Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 26 குடியரசு தின விழாவை ஒட்டி 'தமிழக முதல்வரின் சிறப்பு விருதுகள்' வழங்கப்பட்டன. இதில், பெண் விவசாயி 'பிரசன்னா' என்பவருக்கு சிறப்பு விருது கிடைத்தது. இந்த விருது, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பதக்கமும் கொண்டது. மதுரை மாவட்டம், திருப்பாலையைச் சேர்ந்தவர் பிரசன்னா. திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதிக அளவு மகசூல் எடுத்ததற்காக இவருக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 29 - 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் முதல் கட்டமாகப் பயன் பெற உள்ள, 20 இந்திய நகரங்களில், தமிழகத்தின் சென்னையும் கோயம்புத்தூரும் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் நிதி உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, ஸ்மார்ட் சிட்டிகள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 28 - சீனாவில், தமிழ் வானொலி ஒலிபரப்பு, 1963ல் தொடங்கப்பட்டது. இது சீனா மட்டுமன்றி இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ் நேயர்களுக்கும் கேட்கக் கிடைக்கிறது. தமிழ்ப் பிரிவில், 15 சீனர்களும், மூன்று தமிழர்களும் அறிவிப்பாளர்களாக உள்ளனர். சீன தமிழ்ப் பிரிவுக்கு தலைவராகச் செயல்படும் அறிவிப்பாளர் கலைமகள் (இயற்பெயர் ஷாப் சியாங்). அவரும் இன்னொரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 29 - ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் உள்ள சோதனை மையத்தில், ஒலியைவிட வேகமாகப் பயணிக்கும் 'சூப்பர்சானிக்' (Supersonic) வகையைச் சேர்ந்த, 'ஆகாஷ்' (Akash) ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இது தரையில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் திறன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
Jan. 28- The World Health Organization, (WHO), on 28th January has warned that Zika, a mosquito borne virus is “spreading explosively” in South American countries. Aedes mosquito species, the carrier of Chikungunya and Dengue viruses is also responsible for Zika virus transmission. It is found that some pregnant women in Brazil infected with Zika virus, have given birth to babies with abnormally small heads. The suspected relationship between Zika virus infection and birth malformations poses a serious threat. WHO has alerted that countries where Aedes mosquito species is present has a potential risk of zika virus transmission. By this year end, as many as forty lakh people are likely to be affected by the virus.The most common symptoms of Zika viral disease are fever, rash, joint pain, or conjunctivitis (red eyes). Symptoms of the disease begin 2 to 7 days after being bitten by an infected Aedes mosquito. The Zika virus was first detected in 1947 from Rhesus monkeys in the ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 29 - கலிபோர்னியா: 'டிரோன்' (Drone) எனப்படும், ஆளில்லா விமானம் மூலம், வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை வினியோகம் செய்ய கூகுள் நிறுவனத்திற்கு, அமெரிக்கக் காப்புரிமை கிடைத்துள்ளது. அக்டோபரில் இந்தத் திட்டத்தை, முழு அளவில் செயல்படுத்த உள்ளதாக அதன் திட்ட அதிகாரி டேவ் வாஸ் தெரிவித்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 28 - நியூயார்க்: உலக பணக்காரர்கள் பட்டியலில், 'மைக்ரோசாப்ட்' (Microsoft) நிறுவனரான பில்கேட்ஸ், மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த, 'வெல்த் எக்ஸ்' (Wealth-X) எனும் நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள, கோடீஸ்வரர்களின் சொத்துக்களை மதிப்பிட்டது. ஐம்பது பேர் அடங்கிய, இந்தப் பட்டியலில், முகேஷ் அம்பானி, அசிம் பிரேம்ஜி, திலீப் சங்க்வி ஆகிய மூன்று இந்தியர்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 30 - சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளுக்குச் சவால் விடும் வகையில், கணினி வழி கற்பித்தல் முறை அரசு பள்ளிகளை உற்சாகமடையச் செய்துள்ளன. மாணவர்களின் தேர்ச்சி, மாநில, 'ரேங்க்' எடுப்பது போன்றவற்றில், அரசு பள்ளிகள் பின்தங்கி இருப்பது வழக்கம். இந்தக் குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் முயற்சியினால் ஆன இணையதள மேலாண்மை, தென் மாவட்ட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 30 - பள்ளி பாடத் திட்டத்தில் தொழிற் பயிற்சிகள் சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். நாட்டில் திறன் மிக்க தொழிலாளர்களின் தேவை அனைத்துத் துறைகளிலும் அதிகளவில் தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் உள்ள பாடத்திட்டத்தில் தொழிற் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 30 - தியாகிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'நாட்டுக்காக உயிர் நீத்த அனைத்துத் தியாகிகளையும் இந்நாளில் நினைவு கொள்வோம். அவர்களது தியாகங்கள் எப்போதும் நமது நினைவில் இருக்கும்' என ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
மின்சார மோட்டாரின் திறனை ஏன் குதிரைத் திறன் (ஹார்ஸ் பவர் - Horse power) என்று சொல்லவேண்டும்? ஒரு குதிரைத் திறன் என்பது எவ்வளவு? அதற்கு ஏதேனும் அளவீடு இருக்கிறதா?- ப்ரீத்தி சிவசெல்வி. கோயமுத்தூர்.இந்தக் கேள்விக்கான பதிலில் கணக்கு, கதை எல்லாம் வருவதால் கொஞ்சம் கவனமாகப் படியுங்கள்.முதலில் புழக்கத்தில் இருந்த, நியுகோமன் என்ஜினைவிட (Newcomen Engine) அதிகம் திறன் கொண்ட புதிய நீராவி என்ஜினை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
நமக்குத் தெரியாத எதையும் கூகுளில் தேடிப் பார்த்து உடனே அறிந்து கொள்கிறோம். கூகுள் நிறுவனம் கூகுள் வரைபடம் (Google Maps), கூகுள் பூமி (Earth) போன்ற துணை சேவைகளையும் அளித்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். கூகுள் வரைபட சேவையைப் பயன்படுத்தி பூமியைப் பறவைப் பார்வையாக (பேர்ட்ஸ் ஐ வியூ - Bird's eye View) பார்க்கலாம். இருப்பிடங்களைத் தெரிந்து கொள்ளலாம். பார்த்தபடியே உலகில் பல ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
நாம் அஞ்சுகிற நோய்களில் மிக முக்கியமானது 'புற்று நோய்' (கேன்சர் - Cancer). இந்த நோய் உடலின் எந்த பாகத்தையும் தாக்கும். புற்று நோய் பாதித்த பகுதியில் செல்கள் (Cells) கட்டுப்பாடில்லாமல் பிரிந்து, புற்றுக் கட்டிகளாகத் திரளும். இந்தக் கட்டிகள் (ட்யூமர்ஸ் - Tumours) சுற்றிலும் இருக்கும் பிற நல்ல செல்களையும் அழித்து, உறுப்புகளின் இயக்கத்தைப் பாதிக்கும். பெரும்பாலான புற்று நோய்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
எண் ஒன்றைத் தவிர மற்ற எண்களுக்குக் குறைந்தது இரண்டு வகுத்திகளாவது (டிவைசர்ஸ் - Divisors) இருக்கும். எண்களின் வகுத்திகளைக் கண்டறியும் முறையைப் பாடத்தில் படித்து இருப்பீர்கள்.ஓர் இயல் எண்ணை (நேச்சுரல் நம்பர் - Natural number) எடுத்துக் கொள்வோம். அந்த எண்ணைத் தவிர அதை வகுக்கக்கூடிய பிற வகுத்திகளைக் கண்டறிவோம். வகுத்திகளின் கூட்டல் மதிப்பு, நாம் எடுத்துக் கொண்ட எண்ணைவிட அதிகமாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
முற்காலத்தில் ரோமானியப் போர்வீரர்களுக்கு சம்பளமாக சில சமயங்களில் உப்பு கொடுக்கப்பட்டதாம். 'சால்ட் - சாலரி' (Salt - Salary). சம்பளத்துக்கு இப்படித்தான் Salary என்கிற பெயர் வந்தது. (சில ஹோட்டல்கள்ல பண்டம் ரொம்ப உப்புக் கரிக்குதே… மாஸ்டர்களுக்கு சம்பளம் குடுக்காம, Salt குடுத்திருப்பாங்களோ?)நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் உப்பு கலந்திருக்கிறது. வளர்ந்த ஒரு மனிதரின் உடலில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
'தானே' (Thane) புயல், 'ஹுட்ஹுட்' (Hudhud) புயல் என்றெல்லாம் சொல்கிறார்களே… புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் எப்படி வந்திருக்கும்?அட்லான்டிக் (Atlantic) பகுதி மக்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கத்தை ஆரம்பித்தார்கள். புயல் அடிக்கும் நாளோடு தொடர்புடைய புனிதர்களின் பெயரை, புயலுக்கு வைத்தார்கள், 'புனித ஆன்' (செயின்ட் ஆன் - - Saint Anne), 'ஸான்ட்டா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
உருவில் சிறியதாக இருந்தாலும் பல பேரை மிரண்டு ஓட வைப்பார்கள் இந்த மீசைக்காரக் கரப்பான் பூச்சிகள்! மனித இனம் தோன்றும் முன்பே தோன்றிவிட்டன. உலகில் துருவப் பகுதிகள் தவிர மற்ற எல்லாப் பகுதிகளிலும் இவை வாழும். மனிதனை விட, பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சைத் தாங்கும் ஆற்றல் படைத்தவை. அணுகுண்டு வெடிப்பிற்குப் பிறகும் இவை உயிருடன் இருக்கும். உலகில் சுமார் 4000க்கும் மேற்பட்ட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
மேக மண்டலத்தில் உருவாகும் மின்சாரம்தான் மின்னல். மேகங்களில் இருக்கும் அணுக்கள் மின்னூட்டம் பெற்று, பூமியின் எதிர் மின்னூட்டத்தின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும்போது வெளியாகும் மின்சாரப் பாய்ச்சலே மின்னல்!ஒவ்வொரு மின்னலிலும் அதிக அளவு மின் சக்தி இருக்கும். என்றாலும், அதில் சிறிது அளவைக் கூட நாம் சேமித்து வைக்க முடியாது.மரங்கள், மாடுகள், மனிதர்கள் என வித்தியாசம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
பாலுவும் வாலுவும் சென்னையில் புதிதாகத் திறந்திருக்கிற ஒரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டருக்கு (Multiplex theatre) போய் வந்த கதையை விடிய விடிய சொல்லிக்கொண்டே இருந்தார்கள். படம் எப்படி என்று சொல்லவே இல்லை. தியேட்டர் எப்படியெல்லாம் இருக்கிறது என்றுதான் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ரோமுக்கோ இத்தாலிக்கோ போய்விட்டு வந்த மாதிரி இருக்கிறது என்றது வாலு. ரோம் இத்தாலியின் தலைநகர். அங்கேதான் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
தமிழில் திசைகளை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எனச் சொல்கிறோம். மலையாளத்திலும் பெரிய வித்தியாசம் இல்லை. கிழக்கும் வடக்கும் அப்படியேதான். தெற்கு என்பது கொஞ்சம் மாறி, 'தெக்கு' ஆகிவிட்டது. மேற்குத் திசை மட்டும், முழுக்க மாறி இருக்கிறது. அது 'படிஞ்ஞாறு' என குறிப்பிடப்படுகிறது. வேறு சில மொழிகளில் திசைகளை எந்தப் பெயர்களில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
இந்திய ரூபாய் நோட்டுகள் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகின்றன. நாணயங்களோ தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயார் ஆகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கலாம். எல்லா நாணயங்களிலும் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். ஆண்டுக்குக் கீழே ஒரு சின்னம் இருக்கும். இந்தச் சின்னம்தான் அந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
நம்ம ஊர் 'கை வீசம்மா கை வீசு' மாதிரி ஹிந்தியில் சூப்பர் ஹிட் குழந்தைகள் பாடல் ஒன்று உண்டு. அது, 'மச்லீ ஜல் கீ ரானி ஹை' என்கிற பாடல். அதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன். மச்லி ஜல்கீ ரானி ஹைஜீவன் உஸ்கா பானி ஹைஹாத் லகாஓ தோ டர் ஜாயேகீபாஹர் நிகாலோ தோ மர் ஜாயேகீபானீ மே டாலோ தோ தைர் ஜாயேகீMachli jal ki rani haiJeevan uskaa pani haiHaath lagaavo tho dar jayegiBaahar laavo tho mar jayegiPani me daalo tho thair jayegiஇந்தப் பாடலின் சந்தத்திலேயே தமிழ் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
முன்னா: சாந்தி ஒரு டவுட்டு... பஸ் கிளம்பறப்ப கண்டக்டர் 'ரைட்... ரைட்'டுனு சொல்ற மாதிரி ஃப்ளைட்லயும் சொல்லுவாங்களா?சாந்தி: அது தெரியல முன்னா. ஆனா, ஃப்ளைட்டைக் கண்டுபிடிச்சது 'ரைட் பிரதர்ஸ்'னு தெரியும்! மு : என்ன சொன்னாலும் எனக்குப் புரியுற மாதிரி விவரமாச் சொல்லு!சா : ஆர்வில் ரைட் (Orville wright), வில்பர் ரைட் (Wilbur wright) சகோதரர்கள்தான் விமானத்தைக் கண்டுபிடிச்சாங்க. அவங்களைத்தான் ரைட் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
சென்ற இதழில் காகிதத்தில் யானை பொம்மை செய்யக் கற்றுத் தருவதாகச் சொல்லியிருந்தோம். இதோ… அது! ரிப்பன் வடிவில் வெட்டப்பட்ட காகிதத்தைக் கொண்டு, சுருள் வடிவங்கள் செய்யும் கலைக்கு ஆங்கிலத்தில் 'பேப்பர் கிவில்லிங் ஆர்ட்' (Paper Quilling Art) என்று பெயர். தமிழில் 'காகிதச் சுருள் கலை'என்று சொல்லலாம். 'பேப்பர் கிவில்லிங்' வெறும் ஆபரணங்கள் மட்டும் செய்வதற்கான கலை அல்ல. பூக்கள், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
கதை இதுவரை: சிறுவர் கூட்டம் மலைப் பிரதேசத்துக்குச் சுற்றுலா செல்கிறது. ஜோவும் அவன் தங்கை ஷீலுவும் கூட்டத்தைப் பிரிந்து காட்டுக்குள் சென்றுவிடுகிறார்கள்.மீதம் இருப்பவர்கள் தங்கள் இருப்பிடத்துக்குத் திரும்பும்போது மண் சரிவு ஏற்படுகிறது. அவர்களின் கார் நகர முடியவில்லை. ஜோவும் ஷீலுவும் காணாமல் போனதை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறார்கள். காட்டுக்குள், ஜோவின் மீது ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
நமது கண்களால் அதிகபட்சம் எவ்வளவு தூரம்வரை பார்க்க முடியும்?நமது சூரியக் குடும்பம் பால் வீதி மண்டலத்தில் (மில்கி வே கேலக்ஸி - Milky Way Galaxy) இருக்கிறது என்பதை நாம் அறிவோம். நமது மண்டலத்தைப் போல பல மண்டலங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. தொலைநோக்கியால் நம்மால் பார்க்கக் கூடிய எல்லையில் மட்டுமே ஏறத்தாழ 100 பில்லியன் (Billion) மண்டலங்கள் இருக்கின்றன. அப்படியென்றால் பிரபஞ்சம் முழுவதும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
கல்பனா சாவ்லா நினைவு நாள் - பிப்ரவரி 01'வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்' என்பது சிலப்பதிகார வரி. கண்ணகியின் சின்னக் கால்கள் பூமியிலேயே பட்டதில்லை என்பதை ஒரு சிறப்பாகச் சொல்லும் வரி. ஆனால், பெண்ணின் சின்னப் பாதங்களுக்கு, விண்ணைத் தீண்டவும் சிறகுகள் முளைத்தன. அதற்கு உதாரணம், கல்பனா சாவ்லா!ஹரியானா (Haryana) மாநிலத்தில் கர்னால் (Karnal) என்ற ஊரில் 1961ஆம் ஆண்டு, மார்ச் 17ஆம் தேதி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
'எட்டு எட்டா நாலு எட்டு வெச்சா எவரெஸ்ட்டில் (Everest) ஏறிடலாம்' என்று ஓர் ஆசிரியர் சொன்னாராம். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீட்டர்! உலகத்திலேயே மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட். இது இமயமலையில் சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் உள்ளது.எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தைக் கண்டு சொன்னவர் ராதாநாத் சிக்தார் (Radhanath Sikdar) இந்தியக் கணிதவியல் அறிஞரான இவர், வங்காள மாநிலத்தைச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
வெப்பத்தினால் பொருட்களின் நிலைமாற்றம் உட்பட பல செயல்கள் நடைபெறுகின்றன. அதில், வெப்ப விரிவும் ஒன்று. 'வெப்ப விரிவு' என்றால் என்ன என்பதை சாலையோர மின் கம்பிகளைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். மற்ற நாட்களில் இறுக்கமாக இருக்கும். அது வெய்யில் காலத்தில் தொய்வடைந்து காட்சியளிக்கும். வெப்பம் காரணமாக கம்பி விரிவுஅடைவதால் வழக்கத்தைவிட அதிக நீளமாகிவிடுகிறது.கம்பி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
சாலையோரத்தில் கிடந்த கல்லை காலால் எட்டித் தள்ளியபடி போய்க் கொண்டிருந்த முரளியின் மனதில் ஒரே குழப்பம்.பள்ளி விளையாட்டு விழாவில், முகம் பார்க்கும் கண்ணாடி பரிசாக வந்தது. அந்தக் கண்ணாடி அவன் முகத்தை, அவன் பாவனைகளை அப்படியே பிரதிபலிப்பதில்லை. பெரும்பாலும் அவன் முகம், சோகமாகவோ, கோபப்படும்பொழுது கோணிப் போவது போலவோ காட்டுகிறது.நேற்றுதான் கொஞ்சம் சிரித்த முகமாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
இனியாக் (ENIAC) (எலெக்ட்ரானிக் நியுமெரிகல் இன்டெக்ரேட்டர் அண்டு கம்ப்யூட்டர் - Electronic Numerical Integrator And Computer) இதுதான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொதுநோக்கு மின் கணினி (எலெக்ட்ரிகல் கம்ப்யூட்டர் - Electrical Computer). ஆரம்பத்தில், கூட்டல் கழித்தல் மட்டும் இல்லாமல் 10 இலக்க எண்ணை நினைவகத்தில் (மெமரி - Memory) வைக்கக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இது 1946-ஆம் ஆண்டு உபயோகத்திற்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
சிரிப்பு ஒரு சிறந்த மருந்து. சிரிக்கும்போது, நுரையீரலுக்குப் பயிற்சி கிடைக்கிறது. உமிழ்நீரில் கிருமிகளை எதிர்க்கும் உயிர் எதிரிகளின் (ஆன்டிபயாடிக்ஸ் - Antibiotics) எண்ணிக்கை அதிகரிக்கிறது. சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 300 - 400 தடவைகள் சிரிக்கின்றனர். மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை சிரிப்பு தினமாகக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
'பள்ளிகளில் பெண் குழந்தைகள் தினத்தை எப்படிக் கொண்டாடினீர்கள்?' என்று கேட்டிருந்தோம். வந்துகுவிந்த செய்திகளில் சில, இங்கே...தொடர்ந்து கொண்டாடுவோம்!: மிகவும் சிறிய கிராமத்துப் பள்ளி எங்களுடையது. இங்கு, பயிலும் 25 மாணவர்களில் 6 பேர் மட்டுமே பெண் குழந்தைகள். பெண் குழந்தைகள் தினத்தில், வண்ண ஆடைகள் அணிந்து வர அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதுவரை, சர்வதேச மகளிர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன.29 - மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், பெண்கள் இரட்டையர் பைனலில், உலகின் 'நம்பர்-1' ஜோடியான இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, செக் குடியரசின் ஆன்ட்ரியா, லூசி ஹடெக்கா ஜோடியை எதிர்கொண்டது. இதில் அசத்திய சானியா - ஹிங்கிஸ் ஜோடி 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வென்று, கோப்பையைக் கைப்பற்றியது. 2015- விம்பிள்டன் & யு.எஸ்., 2016 - ஆஸி., ஓபன் ஆகிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 29 - மெல்போர்ன்: இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான 2-வது போட்டியில் டுவெண்டி - 20 போட்டியில் இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே நகரில் நடைபெற்ற வேறொரு ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது. இந்த வெற்றி மூலம் ஆண்கள் அணி, பெண்கள் அணி இரண்டும் தொடரைக் கைப்பற்றினர். குடியரசு தினத்தன்று இந்திய அணிகள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன.26 - மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் காலிறுதியில் 'நம்பர்-1' வீராங்கனை அமெரிக்காவின் செரினா, ரஷ்யாவின் ஷரபோவாவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே துடிப்பாக ஆடிய செரினா 6-4, 6-1 என வென்றார். இது செரினாவுக்கு எதிராக ஷரபோவா தொடர்ந்து பெற்ற 18வது தோல்வி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
சென்னை, ஜன.27 - தமிழ்நாடு சதுரங்கக் கழகம் சார்பில், கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. 20 கிராண்ட் மாஸ்டர்களும், 22 சர்வதேச மாஸ்டர்களும் கலந்து கொண்டனர். இதில் ரஷிய வீரர் பிலோஸ் விளாடிமிர் சாம்பியன் பட்டம் தட்டினார். ரஷிய வீரர் கெரசேவ் போரிஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை விஜயலட்சுமி மூன்றாம் இடம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 26 - இங்கிலாந்துக்கு எதிரான செஞ்சுரியன் டெஸ்டில், தென் ஆப்ரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றது. இருப்பினும், டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 110 புள்ளியுடன், நான்கரை ஆண்டுகளுக்குப்பின் முதலிடத்தை பிடித்தது. இரண்டாவது இடத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 28 - கோவை: அகில இந்திய அளவில் அனைத்து மாநில 21 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்க என்.ஜி.பி., கல்லூரியை சேர்ந்த, நான்கு வீரர்கள் தேர்வு பெற்றனர்.மத்திய பிரதேசம் ஜான்சியில் அகில இந்திய அளவில், 21 வயது ஜூனியர் ஹாக்கி போட்டி நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க தமிழக அணி சார்பில், 18 வீரர்கள் தேர்வு சென்னையில் நடந்தது. இதில் கோவை என்.ஜி.பி., ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 29 - ஆயக்குடியைச் சேர்ந்த வேங்கைநாதன், மலேசியாவில் நடந்த மூன்றாவது ஆசியன் சாம்பியன்ஷிப் சிலம்ப போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பழநி சுப்ரமண்யா பொறியியல் கல்லுாரி பி.இ. 2ம் ஆண்டு படித்து வருகிறார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2016 IST
ஜன. 27 - பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் வரும் ஆகஸ்ட் 5-ல் ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. இதற்கான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்றுப்போட்டி டில்லியில் நடந்தது. இதன் பெண்கள் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் ஜொலித்த, இந்தியாவின் ஹீனா சித்து 199.4 புள்ளிகள் பெற்று, தங்கம் வென்றார். இதன் மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறிய 9வது இந்திய துப்பாக்கி சுடும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X