Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2015 IST
கார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில், தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. குழந்தைகளை, உணவு சாப்பிட வைப்பதற்காகவும், தங்களின் வேலைகளில் தொந்தரவின்றி ஈடுபடவும், கார்ட்டூன் திரைகளின் முன், குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர் அதிகளவில் உள்ளனர். நீங்கள், அப்படிப்பட்ட பெற்றோரில் ஒருவராக இருந்தால், குழந்தைகளின் வளர்ச்சியில், கார்ட்டூன்கள் ஏற்படுத்தும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2015 IST
தினமும் தலைக்குளிக்கலாமா?சு.விக்னேஷ், திருவொற்றியூர், சென்னை.'ஹைப்பர்ஹிட்ரோசிஸ்' என்ற வியர்வைப் பிரச்னை இருந்தால் தவிர, தலைமுடியை தினமும் அலச வேண்டுமென்ற அவசியமில்லை. 'ஷாம்ப்'புகளில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால், அவை தலைமுடிகளிலும், மயிர்க் கால்களிலும் உள்ள எண்ணெய் பசைகளை நீக்குவதோடு, தலைமுடியை அளவுக்கு அதிகமாக உலர வைத்து விடும்; இது நல்லதல்ல!எனவே, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2015 IST
அன்று மாலை, லேசாக மழை தூறியது. மருத்துவமனையின் ஜன்னலோரம் நின்று பார்த்தபோது, ஒரு சிறுமியை, அவனது பாட்டி அழுத விழிகளோடு, அணைத்தவாறே தூக்கி கொண்டு வந்தார். அவரை விசாரித்ததில், மருத்துவமனையை அடுத்த அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாகவும், கடந்த சில நிமிடங்களாக, தன் இரண்டு வயது பேத்தி மூச்சுவிட சிரமப்படுவதாகவும் கூறினார்.'இவள் பெயர் நிரோஷினி; என் மகள் வயிற்று பேத்தி. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2015 IST
01. ரத்த அழுத்தம் என்றால் என்ன?உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான உணவு, பிராண வாயுவை எப்போதும் கிடைக்கச் செய்யவும்; திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றவும், ஓர் அமைப்பு நம் உடலுக்கு தேவை. அந்த அமைப்பு தான், ரத்த ஓட்டம். அந்த ரத்த ஓட்டம், ஒருவித அழுத்தத்தால் தான், உடல் முழுக்க செல்கிறது. அதைத் தான், ரத்த அழுத்தம் என்கின்றோம்.02. உயர் ரத்த அழுத்தம் உண்டாவதற்கான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2015 IST
பொருள்: இந்த ஆசனம் வெட்டுக்கிளியின் தோற்றத்தை ஒத்திருப்பதால், இப்பெயர் பெற்றது.செய்முறை: விரிப்பில் கவிழ்ந்த நிலையில் படுக்கவும். இரண்டு கைகளை மூடி, தொடைக்கு அடிப்பகுதியில் உடலை ஒட்டியவாறு வைக்க வேண்டும். மெதுவாக கைகளை கீழே அழுத்தி, மூச்சை இழுத்துக் கொண்டே, கால்களை மேலே உயர்த்த வேண்டும்; கால்களை மடக்காமல் செய்ய பழக வேண்டும். சிறிது நேரத்திற்கு பின், மூச்சை வெளியே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ள உதவுகிறது, தேங்காய். வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும். தினமும் இப்படி செய்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் காணாமல் போய்விடும். வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
இன்றைய சூழலில், பழங்களின் மூலம் கிடைக்கும் பானங்களை காட்டிலும், உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய, பானங்களையே மக்கள் நாடி செல்கின்றனர். இயற்கையாக கிடைக்கும் காய், கனிகளில் தயாரிக்கப்படும் பானங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. ஆதலால் நோய் எதிர்ப்பு மண்டத்தை வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
மருந்துகளை, உரிமம் பெற்ற, சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில், அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே, வாங்க வேண்டும். மருந்து வாங்குவதில், ஒருபோதும் அவசரம் காட்டக்கூடாது. சற்று பொறுமையுடன் வாங்க முற்பட வேண்டும். வாங்கிய மருந்துகளுக்கு, கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது, போலி மருந்துகளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவற்றை சரியாக பின்பற்றுவதே, தாயும், சேயும் நலமாக இருக்க உதவுகிறது. இந்த காலகட்டத்தில் தான் புத்தகம் படிப்பது, நேர்மறை சிந்தனை யை வளர்த்துக் கொள்வது, சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுவது என, குழந்தையின் நலனை காப்பதற்கான முயற்சியின் அடித்தளம்.இதில், திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
கால்சியம் என்றால் சுண்ணாம்பு. லத்தீனில் கால்சிஸ் என்ற வார்த்தைக்கு சுண்ணாம்பு என்பதுதான் பொருள். பூமியின் மேலோட்டில் கிடைக்கும் சாம்பல் நிற தனிமம் தான் கால்சியம். பூமியில் கிடைக்கும் தனிமங்களில், 5வது இடத்தைப் பெற்றுள்ளது. நம் உடலில் அதிகமாக இருக்கும் தனிமங்களில் கால்சியமும் ஒன்று. 70 கிலோ மனிதனின் எடையில், 2% கால்சியம் உள்ளது. அதாவது 1,400 கிராம் கால்சியம் ஆண்களுக்கும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினசரி இரவு படுக்கைக்கு செல்லும் போதே, தொற்றிக் கொள்ளும் பெரிய கவலை, அதிகாலை எழ வேண்டும் என்பதாகதான் இருக்கும். என்னதான் தினசரி நினைத்தாலும், அலாரம் அடிக்கும் போது, சிறிது நேரம் தூங்கலாம் என நினைத்து, லேட்டாக எழுந்து, அவசர அவசரமாக கிளம்பி, காலையிலே டென்ஷன் ஆகும் நபர்கள் தான் அதிகம். காலையில் சீக்கிரம் எழ, சில டிப்ஸ்: மூளைக்குச் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் ரத்த அழுத்தம் என்பதெல்லாம் இயல்பாகிப் போனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்.ரத்த அழுத்தம் என்றால் என்ன?ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம், தேவையை விட மிக உயர்ந்திருப்பதை 'ரத்த அழுத்த நோய்' அல்லது 'ரத்தக் கொதிப்பு' என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால், ஆபத்தான பின் விளைவுகளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
பூக்கள் என்றாலே அழகும், அதன் நறுமணமுமே நமது சிந்தைக்கு வரும். இதில் பல பூக்களில் அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. நோயில்லாத வாழ்விற்கு சத்துள்ள உணவுகளையும், பழங்களையும் உண்ண வேண்டும். இதில், பழங்களின் முதற்கட்டமான பூக்களில், பல்வேறு சத்துக்கள் மறைந்துள்ளன. இதற்கு மாதுளைப்பூ உதாரணம். இன்றைய உணவுகளில் கொழுப்பு சத்து, எண்ணெய் சத்து நிறைந்த பொருட்களே அதிகம் உள்ளன. இதனால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2015 IST
உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை, சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X