Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
கீரை. இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இது. எல்லா வகை கீரைகளிலும், உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் இருக்கின்றன. முளைக்கீரையில், கால்சியம் சத்துகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால், எலும்பு வலுவடைவதோடு, உடல் வளர்ச்சியும் அதிகரிக்கும். வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், ஆரோக்கியமும், வளர்ச்சியும் குறைவிருக்காது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
நாம் சாப்பிடும் உணவில், வேக வைத்த தானியங்களும், காய்கறிகளுமே முக்கிய உணவாக உள்ளன. அவ்வப்போது, பச்சை காய்கள், முளைகட்டிய தானியங்களையும் உட்கொள்ள வேண்டும். முளைவிட்ட தானியங்கள், மனிதனுக்கு கிடைத்த ஒரு வரம் என்று சொல்லலாம்.முளைவிட்ட தானியங்கள், ஒரு முழுமையான உணவாக இருந்தாலும், இன்னும் பலர் அதை தினசரி உணவாக பயன்படுத்த தயங்குகின்றனர். உடலுக்கு வலிமை சேர்ப்பதற்காக, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
திராட்சையை, கொடிமுந்திரி என்றும் அழைப்பர். திராட்சை ரசத்தில் இருந்து பல வகையான மருந்துகளும், டானிக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால், இதற்கு "டானிக் புரூட்' என்ற பெயரும் உண்டு.குடல் புண், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள், இதன் பழ சாறை, மூன்று வேளையும், அரை அவுன்ஸ் வீதம் பருகினால், குணம் பெறலாம். அன்றாட வாழ்வில் திராட்சையை சேர்த்துக் கொண்டால், உடலுக்கு ஏராளமான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
சீத்தாப்பழத்தின் வெளித்தோற்றம் அழகாக இல்லா விட்டாலும், அதனுள்ளே இருக்கும் சதைப்பற்று அமிர்தத்துக்கு நிகரானது. இதன் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே, அரிய மருத்துவக் குணங்களை கொண்டது. நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து என, பல சத்துகள் அடங்கியுள்ளது.செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், சீத்தாப்பழத்தை சாப்பிட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
கோவைக்காய், முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது. இன்றைக்கு, இதன் மருத்துவ குணத்தை அறிந்து, மக்கள் பலர், விரும்பி சாப்பிட துவங்கியுள்ளனர். கோவைக்காய், உடல் சூட்டை தணிக்கும். உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது;அதற்கேற்ற பாக்டீரியா எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. தவறான உணவுப் பழக்கங்களால், வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது; ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
நாம் சாப்பிடும் உணவில், தானியம் அல்லது மாமிசம், முக்கிய இடம் பிடிக்கின்றன. இதில் எதை சாப்பிட்டாலும் அவற்றுடன் காய்கறிகள், பழங்களை சேர்த்து உண்ண வேண்டும்; இதனால், சமச்சீரான உணவு, சத்துள்ள உணவாகவும் அமையும்.நாம் சாப்பிடும் காய்கறிகளில் ஒவ்வொன்றிலும், ஏதோ ஒரு விசேஷ மருத்துவ குணம் அடங்கியிருக்கிறது. இதில், பீன்ஸ், அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பீன்ஸில், கலோரி அளவு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
"இஞ்சிக்கு அஞ்சாது எதுவும் இல்லை' என்பது, சித்த மருத்துவ தத்துவம். மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை, தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதால், உணவும் மருந்தாகி விடும். சக்தி நிறைந்த இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு தான் பயன்படுத்த வேண்டும்.பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரண பிரச்னைகளுக்கு, இஞ்சி ஒரு நிவாரணி. இது, "ஆன்டி ஆக்சிடென்ட்' போன்று செயல்பட்டு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
உலகில், உருளைக்கிழங்கு அடுத்தபடியாக அதிகம் விளைவது தக்காளி தான். சமையலில், தக்காளியின் பங்களிப்பு அதிகம். நோய் எதிர்ப்பு மற்றும் மருத்துவ குணம் கொண்ட காய், கனிகளில் தக்காளி முதன்மையானதாக விளங்குகிறது. நோய் தடுப்பு காரணிகள், தக்காளியில் ஏராளம் உள்ளன.உடல் பருமனை குறைக்க விரும்புவோர், பழுத்து சிவந்த தக்காளி பழங்களை தொடர்ந்து இரண்டு மாதங்கள் காலையில், பழமாகவோ, சாறாகவோ ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X