இளமை பொங்கல் பொங்க இளசுகளை கிறங்கடிக்கும் மங்கை... செங்கரும்பின் சிரிப்பால் இனிக்கும் இதழ்களின் நங்கை... அந்தி மாலை சூரியனின் மெல்லிய சிகப்பு தேகம், நிலவில் இருந்து உடைந்து விழுந்த இடை எனும் பாகம்... என 'பூமி', 'ஈஸ்வரன்' படங்களில் கிராமத்து நாயகியாக கலக்க வரும் 'அழகிய நதி' நிதி அகர்வால் தினமலர் பொங்கல் மலருக்காக மனம் திறக்கிறார்...* நிதி அகர்வாலின் அழகான குடும்பம் ..
முப்பதே வயதான ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார், குறுகிய காலத்தில் திரையுலகில் பதித்த முத்திரை ஏராளம். அண்மையில் ஓ.டி.டி., தளத்தில் வெளியாகி, கேமராவிற்கு பெரிதும் கவனிக்கப்பட்ட 'மாறா' படத்தில் ஒளிப்பதிவை இருவர் செய்திருந்தனர். அதில் ஒருவர் கார்த்திக் முத்துக்குமார். அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு இவரது 'பிரியாணி' ..
இயற்கை எழில் கொஞ்சும் வயல்வெளிகள், வானுயர்ந்து நிற்கும் மலை கூட்டங்கள், மீன்கள் துள்ளி விளையாடும் கண்மாய்கள், பசுமை படர்ந்த தாமரை குளங்கள், நாடு விட்டு நாடு வந்து பறந்துபாடும் பறவைகள், காணும் இடமெங்கும் தொல்லியல் சின்னங்கள், கள்ளம் கபடமில்லாமல் பாசம் காட்டும் மக்கள் என ... நகரத்து நெரிசலில் இருந்து நகர்ந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்திட அழைக்கும் மதுரை அருகேயுள்ள ..
யானை சவாரி என்றால் எவருக்கும் குதுாகலம்தான்... அதுவும் இயற்கை சூழலில் யானை மீது சவாரி செய்வது என்பது ஒரு திரில்லான அனுபவம். யானை மீது சவாரி செய்வது சவாலானது என்று கருதலாம். ஆனால் அதன் மேல் ஏறிவிட்டால் அது ஆடி அசைந்து செல்லும் போது ஏற்படும் இன்பத்துக்கு அளவு கிடையாது.இதற்காக ரொம்பதுாரம் நீங்கள் சுற்றுலா செல்ல வேண்டாம். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகே தமிழக-கேரள ..
''சின்ன வயசிலிருந்தே சினிமா மீது ஆர்வம். அதற்கு பெற்றோரும் முட்டுக்கட்டை போடவில்லை. சினிமா பார்த்து பார்த்து எல்லாத்தையும் நானே கத்துக்கிட்டேன். இன்று இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என 8 பிரிவுகளிலும் நானே வேலை செய்து படத்தை 'சக்சஸ் புல்'லாக முடித்து தியேட்டர்களில் வெளியிட்டு இருக்கிறேன். 'ஹவுஸ் புல்' ஆகாவிட்டாலும் மக்களிடம் நல்லா ..
தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரத்தில் மாடுகளும், சேவல்களும் இணைபிரியாதவை. மயில், கோழி, காகம், வல்லுாறு, ஆந்தை போன்றவை 'பஞ்சபட்சிகள்'வகைகள். இவற்றின் பாரம்பரிய அடிப்படையில் நாட்டுக் கோழிகள், சேவல்களை அவற்றை வளர்ப்போர் தரம்பிரிகின்றனர்.சேவல்களின் ஆளுமையில் 'அசில்' இனம் தனித்துவம் மிக்கது. இதில் வண்ணங்களின் அடிப்படையில் வெள்ளை, காகம், மயில் என உள்ளது. இந்த ..
கருமந்தக்குடியில் ஒற்றுமை பொங்கல்சிவகங்கை அருகே கருமந்தக்குடியில் நெற்பயிர்களை விளைவிக்கும் புற மடை நீரை புனித நீராக சேகரித்து வணங்கி மக்கள் பொங்கல் கொண்டாடும் ஆச்சர்யம் நடக்கிறது.முன்னோர்கள் இயற்கையை தெய்வமாக வணங்கி வந்துள்ளனர். அந்த மரபினை தொன்று தொட்டுதொடர்ந்து, வழிபாடு செய்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர் இந்த கிராம மக்கள்.கருமந்தக்குடி கிராமத்தில் ..
கொரோனா காலத்தில் மாணவர்களின் இயற்கை விவசாயம்நாற்பது ஆண்டுகளாக தரிசாக முட்புதர் மண்டிய நிலத்தை கொரோனா ஊரடங்கு காலத்தில் சீர் படுத்தி, 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து நெல் விளைவித்த மாணவர்கள் குழு புது நெல்லில் பொங்கலிட தயாராகி வருகின்றது.சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே குண்டேந்தல்பட்டியை சேர்ந்த மதிவாணன் சிங்கப்பூரில் பணிபுரிகிறார். இவரது மகள் பிளஸ் 2 ..
இவங்க படம் ரிலீஸாகும் தியேட்டர்களுக்கு எல்லம் ரன் எடுக்க ஓடுற கிரிக்கெட் வீரர்களை விட வேகமாக ஓடி, முட்டி மோதி, முதல் ஆளா டிக்கெட் வாங்கி, முதல் வரிசையில் உட்கார்ந்து அழகை ரசித்த ரசிகர்களிடம் சிம்ரன்னு சொல்லி பாருங்க... இப்பவும் ரன் எடுக்க ஓடுவாங்க... அந்த அளவு அழகால் நயன்டீஸ் கிட்ஸ்களை கட்டி போட்ட கட்டழகி சிம்ரன் பேசுகிறார்...* 'வான் மகள்' குறும்படத்தில் நடிக்க காரணம் ..
'பழையன கழிதலும், புதியன புகுதலும்'என்பது பொங்கலுக்கு முன்பு வரும் போகியை குறிப்பிடுவதாக உள்ளது. உழவனின் உற்ற தோழனான காளைக்கு கால்குளம்புகளுக்கு லாடம் பொருத்துவதில் துவங்கி, கொம்பு அணிகலன்கள், மூங்கணாங்கயிறு, கால்மணி, சதங்கை, கழுத்தில் மணிகள், சங்குகள், தாயத்துகள் என மனிதன் தன்னை அழகுபடுத்திக்கொள்வது போல கால்நடைகளையும் அழகுபடுத்தி பேணியுள்ளான். அத்தகைய ..
கேரளாவிலும், வடமாநிலங்களிலும் பொங்கலை மகர சங்கராந்தி என்கின்றனர். 'கிராந்தி' என்ற சொல்லே 'கராந்தி' ஆனது. 'கிராந்தி' என்றால் மாறுதல். 'சங்' என்றால் 'நல்ல' என பொருள். 'நல்ல மாற்றம்' என்பதையே சங்கராந்தி என்கிறோம். சூரியன் மகர ராசியில் நுழையும் நல்ல நாளையே மகர சங்கராந்தி என்கிறார்கள். தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாதங்களும் உத்தராயண புண்ணிய காலம் எனப்படும். இதில் ..
'கோவில்பட்டியில் கல் எறிந்தால் அது ஒரு எழுத்தாளர் ஊரில் விழும்,' என பழமொழி உண்டு. அந்தளவிற்கு அந்த கரிசல்சீமையில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனால் உருவாக்கப்பட்ட எழுத்தாளர்களின் பட்டியல் நீள்கிறது. கோவில்பட்டியிலிருந்து கயத்தாறு செல்லும் வழியில் உள்ளது இடைசெவல். இங்கு ஒரே தெருவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ரா., நண்பர்கள். ஒரு கிராமத்தின் ஒரே தெருவைச் ..
முன்னங்கால்களை வானத்தில் பறக்கவிட்டு, வாடி வாசலில் ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் சீறும். அகன்ற மார்போடு களத்தில் நிற்கும் வீரர்கள் குறி வைத்து காளைகள் மீது பாய்வர். திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கினால் வீரருக்கு வெற்றி. அடக்க பாயும் வீரர்களை பந்தாடி அகப்படாமல் தப்பினால் காளைகளுக்கு மகுடம். இது தான் ஜல்லிக்கட்டு.இப்போட்டி எப்படி, எப்போது வந்தது என்ற கேள்வி எழலாம். ..
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., விரும்பி கொண்டாடும் ஒரே பண்டிகை எது தெரியுமா. பொங்கல். எங்கே இருந்தாலும் பொங்கலுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார்.எம்.ஜி.ஆர்., சினிமாவில் உச்சத்தை நோக்கி முன்னேறி கொண்டிருந்த 1953 காலகட்டத்தில், தற்போது அ.தி.மு.க., தலைமை அலுவலகம் உள்ள சென்னை ராயப்பேட்டை எம்.ஜி.ஆர்., நாடக மன்றமாக இயங்கியது. நடிகர்கள், நடிகைகள், பின்னணி பாடகர்கள் என அந்த ..
சுருக்கென்று பார்வை, நிமிர்ந்த நன்னடையுடன் நடிப்பு களத்தில் யாருக்கும் அஞ்சாத துணிவோடு தில் ஆக நிற்கும் இளம் நடிகை கேப்ரெல்லா செலஸ். நவரசத்தையும் கோப்பையில் ஊற்றி குடித்தது போல் துருதுரு நடிகையாக வலம் வரும் இவர் மனம் திறந்ததாவது...உங்களை பற்றி...கேப்ரெல்லா செலஸ். கேபி என அழைக்கலாம். சொந்த ஊர் திருச்சி அல்லித்துறை. சினிமா, நாடகத்துறை, சமுகவலைதளங்களில் நடிப்பு திறமையை ..
'குட்டி ஜப்பான்'என அறியப்படும் தமிழகத்தின் சூடுபறக்கும் பட்டாசு மண்ணான சிவகாசியில் பிறந்து, பசுபிக் பெருங்கடலின் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடைப்பட்ட இயற்கை வளம் குவிந்து கிடக்கும் பப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர், மத்திய அமைச்சர் பதவிகளை பெற்று உழைப்பால் உயர்ந்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சசீந்திரன்.தமிழர்கள் கலாசாரம், பண்பாடு, ..
ஆங்காங்கே குடில்கள், மயில்கள், மெல்லியதாக ஒலித்து கொண்டே இருக்கும் ஓம் எனும் பிரணவ மந்திரம், சுவர்க்கோழிகளின் பக்கவாத்திய பின்னணியில் மயில்கள், செவிகளில் ரீங்காரமிடும் குயில்களின் சங்கீதம், புல் வெளியில் தாவித் தாவி ஓடும் காட்டு முயல்கள்... உடலை ஜில்லென தாலாட்டும் வெண் பனி மேக கூட்டங்கள், மரங்களில் ஊடுருவி மின்னல் கீற்றுகளாய் படர்ந்து ஒளி சிதற்களை முத்து முத்தாக ..
இன்றைக்கு இனிக்க, இனிக்க பொங்கல் எல்லாம் வைச்சு சாப்டாச்சு... அப்புறம் என்ன மக்களே நாளைக்கு தடபுடல் நான்வெஜ் அயிட்டங்களை சமைச்சு சாப்பிட்டு பட்டையை கிளப்பி நாக்கை நர்த்தனம் ஆட விட வேண்டியது தானே... இதோ உங்களுக்காகவே கிராமத்து நான்வெஜ் உணவுகளை சமைப்பது எப்படின்னு நகரத்து (மதுரை) பெண்கள் ஐந்து பேர் டிப்ஸ் கொடுக்குறாங்க.மட்டன் தம் பிரியாணி - கவுசல்யாகடாயில் சிறிது நெய், ..
'பலே... பலே... பாகுபலி பயமின்றி பாயும் புலி' என மதுரை டூ சென்னை சென்று பாடி பில்டிங், பிட்னஸ் துறையில் கெத்துகாட்டி போட்டிகளில் திறமையை தெறிக்கவிடுகிறது திவ்யா, திவாகர் ஜோடி. 'வெயிட்'டான வாழ்க்கை பயணம் குறித்து 'பிரைட்'டாக மனம் திறக்கிறார் திவ்யா.பாடி பில்டிங், பிட்னஸ் துறையில் ஆர்வம் எப்படி?நான் மதுரை. அப்பா ராஜ்குமார் காவல்துறை, அம்மா லீலா ஆசிரியர். விளையாட்டில் ..
கனகலட்சுமியின் எழுத்து ஆராய்ச்சிசமூக வலைதளங்கள் ஆதிக்கத்தால் ஆங்கிலத்தில் தமிழை எழுதும் மெசேஜ் கலாசாரம் அதிகரித்து வருகிறது. அதிலும் எழுத்து சுருக்கங்கள் என்ற பெயரில் வார்த்தை சிதைவுகளை உருவாக்கி தற்போதைய இளம் தலைமுறையினருக்கு மொழியின் அடிப்படையான எழுத்து, வரி வடிவம், ஒலி உச்சரிப்பு போன்ற பல சிறப்புக்களை மறந்த சமுதாயம் ஒன்று உருவாகிக்கொண்டிருக்கின்றது. ..
முனைவர் லட்சுமி ராமசுவாமி நளினமான நடன கலைஞராக, ஞானமிக்க நடன ஆசிரியராக, ஆழ்ந்த ஆடல்கலை ஆராய்ச்சியாளராக, கலைநயம் கனியும் நடன அமைப்பாளராக பரதநாட்டிய உலகில் தனிமுத்திரை பதித்தவர். சங்க காலத்து ஆடற்கலை நுாலான கூத்தநுாலின் 'இழைகளில்' ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பரதநாட்டியத்தின் முதல் முனைவர் பட்டத்தை பெற்றவர். 'நாட்டிய கலா சாரதி'என்ற ..
'மாப்ள... மாமன் மச்சானா பழகிட்டோம். நான் சொல்றது எல்லாம் உண்மை. நீ சொல்றதும் உண்மைன்னா நான் நிற்கிற இந்த கல் கட்டடத்துல ஏறி வந்து சொல்லு. நான் ஒத்துக்கிறேன்' என ஒருவர் அழைக்க, எதிரே நிற்பவர் முகம் வெலவெலத்து போனார்.'ஏப்பு... தைரியமான ஆம்பளன்னா ஏறி போய் அவன்தான் பொய் சொல்றானு சொல்லு...' என ஊரார் உசுப்பேத்த, 'மன்னிச்சுடுங்க... நான்தான் பொய் சொன்னேன்' என பெரிய கும்பிடு ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.