதா என்பதனைக் கவனிக்க வேண்டும்.
இறுதியாக ஸ்பேஸ் என்னும் இடைவெளி செல் ரேஞ்ச்களில் குறுக்கிடும் செல்களை மட்டுமே குறிப்பிடுகிறது. எடுத்துக் காட்டாக A1:C2, B1:B4 எனக் குறிப்பிட்டால் இந்த இரு ரேஞ்ச் செல்களும் எங்கு குறிக்கிடுகின்றனவோ அந்த செல்கள் மட்டுமே பார்முலாவில் இயக்கப்படும்.
இங்கு எடுத்துக்காட்டுக்களில் செல்களின் பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன. ஆனால் பார்முலா இயங்கும் போது அவற்றின் மதிப்புகள் கணக்கிடப்படும்.

டெக்ஸ்ட் எழுத்தை மாற்ற
எக்ஸெல் தொகுப்பில் செல்களில் டெக்ஸ்ட் டைப் செய்த பின்னர், அதன் எழுத்து அமைப்பை மாற்ற எண்ணு வோம். அனைத்தும் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களிலோ பெரிய எழுத்துக் களிலோ, அல்லது இவை கலந்த வழக்கமாக நாம் எழுதும் வகையிலோ இருக்க வேண்டும் என நாம் விரும்பலாம். இதற்கு வேர்ட் டாகுமெண்ட்டில் ஷிப்ட் எப்3 நமக்கு உதவும். எக்ஸெல் தொகுப் பில் அந்த கட்டளைகள் உதவாது. அதற்குப் பதிலாக சில பார்முலாக்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக் காட்டாக, A1 என்ற செல்லில் Excel Formulas என்ற சொற்களை அமைப்போம். பின்னர் இன்னொரு செல்லில் கீழ்க்காணும் பார்முலாக்களை அமைத்தால், என்ன வகையில் மாற்றம் ஏற்படும் என அடுத்துத் தரப்பட்டுள்ளது.
=PROPER(A1) பார்முலா “Excel Formulas” எனவும்
=UPPER(A1) பார்முலா “EXCEL FORMULAS” எனவும்
=LOWER(A1) பார்முலா “excel formulas” எனவும் தரும்.

நாள், மாதம் மற்றும் ஆண்டு
எக்ஸெல் தொகுப்பில் நம் பழக்கத்திற் கேற்ப இந்த நாள், மாதம் மற்றும் வருடத்தின் எண்ணைத் தோன்றச் செய்திடலாம். இதனை எவ்வாறு செட் செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் எந்த செல்களில் தேதி அமைய வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின் Format மெனு சென்று அதில் Cells என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + 1 அல்லது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells தேர்ந்தெடுக்கலாம். பின் கிடைக்கும் பார்மட் செல்ஸ் டயலாக் விண்டோவில் Number டேபினைக் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில் இடது பக்கம் கேடகிரி என்பதன் கீழாக Custom என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Type என்பதில் பல ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இவற்றில் நீங்கள் விரும்பும் வகையில் தேதி மற்றும் ஆண்டினை அமைக்கும் வகையைக் காணலாம். அவை என்னவென்று இங்கு பட்டியலிடலாம்.

தேதி வகைகள்
d என்பது ஒரு நாளின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 ... 30, 31)
dd என்பது நாளின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
ddd என்பது நாளினைச் சுருக்கித் தரும் (Mon, Tue ....)
dddd என்பது நாளினை அதன் முழு பெயரில் தரும் (Monday, Tuesday, etc).

மாதத்திற்கான குறிப்புகள்:
m என்பது ஒரு மாதத்தின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 ... 30, 31)
mm என்பது மாதத்தின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
mmm என்பது மாதத்தினைச் சுருக்கித் தரும் (Jan, Feb,....)
mmmm என்பது மாதத்தினை அதன் முழு பெயரில் தரும் (January, February etc).
mmmmm என்பது மாதத்தின் முதல் எழுத்தினைத் தரும் (J, F, M, A,)

ஆண்டுக்கான குறிப்புகள்:
yy என்பது வருடத்தின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (07,08,09)
yyyy என்பது வருடத்தின் எண்ணை நான்கு இலக்கங்களில் தரும்(2007, 2008, 2009)

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayanthi - chennai,இந்தியா
21-மார்ச்-201215:20:58 IST Report Abuse
jayanthi sir, thank you for tips for excel for date formatting. But I have some doubts. I have typed the date like date,month and year. But i need mm,dd,yyyy format. While I am changing by using custom i don&39t understand that it is changed or not. I have typed the same like this (=date (year,moth,day) . Is this correct or not? please explain this immediately as I need it very urgently.. Or any other format for correcting this . please explain. Jayanthi
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X