Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
தென்மேற்கு தென்றலாய் தவழ்ந்து வரும் தை மகளின் தங்கையோ... தகதகக்கும் தங்க தேகமெல்லாம் சுருள் வாழையின் மென்மையோ, கிளர்ச்சி கிளப்பும் கவர்ச்சி சிரிப்பில் இருப்பது இனிக்கும் கரும்போ, விழி விளிம்புகளின் ஓரமெல்லாம் நெற்பயிர்களின் அரும்போ என்று எண்ண வைக்கும், கேரள தேசம் தாண்டி தமிழுக்கு வந்த கோலிவுட் ரங்கோலி, கவிதைக்குள் சிக்காத அழகியல் அந்தாதி, நிலத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
மற்ற தெய்வங்களை சிலை வடிவிலோ, படங்களிலோ தான் பார்க்க முடியும். ஆனால் கண்ணால் காணும் ஒரே தெய்வம் சூரியன் மட்டுமே. இவரது பிள்ளைகளும் கடமை தவறாதவர்கள், ''சூரிய உதயத்தைக் காணாத ஒவ்வொரு நாளும் நம் வாழ்நாளில் வீண்நாளே!'' என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.மகாபாரதத்தில் குந்திபோஜன் என்ற மன்னனின் பங்கு அதிகம். ஏனெனில், இவன் தான் பஞ்சபாண்டவர்களின் தாயான குந்தியைப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
சங்க இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள 'தை நீராடல்' எனும் 'சிறுவீட்டு' பொங்கல் நிகழ்ச்சி, பூ எருவாட்டி திருவிழாவாக பரிணாமம் பெற்று, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் பாரம்பரியமாக நடந்து வருகிறது.பொங்கல் விழா பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா என்பது பலர் அறியாத செய்தி. பொங்கல் அன்று ஒருவீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
வரலொட்டி ரெங்கசாமி இதுவரை 29 தமிழ், 12ஆங்கில புத்தகங்கள் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், தன்னம்பிக்கை, ஆன்மிகம் என்று இவரின் எழுத்து பரிமாணம் பலவிதமாக பரந்து பரவி இருக்கிறது. இவரது குறுநாவல்கள், ஒரு சர்வதேச தர குறும்படம் பார்த்த குதூகலத்தை தரும். அந்த அளவிற்கு படிக்கும் போது கதாபாத்திரங்களை, நம்முன் காட்சிப்படுத்துவார். இவரது கதைகளை முதலில் படிக்கும் போது, அந்த கதை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
'அக்னி குஞ்சு ஒன்று கண்டேன்' என கர்ஜித்த பாரதியை குருவாக ஏற்றுக்கொண்டவர். குன்றக்குடி அடிகளிடம் மேடை இலக்கணத்தை கற்றவர். சிந்தனை சிரிப்புக்கு சொந்தக்காரர். 'அன்பு பெரியோர்களே...' என இவர் குரல் ஒலிக்காத இடமில்லை. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளை கண்ட, பட்டிமன்ற பிதாமகன் சாலமன் பாப்பையா.இலக்கியங்களில் தைப்பொங்கல் எப்படி கொண்டாடப்பட்டது என நாம் கேட்க, பல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
பாவாடை தாவணியும், எட்டு முழசேலைகளுடன் அழகு தேவதைகளாய் கருப்பு வெள்ளை காலத்தை மனதிலும், திரையிலும் ஓடவிடுவோரை இன்னமும் தூண்டிலாய் இழுப்பது சேலைகள்.பெண்மையை கொண்டாடும் கவிகளால் ஒற்றை வரியிலாவது ஒரு கவிதை, ஒரு வசனம் பிறந்திருக்கும். தொப்புள் கொடி உறவென தமிழ் பாரம்பரியத்தோடு ஒன்றித்து விட்ட சேலைகளுக்கு போதாத காலமாய் இந்த நூற்றாண்டு புத்தம் புதிய மாடல்கள், டிசைன்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையை சேர்ந்த 14-வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சங்கம் அமைத்து தங்கள் வீட்டு நிலத்தில் தாங்களே விவசாயம் செய்து, வேளாண்மைக்கு முன்னோடியாக திகழ்கின்றனர்.நாட்டின் முதன்மையான தொழிலாக விவசாயம் இருந்தாலும், இளைய தலைமுறையை சேர்ந்த பெரும்பாலானோர், 'ஒயிட் காலர்' வேலை வாய்ப்பே உயிர்நாடி என வாழ்கின்றனர். ஏற்றம் இறைக்கவோ, ஏர் உழவோ இன்றைய இளைய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்ல, பேட்டிக்கும் நான் ரெடியாத்தான் இருக்கேன்... என்னையும் இன்டர்வியூ பண்ணுங்க என்று, கொம்புடன் வம்பு பண்ணிய 'கிங்காங்' காங்கேயம் காளை'யுடன் ஒரு காமெடி பேட்டி...* எங்களுக்காக ஒரு பாட்டு...'பொங்கல் வந்தாலே காலு நாலும் தன்னாலே வாடி வாசல் பாயுதே...', இது உங்களுக்காக இல்லை பொங்கலுக்காக பாடுனது.* மா...மா...ன்னு கேப் விட்டு கத்துறீங்க ?கேப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
ஐநூறுக்கும் மேற்பட்ட சினிமாக்களில் நகைச்சுவை நடிப்பால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். சிறந்த ஓவியரும் கூட. ஜவுளி வர்த்தகத்தில் உலகத்தை வலம் வந்து கொண்டிருப்பவர். அ.தி.மு.க.,வின் கொடி, சின்னத்தை உருவாக்கியதில் இவருக்கும் பங்குள்ளது. இவர் சிரிப்பு நடிகர் பாண்டு.சமீபத்தில் மதுரை நகைச்சுவை மன்ற ஆண்டு விழாவில் பங்கேற்க வந்தவர், தினமலர் வாசகர்களுக்காக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
முதல் இரண்டு உலகப் போர்கள் முடிந்து விட்டது என்று சரித்திரம் அறிவித்து விட்டது. ஆனால், மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்பதை அது அறிவிக்கவேயில்லை. அது கண்ணுக்குத் தெரியாத யுத்தம்; கை குலுக்கி கொண்டே நடக்கும் யுத்தம்; கொல்கிறவன் கொல்கிறான் என்றும் சாகிறவன் சாகிறான் என்றும் அறிந்து கொள்ள அவகாசம் தராத யுத்தம். இது மனிதனுக்கும் மனிதனுக்கும் மட்டுமல்ல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
தண்ணீரில்லைகைகழுவவேண்டியது தானாவிவசாயத்தை...?தண்ணீருக்குள்ளேயேதவமிருந்தோம்அது படைப்பியல்!தண்ணீருக்காகதவமிருக்கிறோம்இது அரசியல்!கதிர் அரிவாள் போலவாஇருக்க வேண்டும்?கழனித் தொழிலாளியின்வாழ்க்கை...கேள்விக்குறியாக...!எந்தத் தறியில்யார் நெய்தது?கந்தல் துணியாகவேஇருக்கிறதேநெசவாளர்களின்சொந்த வாழ்க்கை!எப்படி எங்கள்வாழ்க்கை மட்டும்வறண்டே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
இந்தாண்டு பொங்கல் பண்டிகையுடன், சினிமாவில் நுழைந்து, 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் விவேக், தன் படங்களில் 'குபீர்' சிரிப்பை வர வைக்கும் நகைச்சுவையை 'நச்'னு கலாய்த்து, 'கருத்து கந்தசாமி'யாக நம்மை கலகலக்க வைப்பதில் கில்லாடி.நடிப்பில் அடுத்தடுத்து பிசியாக இருந்த போதும் 'தினமலர் பொங்கல் ஸ்பெஷல்' பேட்டி என்றவுடன் அனைத்து வேலைகளையும் தள்ளி வைத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
பச்சரிசி, வெல்லம், கரும்பு, மாக்கோலம், காப்பு. இவை இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றிக்கடன் செலுத்தும் பொங்கல் திருநாளின் அடையாளங்கள்.இதுபோல் கிராம சிறு தெய்வ வழிபாட்டு திருவிழாவிற்கு, பல்வேறு அடையாளங்கள் உள்ளன. கிராமங்களில் விவசாயம் செழிக்க வேண்டும்; மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முளைப்பாரி வைக்கின்றனர். மொச்சை, தட்டைப் பயறுகளை சேர்த்தோ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
காளை வளர்க்கும் கிராமங்கள், தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி அருகே உள்ள கே.புதூரில் மறைந்து போன கோயில் காளையை, பல ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள், தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த ஊரில் உள்ள பகவதியம்மன் கோயில் விழா, சில காரணங்களால் கொண்டாடப்படாமல் இருந்தது.இதற்கு மாற்றாக பழநி சண்முகநதி பகுதியில் கண்டெடுத்த விநாயகர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
'கல்லிலே கலை வண்ணம்' கண்டார் என தமிழர்களின் சிற்பக்கலை குறித்து பாடி வைத்தனர். பூரி ஜெகன்நாதர் கோயிலில் மூன்று மூலவர் சிலைகள் தேக்கு மரத்தால் ஆனது. இவற்றின் அழகும், கலை நயம் மிக்க தொழில்நுட்பமும் பல நூற்றாண்டுகள் கடந்த நிலையில் இன்றளவும் இந்திய கலாசார பெருமைகளை உலகிற்கு எடுத்து செல்கிறது. பூரி ஜெகன்நாதர் கோயில் மரச் சிற்பங்களை செதுக்கிய சிற்பி குறித்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
திருக்கோயில்கள் முன்னர் மரங்கள், சுதைகள், கற்றாளி... என்று பல முறைகளில் அமைக்கப்பட்டன. அதில் குடைவரை கோயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திருப்பணிகள் இல்லாமல் காலங்களைக் கடந்து நிற்கின்றன.சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பகுதியில் பிள்ளையார்பட்டி, திருக்கோளக்குடி, மகிபாலன்பட்டி, பிரான்மலை, குன்றக்குடி, என பல இடங்களில் குடைவரைக் கோயில்கள் உள்ளன. அதில் மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
தை மாதக் குளிரில் பற்கள் கிடுகிடுவென்று நடுங்க, பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு 'வாசப்பொங்கல்' (வாசலில் வைப்பது) வைக்கும் நம் பெண்கள்… தமிழ் பாரம்பரியத்தின் அழகு அடையாளங்கள். மண் மனம் மாறா கிராமங்களிலும், கிராமங்களில் இருந்து நகரத்திற்கு இடம்பெயர்ந்தவர்களின் அடையாளமாக இல்லந்தோறும் கொண்டாடப்படும். பச்சரிசியை மட்டும் குழைய வைத்து வெண்பொங்கல் என்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
இயற்கையின் கொடையால் எழும் உற்சாக ஒலியே 'பொங்கலோ பொங்கல்'. காப்பு கட்டு துவங்கி காணும் பொங்கல் வரை தொடரும் இயற்கை திருவிழா. இங்கு இயற்கைதான் பிரதானம். மனித இனமே இயற்கையில் இருந்து பிறந்ததுதானே. இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்த நமது முன்னோர் நமக்கு அளித்த வரமே பொங்கல் திருநாள்.உணவை மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கான அருமருந்தையும் இயற்கை கொடுக்கிறது. பொங்கல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
வித்தியாசமான நடிகர் என்றால் முதலில் தெரிவது பார்த்திபன். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலிருந்து பட தலைப்பு, விளம்பரங்கள் என எல்லாவற்றிலும் வித்தியாசத்தை காட்டுபவர். தன் அடுத்த படைப்பான 'கோடிட்ட இடங்களை நிரப்புக' பட இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருந்தவரிடம், பொங்கல் மலருக்காக தொடர்பு கொண்ட போது, 'கேள்வியும் நானே பதிலும் நானே' என்ற பாணியில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
முன்னோர் வாழ்வை செவிவழிச் செய்தியாய் கேட்பதை விட அவர்கள் பயன்படுத்திய பொருட்களை சாட்சியாய் வைத்து பேசும் போது அந்த வாழ்வின் சுவாரஸ்யங்கள் மனதில் ஆழமாய் பதியும். நம் காலத்து பொருட்களின் முக்கியத்துவமும் புரியும்.மதுரையை தாலாட்டிச் செல்லும் வைகை ஆற்று நாகரிகம், சமீபத்தில் உலக நாகரிகங்களுக்கு இணையாக பேசப்பட்டது.கீழடியில் கிடைத்த அரிதான பொருட்கள் இதனை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2017 IST
மல்லிகை மணக்கும் கருங்கூந்தல் தோட்டம்... ஆளை கவிழ்க்கும் காந்த கண்களின் நோட்டம்... இதழ்களில் வழியும் தேன் சுவை புன்னகை, உன்னுடன் மோகம் கொண்டு உன்னை சூழ்ந்து சுற்றும் மேகத்து வெண்புகை. பார்த்தவுடன் பளிச்சென பிடித்து போகும் பேரழகு பாவை... பிரியமான பிரேமமாய் மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழில் காதல் 'கொடி'யாய் படர்ந்திருக்கும் நடிகை 'அனுபமா பரமேஸ்வரன்' அள்ளி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X