Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 17,2015 IST
மார்பகப் புற்றுநோய், இந்தியாவில் பெண்களிடம் கருப்பை புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, அதிகமாக காணப்படுகிறது. கடந்த, 2001ம் ஆண்டு இந்தியாவில் மொத்த பெண்களின் எண்ணிக்கையில், ஐந்து கோடி பெண்களில், 80 ஆயிரம் பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், ஒரு லட்சம் பெண்களில், 21 பேருக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என, அடையாறு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2015 IST
தினேஷின் அப்பா ரகுவரன், தனியார் பள்ளி ஆசிரியர். சொந்த ஊர் நாகர்கோவில். ஆனால், தற்போது நிர்க்கதியாய் சென்னையில் இருக்கின்றனர், குடும்பத்தோடு. அப்படி என்ன தான் நடந்தது?மணி இறந்துவிட்ட செய்தி கேட்டு, தினேஷ் அழவில்லை. அதற்கு மாறாக அவன் விளையாட மற்றொரு மணியை கேட்டான். மணி என்பது விளையாட்டுப் பொருளில்லை. தினேஷ் செல்லமாய் வளர்த்த நாய்க்குட்டி. மணியின் மரணம் தினேஷை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2015 IST
காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என, பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வோம். ஆனால், அதுவல்ல சூரிய நமஸ்காரம். தொடர்ச்சியாக செய்யப்படும், 24 யோகாசனங்கள் தான் சூரிய நமஸ்காரம். உருவாக்கப்பட்ட உடற்பயிற்சி முறைகளிலேயே சிறப்பானது, சூரிய நமஸ்காரம். மற்ற உடற்பயிற்சிகளோடு பொருத்திப் பார்த்தால் கூட, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2015 IST
1 'எக்ஸிமா' என்றால் என்ன?'எக்ஸிமா' என்பது தோலின் மேல் ஏற்படும் ஒருவித சரும நோய். தோலில் காய்ந்த, வட்டவடிவிலான, தடிமனான, செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்; அரிப்பும் இருக்கும்.2 'எக்ஸிமா' ஏற்பட காரணங்கள் என்ன?தோலில் ஏற்படும் ஒவ்வாமை, தோலை தடிமனாக்கும் தன்மையை ஏற்படுத்தும். தோல் தடிமனாவதால், அந்த பகுதி சிவப்பாக மாறி, மீன் செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்.3 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2015 IST
ஸ்ரீதிவ்யா, கடலூர்: கர்ப்பமான முதல் மூன்று வாரங்கள், கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனரே, ஏன்?குழந்தையின் இதயம் அந்த காலத்தில் தான் உருவாகும் என்பதால், சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், குழந்தை, இதய பிரச்னையுடன் பிறக்கக்கூடும். மனித உடலில் மூளை மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த மூளையும் முதல் மூன்று மாத காலத்தில் தான் உருவாகும். மேலும் ஒவ்வொரு மூன்று மாத ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது. மேலும், புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
உடல் குண்டாக இருப்பவர்கள் தினம் சாப்பிடும் உணவில், பச்சை மிளகாய் சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறையும் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின், உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்து விடுகிறது. கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருளாகும். ஆகவே இந்த பச்சை மிளகாய் சேர்த்திருக்கும் உணவு சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
தலைப்பை பார்த்தவுடனே அனைவருக்கும், அதன் காரணம் புரிந்திருக்கும். பீட்ரூட்டின் சிவந்த நிறத்தின் கவர்ச்சிக்காகவே பலர் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அதில் உள்ள சத்துக்குள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பீட்ரூட்டில் இல்லாத சத்துக்களே இல்லை எனும் அளவுக்கு அனைத்து சத்துக்களும் உள்ளன. குறிப்பாக, பீட்ரூட்டில் தண்ணீர், புரோட்டின், கொழுப்பு, தாதுசத்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
உடலில் எற்படும் சின்னச்சின்ன உபாதைகளுக்கு எல்லாம், மருத்துவரை போய் பார்க்க தேவையில்லை. வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் போதும். இந்த வைத்திய முறைகளை காலங்காலமாக பின்பற்றி நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இன்றைக்கு சாதாரண தலைவலிக்கு கூட மாத்திரை, மருந்துகளை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. உதாரணமாக பித்தம், வாந்தி, நெஞ்சுகரிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
ஒவ்வொரு குழந்தையையும் தொட்டிலில் போட்டு தூங்க வைக்கும்போது, தாலாட்டு பாடுவது வழக்கம். ஆனால், இத்தலைமுறைகளுக்கு தாலாட்டு பாட்டு என்றால், என்ன என்பதே தெரியாமல் இருக்கிறது. முன்னோர்கள் தங்களது குழந்தைகளை ஆராரோ... ஆரிராரோ... என தாலாட்டு பாட்டுகளை பாடித்தான் தூங்க வைத்தனர். பொருளாதார தேடலால், வெளியூர்களில் வசிக்கும் சிலருக்கு, அவரது முன்னோர்கள் உடன் இருக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் கூறுவது, பிரசவத்திற்கு பிறகு குறைந்தது ஒரு மாதமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்பது. அதிலும் அது அவர்களது பிரசவம் மற்றும் உடல் நிலையை பொறுத்து, ஒரு மாதத்தில் கூட வேலைக்கு போகலாமா வேண்டாமா என்று பரிசோதித்து கூறுவார்கள். ஆனால் சில பெண்கள் தங்களுக்கு பிரசவம் நடந்த ஒருசில வாரங்களிலேயே வேலைக்கு சென்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
ரத்தக்கொதிப்பானது இன்றைய அவசர உலகில் பலருக்கும் உள்ளது. வேலைப்பளு காரணமாகவும், ஓயாத மன உளைச்சலின் காரணமாகவும் இது ஏற்படுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஓரளவு இயற்கையிலேயே ரத்த அழுத்தம் இருக்கும். இவை பரம்பரை மூலமாகவும் ஏற்படக்கூடியது. இதனை முழுவதுமாக தவிர்க்க முடியாது. மாறாக உணவு கட்டுப்பாடு மற்றும் சில எளிய பயிற்சியின் மூலம் கட்டுக்குள் வைக்கமுடியும்.ரத்தக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
இப்போதெல்லாம் எந்த மாதம் மழை வரும், எந்த மாதம் வெயில் அடிக்கும் என்று உறுதியாக கூற முடிவதில்லை. அந்தளவுக்கு பருவம் தவறி மழையும், வெயிலும் மாற்றி மாற்றி வாட்டுகின்றன. நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைக்காததன் விளைவே இவை.தட்ப வெப்பநிலைகளின் மாற்றத்தால், ஒவ்வொருவரின் உடலிலும் பலவகையான மாற்றங்கள் ஏற்படும். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
கல்லீரல் உடலின் மிகவும் முக்கியமான உறுப்பாகும்; இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றுதல், குளூக்கோஸ் மற்றும் இரும்பு மற்றும் கொழுப்பு சேமிப்பு போன்ற பல்வேறு உயிர்வேதியியல் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குக் கூடுதலாக, 5 இயற்கை உணவுகள் உள்ளன.காய்கறிகள்: அனேக காய்கறிகள் கல்லீரலில் ஒரு நேர்மறையான விளைவை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
ற்றுச்சூழலை பாதுகாக்கும் செடி கொடிகளில் சில மூலிகைகளாகவும் பயன்படுகிறது. இவற்றில் குப்பைமேனி, அவுரி, மற்றும் நஞ்சறுப்பான் போன்ற மூலிகைச் செடிகள், பல்வேறு சிறந்த மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது. குப்பைமேனி: குழந்தைகளுக்கு, ஏற்படும், தோல் நோய்கள் மற்றும் நலங்குதல் போன்ற பிரச்னைகளுக்கு குப்பைமேனி இலையை பொடியாக்கி குளிக்க பயன்படுத்தலாம். குழந்தைகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து, 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலிய பிரச்னைகள் மறையும். வெந்தயம், 17 கிராம் எடுத்து, 340 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும். கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும். வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
மேற்கத்திய நாடுகளில் வசிப்பவர்கள், காய்கறிகளில் பீன்சை விரும்பி சாப்பிடுகின்றனர். அதற்கு காரணம், அதில் உடலுக்கு நன்மை அளிக்க கூடிய பல சத்துக்கள் உள்ளன. பீன்ஸ் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை தடுத்து, நீரிழிவை கட்டுப்படுத்துகிறது.ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
தாவர உணவு உண்ணும் ஒருவருக்கு தேவையான அளவு புரதம் ஒருபோதும் கிடைக்காது என்ற மூடநம்பிக்கை பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால், தாவர உணவு வகைகளே உடலுக்கு தேவையான சரியான அளவு புரதத்தை கொண்டுள்ளன என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், புரதம், அளவுக்கு சற்று மிஞ்சினாலும் கொழுப்பாக மாறி ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும். கட்டுடல் பெறவும், உடல் எடை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2015 IST
கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும். காய்கறி வகைகளிலே, கீரைக்கு முக்கிய இடம் உண்டு. குறைந்த பட்சம் வாரத்தில் இரண்டு முறையாவது கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும்.அந்தளவுக்கு, கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்துள்ளன. கீரை உணவு அனைவருக்கும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X