Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
கருணைக்கிழங்கை நம் உணவில் அடிக்கடி எடுத்துக்கொண்டால், சில வகை நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். கருணை கிழங்கில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, காரும் கருணை, காராக் கருணை. முதல் வகை, காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும். சாதாரணமாக சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், பெற்றோர் கைகளில்தான் உள்ளது. ஆரோக்கிய வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புக்கும் பல்வேறு சத்துக்கள் தேவை. அவற்றில் சில:"பி' வைட்டமின்களில் ஒன்றான, தையமின் பற்றாக் குறையினால் பெரி பெரி என்னும் நோய் ஏற்படும். வைட்டமின் "பி' என்பது, 12 வைட்டமின்கள் சேர்ந்த ஒரு குழு ஆகும். கால்களில் குடைச்சல், சோர்வு, இதய பலவீனம் போன்றவை, அந்த நோயின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
மாதுளம்பழச் சாறையும், அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால், சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும். மாதுளம் பழத்துக்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும். மாதுளையின் பழம், பூ, பட்டை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இதோ சில ஆலோசனைகள்:1. கடும் வெயிலால், உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படும். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 2. வெயிலில் இருந்து தப்ப நினைப்பவர்கள், "ஏசி' யில் இருக்க விரும்புகின்றனர். இதனால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிக நேரம் "ஏசி' யில் இருக்க கூடாது. 3. ஐஸ் வாட்டர், ஜூஸ் போன்றவற்றை மிதமான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
பழங்களின் ராணி என போற்றப்படும் மாதுளை, ரத்தத்துடன் நேரடியாகக் கலக்கும், இரும்பு தாதும், சர்க்கரையும் மிகுந்த பழம். இதில், எளிதில் ஜீரணிக்கும் சத்தும், சர்க்கரையும் அதிகமாக உள்ளதால், பிணியாளர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றது. வயிற்றுப்புண், வயிற்று வலி, வயிற்று உளைச்சல், ஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றை நீக்கும் உணவுச்சாறு. இதை அருந்தினால், உடல் சூடு, மூலம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
குழந்தைகளுக்கு, சத்துள்ள உணவுப்பொருட்களை சாப்பிட கொடுப்பது அவசியம். ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும், உணவுகளை கொடுக்க வேண்டும். உணவில் புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகிய ஐந்து சத்துகள் இருக்க வேண்டும். இவை குறைந்தால், பல ஊட்டச்சத்து பற்றாக்குறை நோய்களினாலும், தொற்று நோய்களினாலும் பாதிக்கப்படுவர். பால், முட்டை, இறைச்சி, பருப்பு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
"தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரை சந்திக்க வேண்டிய தேவையிருக்காது' என்பர். ஆனால் ஆப்பிளையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது, அத்திப்பழம். பல்வேறு சத்துக்கள் உள்ள அத்திப்பழத்தை, உடல் பலவீனமானவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர் டாக்டர்கள். உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய், அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது. ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும், எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகாலிப்டஸ், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக, அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2016 IST
வழக்கத்தை விட சீக்கிரமாகவே, இந்த ஆண்டு கோடை காலம் துவங்கி விட்டது. ஒரு பருவம் முடிந்து, இன்னொரு பருவம் ஆரம்பிக்கும்போது, காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடல் பிரச்னைகளின் பாதிப்பு இருக்கும். அதிலும் கோடை ஆரம்பித்தால், காரம், மசாலாவை தவிர்க்க வேண்டும் என்று நினைத்து ஆரோக்கியமான உணவு என்று இட்லி, தோசை, வடை இவற்றை தினசரி உணவாக சாப்பிடுகின்றனர். ஆனால் உளுந்து, கோடை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2016 IST
உணவிற்கு முன், உணவிற்கு பின் எந்த மாதிரியான பழங்கள் சாப்பிடுவது நல்லது? சிவப்பாக இருக்கும் மாதுளம் பழத்தை சாப்பிடக் கூடாது என்று சொல்லப்படுவது உண்மையா?எஸ்.ரேகா, மதுரைபொதுவாகவே, எல்லாப் பழங்களிலும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்கு மிக அவசியமான, நுண்ணுாட்டச் சத்துகள் அதிகம் உள்ளன. அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள் எதுவாக இருந்தாலும், தாராளமாகச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2016 IST
ரகு பொறியியல் படித்திருக்கிறார்; வயது 24. கணினி துறையில், லட்சத்தில் சம்பளம் வாங்குகிறார். ரகு தன் தந்தையிடம், 'நீங்கள் ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தை, நான் இப்போதே வாங்குகிறேனே' என்று, அடிக்கடி வம்பு இழுப்பார். அதற்கு ரகுவின் அப்பா, 'நான் அந்த கால பி.ஏ.' என்பார் பெருமையோடு! ரகுவின் தாய் நடப்பதையெல்லாம் சிரித்தபடி வேடிக்கை பார்ப்பாரே தவிர, யாருக்கு சாதகமாகவும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2016 IST
பதினைந்து வயது ஹரீஷ் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) அவன் பெற்றோருடன் என்னைப் பார்க்க வந்தபோது, கவனம் மொத்தமும் கையில் இருந்த மொபைல் போனிலேயே இருந்தது. 'பாடத்தில் கவனமே இல்லை டாக்டர். எந்த நேரமும் மொபைல்போன், கம்ப்யூட்டர் தான். படி ஹரீஷ் என்று சொன்னால், கோபம் வருகிறது. 'முதல்ல இங்கேயிருந்து போ' என்று கத்துகிறான். பல இரவுகளில் 2:00 மணிக்கு அவன் அறைக்கு போய் பார்த்தால், லைட், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2016 IST
வர்மக் கலை என்றால் என்ன?சித்தர்கள் வகுத்த ஆயக்கலைகளுள் வர்மக் கலையும் ஒன்று. உடலுள் உயிர் செம்மையாக இயங்க உறுதுணையாக இருப்பது வர்மமாகும். இதை வர்ம வாயு என்பர். இந்த ஆற்றல் காற்றோட்டம், வெப்பவோட்டம், ரத்தவோட்டம் ஆகிய மூன்று ஓட்டங்களையும் ஒழுங்கு செய்து, உடலுக்கு நோய் வராமல் பாதுகாக்கிறது; இதுவே வர்மம். இந்த வர்ம ஆற்றல் எவ்வாறு செயல்படுகிறது?வர்ம ஆற்றல் உடல் முழுவதும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X