கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2010
00:00

* கேள்வி: ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் இலவச பதிப்பினை நான் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பயன்படுத்தி வருகிறேன். சென்ற வாரம் ஏவிஜி பதிப்பு 8 பற்றி படித்து, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகிறேன். ஆனால் அதன் பின்னர், என் கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்குகிறது. இதுதான் காரணமா? இதற்குத் தீர்வு என்ன? –ச. பாஸ்கரன், சென்னை

பதில்: நன்றாகவே சிந்தித்து செயல்பட்டிருக்கிறீர்கள் என்பது தங்கள் நீண்ட கடிதத்தில் இருந்து தெரிகிறது. தங்களுடைய சந்தேகம் நூற்றுக்கு நூறு சரியே. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் பதிப்பு 8 இயங்குவதால், கம்ப்யூட்டரின் பொதுவான இயக்க வேகம் குறைகிறது. இந்த பதிப்பில் ஸ்பைவேர் பாதுகாப்பும் இணைந்துள்ள்து என்பதனைப் படித்த போது, நானும் இதனால் கவரப்பட்டேன். விண்டோஸ் எக்ஸ்பி + எஸ்பி 3 பேக் இயங்கிய கம்ப்யூட்டர் ஒன்றில் இன்ஸ்டால் செய்து இயக்கிப் பார்த்தோம். இந்த தொகுப்பு தயார் நிலையில் இயங்காமல் இருக்கையில் 34 எம்பி இடத்தை எடுத்துக் கொள்கிறது. முழுமையான ஸ்கேன் ஒன்றை இயக்குகையில், 80 எம்பி வரை இடம் தேவையாக உள்ளது. மேலும் தன் சோதனையை முடிக்க, ஏவிஜி 7.5 பதிப்பைக் காட்டிலும் கூடுதலாக நேரம் எடுத்துக் கொள்கிறது. சில வாசகர்கள் இதனால் வெப் பிரவுசர்கள் மிகவும் குறைந்த வேகத்தில் செயல்படுவதாகவும் எழுதி உள்ளனர். அதற்குக் காரணம் இதில் உள்ள லிங்க் ஸ்கேனராகும்  (Link Scanner)  இதற்கு ஒரே தீர்வு தான் உள்ளது. ஏவிஜி பதிப்பு 8னை நீக்கிவிட்டு, பழைய பதிப்பு 7.5 ஐ நிறுவி இயக்கவும்.

* கேள்வி: நான் அவிரா இலவச ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்துகிறேன். இது என் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் என என் நண்பர் கூறுகிறார். அவர் வேறு ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்து கிறார். ஆனால் சில நேரங்களில் மட்டுமே ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை இயக்கத்திற்குக் கொண்டு வருகிறார். இது சரியா? சிஸ்டம் வேகத்தைக் கட்டுப் படுத்தாத ஆண்ட்டி வைரஸ் உள்ளதா? –என். தேவசகாயம், புதுச்சேரி

பதில்: அவிரா, ஏவிஜி, காஸ்பெர்ஸ்கி, நார்டன், இசெட், அவாஸ்ட், கொமடோ என எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் பயன்படுத்தினாலும், அது உங்கள் சிஸ்டம் இயங்குவதன் வேகத்தினை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தத்தான் செய்திடும். ஆனால் இவை இல்லாமல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது, ஆபத்தில் முடியும். நெட்வொர்க், இன்டர்நெட், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ் எனப் பல வழிகளில் நம் கம்ப்யூட்டருக்குள் ஸ்பைவேர், வைரஸ், ட்ரோஜன், வோர்ம்ஸ், பாட்ஸ் எனப் பலவகை வைரஸ்கள் வருகின்றன. நீங்கள் குறிப்பிடும் நண்பர், இவற்றைப் பயன்படுத்துகையில் மட்டும், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை இயக்கத்திற்குக் கொண்டு வந்து பின் மூடும் பழக்கத்தினைக் கொண்டிருக்கலாம். ஆனால் இவ்வாறு எப்போதும் கவனமாக இருந்து இதனை மேற்கொள்ள முடியாது. எனவே கவலையற்ற கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு ஏதேனும் ஒரு ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை இயக்க நிலையில் வைத்திருப்பதே நல்லது. சாலை ஓரங்களில், இருப்புப் பாதை அருகே உள்ள வீட்டில் வசிக்கும்போது, சத்தம் உள்ளதே எனத் தூங்காமலா இருக்கிறோம். நாளடைவில் பழகிவிடும். எனவே அட்ஜஸ்ட் செய்து பாதுகாப்பாகக் கம்ப்யூட்டரை இயக்குங்கள்.
* கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சில வரிசைகளை ஹைலைட் செய்து காட்ட விரும்புகிறேன். இதற்கு என்ன வழி? –கா. சுந்தர மூர்த்தி, நிலக்கோட்டை

பதில்: மிக எளிதான வழிகள் இருக்கின்றனவே. மவுஸ் மூலம் வழக்கமான முறையில் ஹைலைட் செய்திடலாம். மவுஸ் இல்லாமல் இரண்டு கீகளைப் பயன்படுத்தி நெட்டு வரிசையையும் படுக்கை வரிசையையும் ஹைலைட் செய்திடலாம்.  Ctrl + Spacebar அழுத்தினால் நீங்கள் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் ஹைலைட் ஆகும்.  Shift+ Spacebar கீகளை அழுத்தினால் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் இருக்கும் நெட்டு வரிசை ஹைலைட் ஆகும். பல வரிசைகளை இணைத்து ஹைலைட் செய்திட ஷிப்ட் மற்றும் ஆரோ(Shift + Arrow)  கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.
* கேள்வி: நாம் காப்பி செய்யும் அனைத்தும் கிளிப் போர்டில் தான் காப்பியாகுமா? பெரிய படம் அல்லது இணைய தளப் பக்கத்தினைக் காப்பி செய்தால், முழுமையாகக் காப்பி ஆகுமா? –இ.தனுஷ்கோடி, விருதுநகர்

பதில்:நாம் எதனைக் காப்பி செய்தாலும் அது கிளிப் போர்டில் தான் சென்று அமரும். ஒரு சிறிய எழுத்தானாலும், பெரிய படமானாலும், அருமையான கட்டுரை யானாலும், இணைய தளத்திலிருந்து காப்பி செய்யப்பட்ட படங்களும் டெக்ஸ்ட்டும் இணைந்த பகுதியானாலும் அது கிளிப் போர்டுக்குத் தான் செல்லும். வேர்டில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் ஏதேனும் ஒரு படம் அல்லது பெரிய அளவிலான டெக்ஸ்ட்டை காப்பி செய்துவிட்டு வேர்ட் தொகுப்பை மூடுங்கள். மூடும் போது “கிளிப் போர்டில் பெரிய அளவில் தகவல் உள்ளது; அதனை வைத்திருக்கவா? அல்லது நீக்கிவிடவா?” என்று ஒரு செய்தி வரும். எனவே எது காப்பி செய்தாலும் அது கிளிப் போர்டில் தான் இருக்கும்.

* கேள்வி: அம்புக்குறி கீகளை அழுத்தாமல், மெயின் கீ போர்டில் உள்ள கீகளைப் பயன்படுத்தி எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், கர்சரை நான்கு புறமும் உள்ள செல்களுக்குக் கொண்டு செல்லலாம்? –எம். கீர்த்திவாசன், விழுப்புரம்

பதில்:என்டர்(Enter) அழுத்த ஒரு செல் கீழாக இறங்குகிறது

* ஷிப்ட் + என்டர் (Shift + Enter) அழுத்த ஒரு செல் மேலாகச் செல்லும்

* டேப் (Tab) அழுத்த வலது பக்கம் ஒரு செல்லுக்கு கர்சரை நகர்த்தலாம்

* ஷிப்ட் + டேப் (Shift + Tab) அழுத்தினால் கர்சர் இடது பக்கம். ஒரு செல்லுக்கு நகரும்.

கீ போர்டின் மெயின் ஏரியாவை விட்டு கைகளை எடுக்காமல் பணியாற்ற விரும்புவோருக்கு இந்த பதில் உதவியாய் இருக்கும்.
* கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் சில வேளைகளில், டெக்ஸ்ட் செலக்ட் செய்திடுகையில், எழுத்து மற்றும் அதன் அளவு காட்டும் கட்டங்கள் காலியாகத் தெரிகின்றன. இது எப்போதாவது நடைபெறுகிறது. இதற்கான காரணம் என்ன? எதனைத் தவிர்க்க வேண்டும்? –கா.இளவழகன், திருப்பூர்

பதில்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட் முழுவதும் ஒரே வகையான எழுத்து பயன்பட்டிருந்தால், அந்த எழுத்து மற்றும் அளவு காட்டப்படும். இடையே வேறு எழுத்துவகை இருப்பின், கட்டங்கள் காலியாகத்தான் இருக்கும். ஏனென்றால், இரண்டு எழுத்து வகையினை எப்படி வேர்ட் காட்ட முடியும்? இது ஒரு சிக்கல் இல்லை; எனவே இதற்கு தீர்வும் தேவையில்லை.
* கேள்வி: அண்மையில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானத்தின் படி, தமிழக அரசு யூனிகோட் குறியீட்டினை அரசு அதிகார பூர்வமாக ஏற்றுக் கொண்டதாகவும், அது குறித்து ஆணை வெளியிடப் பட்டுள்ளதாகவும் படித்தேன். இது எதற்காக? –என். சந்தோஷ் குமார், பெங்களூர்

பதில்: கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டில் தமிழ் மொழிப் பயன்பாடு வெகுகாலமாக இருந்தாலும், பல எழுத்து வகைகளில் தமிழ் கையாளப்பட்டு வந்தது. ஆங்கிலத்தில் ஏரியல் அல்லது வேறு எழுத்து வகையில் உருவாக்கப்பட்ட ஓர் ஆவணத்தை உலகின் எந்த மூலையில் இருக்கும் கம்ப்யூட்டரிலும் படித்து அறிய இயலும். ஆனால் தமிழில் உருவாக்கப் பட்டுள்ள ஆவணம் ஒன்றை அனுப்புகையில், அதனுடன் எந்த எழுத்துவகையில் அது அமைக்கப் பட்டதோ, அந்த எழுத்துவகைக்கான பாண்ட் பைலையும் சேர்த்தே அனுப்ப வேண்டியிருந்தது. அரசு அலுவலகங்களிலும் இந்த பரிதாபநிலை இருந்து வந்தது. இப்போது அனைத்திற்கும் முடிவு செய்யப் பட்டுள்ளது. யூனிகோட் தமிழ், ஆங்கில எழுத்து வகைகளைப் போல அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் கிடைக்கும் ஒரு எழுத்து வகையாகும். இதனை அரசு ஆணை மூலம் அறிவித்ததனால், இனி அரசுடன் தொடர்பு கொள்கையில் இந்த எழுத்து வகையினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரசு தன் செயல்பாட்டிற்கு வாங்கும் சாப்ட்வேர் தொகுப்புகள், இதற்கு இணைவு உள்ளதாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் தமிழ் யூனிகோட் எழுத்துவகையில் ஆவணங்களை உருவாக்கும் வசதியினைக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு முடிவு.

உங்களுக்குத் தெரியுமா? நாளிதழ்களில் தமிழ் யூனிகோட் முறைக்கு, பல ஆண்டுகளுக்கு முன்பே மாறிய முதல் தமிழ் நாளிதழ் தினமலர் ஆகும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
24-ஜூலை-201017:52:07 IST Report Abuse
sankar when i save word document auto medically create that file name .wbk format.what is this? how to disable this file format?
Rate this:
Share this comment
Cancel
sankar - chennai,இந்தியா
24-ஜூலை-201017:46:49 IST Report Abuse
sankar what is mean by RAID ? how to configure RAID 5i?
Rate this:
Share this comment
Cancel
வ.பிரபாகரன் - erode,இந்தியா
24-ஜூலை-201015:52:33 IST Report Abuse
வ.பிரபாகரன் sir, I have win XP operating system in my computer. i also have Total security Anti virus installed. when i start my system, initially it loads faster. but after loading desktop icons, it takes atleast 10 minutes to come to normal fast. The harddisk light is glowing to indicate there are some huge operation is going on. at that time, i am not able to open anything. i am also not able to open regedit. It says " This operation is restricted by admiistrator". How to resolv this. you send me techniques for restroring my system to normal state.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X