Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
பாபநாசம் படத்தில் சுயம்புலிங்கம் என்ற கேரக்டரில் பாசக்கார அப்பாவாக நடித்த கமல் மகளாக நடித்து அப்பா செல்லமாக தமிழ் திரையில் அறிமுகமாகி, தர்பார் படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் போலீசாக அதகளம் செய்யும் ரஜினியின் மகளாக நடித்து... தமிழ் சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்ஸ்' மகள் என்ற இடத்தை பிடித்த நிவேதா தாமஸ் மனம் திறக்கிறார்...* 'பாபநாசம்' படத்துக்கு பின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
உலக இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டே நடக்கிறது. மனிதர் மட்டுமின்றி பெரும்பாலான உயிர்களும் அதிகாலையிலேயே கண் விழிக்கின்றன. தாவரங்கள் சூரியஒளியின் துணையுடன் ஒளிச்சேர்க்கை நடத்துகின்றன. பறவைகள் இரை தேடச் செல்கின்றன. மனிதர்கள் தங்களின் கடமைகளில் ஈடுபடுகின்றனர். இப்படி ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் வாழ்வின் ஆதாரமாக சூரியன் உள்ளது. அதனால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
பொங்கல் வந்தால் சர்க்கரை பொங்கல் சாப்பிடும் ஆசை நமக்குள் பொங்கலோ பொங்கல் என பொங்கும். எத்தனை நாளைக்கு தான் ஒரே விதமான சர்க்கரை பொங்கலை சாப்பிடுவீங்க... வாங்க, சென்னை உணவுக் கலைஞர் வசந்தி விதவிதமான ஸ்பெஷல் பொங்கல் வைக்க செய்முறை சொல்றாங்க...ரவா பொங்கல்தேவையானவை:ரவை - 1 கப்பாசிப் பருப்பு - 1/4 கப்பால் - 2 கப்தண்ணீர் (அ) இளநீர் - 2 கப்நெய் - 4 ஸ்பூன்உப்பு - சிறிதளவுமுந்திரி - 20மிளகு - ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
தொன்மையும், மென்மையும், செழுமையும் கலந்த தமிழ் பண்பாட்டின் வீரியத்தையும், தமிழர்களின் வீரத்தையும் பறைசாற்றும் தைத்திருநாளை அதே கலாசாரம் மாறாமல் சேலை, வேட்டி அணிந்து சீனர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை தானே.சீனாவில் உள்ள யுன்னான் மீன்சு பல்கலையில் தமிழ் படிக்கும் சீன மாணவர்கள் தான் ஒவ்வொரு ஆண்டும் தை மகளை வாஞ்சையோடு போற்றி வரவேற்று மூத்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
பண்பாட்டை இழந்த பகுத்தறிவும், பாரம்பரியத்தை மீறிய அறிவியலும் முன் இனிக்கும், பின் கசக்கும். ஆம் பகுத்தறிவு என்ற பெயரில் பண்பாட்டையும், அறிவியல் என்ற பெயரில் பாரம்பரியத்தையும் இழக்கும் போது தமிழர்களின் அடையாளம் மறைக்கப்படுகிறது அல்லது அழிக்கப்படுகிறது என்றே கூறலாம். சில ஆண்டுகளாக ஒட்டுரக அரிசியில் இருந்து பாரம்பரிய ரகத்திற்கு மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
வெண்மேகம் துாவிச் சென்ற பொன்துளியில் துளிர்த்தெழுந்த மஞ்சள் தேகக்காரி...! மீன்களின் கண்களை விழிகளாக்கி கண்டோரை கவர்ந்திழுக்கும் மாயக்காரி...! பிற மாநில நடிகைகளே ஜொலிக்கும் தமிழ்த் திரை வானில், ஒளி பொங்கி மிளிரும் கொங்கு தேசக்காரி...! சினிமாப் பிரியர்களை மயக்கத்தில் தவிக்க வைக்கும் அழகு மங்கை அதுல்யா, பேசிய தருணம் * சூட்டிங்கில் படு 'பிஸி'யாமே...!பட வாய்ப்புகள் அதிகம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
நாம் பிறந்து வளர்ந்த கிராமம், முந்தைய தலைமுறை வரலாற்றை எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறோம். வரலாற்றை தெரிவதன் மூலம் நம் தனித்துவம், பாரம்பரியம், கலாசாரத்தை உணர முடியும்.ஒரு கிராமம் எப்படி உருவானது என்பதற்கு விடைதேட வேண்டுமெனில் கரிசல் எழுத்தாளர்களின் முன்னத்தி 'ஏர்' என போற்றப்படும் 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா.,என்கிற கி.ராஜநாராயணன் எழுதிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
'சூல்' நாவலுக்காக இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மனை, கோவில்பட்டி வ.உ.சி.நகர் வீட்டில் சந்தித்தோம். கல்லுாரிகளில் பேசுவதற்கு அவரை அழைக்க பேராசிரியர்கள் காத்திருந்தனர். அவரும் மழை பெய்து நனைந்து கிடக்கும் சொந்த ஊர் உருளைக்குடிக்கு போய் வந்த மகிழ்ச்சியில் இருந்தார்.''அதிக மழையெல்லாம் இல்லை. வழக்கம்போல தான். கொஞ்சம் வேண்டுமானால் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
உலகத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் என விரும்புகிறவர்கள் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் கனவு உலகமான சர்வதேச நகர் ஆரோவில் செல்லலாம். அப்படி என்ன இந்நகரில் இருக்கிறது. வாங்க இந்த பொங்கல் விடுமுறைக்கு சுற்றுலா சென்று வரலாம்.புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் விழுப்புரம் மாவட்டம் எல்லையில் இந்த சர்வதேச நகர் அமைந்துள்ளது. நாடு, மதம், இனம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
விநாயகரின் அவதாரமாக பார்க்கப்படும் யானைக்கு ஆன்மிகத்தில் தனி இடம் உண்டு. மதுரை ஒத்தக்கடை யானை மலை, சிவனின் திருவிளையாடல் நிகழ்வின் ஒன்றாக உயிர்பெற்று கரும்பு தின்ற மீனாட்சி கோயில் கல் யானை, யானை சிலையால் யானைக்கல் என பெயர் பெற்ற சிம்மக்கல் வைகை ஆற்றின் கல் பாலப்பகுதி என மதுரைக்கும் யானைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.பிறந்த வீடான காடுகளை விட்டு புகுந்த வீடான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
தமிழ் சினிமாவின் காமெடி தர்பாரில் தனக்கென தனி சிரிப்பு சிம்மாசனமிட்டு ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்த இவரை பார்த்தாலே சிரிப்பு வரும்... இவர் பேச்சை கேட்டாலே கவலை பறக்கும்... தன் தோற்றம் கண்டு கிண்டல் செய்தாலும் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மனநிலையுடன் திரையில் நடித்து கலக்கும் தியாகி... யோகி பாபு அளித்த பேட்டி.* 2019ல் இரவு, பகலாக நடித்த படங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறுவதுண்டு. தை பிறந்தவுடன் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான பணிகளை தமிழர்கள் துவக்கி விடுவர். பொங்கல் பண்டிகை, தமிழகம் மட்டுமின்றி தரணி முழுவதுமுள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.ஹிந்தி பேசும் மக்கள் நிறைந்த மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
விரைந்து ஓடும் வாகனங்கள், பரபரப்பாய் நடக்கும் பாதசாரிகள், மணம் வீசும் பூக்கடைகள், ஒய்யார ஓட்டல்கள், பயணிகளுடன் பறக்கும் பேருந்துகள்... என எப்போதும் சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருக்கும் மதுரையின் மையப் பகுதியான பெரியார் பேருந்து நிலையம் அருகே நிலைத்து நிற்கும் கோட்டையின் 'கேட்'டை கடந்து போகும் நாம் அதன் வரலாற்றை திரும்பி பார்த்தது உண்டா, விரும்பி படித்தது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
ஸ்பெயின் நாட்டின் விளையாட்டு காளையை அடக்குவது. எனினும், சிவப்பு நிற துண்டை காளை முன் காட்டி, ஏமாற்றி, போக்கு காட்டி, இறுதியில் சோர்வடைய செய்வர். இதனை வீரவிளையாட்டாக கருத முடியாது என பல்வேறு நாட்டினர் மறுத்து விட்டனர். ஆனால் தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டு உலகளவில் முதலிடம் வகிக்கிறது. மதுரையில் நடக்கும் அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
தமிழர்களின் பாரம்பரிய கலைகளை ஆறு தலைமுறை களாக ராமநாதபுரம் சிலம்ப வாத்தியாரின் குடும்பம் கட்டிக் காத்து வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு சிலம்பம், கட்டைக்கால் ஆட்டம், மரக்கால் ஆட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், பொய்க்கால் குதிரை, சுருள்வாள், தீப்பந்தம் போன்ற கலைகளை இலவசமாக கற்றுத்தருகிறார் ராமநாதபுரம் சிலம்ப வாத்தியார் லோகசுப்பிரமணியன் 46. இவர் 6 வயதில் சிலம்பம் கற்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
'யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருகின்றாரோ...', 'அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராதது ஏனோ', 'லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் தக்கதிமிதா', 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து', 'கண்ணன் வருவான் கதை சொல்லுவான்' 'அமைதியான நதியினிலே ஓடம்', 'ஆசையில பாத்தி கட்டி', 'கண்ணுக்கு மை அழகு...' என இசையில் கசிந்துருகி நம் மனதை கொள்ளை கொண்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில், முற்காலபாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட மங்களேஸ்வரி, மங்களநாத சுவாமி கோயில் திருப்பணியில் பயன்படுத்தப்பட்ட, மாட்டு வண்டியை கோயில் நிர்வாகத்தினர் இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். பிற்கால பாண்டியர்கள், விஜய நகர நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும் இக்கோயிலில் புனரமைப்பு பணிகள்செய்யப்பட்டது.மங்களநாத சுவாமி சன்னதி கோபுரம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2020 IST
தென்னகத்தை சேர்ந்த பழமைவாய்ந்த ஆதினங்களில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினமும் முதன்மையானது. பல தலைமுறைகளாக ஆன்மிகம் மட்டுமின்றி சமூக, தமிழ், கல்வி, விவசாயத்திற்கு பல அரிய தொண்டுகளை ஆற்றி வருகிறது. தமிழர் திருவிழாவான பொங்கல் திருநாள் பாரம்பரியம் குன்றாமல் ஆதினத்தில் கொண்டாடப்படுவதுடன், இரண்டாயிரம் மேற்பட்டோருக்கு மண்பானை, அரிசி, வெல்லம், கரும்பு போன்றவை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X