Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
மருதாணி இலைகளைப் பறித்து, அம்மியில் அரைத்து, கை, கால் விரல்களில் வைத்தால், யாருக்கு அதிகமாக சிவக்கிறது என்று, பல வீடுகளில் போட்டியே நடக்கும். ஆனால், இன்று டாட்டூ பக்கம் செல்வதில், யுவதிகள் அதிகம் நாட்டம் செலுத்துகின்றனர். ஆனால், மருதாணி இட்டுக் கொள்வது, அழகுக்காக மட்டுமல்ல... இதன் பின்னணியில், ஆரோக்கியமும் இருக்கிறது என்று பலருக்கு தெரியவாய்ப்பில்லை.மருதாணியின் இலை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
இரு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணித்தல், இருக்கையில் சரியாக உட்காராதது, உடற்பயிற்சி இல்லாமல், பளுவான பொருட்களை தூக்குவது உட்பட பல காரணங்களால், முதுகுவலி ஏற்படுகிறது. இதை குணப்படுத்த, நாம் வழக்கமாக மேற்கொள்ளும் சில காரணங்களை முறைப்படுத்தினால் போதும். இலவம் பஞ்சு மெத்தைகள், பாய், ஜமுக்காளம் மிகவும் நல்லது. உயரம் குறைந்த தலையணை முதுகுவலியை குறைக்கும். நீண்டதூரம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
ஏராளமான மருத்துவ முறைகள், நம் உணவு முறையிலேயே இருக்கின்றன. அவற்றை தரம் பிரித்து உண்டு வந்தால், நோயின்றி ஆரோக்கியமாக வாழ வழி கிடைக்கும். என்றும் இளமையுடன் வாழ தினம் ஒரு நெல்லிக்கனி. இருதயம் ஆரோக்கியமாக இருக்க, நோய் தாக்குதல் இன்றி வாழ செம்பருத்திப்பூ நல்லது.மூட்டு வலியை போக்க, முடக்கத்தான் கீரையும், இருமல், மூக்கடைப்பு போக்க கற்பூரவல்லியும் நல்லது. வாய்ப்புண், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
சிலருக்கு, வயது அதிகமாக இருந்தாலும், அவர்களை பார்த்தால், நிச்சயமாக தெரியாது. காரணம், அவர்கள் மேற்கொள்ளும் உணவு முறை, உடற்பயிற்சிகளும் தான். வாழ்க்கையில், சில விஷயங்களை முறையாக கையாண்டால், இளமை என்றும் நீடித்திருக்கும்.பதினாறு வயதுக்கு மேல், கொலாஜன் உற்பத்தி அதிகமாக இருக்கும். அவை தான், சருமத்துக்கு, நெகிழ்வுத் தன்மையை கொடுத்து, சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கின்றன. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
புது காலணிகளை வாங்கும் போது, சில நடைமுறை கவனித்து வாங்க வேண்டும். காலணிகளை தேர்ந்தெடுத்து அணிந்து, நான்கைந்து அடி நடந்து பார்த்து, சரியானதாகவும், நடக்க வசதியாகவும் இருந்தால் தான் வாங்க வேண்டும்; இறுக்கமானதை அணியக் கூடாது.விலை குறைந்த செருப்புகளை விட, விலை கூடுதல் என்றாலும், தரமான, பாதங்களுக்கு ஏற்றதையே வாங்க வேண்டும். தோல் செருப்புகளை, நீரில் நனையாமல் பார்த்துக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
தேன். இயற்கை அளித்த இனிய வரம். எழுபது வகையான சத்துகளும், வைட்டமின்களும் இதில் உள்ளன. சத்துக்கள், சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்படுகின்றன. தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனை சேகரித்ததோ, அந்த செடியின் மருத்துவக் குணம் இதில் இருக்கும். பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயு தொல்லை, ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி, சுத்தம் செய்யும் தன்மை, தேனில் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அலர்ஜியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில், இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கும். அதிகப்படியான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
பொதுவாக, காலையில் எழும் போதும், சோம்பல் முறித்து விடுவது இயல்பு. அவ்வாறு, முறிக்கும் போது, மெதுவாக செயல்பட வேண்டும். முதுகுப் பகுதியை கடினமாக செயல்படுத்தக் கூடாது. நீண்ட மூச்சு பயிற்சியின் மூலம், அந்நாளை குதூகலமாக வைக்க உதவும்.காலையில் எழுத்த உடன், சிறிது நீர் அருந்துவது நல்லது; உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீர் வெளியேற்றி விடும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2016 IST
ஓடி விளையாட்டு பாப்பாநீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பாபாரதி.நம்மூரில் பல இடங்களில், விளையாட்டு மைதானங்களே இல்லாது இருக்கும் போது, எங்கிருந்து விளையாடுவது என்ற கேள்வி, பலருக்கு எழாமல் இல்லை. கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்துக் கொண்டும், தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டும் இருக்கும் பிள்ளைகளால், வருங்காலத்தில் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பது, இப்போதைக்கு கவலை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2016 IST
மத்திய தரைக்கடல் பகுதியை தாயகமாக கொண்ட, லாரல் மரத்தின் இலை தான் பிரிஞ்சி இலை.'ஒரு பிரிஞ்சி இலையை எடுத்து எரித்தால், அதிலிருந்து வரும் புகை, 5 நிமிடத்தில் மன அமைதியும், மன அழுத்தத்தில் இருந்து விடுதலையும் தருகிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுதலை அளிக்கும் காரணிகள், பிரிஞ்சி இலையில் இருக்கின்றன' என, பிரபல ரஷ்ய விஞ்ஞானி கென்னடி மால்கவ் கண்டுபிடித்துள்ளார். பிரிஞ்சி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2016 IST
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மூலம் தொப்பையைக் குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறதே! அது என்ன சர்ஜரி? பக்க விளைவுகள் வருமா? எவ்வளவு செலவாகும்? விவரங்கள் தர முடியுமா?சாமு, சேலம்.உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்க முடியாது என்ற நிலையில், இந்த அறுவை சிகிச்சை மிகவும் பயனுள்ளது. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில், நான்கு வகைகள் உள்ளன. அவரவர் உடல் நலம், வயது, உடல் சார்ந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2016 IST
ஜூன் 9, 2016: சென்னையைச் சேர்ந்த ஆர்த்தி, திருமணத்திற்குப் பின் கணவர் சுரேஷ் உடன் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். ஆர்த்தி கர்ப்பம் தரித்தபோது, கணவரால், அலுவலக வேலையோடு, மனைவியை சரியாக கவனிக்க முடியவில்லை என்பதால், சென்னையில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்து விட்டார், ஆர்த்தி. அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவ நாளன்று சுரேஷும், சென்னை வந்தார். குடும்பமே மகிழ்ச்சியாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2016 IST
கல்லுாரி மாணவி அவள். 'யாருடனும் என்னால் இயல்பாகப் பழக முடியாது' என்ற பயம் தான் அவளின் பிரச்னை.காரணம் அவளின் அப்பா. நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவளை வளர்த்த விதம் அப்படி.அவளின் அப்பா நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்; வசதிக்கு குறைவில்லை. ஆனால், அவர் இயல்பான அப்பா கிடையாது. பயங்கர, 'ஸ்ட்ரிக்ட்!' 1950 - 60களில் இருந்த அப்பாக்களைப் போன்றவர். விறைப்பாக, கண்டிப்புடன் தான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2016 IST
'எண்டோஸ்கோபி' என்றால் என்ன?உடலில் இயற்கையாக உள்ள துவாரங்கள் வழியே மிகச் சிறிய ஒயர் போன்ற கருவியை செலுத்தி, அதன் மூலம், உடல் உள் உறுப்புகளின் பிரச்னைகளையும், நோய் பாதிப்புகளையும் கண்டறிய உதவும் கருவி, 'எண்டோஸ்கோபி!'எந்தெந்த உள் உறுப்புகளை எண்டோஸ்கோபி மூலம் பார்க்க முடியும்?இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், நுரையீரல், பித்தப்பை போன்ற உறுப்புகளைப் பார்க்கலாம். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X