கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2012
00:00

கேள்வி: .chm என்ற எக்ஸ்டென்ஷன் கொண்ட பல பைல்கள் என் கம்ப்யூட்டரில் உள்ளன. டைரக்டரியில் காணப்படும் இந்த பைல்களை எதற்கும் பயன் படுத்தவில்லை. இவை எதற்கான பைல்கள்?
-டாக்டர் கா.கோமதி, கோவை.
பதில்: Compiled Html Manual Format என்ற பைல்களின் எக்ஸ்டென்கள்தான் .chm ஆகும். விண்டோஸ் மற்றும் சில அப்ளிகேஷன்களின் ஹெல்ப் பைல்கள்தான் இவை.

கேள்வி: இன்டர்நெட் பிரவுசர் பயன்படுத்தி, வெப்சைட் ஒன்றைப் பார்வையிடுகையில், விண்டோ ஒன்றை மேக்ஸிமைஸ் செய்திட எந்த கீகளை அழுத்த வேண்டும்?
-டி. ஆப்ரஹாம், புதுச்சேரி.
பதில்: நல்ல கேள்வி. பலரும் மேலாக வலது மூலையில் கிடைக்கும் கட்டங்களையே பயன்படுத்துவார்கள். இதற்கென கீகள் உள்ளது கூடப் பலருக்குத் தெரியாது. Alt + Space + X என்ற கீகளை அழுத்தினால் நீங்கள் விரும்பியது கிடைக்கும். Alt + Space + N அழுத்தினால் அதுவே மினிமைஸ் ஆகும். அழுத்தியவுடனேயே இடது மூலையில் மெனு கிடைக்கும். இதில் மேக்ஸிமைஸ் மற்றும் மினிமைஸ் கொண்ட மெனு பட்டியல் காட்டப்படுவதனைக் காணலாம்.

கேள்வி: எக்செலின் ஹெடரில் C&B என டைப் செய்தால் எனக்கு CB என்றுதான் கிடைக்கிறது. அந்த ""&'' அடையாளம் காணாமல் போய் விடுகிறது. எப்படி அந்த அடையாளத்தை டைப் செய்ய?
-கா.ராஜகோபால், ஆசிரியர், பெரம்பலூர்.
பதில்: Ampersand எனப்படுகிற ""&'' எழுத்தை Control Code என எக்செல் எடுத்துக் கொள்ளுகிறது. எனவேதான் அதை நீங்கள் ஹெடரிலும், புட்டரிலும் டைப் செய்தால் எக்செல் கண்டு கொள்ளாமல் உள்ளது. இருப்பினும் அதனை இருமுறை தொடர்ந்து டைப் செய்யுங்கள். அதாவது C&&B என நீங்கள் டைப் செய்ய வேண்டும். உங்களுக்கு C&B எனக் கிடைக்கும்.

கேள்வி: தற்போது எம்.எஸ்.ஆபீஸ் 2003 பயன்படுத்தி வருகிறேன். அலுவலகத்தில் ஆபீஸ் 2007 பயன்படுத்தி வருகிறேன். இவற்றில் ஆபீஸ் 2010 இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும் எனில், என்ன மாதிரியான ஹார்ட்வேர் தேவைப்படும்.
-கா. சுந்தரம், சென்னை.
பதில்: உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்கனவே ஆபீஸ் 2007 இயங்கிக் கொண்டிருந்தால், அந்த கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2010 தொகுப்பினையும் இயக்கலாம். இப்போது கம்ப்யூட்டர் சந்தையில் விற்பனை செய்யப்படும் புதிய கம்ப்யூட்டர் ஒன்றினைத் தகுதியான நிறுவனத்திடமிருந்து பெற்றால், அந்த கம்ப்யூட்டரிலும் ஆபீஸ் 2010 இயக்கலாம். ஆனால் ஆபீஸ் 2003 மட்டுமே இது வரை இயக்கிக் கொண்டிருந்தால், அந்தக் கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2007 தொகுப்பு இயங்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
ஆபீஸ் 2010-32 பிட் பதிப்பு கீழ்க்காணும் 32 பிட் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் இயங்கும். விண்டோஸ் எக்ஸ்பி + சர்வீஸ் பேக் எஸ்.பி.3., விஸ்டா எஸ்.பி.1., விண்டோஸ் 7, விண் டோஸ் சர்வர் 2008, விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 (எம்.எஸ். எக்ஸ்.எம்.எல். உடன்)
ஆபீஸ் 2010 - 64 பிட் பதிப்பு 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைத்திலும் இயங்கும். விண்டோஸ் சர்வர் 2003 ஆர்2 சிஸ்டத்தில் மட்டும் இயங்காது.
ஆபீஸ் 2010 இயங்க குறைந்த பட்ச மற்ற தேவைகளாவன. 500 MHz ப்ராசசர் 256 எம்பி ராம் மெமரியுடன் இருக்க வேண்டும். ஹார்ட் டிஸ்க் 1 அல்லது 1.5 ஜிபி தேவைப்படும்.
ஆபீஸ் 2010 பதிப்பு ஆபீஸ் 2007 போல் இல்லாமல், கிராபிக்ஸ் கார்ட் திறன் தேவையிலும் வேறுபட்டு உள்ளது. எக்ஸெல் சார்ட், பிரசன்டேஷன் காட்சிகள் போல பைல்களுக்கு இந்த தேவை அவசியமாகிறது. குறைந்த பட்சம் மைக்ரோசாப்ட் DirectX 9.0c கிராபிக்ஸ் ப்ராசசர் 64 எம்பி வீடியோ மெமரியுடன் தேவைப்படும்.

கேள்வி: எங்கள் அலுவலகம் தணிக்கை யாளர் அலுவலகம். டாகுமெண்ட்களைத் தயார் செய்கையில், பலரும் அதில் கமெண்ட் களை அமைக்கின்றனர். இறுதியில் அவற்றை நீக்க ஒவ்வொரு கமெண்ட்டாகச் சென்று நீக்க வேண்டியுள்ளது. இதற்கு ஷார்ட்கட் ஏதேனும் உள்ளதா?
-சி.எஸ். முருகதாஸ், மதுரை.
பதில்: 1. டாகுமெண்ட்டைத் திறந்த பின்னர், கண்ட்ரோல் + எச் (Ctrl+H) அழுத்தவும். இப்போது பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தில் ரீபிளேஸ் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டம் கிடைக்கும்.
2. இதில் Find What என்ற பாக்ஸில் சீச் என டைப் செய்திடவும். (இதில் உள்ள கேரட்(^) சிம்பல் எண் 6க்கான கீயை ஷிப்ட் உடன் அழுத்திப் பெறலாம்)
3. அடுத்து Replace With பாக்ஸ் காலியாக இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
4. அடுத்து Replace With என்பதில் கிளிக் செய்தால், அனைத்து கமெண்ட்ளும் நீக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.

கேள்வி: டாகுமெண்ட்களில், படம் மற்றும் ஏதேனும் ஆப்ஜெக்ட் ஒன்றைக் காப்பி செய்து ஒட்டும் போது, அது அந்த படத்தின் மேலேயே பேஸ்ட் ஆகிறது. ஏன் நாம் கர்சரைக் கொண்டு சென்ற இடத்தில் ஒட்ட மறுக்கிறது. இதற்கான செட்டிங்ஸ் என்ன?
-சி. உமாதேவி, திருப்பூர்.
பதில்: நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலை மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் முதலில் எழுதுகிறேன்.
பைல் ஒன்றில் படம் அல்லது வேறு ஏதேனும் ஆப்ஜெக்ட் ஒன்றின் காப்பியை இன்னொரு இடத்தில் அதே பைலில் பேஸ்ட் செய்திட விரும்புகிறீர்களா? என்ன செய்கிறீர்கள்? முதலில் ஆப்ஜெக் டைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். கண்ட்ரோல் +சி (Ctrl+C) அழுத்தி காப்பி செய்கிறீர்கள். அல்லது எடிட் (Edit) மெனு சென்று அதில் காப்பி (Copy) கிளிக் செய்கிறீர்கள். பின் ஒட்ட வேண்டிய இடத்திற்குச் சென்று, கர்சரை வைத்து அங்கு பேஸ்ட் (Ctrl+V / Paste in Edit menu) கமாண்ட் கொடுக்கிறீர்கள். என்ன நடக்கிறது? நீங்கள் காப்பி செய்த படத்தின் நகல், ஒரிஜினல் இருக்கும் இடத்திலேயே பேஸ்ட் செய்யப்படுகிறது. சரியாக அதன் மேல் பேஸ்ட் செய்யப்படாமல், இதோ இங்கு தான் காப்பி உள்ளது என்று காட்டும் வகையில் சிறிது இடம் விட்டு பேஸ்ட் செய்யப்படுகிறது.
இதன்பின் நாம் மவுஸின் கர்சரைக் கொண்டு அதனை இழுத்து வந்து பேஸ்ட் செய்திட வேண்டிய இடத்தில் அமைக்கிறோம். இந்த இழு பறி இல்லாமல் ஒரே கீ அழுத்தலில், ஒட்ட வேண்டிய இடத்திற்கு படத்தைக் கொண்டு வரும் வழி ஒன்று உள்ளது.
முதலில் காப்பி செய்ய வேண்டிய ஆப்ஜெக்ட் அல்லது படத்தை தேர்ந்தெடுக்கவும். அடுத்து கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொள்ளவும். பின் ஆப்ஜெக்ட் மீது கிளிக் செய்து அப்படியே எந்த இடத்தில் ஒட்ட வேண்டுமோ, அங்கு இழுத்து வந்து விடவும். பேஸ்ட் ஆகிவிடும். அய்யோ! ஒரிஜினல் அல்லவா இங்கு வந்துவிட்டது என்ற பதட்டம் வேண்டாம். நகல் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதுதான் பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஒரிஜினல் ஆப்ஜெக்ட் அந்த இடத்திலேயே அப்படியே இருக்கும்.

கேள்வி: ஒரு சில அப்ளிகேஷன் புரோகிராம்களை, ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வாகத் திறந்து இயக்க முடிகிறது. எ.கா. வேர்ட். ஆனால் சில புரோகிராம்களை அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் திறக்க இயலவில்லை. எ.கா. பேஜ் மேக்கர். இதனை எப்படி மாற்றுவது?
-சி. நிவேதிதா கணேஷ், சென்னை.
பதில்: எதனை மாற்ற வேண்டும் என கேட்கிறீர்கள். ஏதேனும் ஒரு புரோகிராமினை ஒருமுறை தான் திறக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தால், அதனை மாற்ற இயலாது. பொதுவாக புரோகிராமிற்கான ஐகான் டாஸ்க் பாரில் இருந்தால், அதன் மீது எத்தனை முறை கிளிக் செய்கிறோமோ, அத்தனை முறை அது திறக்கப்படும். திறக்க இயலவில்லை எனில், அந்த புரோகிராம், இயலாத வகையில் உள்ளது என்று பொருள்.

கேள்வி: என்னுடைய பயர்பாக்ஸ் பிரவுசரில், யு.ஆர்.எல். டைப் செய்கையில், முகவரி தானாக பூர்த்தி அடைவதில்லை. மீண்டும் மீண்டும் அதே முகவரியை டைப் செய்திட வேண்டியுள்ளது. எனக்கு மட்டும் ஏன் இந்த பிரச்னை?
-சி. சந்தீப் ராஜ், சிவகாசி.
பதில்: இதில் உங்களுக்கு மட்டும் என எந்தப் பிரச்னையும் இல்லை. பயர்பாக்ஸ் பிரவுசர் செட்டிங்ஸ் பிரிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைச் சரி செய்தால், உங்களுக்கு நீங்கள் விரும்பும் வசதி கிடைக்கும்.
முதலில் பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து கொண்டு அட்ரஸ் பாரில் about:config என டைப் செய்து பின்னர் என்டர் தட்டவும். எச்சரிக்கை செய்தி ஒன்று கிடைக்கும். அதில் “I’ll be careful, I promise” என்ற இடத்தைத் தேர்வு செய்திடவும். அடுத்து கிடைக்கும் விண்டோவில் browser.urlbar.autoFill என்ப தனைக் கண்டறியவும். இதனை டபுள் கிளிக் செய்திடவும். பின்னர், அதன் வேல்யூவினை True என மாற்றவும். இனி பயர்பாக்ஸ் பிரவுசரை மீண்டும் இயக்கவும். இனி, யு.ஆர்.எல். கட்டத்தில் ஆட்டோ பில் (autoFill) வசதி கிடைக்கும்.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 பயன்படுத்துகிறேன். என்னுடைய ஆட் ஆன் புரோகிராம்களை ஏற்கனவே, நான் விரும்பியபடி செட் செய்துவிட்டேன். இருப்பினும், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் தொடங்கும் போதெல்லாம், மெசேஜ் ஒன்று எழுந்து ஆட் ஆன் தொகுப்பினை செட் செய்துவிடவும் (Manage Add ons) என அறிவிக்கிறது. இதனை எப்படி வராமல் தடுப்பது?
-கே. ஷர்மிளா, விழுப்புரம்.
பதில்: நீங்கள் ஏற்கனவே செட் செய்திருந்தால், இந்த செய்தி கிடைக்க வாய்ப்பில்லை. இந்த செய்தி வருவதற்குக் காரணம், நீங்கள் இதற்கென அமைத்துள்ள ஷார்ட்கட் கீ தான். அந்த ஷார்ட்கட் கீ உங்களுக்கு முந்தைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பை இயக்குகிறது என எண்ணுகிறேன். இருக்கும் ஷார்ட்கட் ஐகானை நீக்கிவிட்டு புதிய ஷார்ட்கட் ஒன்றை இதற்கென உருவாக்கிப் பார்க்கவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யசோதரன் - trippur,இந்தியா
23-மார்ச்-201208:19:11 IST Report Abuse
யசோதரன் தினமலருக்கு நன்றி...... நான் கடந்த இரண்டு வருடமாக படித்து வருகிறேன்......அதன் விளைவகா நான் இப்பொழுது PGDCA படித்து வருகிறேன் ...நான் கடந்த மாதம் கம்ப்யூட்டர் வாங்கி விட்டேன் .{intel core i3 processer and 2gb ram...500gb harddisk.....23inch led lg moniter ....WINDOWS 7 32BIT OS...] பயன் படுதுகிறேன்......என்னுடைய கேள்வி ...லினக்ஸ் என்றல் என்ன ??? அதை எதற்கு பயன் படுத்துகின்றனர் .can i use this linux os in my computer....?????????????????? please replay me sir.....thks again to dinamalar ... 9.........லினக்ஸ் என்றல் என்ன ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X