கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஏப்
2012
00:00

கேள்வி: நான் முதலாண்டு முடித்து இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி போக இருக்கிறேன். எனக்கு இணையத்தில் நூல்கள் படிக்க எந்த தளம் செல்ல வேண்டும்? இலவசமாக டவுண்லோட் செய்திடும் வகையில் வேண்டும்.
- சி.ஜீவா, திருப்பூர்.
பதில்: முதலாண்டு முடித்து இரண்டாம் ஆண்டு செல்லும் உங்களுக்குப் பாராட்டுக்கள். இணையத்தில் பல தளங்களில் இது போன்ற நூல்கள் கிடைக்கும். மேலும் குறிப்பிட்ட பொருளில் எனில், கூகுள் சர்ச் மூலம் தேடிப் பெறலாம். நூல்கள் வேர்ட் மற்றும் பி.டி.எப். பார்மட்டில் இருக்கும். நான் அறிந்த வகையில் அறிவியலில் பல பிரிவுகளில் நூல்களைத் தரும் தளம் ஒன்று உள்ளது. அதன் முகவரி http://sciencebooksonline.info. இந்த தளம் சென்றால், இதன் இடது பக்கம் உள்ள பிரிவில் Astronomy, Biology, Chemistry, Computer science, Earth sciences, Engineering, Mathematics, Medicine மற்றும் Physics என்ற பிரிவுகள் காணப்படுகின்றன. எந்த பிரிவில் நூல்கள் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்திடலாம். அந்த பிரிவில் உள்ள நூல்கள் பட்டியலிடப் படுகின்றன. இதில் நமக்கு வேண்டிய நூலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட லாம். சில நூல்கள், ஆன்லைனிலேயே படிக்கக் கிடைக்கின்றன. பெரும்பாலான நூல்கள் பி.டி.எப். பைலாகக் கிடைக்கின்றன. இவற்றிற்கான லிங்க்குகளில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட நூல்களை கம்ப்யூட்டரில் சேவ் செய்வதற்கான விண்டோ கிடைக்கும். சேவ் செய்து பின்னர் படிக்கலாம். தேவைப்பட்ட பக்கங்களை அச்செடுத்தும் வைத்துக் கொள்ளலாம். வாழ்த்துகள்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் செல்களைச் சுற்றி உள்ள கட்ட கோடுகளை எப்படி வண்ணமயமாக்க முடியும்? என் நண்பர் அவ்வாறே அமைக்கிறார். பார்ப்பதற்கு அழகாக உள்ளது.
சி.எஸ். புஷ்பராஜ், நாகூர்.
பதில்: உங்கள் நண்பரிடமே கேட்கலாமே! பல வாசகர்கள் இவ்வாறு அடுத்த வரின் கம்ப்யூட்டரில் தாங்கள் பார்க்கும் விஷயங்கள் குறித்து கம்ப்யூட்டர் மலருக்கு எழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் இயக்கம் குறித்து அனைத்தையும் அனைவரும் தெரிந்து வைத்திருக்க முடியாது. எனவே, எந்தவித தயக்கமும் இன்றி தெரிந்த வரிடத்தில் கேட்டுப் பெறுவதே நல்லது. இதோ நீங்கள் கேட்டுள்ளதற்கான பதில்.
முதலில் எந்த ஒர்க்ஷீட்டில், இந்த கோடுகளுக்கு வண்ணம் பூச வேண்டுமோ, அதனைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர்,
1. Tools மெனுவில் Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இதில் View டேப் தேர்ந்தெடுக்கப்பட வேன்டும்.
3. இங்கு Gridlines செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
4. இதில் Gridlines Color கீழ் விரி மெனுவினைத் திறக்கவும். இதில் நீங்கள் விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. Office பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Excel Options டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3.இங்கு கிடைக்கும் ஆப்ஷன்களில், Display Options என்பது கிடைக்கும் வரை வரிசையாகச் செல்லவும்.
4. அடுத்து, Show Gridlines என்ற செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பின்னர், இதில் Gridlines Color கீழ் விரி மெனுவினைத் திறக்கவும். இதில் நீங்கள் விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களுக்கான சம்மரி இன்பர்மேஷன் எனப்படும் குறிப்புகளை பிரிண்ட்டில் கொண்டு வர இயலுமா?
-என். கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம்.
பதில்: உங்கள் நோக்கம் மற்றும் அது சார்ந்த கேள்விக்கு பாராட்டுக்கள். முதலில் சம்மரி இன்பர்மேஷன் என்ன என்பதனை விளக்குகிறேன். டாகுமெண்ட் ஒன்றை, வேர்ட் சேவ் செய்திடுகையில், டாகு மெண்ட்டை சேவ் செய்வதுடன், டாகுமெண்ட் குறித்த தகவல்களையும் சேவ் செய்கிறது. டாகுமெண்ட் பிரிண்ட் செய்யப்படுகையில், இந்த தகவல்கள் அச்சிடப்படுவதில்லை. இதனையும் அச்சிட வேண்டும் எனில், கீழ்க்காணும் கட்டளைகளைத் தர வேண்டும். File மெனுவிலிருந்து Print தேர்ந்தெடுக்கவும். இப்போது பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்கு Print What என்ற கீழ்விரி பெட்டி கிடைக்கும். இதில் Document Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து அச்செடுக்கவும்.

கேள்வி: அழித்த பைல்களை மீட்டுத் தருவதில் எந்த அப்ளிகேஷன் புரோகிராமினை நீங்கள் பரிந்துரைப்பீர்கள்? தனி நபருக்கான பயன்பாட்டினைக் கேட்கிறேன். இலவசமாகவும் கிடைக்க வேண்டும்.
- எம். வளர்மதி, சென்னை
பதில்: நல்ல கேள்விதான். இந்த வகையில் கிடைக்கும் எல்லாமே வேகமாகவும், எளி தாகவும் பயன்படக் கூடிய புரோகிராம்கள் தான். இருப்பினும் அனைத்தையும் செயல் படுத்திப் பார்க்கையில் கிடைத்த முடிவு களைத் தருகிறேன். கார்ட் ரெகவரி (Card Recovery) என்ற அப்ளிகேஷன் பைல்களை மீட்டுத் தர 9 நிமிடங்கள் 45 விநாடிகள் எடுத்துக் கொண்டது. ஜேபெக் மற்றும் எம்பி 3 பைல்களை விரைவாக மீட்டுத் தந்தது. ரெமோ ரெகவர் (Remo Recover) என்ற புரோகிராம் நிமிடங்கள் 10 விநாடிகளில், அனைத்து பைல்களையும் மீட்டது. இவற் றில் .ச்ணூடீ வகை பைல்களை மீட்க வேண்டாம் எனத் தேர்ந்தெடுத்தால், இயங்குவது எளிதாக இருந்தது. போட்டோ ரெக் (Photorec) அப்ளிகேஷன் ஏறத்தாழ 10 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. ரெகுவா (Recuva) 8 நிமிடங்கள் 55 விநாடிகளில் அனைத்து பைல்களையும் மீட்டுத் தந்தது. அன்டெலீட் 360 (Undelete) அனைத்து பைல்களை மீட்டுத் தந்தாலும், வெகு நாட்கள் முன்பு அழித்த பைல்களை மீட்டுத் தருவதில் பல வேளைகளில் தயங்குகிறது. இது செயல்படும் நேரத்தினை மதிப்பிட இயலவில்லை. எனவே நீங்கள் கேட்டது போல, தனி நபர் பயன்பாட்டிற்கு ரெகுவா சிறந்தது. நீங்கள் கம்ப்யூட்டரில் தொழில் நுட்ப வல்லுநராக இருந்தால், போட்டோ ரெக் புரோகிராம் சிறந்தது. இவற்றில் சில சோதனை பதிப்புகளை மட்டுமே தரு கின்றன. ரெகுவா எப்போதும் இலவசம்.

கேள்வி: நான் இணையத்தில் ஒரு பக்கத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கையில், என் மின்னஞ்சல் முகவரியை, அந்த இணையதளம் கண்டறிந்து எடுத்து, தீய காரியங்களுக்குப் பயன்படுத்த முடியுமா?
- என். சந்திரவதனா, செங்கல்பட்டு.
பதில்: இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருப்பதனாலேயே உங்கள் மின்னஞ்சல் முகவரி திருடு போக வாய்ப்பே இல்லை. அந்த தளத்திலிருந்து திருட்டுத்தனமாக, ஏதேனும் பிஷ்ஷிங் புரோகிராம் ஒன்றை அனுப்பி, அது கம்ப்யூட்டரில் தங்கி இருந்து, பின் நீங்கள் மின்னஞ்சல் முகவரியினைப் பயன்படுத்து கையில் திருடும் நிகழ்வு ஏற்படலாம். அல்லது நீங்கள் அதே தளத்தில், ஏதேனும் ஒரு காரியத்திற்காக, உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அளிக்கும் பட்சத்தில், இந்த திருட்டு வேலை ஏற்படலாம்.
இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் பிரவுசர்களான, குரோம், பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்றவற்றில் பாதுகாப்பிற்கான வசதிகள் அவற்றின் கட்டமைப்பிலேயே தரப்பட்டுள்ளதால், நீங்கள் சந்தேகப்படுவது போன்ற திருடுகளுக்கு வாய்ப்பே இல்லை. எனவே பாதுகாப்பில் அதிக வசதிகளைத் தரும் பிரவுசரினைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.
உங்கள் கம்ப்யூட்டரில் கட்டாயமாக ஏதேனும் நல்ல செயல் திறன் மிக்க, அடிக்கடி தானாக அப்டேட் செய்யப்படுகின்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் களைப் பதிந்து வைத்து இயக்கவும்.

கேள்வி: யாஹு மெயில் பயன்படுத்தி வருகிறேன். இதில் என் பெயர் மற்றும் மேற்கோள் ஒன்றை என் கையெழுத்துக்குப் பதிலாகப் பயன்படுத்த விரும்புகிறேன். இதனை எப்படி செட் செய்வது? எனக்கு வரும் சில மெயில்களில் இதுபோல இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
-ஆ.கணேஷ், திருப்பூர்.
பதில்: நீங்கள் அனுப்பும் மெயிலில் தானாகவே இவற்றை இணைக்கும் வசதி யைக் கேட்கிறீர்கள். இதில் உங்கள் பெயர், பதவி, நிறுவனம், நீங்கள் கூறியது போல மேற்கோள்கள் என எதனை வேண்டு மானாலும் அமைக்கலாம். அதற்கான வழி இதோ.
1. உங்கள் யாஹு மெயில் அக்கவுண்ட் சென்றவுடன், இடது மேல் புறமாக, “Options” என்று இருக்கும் லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
2.இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில் “Mail Options” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. “Options” டேப் திறந்தவுடன், இடது பிரிவில் “Signature” என்பதில் கிளிக் செய்திடவும்.
4. அங்கு உள்ள வலது பிரிவில் உள்ள “Show a signature on all outgoing messages” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இப்போது கீழாக signature என்ற உங்கள் செய்தி, மற்றும் நீங்கள் விருப்பப்படுபவற்றை அமைக்கலாம். இங்கு “Plain Text” / “Rich Text” என இரண்டு வகை டெக்ஸ்ட் அமைக்கும் வசதி இருக்கும். இதில் சாதாரணமாக டெக்ஸ்ட் அமைய வேண்டும் எனில், முதல் பிரிவான “Plain Text” தேர்ந்தெடுக்கலாம். வண்ணத்தில் எழுத்துக்கள், எழுத்துக்களை பார்மட் செய்தல் போன்ற வசதிகள் வேண்டும் எனில் “Rich Text” என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் சிறிய படங்களான ஸ்மைலிகளைக் கூட இணைக்கலாம்.
6.அனைத்தும் அமைத்து முடிந்தவுடன் “Save Changes” என்பதில் கிளிக் செய்திடவும். இது சரியாக உள்ளதா என அறிய மெயில் ஒன்றை உருவாக்கவும். நீங்கள் தயாரித்த சிக்னேச்சர் அதன் இறுதியாக அமைக்கப்படும். நீங்கள் விரும்பிய வகையில் இருந்தால், அப்படியே விட்டுவிடலாம். இல்லை எனில், மீண்டும் மேலே தரப்பட்டுள்ள படி சென்று மாற்றலாம். அல்லது புதிய சிக்னேச்சர் மெசேஜ் அமைக்கலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஹசன் meeran - இந்தியசென்னை,இந்தியா
16-ஏப்-201200:59:01 IST Report Abuse
ஹசன் meeran நான் சவுதி அரேபியாவில் பணிபுரிகிறேன் .ஒவ்வரு வாரமும் தவறாமல் படித்து விடுகிறான்.நிறைய விஷயங்கள் இருக்கிறது நன்றி தினமலருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X