உணவுப்பாதை மற்றும் சுவாசப்பாதை வழியாக நம் உடலுக்குள் நுழையும் நுண் கிருமிகள், ரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்து விடுகின்றன. அவற்றின் கழிவுகள், தோலின் வழியாக வெளியேற்றப்படுகின்றன. அவை, வியர்வை துவாரங்களை அடைத்து, கட்டிகளை உருவாக்குகின்றன. அதுமட்டுமின்றி, தோலின் வழியாக உட்செல்ல முற்படும் நுண் கிருமிகள், ரத்தத்தின் உள் செல்ல முடியாமல் ஆரம்பத்திலேயே ..
ஒரு நிகழ்வு அல்லது நபர் பற்றிய எண்ணம், அபிப்ராயம் மற்றும் மதிப்பீடு ஆகியவைகளைத் தான், கருத்து என்று சொல்கிறோம். ஒருவரைப்பற்றி எந்தவிதமான கருத்தையும் மனதில் கொள்ள, அனைவருக்கும் உரிமை உண்டு. அதே நேரம், அக்கருத்தை பகிர்ந்து கொள்ள, வெளிப்படுத்த உரிமை உண்டா என்று கேட்டால், முழு உரிமை இல்லை. கட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு கிடையாது. ஆனால், கருத்தை தெரிவிக்க, வெளிப்படுத்த, ..
அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் லீலாவதிக்கு, வயது 48. இரண்டு குழந்தைகள், கணவர் என, அழகான குடும்பம். திடீரென்று லீலாவதியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. காரணம், அவர் பலமுறை ரத்த வாந்தி எடுத்தது தான். என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள, 19 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் வந்தார். பரிசோதனையின்போது, அவருக்கு மண்ணீரலில் வீக்கம் இருந்தது. கல்லீரலுக்கு செல்லும் ரத்தக் குழாய் ..
1 மூளை உறை என்பது என்ன?மூளையில் மூன்று விதமான உறைகள் உள்ளன. ஒன்று, 'டியூரா மேட்டர்' என்பது மூளையின் வெளிப்பகுதியில் இருக்கும் வெளியுறை. 'அரக்கனாய்டு' மேட்டர் என்பது நடுப்பக்கம் இருக்கும் இரண்டாவது உறை. 'பயோ மேட்டர்' என்பது மூளையோடு இணைந்திருக்கும் மூன்றாவது உறை. இவை மூளைக்கு கவசம் போல் இருந்து காக்கின்றன; மூளையில் ஏற்படும் அதிர்வுகளை தடுக்கும் வேலையை ..
எனக்கு வயது வயது, 55; உறுத்து குடல் அழற்சி நோய் இருக்கிறது; இது எதனால் ஏற்படுகிறது? - செங்குட்டுவன், விருத்தாச்சலம்உணர்ச்சி மிகுதியால் வரும் ஜீரண மண்டல நோய் தான், உறுத்து குடல் அழற்சி. உடல் ரீதியிலான நோயாக இருந்தாலும், இந்நோய்க்கு அடிப்படை காரணம், மனதின் உணர்ச்சி போராட்டங்கள் தான். இதனால், அதிகளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அறிகுறியாக வயிற்றுப்போக்கும், உணர்ச்சிகளை ..
முதல் நாள் சோற்றில் நீர் ஊற்றி, அடுத்த நாள் உண்ணும் சாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள வைட்டமின்கள் அடங்கியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பழைய சாதம் உண்பதால் அதிலிருந்து பெருகும் சக்தி, நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் காய்ச்சல் உள்ளிட்டவை அணுகாது. வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை ..
மருத்துவ குணம் கொண்ட உணவு பொருட்கள் எளிமையாக கிடைக்கும் வகையில் இருப்பினும், அதில் இருக்கும் பயன்கள் மற்றும் மூலிகை குணங்களை நாம் அறிவதில்லை. இன்னும் சில பொருட்களை, எந்தெந்த உடல் பிரச்னைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாததால், அதனை பயன்படுத்துவதில்லை. இவ்வாறு எளிமையாக கிடைக்கும் மருத்துவ பொருட்களில் ஜாதிக்காயும் ஒன்று. ஜாதிக்காயை தூளாக அரைத்து அன்றாட ..
வெயிலின் தாக்கம் காரணமாக, வேர்க்குரு வந்து எரிச்சல்படுத்தும். இதற்கெல்லாம் என்ன தான் செய்வது? கோடை வந்த பிறகு வியர்வை, புழுக்கம் என்பதெல்லாம் நமக்கு அழைக்கப்படாத விருந்தாளி போல் தான். கோடை நோய்களில் முக்கியமானது வேர்க்குரு. இது ஆபத்தான நோயல்ல; மருத்துவம் எதுவும் தேவைப்படாது. தானாகவே சில நாட்களில் மாறிவிடும். ஆயினும் இந்நோய் வராமல் தடுக்கலாம். உடலில் அதிக வியர்வை ..
வெயிலால் பாதிப்புகள் ஏற்படாமல் தப்ப, சில வழிமுறைகள்: வெயிலுக்கு உகந்தது கதர் ஆடை. உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சுவதுடன், வியர்க்குரு வருவதையும் தடுக்கும். வெயில் காலங்களில் ஓட்டை விழுந்துள்ள ஓசோன் மண்டலத்தின் வழியாக, அதிகமான அல்ட்ரா வைலட் கதிர்கள் பாயும். இதனால் கண்கள் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க "ஆட்டோ ரிப்ளக்ஷன் கிளாஸ்' அணிவது நல்லது.உடல் சூட்டையும், ..
இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு வகைக்கு 30 மில்லியுடன் தேன் 15 மில்லி கலந்து 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும். இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து 15 மில்லியளவாக 3 வேளை குடிக்க இருமல், இரைப்பு தீரும்.200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் ..
சீத்தா பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்தும், அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோஸ், சுக்ரோஸ் இருப்பதால், அதிக இனிப்புச் சுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் டானிக்காக பயன்படுத்தப்படுகிறது; ரத்த உற்பத்தியை அதிகரித்து, உடலுக்கு வலிமை தருகிறது.பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், நீர்ச்சத்து, மா சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார் ..
ஒருவருடைய உடல் எடை அதிகமாக இருக்கிறது என்பது அவருடைய உயரம், வயது, பாலினம் ஆகியவற்றைப் பொருத்தே கணிக்கப்படுகிறது. உடற்பருமன் என்பது திசுக்கள் இயல்பான அளவை விட அதிகளவில் உருவாவதாலும், கொழுப்பு செல்கள் பெரியதாக வளர்வதாலும் ஏற்படுகிறது. உடல் எடையை கட்டுப்படுத்தவில்லை என்றால், நாட்பட்ட வியாதிகளான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு, பித்தப்பை கோளாறு ..
எலுமிச்சை, ஆரோக்கியம் மற்றும் அழகு பராமரிப்புக்கு சிறந்த மருந்தாகும். வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை, உணவு வகைகளை மணமூட்டவும், ருசியை கூட்டவும் முக்கிய இடம் பெறுகிறது. தலைமுடி, கைகள், பாதங்கள் மற்றும் உடம்பின் அழகு பராமரிப்பில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது. சருமத்தில் ஏற்படும் நிற மாற்றங்களை எலுமிச்சை பழம் சரிசெய்யும். சருமத்தில் ஏற்படும் கொப்பளங்கள் ..
கொழ கொழ என்றிருந்தாலும், வெண்டைக்காயை அவ்வளவு சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது. சர்க்கரை நோயையே, சுண்டக்காய் ஆக்கி விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சர்க்கரை நோயை, நோய்களுக்கு எல்லாம் தாய் என்று சொல்வார்கள். இதன் அர்த்தம், சர்க்கரை நோய் வந்து விட்டால் மற்ற எல்லா நோய்களும் வந்து விடும் என்பதுதான். சர்க்கரை நோயை பொருத்தவரை, அதை முற்றிலும் குணப்படுத்த ..
மனிதனின் ஓய்வுக்கு அடிப்படைத் தேவையாக இருப்பது உறக்கம். மனித வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி, தூக்கத்தில் தான் கழிகிறது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை புதுப்பிக்கவும், சோர்வை நீங்கி புத்துணர்வு பெறவும் தூக்கம் முக்கியமானதாகும். இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்பது அறிவியலாளர்கள் கருத்தாகும். தூங்குவதைப் பற்றியும், அதில் உள்ள ..
மலர்கள் அழகானது, வாசம் நிறைந்தது. அதை தலையில் சூடிக்கொள்ளலாம். கழுத்தில் மாலையாக அணிந்து கொள்ளலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதில் நோய் போக்கும் அரிய மருத்துவ குணம் இருப்பது பலருக்கு தெரியாது. மலரில் எந்த மாதிரியான மருத்துவ குணம் உள்ளது என்பதை பார்க்கலாம்.ஆவாரம்பூ: ஆவாரம் பூவை உலர்த்தி, வேளை ஒன்றுக்கு, 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து ..
சைக்கிளை இன்று ஏறக்குறைய மறந்தே விட்டோம். இன்று நம் வீடுகள் தோறும் பைக், கார்கள் இருக்கின்றன. சைக்கிள்கள் இருந்த இடத்தைத்தான் இவை இப்போது நிரப்பியிருக்கின்றன. அந்தளவுக்கு, சைக்கிள்கள் ஒவ்வொரு குடும்பத்தின் போக்குவரத்திலும் முக்கியம் இடம் பிடித்திருந்தது.நவீனமும், அறிவார்ந்த கண்டுபிடிப்புகளும் நிறைந்த இன்றைய உலகில், ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு இடம் ..
தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதைதான் வாட்டர் தெரபி என்கிறார்கள் டாக்டர்கள். மனித உடலை சீராக வைக்கவும், ஆரோக்கியத்துக்கு வித்திடவும், தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று. தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்வதன் வாயிலாக, முழு ஆரோக்கியம் பெற முடியும். காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க ..
மனிதர்கள் நிமிர்ந்து நடப்பதால் இருதயத்திலிருந்து வயிறு, கால், பாதம் போன்றவற்றிற்கு செல்லும் ரத்தம் மீண்டும் ஆக்சிஜன் கலப்புக்காக புவியீர்ப்பு விசையையும் மீறி, இதயத்திற்கு வருவதற்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. நமது உடலில் ஏராளமான ரத்தக்குழாய்கள், குறுக்கும் நெடுக்குமாக சென்று உடலின் அனைத்து பாகங்களையும் இருதயத்தோடு இணைக்கின்றன. ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை ..
வெரிக்கோஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் கால்களை, பத்திரமாக பாதுகாக்க வேண்டும். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.வெரிக்கோஸ் பிரச்னையில், நாளப்புடைப்பு ஆபத்தை தரும். இந்த ஆபத்துக்கு தீர்வு தருவதாக அமைகிறது ஆரஞ்சு பழம். ரத்தக்குழாய்களுக்கு வலுவையும், அவற்றின் வால்வுகளுக்கு பலத்தையும் தருவதுடன், வீக்கத்தையும் ஒவ்வாமையையும் ..
பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலை எந்த நோயும் தாக்காது. அதுவும் அந்தந்த பருவகாலங்களில் விளையும் பழங்கள், அதிக பலனை தரும். குறிப்பாக, மாதுளம்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலை தாக்கும் முக்கிய நோய்களை விரட்டலாம்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்துக்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி ..
பழங்களில் மிகுந்த வாசமும், ருசியும் உள்ள பழம் கொய்யா. இப்பழம் விலை குறைவானது. அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடிய பழம். கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது.கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை. ..
காய்கறி உணவில் கீரையை விட சத்தும், மருத்துவ குணமும் உள்ள காய்கறிகள் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு கீரையிலும் உடலுக்கு நன்மை தரும் சத்துக்கள் உள்ளன. சில வகை கீரைகளில், நோய்களை தீர்க்கும் அபூர்வமான மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக, பொன்னாங்கன்னி, மணத்தக்காளி, முருங்கை, அகத்தி போன்ற கீரை வகைகள் மிக சிறந்த மருத்துவ குணம் உள்ள கீரையாகும். இந்த வரிசையில் பசலைக்கீரையும், மிக ..
பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் உண்டு. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது: கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், ..
மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.காய்ச்சல்: உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் காய்ச்சல் குறைந்துவிடும்.தொண்டைப்புண்: துளசியை நீரில் போட்டு ..
வெயில் காலங்களில் உடல் சூடு அதிகரிப்பது வழக்கமானது. உடலுக்கு குளிர்ச்சியான பழரசம், இளநீர், மோர் போன்ற திரவ ஆகாரங்களை சாப்பிட்டு அதை சரி செய்கிறோம். சிலர் தண்ணீர் அதிகம் குடிக்காமல், வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிகின்றனர். இதனால் நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்பட்டு அவஸ்தை படுகின்றனர். இதை போக்க எளிமையான வைத்தியம் உண்டு.ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.