விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நீங்கள் தந்த தகவல்களின் பிரமிப்பு அடங்கும் முன், புதிய ஐ-பேட் சார்ந்த தகவல்களைத் தந்துள்ளீர்கள். இவை இரண்டுமே நம் வாழ்வைப் புரட்டிப் போடும் சாதனங்கள். இனி கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பெரும் மாற்றம் நிச்சயம் ஏற்படத்தான் போகிறது. தொடர்ந்து இந்த இரண்டைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் தரவும். பொதுமக்களுக்கு, குறிப்பாக மாணவர் களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.
-பேரா. டாக்டர் சி.என். கார்த்திகேயன், சென்னை.
ஒரு காலத்தில் மூழ்கவிருந்த ஆப்பிள் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த பின்னும், அந்நிறுவனம் தொடர்ந்து தன் பணியில் முன்னேறிக் கொண்டுள்ளது என்பதனை புதிய ஐ-பேட் தரும் புதிய வசதிகள் எடுத்துக் காட்டு கின்றன. பன்னாட்டளவில் இதனை மக்கள் பயன்படுத்த, குறைந்த விலையில் விற்பனை செய்திட ஆப்பிள் முன் வர வேண்டும்.
-சி. இன்பராஜ், சென்னை.
"விடை தெரியாத கேள்விகள்' என்ற தலைப்பில் நீங்கள் அளித்துள்ள கட்டுரை யில், சிரிப்பு இழையோடினாலும், நாம் முக்கியமானவற்றைக் கடைப்பிடிப் பதில்லை என்ற வருத்தம் தரும் உண்மை சுடுகிறது. அடிக்கடி மக்களுக்கு அறிவுரை தரும் தகவல்களை அவசியம் வெளி யிடவும்.
-பேரா. டி.கனகசபை, விருதுநகர்.
என்றைக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள மோசமான பழக்கங்களை விட்டுவிடப் போகிறோம்? பொறுப்புணர்ச்சி நம்மிடம் வளர, பெருக என்ன செய்யப்போகிறோம்? எங்கு தவறு நேர்கிறது? உங்கள் கட்டுரை சரியான நேரத்தில் வந்த படிப்பினை தரும் பாடம். அடிக்கடி சுட்டிக் காட்டுங்கள்.
-என்.கே. கலா ராணி, திருப்பூர்.
சிஸ்டம் டிப்ஸ், எக்ஸெல் டிப்ஸ், வேர்ட் டிப்ஸ் -- எல்லாமே சூப்பர். பொறுப்பாகப் படித்து பின்பற்ற வேண்டிய பயனுள்ள வழிகள். நன்றி.
-ஆ.தமிழ்ச் செல்வன், திண்டுக்கல்.
டாகுமெண்ட்டில் கமெண்ட் மொத்த மாக நீக்க, நீங்கள் தந்துள்ள வழி, சமயத் தில் கிடைத்த சஞ்சீவியாய் உள்ளது. எங்கள் அலுவலகத்திலும் இதே நிலை தான். இப்போது எங்கள் பணி எளிதாக உள்ளது. அலுவலக ரீதியிலான உதவிக் குறிப்புகளை அடிக்கடி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-அ.ஜெபராஜ், புதுச்சேரி.
டாகுமெண்ட்டில் ஆப்ஜெக்ட்டை, நாம் இலக்கு வைக்கும் இடத்தில் பேஸ்ட் செய்திட நீங்கள் தந்த வழியைப் பின் பற்றினேன். இதுவரை, மேல் கோடி யிலிருந்து இழுத்து வந்து ஒட்ட வைப்பது பெரும் பிரச்னையாய் இருந்தது. இப்படி ஒரு வழி இருந்தும் தெரியாமல் இருந்துள்ளேன். வழி காட்டியதற்கு நன்றி.
-என். சிவமூர்த்தி, சென்னை.
புதிய ஐபேட் வாங்க அலை மோதிய கூட்டத்தினரின் போட்டோவினைப் பார்த்து மிக மகிழ்ச்சியாக இருந்தது. வசதியும், அறிவியலும் முன்னேறியதன் அடையாளம் இது.
-எஸ். திவ்யா, சென்னை.