கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஏப்
2012
00:00

கேள்வி: பைல் பிரிவியூவிற்கும் பிரிண்ட் பிரிவியூவிற்கும் என்ன வித்தியாசம்? பைல் பிரிவியூவினை செட் செய்திட மெனு எங்குள்ளது?
-ஆர்.மணிவாசகம், திருச்சி.
பதில்: ஒரு பைலை முழுமையாகத் திறக்காமலேயே, அதில் என்ன உள்ளது என ஓரளவிற்குக் காட்டும் அமைப்பு பைல் பிரிவியூ. ஒரு பைல் எப்படி அச்சில் கிடைக் கும் என்பதைக் காட்டுவது பிரிண்ட் பிரிவியூ. பைல் பிரிவியு செட் செய்திடக் கீழ்க்குறித்தபடி செயல்படவும்.
File மெனு சென்று அதில் Open விண்டோவினைத் திறக்கவும். இந்த விண்டோ கிடைத்தவுடன் நீங்கள் அதில் காட்டப்படும் பைல்களின் பட்டியலைப் பார்க்கிறீர்கள். இப்போது அந்த விண்டோ வின் வலது பக்க ஓரத்தில் பாருங்கள். அதில் Views என்று ஒரு பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்து திறந்தால் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் Preview என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பெறவும். இப்போது விண்டோ இரு பகுதியாகப் பிரிந்து காட்டப்படுவதனைப் பார்க் கலாம். ஒரு பக்கம் பைல் பட்டியலுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் பெயர் தேர்ந்தெடுத்த நிலையில் இருக்கும். வலது பக்கம் உள்ள கட்டத்தில் அந்த பைலின் உள்ளே என்ன இருக்கிறது என்பது காட்டப்படும். இதன் முதல் பக்கம் தெரிந்தாலும் அருகே உள்ள அம்புக்குறியை அழுத்தி கீழே சென்று பைலில் உள்ளதைப் பார்க்கலாம். இதுதான் பைல் பிரிவியூ. இந்த பைல் நீங்கள் தேடும் பைல் என்றால் உடனே அதனைக் கிளிக் செய்து திறந்து எடிட் செய்திடலாம். இதன் மூலம் நாம் பெயர் மறந்த பைல்களைத் தேடுவது எளிதாகும். ஒரு சிலர் பைலின் முதல் பக்கத்தில் இப்படித்தான் எழுதி இருந்தேன். அந்த பைல் வேண்டும் எனத் தேடுவார்கள். அவர்களுக்கு இந்த பைல் பிரிவியூ வழி கொடுக்கும்.

கேள்வி: உங்களின் மிக விளக்கமான விண்டோஸ் 8 கன்ஸ்யூமர் பிரிவியூ குறித்த கட்டுரையைப் படித்த பின்னர், நான் என் கம்ப்யூட்டரில் அதனைப் பதிந்து பயன்படுத்தி, அதிசயப்பட்டு வருகிறேன். மிக நன்றாக உள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகளாக, கோடிக்கணக்கானவர்களால், பல நூறு கோடி முறை பயன்படுத்தப்படும் ஸ்டார்ட் பட்டன் இல்லாதது வசதிக் குறைவாக உள்ளது. இதற்கான மாற்று வழி ஏதோனும் உள்ளதா?
-சி. சரண்ராஜ், சென்னை.
பதில்: நீங்கள் கவலைப்படுவது சரிதான். ஸ்டார்ட் பட்டன் கதவைத் திறந்தே விண்டோஸ் சிஸ்டத்தில் பழகிய நமக்கு, அது இல்லாதது என்னவோ போல் தான் உள்ளது. என் நண்பர்கள் பலரும் இதே கஷ்டத்தைக் கூறினார்கள். இதனைத் தற்காலிகமாகவாவது பெறும் வழி எதுவும் விண்டோஸ் 8ல் இருப்பதாக இதுவரை அறியவில்லை. ஆனால், இணையத்தில் அலைந்த போது http://www.stardock.com/products/start8/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதற்கான சிறிய புரோகிராம் ஒன்று start8 என்ற பெயரில் கிடைப்பது தெரிய வந்தது. இந்த புரோகிராம், விண்டோஸ் 8 சிஸ்டத்தில், டாஸ்க் பாரில் ஸ்டார்ட் பட்டனைத் தருகிறது. இன்ஸ்டால் செய்த புரோகிராம்களைப் பெற விரைவான, எளிதான வழியைத் தருகிறது. ரைட் கிளிக் மெனுவில், Run மற்றும் Shutdown தருகிறது.
இதனைப் பெற மேலே குறிப்பிட்ட தளம் சென்று, உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தால், இதற்கான லிங்க் முகவரியுடன் ஒரு அஞ்சல் அனுப்பப்படும். அதில் கிளிக் செய்து பெறலாம்.

கேள்வி: என் எக்ஸெல் ஒர்க்ஷீட் பைலில் முன்பு அதனைத் தயாரித்தவர் பெயராக, ப்ராப்பர்ட்டீஸ் பகுதியில், என் பெயர் கிடைத்து வந்தது. இப்போது, சென்ற வாரம் என் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய என் நண்பரின் பெயர் வருகிறது. மீண்டும் என் பெயரை எப்படிக் கொண்டு வருவது?
-சா. வாசுகி தர்மராஜ், திருப்பூர்.
பதில்: நண்பர்கள் கம்ப்யூட்டரில் ஏன் தான் இப்படி வேலைகளை மேற்கொள் கிறார்கள் என்று தெரியவில்லை, என நீங்கள் சென்ற வாரம் முழுவதும் கவலைப்பட்டிருப்பீர்கள். உங்கள் நண்பரிடம் இதைக் கேட்கவும் தயங்குகிறீர்கள், இல்லையா? இதனைப் படிக்கும் நண்பர்கள், தயவு செய்து, அடுத்தவர்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்ற சிஸ்டம் சார்ந்த தகவல்களை மாற்றுவதைக் கைவிடுங்கள். சரி, இனி விஷயத்திற்கு வருவோம்.
1. நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், கீழே குறிப்பிட்ட வழிகளில் சென்று, எக்ஸெல் தொகுப்பின் ஆசிரியர் பெயரை மாற்றலாம். Office பட்டன் கிளிக் செய்து, Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். டயலாக் பாக்ஸின் இடது பக்கம் Popular என்ற ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இது மாறா நிலையில் தேர்ந்தெடுக்கப் பட்டதாகவே இருக்கும். அடுத்து, User Name என்ற பாக்ஸில் உள்ள பெயரை, உங்கள் பெயராக மாற்றவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
2. எக்ஸெல் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், Tools மெனுவில் இருந்து, Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Options என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த பாக்ஸில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து User Name பாக்ஸில், பெயரை நீங்கள் விரும்பிய படி மாற்றவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: கடந்த ஆறு ஆண்டுகளாக நல்ல நிறுவனம் ஒன்றில் வாங்கிய கம்ப்யூட்டர் ஒன்றைப் பயன்படுத்தி வருகிறேன். இணையத்தில் இருந்து நிறைய புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்துகிறேன். பல அப்படியே பயன்பாட்டில் இல்லை. இவற்றில் எதனை நீக்கலாம்? எவை நல்ல புரோகிராம்கள் என அறிவது எப்படி?
- ஆர்.கே. ராஜகோபால், தாம்பரம்.
பதில்: சிக்கலான கேள்வி. நீங்கள் உங்கள் தேவைகளுக்கு இறக்கிப் பயன் படுத்தியவற்றில் சரியானவை எவை? தேவையற்றவை என நான் எப்படி கூற முடியும். இதனைக் கூற முடிந்த புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. பத்தோடு பதினொன்றாக அதனை இறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள். அதன் பெயர் Wise Disk Cleaner. http://download.cnet.com/ Wise DiskCleaner/30002086_410613345.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இந்த புரோகிராமினை இலவசமாக டவுண்லோட் செய்து இயக்குங்கள். மிக எளிதாக இதனை இன்ஸ்டால் செய்திடலாம். இதனை இயக்குவதும் எளிது. இது காட்டும் வழிகள் அனைத்தையும் பின்பற்றிச் செல்லுங்கள். இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டர் முழுவதையும் ஸ்கேன் செய்து தேவையற்ற புரோகிராம்கள் எனப் பலவற்றை அடையாளம் கண்டு பட்டியலிடும். தேவையற்ற புரோகிராம்கள் என இந்த புரோகிராம் அடையாளம் காண்பதே அதன் திறமைக்குச் சான்றாகும். அது மட்டுமின்றி மோசமான பயன்பாடு, நல்ல பயன்பாடு எனவும் பைல்களைப் பிரித்துக் கண்டறிந்து நமக்குச் சொல்கிறது. இதில் உள்ள டிபால்ட் செட்டிங்ஸ் மாற்றாமல் இருந்தாலே நமக்கு இதன் செயல்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்தவித பயமுமின்றி இதனைப் பயன்படுத்தலாம்.
பொதுவாக இது போல தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் தர்ட் பார்ட்டி புரோகிராம்களை, பயன்படுத்துவது முடிந்து போய்விட்டது என்றால், உடனே நீக்கிவிடுவதே, ஹார்ட் டிஸ்க்கில் குப்பை சேராமல் இருக்க உதவிடும்.

கேள்வி: பி.டி.எப். பைல்களை, டெக்ஸ்ட் பைல்களாக மாற்ற ஒரு குறுக்கு வழி தரவும். நிறைய பைல்களை மாற்றி எடுக்க வேண்டியதுள்ளது. எனவே விரைவாக இதனை மேற்கொள்ளும் வழியைக் கூறவும்.
- எஸ். மேரி டிசூஸா, காரைக்கால்
பதில்: உங்கள் தேவைகளுக்குத்தான் எத்தனை கண்டிஷன்கள்! பரவாயில்லை. இணையத்தில் பல புரோகிராம்கள் பி.டி.எப். பைலை டெக்ஸ்ட் பைலாக மாற்ற கிடைக்கின்றன. கம்ப்யூட்டர் மலரில் இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளோம். இருப்பினும், நிறைய பைல்களை மாற்றி எடுக்க வேண்டும் எனவும், ஆய்வு ஒன்றுக்கு இது தேவை எனவும் உங்கள் நீண்ட கடிதத்தில் கூறியுள்ளீர்கள். இதற்கு இணையத்தில் http://www.pdfzilla.com/zilla_pdf_to_txt_converter.html என்ற முகவரியில் கிடைக்கும் pdfzilla என்ற புரோகிராம் உதவும். இதுவும் இலவசமே. எந்த ஒரு பிடிஎப் பைலையும் டெக்ஸ்ட்டாக இது மாற்றி தருகிறது. இதன் சிறப்பம்சம் என்னவெனில் மொத்தமாகவும் இது பிடிஎப் பைல்களைக் கையாள்கிறது. இந்த கன்வெர்டரில் பிடிஎப் பைல்களை இழுத்துக் கொண்டுவந்து விட்டுவிட்டால் பேட்ச் ப்ராசசிங் முறையில் டெக்ஸ்ட் பைல்களாக மாற்றுகிறது. அல்லது ஏதேனும் ஒரு டைரக்டரியில் மாற்ற வேண்டிய பிடிஎப் பைல்கள் அனைத்தையும் போட்டு விட்டு அந்த டைரக்டரியினைச் சுட்டிக் காட்டி விட்டுவிடலாம். டெக்ஸ்ட் கன்வெர்ஷன் வேகமாக நடத்தப்பட்டு அவுட்புட் டைரக்டரிக்கு அனைத்து பைல்களும் டெக்ஸ்ட் பைல்களாகக் கிடைக்கின்றன.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், நான் அடிக்கடி பயன்படுத்தும் செயல்பாட்டிற்கு நானே ஒரு ஷார்ட் கட் கீ உருவாக்கி, அதனைப் பயன்படுத்த முடியுமா? ஆம், எனில் அதற்கான வழி என்ன?
-சி. காமாட்சி நாதன், காரைக்குடி.
பதில்: தாராளமாக முடியும். Tools=> Customize கட்டளையை கொடுங்கள். Keyboard பட்டனை அழுத்துங்கள். Categories பட்டியலில் File என்பதைத் தேர்வு செய்யுங்கள். Commands பட்டியலில் உங்களுக்கான கட்டளையைத் தேர்வு செய்யுங்கள். Press New Shourtcut Key என்பதில் கர்சரைக் கொண்டு வாருங்கள். ஷார்ட்கட்டிற்கான கீகளை அழுத்துங்கள். வேறு எந்த கட்டளைக்கும் இந்த ஷார்ட்கட் கீயை கொடுத்திருக்கக் கூடாது என்பதை நினைவில் வையுங்கள். Save Changes In என்ற டிராப்-டவுன் பட்டியலில் Normal.dot என்பதைத் தேர்வு செய்யுங்கள். Assign பட்டனை அழுத்துங்கள். Close பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் விருப்பம் நிறைவேறிவிட்டது. இனி இஷ்டம் போல நீங்கள் அமைத்த ஷார்ட் கட் கீ உங்களுக்கான செயல்பாட்டினைக் கொண்டு வரும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஹமீது அலி - வொர்கிங்இன்Oman,ஓமன்
06-ஏப்-201209:44:18 IST Report Abuse
ஹமீது அலி பயன் மிக்க ஒரு தமிழனின் ஹெல்ப்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X