பைலை முற்றிலுமாக நீக்க:
நாம் அடிக்கடி தேவையற்ற பைலை அழிக்கிறோம். அழிக்கப்படும் பைல் ரீ சைக்கிள் பீன் தொட்டியில் போய் தங்குகிறது. எனவே பைல் அழியாமல் கம்ப்யூட்டரில் இன்னொரு இடத்தில் போய் அமர்ந்து கொள்கிறது. எனவே இதனால் ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸ் நமக்கு மிச்சப்படப் போவதில்லை. அந்த பைல் முழுமையாக அழிந்தால் தான் இடம் கிடைக்கும். எனவே ரீ சைக்கிள் பின் தொட்டிக்கு போகாமல் பைல் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்றால் அந்த பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டனை அழுத்துகையில் ஷிப்ட் கீயை அழுத்தியபடி அழுத்தவும். பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது.
முகவரி டைப்பிங்:
இன்டர்நெட் பிரவுசிங் போது இணைய முகவரியை (URL) டைப் செய்திடுகையில் அதன் இறுதித் துணைப் பெயர் com என இருந்தால் முழுவதும் டைப் செய்திடத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக www.microsoft.com என டைப் செய்திட வேண்டி இருந்தால் microsoft என மட்டும் டைப் செய்து கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும். பிரவுசர் www.microsoft.com என அமைத்து அந்த முகவரிக்கான இணைய தளத்தை உங்களுக்குக் காட்டும்.