Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
தூக்கமின்மை, ஒருவரின் அறிவாற்றல் திறன்களான ஞாபக சக்தி, செயலில் கவனம் போன்றவற்றை மெதுவாக அழிக்கும். இதனால் தான், சிலர் எந்த பொருளை எங்கு வைத்தோம் என்று தெரியாமல், அடிக்கடி தேடிக் கொண்டிருக்கிறோம்.விபத்து கணக்கெடுப்பு தகவல்கள், பெரும்பாலான சாலையோர விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக, தூக்கமின்மையையே சொல்கின்றன. எனவே வாகன ஓட்டிகள், தினமும் நல்ல தூக்கத்தை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
ரம்யாவுக்கு வயது 3. படுசுட்டிப் பெண்; அப்பா செல்லம். தன்னைப் போலவே தன்னுடைய மகளும் இருப்பதால், கார்த்திக்குக்கு, தன் மகளின் மேல், அளவில்லா பாசம். அதனால்தானோ என்னவோ, அப்பாவின் அத்தனை குணாதிசயங்களும் ரம்யாவிடம் நிரம்பிக் கிடந்தன. அதனால், ரம்யாவை, 'குட்டி' கார்த்திக் என்றே அழைப்பர். கார்த்திக்கின் மனைவியும் கணவரைப் போலவே. தன் மகள் மீது, கொள்ளை பாசம் வைத்திருந்தார். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
பொருள்: ஜானு முழங்கால்; முழங்கால் பிரச்னைகளை சரிசெய்து பலப்படுத்துவதால் இந்த பெயர் பெற்றது.செய்முறை:* விரிப்பில் உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக நீட்டவும் * இடது காலை மடக்கி, வலது தொடையை ஒட்டியவாறு, கீழே வைக்கவும் * இப்போது இரு கைகளையும் நமஸ்கார நிலைக்கு கொண்டு வந்து, மூச்சை இழுத்துக் கொண்டே கைகளை மேலே உயர்த்தி, மெதுவாக மூச்சை வெளிவிட்டுக் கொண்டே குனிந்து, கை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
1. 'டவுன் சிண்ட்ரோம்' என்றால் என்ன?'டவுண் சிண்ட்ரோம்' ஒரு நோயல்ல; குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அது தவறு... இது, மரபணு கோளாறால் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இயல்பாக செயலாற்ற முடியும்.2. இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் எவ்வாறு இருப்பர்?தட்டையான முகம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
ச.பத்மாவதி, திருநின்றவூர்: எனக்கு வயது 50. புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்று மருத்துவர் கூறிவிட்டார். புற்றுநோய்க்கு அளிக்கப்படும், 'கீமோதெரபி'யினால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?எந்த வகையான புற்றுநோய் உங்களை தாக்கியிருக்கிறது என, தெரியப்படுத்தவில்லை. புற்றுநோய்க்கு எந்த மருந்து, எந்த அளவில் அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, பக்க விளைவுகள் இருக்கும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
குழந்தைகள் என்றாலே, விரல் சூப்புவது என்பது இயல்பு தான். நாம் என்னதான் கையை எடுத்து விட்டாலும், மீண்டும், மீண்டும் பழைய செய்கையே தொடரும். குழந்தைகள் விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால் தான் என்கின்றனர், உளவியல் அறிஞர்கள்.உளவியல் அறிஞர்கள் கூறியதாவது: மூன்று வயது வரை, இப்பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
முகத்தில் உள்ள அழுக்குகள், விரைவில் வெளியேற ஆவி பிடிக்கும் முறை சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5-10 நிமிடம் ஆவி பிடித்து, தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை, கரும்புள்ளிகள் மறைந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் அரிய வகை கீரை கரிசலாங்கண்ணி. பல்வேறு இடங்களில், இக்கீரை பரந்து விரிந்திருக்கும். பொதுவாக, கீரை வகைகளில் உள்ள அனைத்து சத்துக்களும் இதில் உண்டு. வைட்டமின், தாது உப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.கரிசலாங்கண்ணிக்கீரை ரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. கண் பார்வையை தெளிவுபடுத்துகிறது. உடலுக்கு உரமூட்டுகிறது. மண்ணீரலில் ஏற்படும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான பெல்ட் அணிந்து, உடலை வருத்தி கொள்ள வேண்டியதில்லை. சில எளிய வழிமுறைகளால், விரைவில் உடல் எடையை, கட்டுக்குள் கொண்டு வர முடியும்.சாப்பிடும் போது, நன்றாக மென்று கூழாக்கி விழுங்க வேண்டும். கோபம், கவலை இருக்கும் சமயங்களில், மனதைக் கட்டுப்படுத்தி, அளவாகச் சாப்பிட வேண்டும் அல்லது கோபம் தணிந்த பின் உணவு உட்கொள்ளலாம். கைக்குத்தல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
உடல் நலத்துக்கு தேவையான முக்கியமான உணவுகள் எவை என்பதை அறிந்து, அதை தவிர்க்காமல் உண்ண வேண்டும். அப்படி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வெள்ளைப் பூண்டு: குடல் புண் மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்கும் சக்தி வெள்ளைப்பூண்டில் உள்ளது. உடலில் நன்மை தரும் கொலாஸ்டிரல் உருவாக வெள்ளைப்பூண்டின் பங்கு முக்கியமானது.வெங்காயம்: ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
கால்சியம் என்ற தனிமம், அனைத்து உயிர்களின், உடல் செயல்பாட்டுக்கும் அவசியம். உடலின் தசைகள், சுருங்கி விரியவும், இதயத்தின் துடிப்புக்கும் கால்சியத்தின் உதவி தேவை.செல்களுக்கு இடையே, வேதி சமிக்கைகள் சரிவர செல்ல, கால்சியம் வேண்டும். அதுமட்டுமல்லாமல், உண்ணும் உணவினை, ரசிக்க, ருசிக்க மற்றும் கரைவதற்கு, தேவையான எச்சிலை சுரக்க உதவி செய்கிறது.பொதுவாக, 30 வயதுக்கு மேல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
இன்றைய தலைமுறையினர் மத்தியில், இயந்திரத்தனமான வாழ்கை முறையால், இறுக்கமான மன நிலையிலேயே நாட்களை கழிக்க வேண்டியுள்ளது. நாம் அன்றாட உண்ணும் உணவுப் பொருட்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து உண்பதால், மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் கையாள முடியும்.ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. நரம்புகளை சீராக வைக்க உதவுகிறது. அதிகப்படியான வைட்டமின் 'சி' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
முருங்கை கீரையை தெரிந்த அளவுக்கு, கல்யாண முருங்கையை பற்றி பலருக்கு தெரியாது. கல்யாண முருங்கை இலை அபூர்வமான மருத்துவ குணம் கொண்டது. இதை நாட்டு மருந்தாக பயன்படுத்துவது மூலம் பல நோய்கள் தீரும்.கல்யாண முருங்கை இலை, சீரகம் இரண்டையும், நெல்லிச் சாறு விட்டு அரைத்து, தினமும் அதிகாலையில் சாப்பிட்டால், பித்தம், பித்த மயக்கம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் தீரும். இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
சிலருக்கு, மூளையில் 'மெமரி கார்டு' பொருத்தினால் கூட, நன்றாக இருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு, ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது. தேவையான சத்துக்கள், உண்ணும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு முக்கிய காரணம்.காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செரி போன்ற உணவுகளில் மூளைக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.ஒரு வாரம் காரட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால், நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான, பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே எண்ணெயை, குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். நம் முன்னோர், காலந்தொட்டு, பாரம்பரியமாக மேற்கொண்ட நடைமுறை, வாரம் ஒருமுறை, எண்ணெய் குளியல் எடுப்பது. இது, ஒரு வகையான ஆயுர்வேத முறை.குறிப்பாக, பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடை யே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளுக்கு, ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்."எலக்ட்ரோலைட் பேலன்ஸ்' எனப்படுகிற, நமது உடலின் நீர் சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது முக்கியம். நாம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
திடீரென நிகழும் ஒரு நிகழ்வால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை, "அக்கியூட் ஸ்ட்ரெஸ்' என்றும், தொடர் நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை, "எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ்' என்றும் சொல்கிறார்கள். அதிக வேலை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது. இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின் மை, குடும்பசூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X