விண்டோஸ் எக்ஸ்பி என்னவாகும் ? | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
விண்டோஸ் எக்ஸ்பி என்னவாகும் ?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2010
00:00


பலரின் மனதைக் கவர்ந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, மைக்ரோசாப்ட் வழங்கினாலும், பல டெஸ்க் டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் எக்ஸ்பியே இன்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்து வருகிறது. இருந்தாலும் மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் எக்ஸ்பிக்கான தன் உதவிகளை விரைவில் நிறுத்தப்போவதாக, அடிக்கடி அறிவிப்பு வழங்கி வருகிறது. இவ்வாறு அறிவிப்பு வழங்குவதையும், பின்னர் காலக்கெடுவினை நீட்டிப்பதையும் மைக்ரோசாப்ட் அடிக்கடி மேற்கொண்டு வந்தது. தற்போது இறுதியாக நாட்களைக் குறிப்பிட்டு இனி உதவி இல்லை என அறிவித்துவிட்டது. இதனாலேயே பல வாசகர்கள், இதன் பொருள் என்ன? விண்டோஸ் எக்ஸ்பி இயங்காமல் போய்விடுமா? தொடர்ந்து இதனைப் பயன்படுத்த முடியுமா? என்ற கேள்விகளுடன் பல கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.இது குறித்து இங்கே பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. மிகவும் பிரபலமடைந்து ஆதரவு பெற்றதனால், மைக்ரோசாப்ட் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு அளித்து வந்த தொழில் நுட்ப ஆதரவினை அடிக்கடி நீட்டித்து வந்தது. பொதுவாக மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் புதுப்பிக்கையில், அவற்றில் புதியதாகச் சில வசதிகளையும், இருக்கின்ற வசதிகளை மேம்படுத்தியும் மாற்றங்களை ஏற்படுத்தும். இவற்றிற்குத் தங்களைத் தயார் செய்து கொள்ள முடியாத பலர், தொடர்ந்து பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தொடர்வார்கள், இதற்கு பல காரணங்கள் உண்டு. ஹார்ட்வேர் புதியதாக மேம்படுத்த முடியாதது, தர்ட் பார்ட்டி சாப்ட்வேர்கள் புதிய சிஸ்டத்தில்உடனடியாக இயங்காத தன்மை, குறுகிய பயன்பாடு, தங்களுக்கு இது போதும் என்ற மனப்பாங்கு ஆகியவற்றைக் காரணங்களாகக் கூறலாம்.

விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ள எக்ஸ்பி(XP)   அனுபவம் என்ற பொருளைத்தரும் eXPerienceஎன்ற சொல்லைக் குறிக்கிறது. இந்த சிஸ்டத்திற்கு பல வகை வேறுபட்ட பதிப்புகள் வெளியிடப்பட்டன. இவற்றில் ஹோம் மற்றும் புரபஷனல் பதிப்புகள் மிகவும் பிரபலமாயின. இதில் புரபஷனல் பதிப்பில் ரிமோட் டெஸ்க்டாப் சர்வர், பைல் சுருக்கும் சிஸ்டம், இரண்டு சிபியுக்கள் செயல்பாடு, ஆப்லைன் போல்டர் மற்றும் பைல்கள் எனச் சிலவற்றைக் குறிப்பிடலாம்.

ஏறத்தாழ பத்தாண்டுகள் இது புழக்கத்தில் இருப்பதால், இதற்கான தொழில் நுட்ப ரீதியான உதவிகளை மைக்ரோசாப்ட் நிறுத்த உள்ளது. இதனாலேயே விண்டோஸ் எக்ஸ்பியின் ஹோம் பேஜில், ஏன் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற வேண்டும் என்று காரணங்கள் கூறும் தளத்திற்கான தொடர்பு தரப்பட்டுள்ளது. தரப்பட்டுள்ள காரணங்கள் வலுவாகவே இருந்தாலும், மேலே கூறப்பட்ட, வேறு சில காரணங்களுக்காகவே எக்ஸ்பி வாடிக்கையாளர்கள் பலர் மாறுவதற்கு தயங்குகின்றனர்.

சர்வீஸ் பேக் எஸ்.பி.2 உடன் இணைந்த விண்டோஸ் எக்ஸ்பிக்கான தொழில் நுட்ப உதவியினை சென்ற ஜூலை 13ல் மைக்ரோசாப்ட் நிறுத்திவிட்டது. இனிமேல் இந்த தொகுப்பிற்குக் கூடுதல் பாதுகாப்பிற்கான அப்டேட் பைல்கள் வெளியிடப்பட மாட்டாது. இதனால் வைரஸ் புரோகிராம் எழுதி அனுப்புபவர்கள் எளிதாகத் தங்கள் இலக்கை, விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களிடம் அடைய முடியும். (இருப்பினும் அவிரா (http://www.avira.com/en/pages/index.php), மால்வேர் பைட்ஸ் (http://www.malwarebytes.org/) மற்றும் சூப்பர் ஆண்ட்டி ஸ்பைவேர்(http://www.superantispyware. com/) போன்ற வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளால் நம் கம்ப்யூட்டரைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்). மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பிக்கு சர்வீஸ் பேக் 3 ஐ வழங்கியுள்ளது. இதற்கான தொழில் நுட்ப உதவி 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 வரையே கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. எனவே இந்த சர்வீஸ் பேக்குடன் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், இன்னும் சிறிது காலம் நிம்மதியாக இருக்கலாம்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X