Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
தமிழர் திருநாளில் தமிழ்க்கடவுள் தரிசனம் தமிழர் திருநாளான பொங்கலன்று தமிழ்க்கடவுளாம் வயலூர் முருகனை வணங்குவோமா! தல வரலாறு: சோழ மன்னன் ஒருவன் வேட்டையாடச் சென்றபோது, இங்கு ஒரே கணுவில் மூன்று கரும்புகள் விளைந்திருந்ததை கண்டான். ஆச்சரியத்துடன் அதை வெட்டியபோது, அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. ஆச்சரியமடைந்த மன்னன், அதனடியில் தோண்டியபோது சுயம்புலிங்கம் இருந்ததைக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
பொங்கல், ரதசப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சூரிய உதயத்துக்கு முன்னதாக நீராடிய பிறகு, இந்த மந்திரத்தைச் சொன்னால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். சமஸ்கிருதத்தில் முடியாதவர்கள் இதிலுள்ள தமிழ் அர்த்தத்தைச் சொன்னாலே போதும். ஓம் சூர்யாய நம: செயலை தூண்டுபவனுக்கு வணக்கம்ஓம் அர்க்கய நம: போற்றுதலுக்குரியவனுக்கு வணக்கம்ஓம் ஆதித்யாய நம: தேவர்க்கெல்லாம் தேவனாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
உண்ணும் உணவுப் பெயரையே ஒரு பண்டிகையின் பெயராக வைத்திருப்பது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், இதன் உண்மையை உணர்ந்தால் அதன் பெருமை விளங்கும். பொங்கல் என்பது "பொங்கு' என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது. அதனையே பொங்கல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
சூரியனை தங்கள் அனைத்து அங்கங்களும் தரையில் படும் வகையில், அக்காலத்து பெரியவர்கள் தினமும் 137 முறை வணங்கினார்கள். காயத்ரி மந்திரம் சொல்வது சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். ராமருக்கு அகத்தியர் அருளிய ஆதித்யஹிருதய ஸ்தோத்திரத்தை உச்சரித்து வந்தால் மூலநோய், பசியின்மை நீங்கும் என்பது நம்பிக்கை. சூரியன் பாலை நிலத்தலைவன், சிம்ம ராசிக்கு அதிபதி. சூரிய நமஸ்காரம் செய்தால் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
மார்கழி மாதத்தின் இறுதிநாள் போகிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ""பழையன கழிதலும் புதியன புகுதலும்'' என்பது வழக்கம். பழமையை விடுத்து மனிதன் புதுமைக்குள் செல்லவேண்டும் என்பதை உணர்த்தும் விழா இது. ""இன்று புதிதாய் பிறந்தோம்'' என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது. அதே சமயத்தில் புதுமை என்ற பெயரால் மேலைநாட்டு நாகரிகத்தை விரும்புவது புதுமை அல்ல. நாகரிகம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
கரும்பு உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
சூரியபகவானே முழுமுதற்கடவுள் என்று சூரியபுராணம் குறிப்பிடுகிறது. இவரது இருப்பிடம் சூரியலோகம் எனப்படுகிறது. சிவனுக்கு கைலாயம், நாராயணனுக்கு வைகுண்டம், பிரம்மாவுக்கு சத்தியலோகம் ஆகியவை போல, சூரியனுக்குரியது சூரியலோகமாகும். இது மகிமை மிக்க உலகமாக உள்ளது. தேவர்கள், கந்தர்வர், கின்னரர், கிம்புருடர் ஆகியோர் சூரியனை வணங்கிய பின்னரே தங்களைப் பணிகளைத் தொடங்குகின்றனர். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
"சங்க்ரமனம்' என்ற சொல்லுக்கு "நகர ஆரம்பித்தல்' என்பது பொருள். சூரியன் தென்திசையில் இருந்து வடதிசைக்கு நகரும் நாளே மகரசங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் இந்நாளை பொங்கல் திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். உழைப்பின் பயனால் விளைந்த நெல்மணிகளைக் கொண்டு பொங்கல் இட்டு முதலில் கண்கண்ட தெவமான கதிரவனைப் பூஜிக்கிறோம். காலம் தவறாமல் தினமும் கீழ்வானில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
தெய்வீகக்கலையான ஜோதிட சாஸ்திரம் சூரியனை நவக்கிரக நாயகனாகப் போற்றுகிறது. மனித வாழ்விற்கும் தாழ்விற்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் கிரகங்களே. இவற்றிற்கு தலைமை வகிப்பவர் சூரியன். இவர், பிரபஞ்சத்தையும், கோள்களையும் பரிபாலித்து உலகை இயக்குகிறார். ஒருவரது ஜாதகத்தில் சூரிய பலத்தைப் பொறுத்தே ஒருவருடைய ஆளுமைத்தன்மை, ஆட்சி, அதிகாரம் அமையும் என்பர். ஆத்மா, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
வெற்றுக்கண்களால் சூரியனை பார்க்க முடியாது. கண்கள் கூசும். உதயம், மறையும் வேளையில் இளஞ்சூரியனைக் காணலாம். தோல் மற்றும் கண்ணுக்குத் தேவையான சத்துகள் சூரியனில் இருந்து கிடைக்கிறது. இதனாலேயே "சன்பாத்' என்னும் பெயரில், சூரியஒளியை உடலில் படரவிட்டு பயன் பெறுகின்றனர். உயிர்ச்சத்தான வைட்டமின்"டி' சூரிய ஒளியில் இருந்து நமக்கு கிடைக்கிறது. ஆன்மிகரீதியாக மட்டுமில்லாமல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
சூரியனின் இன்னொரு பெயரான "ஞாயிறு' என்னும் பெயர் கொண்ட ஊரிலுள்ள புஷ்பரதேஸ்வரரை வழிபட்டால் அனைத்துப் பணிகளிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. சென்னை அருகில் இத்தலம் உள்ளது. தல வரலாறு: சூரிய பகவானின் மனைவி சமுக்ஞாதேவி, கணவரின் வெப்பம் தாங்காமல் தன் நிழலில் இருந்து தன்னைப்போலவே ஒருத்தியை உருவாக்கினாள். அவளுக்கு "சாயாதேவி' என்ற பெயர் வந்தது. அவளை சூரியனுடன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள். வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம், புத்தாடையுடன் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகை இது. கால்நடைகளை நீராடச் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
தென் மேற்கு பருவக்காற்று ஊசியா உடம்பைத் துளைக்க, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே இருக்கும் தேனி மாவட்டத்தில் வீரபாண்டியை அடுத்த கோட்டூர் கிராமத்தில் தான் இந்த பச்சரிசிச் சோறு, அயிரை மீன் குழம்பு பொங்கல். விவசாயமே இங்கு பிரதானத் தொழிலாக இருந்தாலும், படிப்பறிவு இல்லாத குடும்பங்கள் இங்கு அரிது. எத்தனை தான் பட்டம் பெற்றாலும், வெளியூரில் பணிபுரிந்தாலும், விடுமுறை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2011 IST
எங்கும் காப்பு கட்டி கொண்டாடும் கிராமப்பொங்கல் ஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை நின்ற மாட்டிற்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும் பண்டிகை பொங்கல். அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X