Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
பொங்கல் திருநாள் கண்கண்ட தெய்வமான சூரியனை நினைத்துக் கொண்டாடப்படுவதாகும். அவர் உலகிலுள்ள எல்லாருக்கும் பொதுவானவர். எல்லா மதங்களுமே சூரியனைக் கொண்டாடுகின்றன. இந்து மதத்தில் சூரியனையும், சந்திரனையுமே கடவுளின் கண்கள் என்கிறார்கள். சூரியனால் தான் உலக இயக்கமே நிகழ்கிறது.அதிகாலையில், தனது கதிர்களைப் பரப்பி நம்மை விழிக்க வைப்பவர் அவர் தான். ஆன்மிகத்தில் 'விழித்தல்' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
கரும்பு இல்லாமல் பொங்கல் பண்டிகை இல்லை. பொங்கல் அன்று வெறும் கரும்பை சுவைத்து சாறை குடித்து சக்கையை துப்புவதா? கரும்பு பயன்படுத்தி பொங்கலை ஜமாய்க்க என்ன வழி? கவலைய விடுங்க! இனி கரும்புச்சாறில் விதவிதமாக 'டிஷ்' செய்து அசத்தோ அசத்துன்னு அசத்தி எல்லோரையும் சாப்பிட வைக்கலாம் என்கிறார் மதுரை உணவு கலை நிபுணர் காயத்திரி. இதோ அவர் தரும் கரும்பு ஸ்பெஷல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
எழுத்தும் நீயே சொல்லும் நீயேபொருளும் நீயே பொற்றமிழ்த் தாயேமுகமும் நீயே அகமும் நீயேமுகவரி நீயே முத்தமிழ்த் தாயேநீயே எங்கள் அடையாளம்நீயே எங்கள் பூகோளம்நீயே எங்கள் வரலாறுநீயே எங்கள் பண்பாடுஅறமே வாழ்வின் அச்சாணி என்றாய்பிறர்க்கென வாழ்தல் பெருவாழ்வென்றால்உறவே உலகென வாழும் உலகில்உலகே உறவென ஓங்கி மொழிந்தாய்குருதியில் உலகம் குளித்த காலையில்போர்க்களம் தோறும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
'பாண்டிய நாடே பழம்பதி' என்பது மாணிக்கவாசகரின் அணிவாசகம். இந்நாட்டின் தலைநகர் மதுரை. தமிழ் என்ற சொல்லும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த 'மதுரை'யும் இனிமை என்ற பொருளைத் தருவது போல், இந்நகரில் 'பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்' சத்தமில்லாமல் பழமையான வரலாறுகளை ஆவணமாய் பதிவு செய்து வருகிறது. இந்த அமைப்பு விழுதுகள் பரவிய ஆலமரமாய் தெரிந்தாலும், இதை தன்னந்தனியாய் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
'சன் பாத், ஆயில் பாத், பேஷியல்...' என்று பெண்கள் நுனிநாக்கு அலட்டலில் சொல்லும் பார்லர் விஷயங்கள்... முகத்தில் ரசாயனம் பூசி முதுமையை வாவென்று அழைக்கும் முகமறியா எதிரிகள். களையான மஞ்சள் முகமும், அலையான கருங்கூந்தலும் பெண்களை முடிசூடா அழகிகளாக்கி கொண்டிருக்கிறது என்கிறார் மதுரையைச் சேர்ந்த சித்தா மருத்துவர் மைதிலி. விஞ்ஞானம் என்றறியாமல் கிராமத்துப் பெண்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
மகன்: நீங்க கரும்பு மாதிரின்னு அம்மா சொல்றாங்க...அப்பா: அவளுக்கு என்ன திமிரு...!மகன்: ஏம்ப்பா... நல்லவிதமா தானே சொல்லிருக்காங்க?அப்பா: டேய்... அவளுக்கு கரும்பு பிடிக்காதுடா...!-என்.ஆஷிகா, சென்னை.காதலன்: உனக்கு என்ன பொங்கல் 'கிப்ட்' வாங்கணும்னு யோசிக்கிறேன்...காதலி: பச்சை கலர் சுரிதார் வாங்கித் தாங்க!காதலன்: உன் தங்கையும் அதே கலர் தான் வேணுங்கிறா... அதான் யோசிச்சுட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
ஒரு காலத்தில் நம்மோடு உறவாடி, குஷிப்படுத்தி, பாடாய்படுத்தி, நட்புகளை நாடி பிரமிக்க வைத்து, கொஞ்ச வைத்து, கெஞ்ச வைத்து, ஏங்க வைத்து, சிரிக்க வைத்து அழ வைத்து ... -இப்படி, எத்தனை உணர்ச்சிகள் உண்டோ, அத்தனை அனுபவங்களை தந்த பல விஷயங்கள், கால ஓட்டத்தில் மறைவது மட்டும் குறையவே இல்லை.'காணாமல் போனவர்கள்' பட்டியலில் ஏற்கனவே இடம் பிடித்த தபால், தந்தி, ரேடியோ, கைக்கடிகாரம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
உருண்டு திரண்ட தோள்வலிமை, இடுப்பில் இறுக்கிக் கட்டிய வேட்டி, ஒட்டிய வயிறு, மேலாடையின்றி தலையில் கட்டிய முண்டாசு... ஐ.எஸ்.ஐ., முத்திரை குத்தாவிட்டாலும் விவசாயியின் அடையாளம் இவை தான்.நானும் ஒரு விவசாயி தான் என்பது போல கையில் கலப்பையுடன் கட்டுமஸ்தாக காட்சி தருகிறார் விநாயகர். ஆவலும், ஆச்சரியமும் ஏற்படுகிறதா... மதுரை திருமங்கலத்தில் செங்கப்படை அருகில் உள்ள சிறுகிராமம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
தினமும் ஆர்ப்பாட்டம், அறிக்கை, மேடை பேச்சு என தீவிர அரசியலில் இருக்கும் தலைவர்களின் இளமை கால பொங்கல் எப்படி? அவர்களின் பொங்கல் ஞாபகங்களை கேட்ட போது...பூசணி பூ பார்க்க... பூரிப்பு தோன்றும்!: அப்பா ராமசாமி விவசாயி. நெல்லை ஸ்ரீவைகுண்டத்தில் எங்களுக்கு பூர்விக நிலங்கள் உள்ளன. தை மாதம் அறுவடை முடிந்து விவசாயிகள் விழா கொண்டாடுவர். பெற்றோருக்கு என்னையும் சேர்த்து நான்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
இத்தாலி மொழியில் 1948ல் வெளியான 'பைசைக்கிள் தீவ்ஸ்'. கதாநாயகன் அந்தோணியாவுக்கு போஸ்டர் ஒட்டும் வேலை. கம்பெனி சட்டப்படி ஊழியருக்கு சைக்கிள் கட்டாயம். திருடு போன சைக்கிளை கண்டுபிடிக்க முடியாமல் வேறு சைக்கிளை திருடுகிறார். இந்த படத்தை பார்த்த இந்திய இயக்குனர் சத்யஜித்ரே தானும் இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இயக்குனர் ஆனார். எனவே அந்த மகா கலைஞனை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
'என்னடா... லொக்கு... லொக்குனு இருமிக்கிட்டே இருக்க... கண்டத குடிச்சா இப்பிடி தான்... நாலு நண்டை பிடிச்சுட்டு வா... நசுக்கி ரசம் வெச்சுத் தாறேன்...' என மகனுக்கு அம்மாக்கள் சொன்ன பாட்டி வைத்தியத்தை நாம் பைத்தியக்காரத்தனம் என்று விமர்சித்தது உண்டு.நகரங்களை நோக்கி கிராமங்கள் நகர்ந்து கொண்டு இருக்க பழைய கஞ்சியை பார்க்காத தலைமுறைகள் உதயமாகிவிட்டன. உணவு, உடையில் கிராமங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
கிராமங்களின் வாழ்க்கை மாறி இருக்கலாம், வசதி மாறியிருக்கலாம், வளமை மாறியிருக்கலாம். அன்றும், இன்றும், என்றும் மாறாதது பாசம் மட்டுமே. பொதுவாகவே அவர்களின் உபசரிப்பு உணர்வு பூர்வமானது.முகம் தெரியாத நபரையும் வரவேற்று பருக நீர் தந்து பசியாற நினைக்கும் பண்பு கிராமத்திற்கு உண்டு. வெளிநபருக்கு இத்தனை பரிவு என்றால் சொந்த, பந்தங்களுக்குள்ளான பாசப்பிணைப்பு எப்படி இருக்கும்? ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
மழை வேண்டி பல்வேறு வினோத நடைமுறைகளை விவசாயிகள் பின்பற்றுவதை நாம் பார்த்திருப்போம். நாம் பார்க்கவிருப்பதும் அதுபோன்ற வினோதங்களில் ஒன்று தான். ஆனால் அதில் கொஞ்சம் விசுவாசமும் கலந்திருப்பது இந்த கிராமத்தின் ஸ்பெஷல். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர்.1790ல் எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, சின்ன ஓவுலாபுரம், அப்பிபட்டி, வேப்பம்பட்டி கிராமங்கள் ஜமீன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
மார்கழி பனி முடிந்து தை பிறக்கும் போது குளிர்கால சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் நம் சுற்றுப்புறத்தில் பல்லுயிர் பெருக்கம் காணப்படும். விலங்குகளும், புழு, பூச்சிகளும் குளிர்காலத்தில் இணைந்து இனவிருத்தி செய்து அதனைத் தொடர்ந்து மரம், செடி, கொடிகள் என எங்கெங்கும் பல்வேறு புழுக்களும், பூச்சிகளும் அதிகரிக்கின்றன. இந்தப் பூச்சிகளில் பெரும்பாலானவை நன்மை செய்பவைகளாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
""அண்ணன் என்னடா? தம்பி என்னடா? அவசரமான உலகத்திலே...! ஆசை கொள்வதில் அர்த்தமென்னடா...? காசில்லாதவன் குடும்பத்திலே...!,'' என்ற அர்த்தமுள்ள வார்த்தைகளால் கவிஞர் கண்ணதாசன் அவசர உலகின் அலங்கோலங்களை பாடி வைத்தார். "காசு ஒன்றே குறிக்கோள்' என வாழும் மனிதர் சிலருக்கு ஆக்கப்பூர்வமாக... எடுத்துக்காட்டாக... வாழ்ந்து வருபவர்கள் எண்ணற்றோர் இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
''நான் பிறந்த மண்ணை தொட்டுப் பார்க்க விரும்பினால் இன்று மூச்சடக்கி மூழ்க வேண்டியிருக்கும். இன்று அந்த நிலம் வைகை அணையின் நீர் தேங்கிய பரப்பிற்கு கீழே நித்திரை செய்து கொண்டிருக்கிறது. 1950ல் வைகை அணை கட்ட 15 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. அவற்றுள் ஒன்று எங்கள் மேட்டூர். 1958 ல் அணை கட்டி அதன் நீர்பிடிப்பு பகுதியில் இருந்த சிற்றூர்கள் இந்திய வரைபடத்தில் இருந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
அமலா பாலுக்கு மைனா, லட்சுமி மேனனுக்கு கும்கி அமைந்தது போல் ஆனந்திக்கு கயல் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. பொறியாளன் படத்தில் நடித்திருந்தாலும் பெயர் பெற்றது என்னவோ கயல் படத்தில்தான். தன் தமிழ் சினிமா வருகையை வளமாக பதித்திருக்கும் ஆனந்தியை 'தினமலர்' பொங்கல்மலர் பேட்டிக்கு தொடர்பு கொண்ட போது ஆர்வமாய் அனுபவங்களை பகிர்ந்தார்...* அப்படியே நம்மூர் பொண்ணு மாதிரி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
படத்துக்கு படம் பரீட்சார்த்த முயற்சிகள், வலிகள் நிரம்பிய வாழ்க்கைக்கு சொந்தக்காரர் சீயான் விக்ரம். உடல், பொருள், ஆவி அனைத்தும் அவருக்கு சினிமா மட்டுமே. 'ஐ' படத்திற்காக மூன்று ஆண்டுகள் தன்னை அர்ப்பணித்த அவரின் உழைப்பு ஒரு நிமிடம் ஓடும் டிரைய்லரில் கூட தெரிகிறது. இதோ தன் அனுபவங்களை 'தினமலர்' வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார் 'சீயான்' விக்ரம்...வேறு படங்களில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
''பொங்கல்னு ஒரு பண்டிகை இல்லைன்னா இன்னிக்கு சூரி இல்ல... என்ன இப்புடி பாக்குறீங்க? ஒரு கலைஞனா, காமெடியனா, வம்பு தும்புக்காரனா என்னைய மாத்துனதே பொங்கல் கொண்டாட்டங்கள் தான். பொங்கலுக்காக நடந்த மாறுவேஷப் போட்டியில பொம்பள வேஷம் போட்டு ஆடுன ராமன் தான், இன்னிக்கு 'சூரி'யா சினிமாவுல வெதவிதமா வேஷம் போட்டுக்கிட்டு இருக்கான்,'' என பொங்கல் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST
பண்டிகை மகிழ்ச்சி இப்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று வீடு சார்ந்தது. மற்றொன்று தியேட்டர் சார்ந்தது. பண்டிகையை கொண்டாடுகிறார்களோ இல்லையோ தியேட்டர் வாசலில் தங்கள் மனம் கவர்ந்த நாயகனை கொண்டாடுவதில் ரசிகர்கள் தவறியதில்லை. ரசிகர்களின் பொங்கல் விருந்ததாக மூன்று திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. * என்னை அறிந்தால்கடந்த பொங்கலில் வீரம் அடித்த ஹிட்டிற்கு பிறகு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X