Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 1 - நிலவின் வடிவம் சற்று பெரிதானால், வளிமண்டலத்தில் அழுத்தம் அதிகமாகி மழை பெய்வது கொஞ்சம் குறைவதாக, புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால், நிலவின் வெளிவட்டச் சுற்று அவ்வப்போது விரிவு அடைந்தும், சுருங்கியும் காணப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில், வளி மண்டலத்தில் காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், வெப்பக் காற்று குளிர்வதில் பிரச்னை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 3 - கும்பகோணம், மகாமகக் குளத்தில் நீராடுதல் குறித்து 'வடமொழி கல்வெட்டு' ஒன்று பிரம்ம தீர்த்தேஸ்வரர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது, தீர்த்தத் துறைகளின் வரைபடங்களுடனும் பெயர்களும் இருப்பதாக ஆய்வாளர் 'குடவாயில் பாலசுப்ரமணியன்' தெரிவித்தார். கல்வெட்டில் காணப்படும் வரைபடத்தில், 'மகாமக தடாகஸ்த தீர்த்தானி' என்ற தலைப்பிட்டு, அதன் கீழாக, 20 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 4 - மதுரை குலமங்கலத்தை சேர்ந்த விவசாயி வி.கிருஷ்ணன். மதுரை வேளாண் கல்லுாரி சார்பில், 'வேளாண் அறிவியல் நிலையம்' நடத்திய, திருந்திய நெல் சாகுபடி பயிற்சியில், கிருஷ்ணன் கலந்துகொண்டார். பின், தனது வயலில் இயந்திர நடவு முறையில் திருந்திய நெல் சாகுபடி செய்தார். இதனால், குறைவான செலவில் இரட்டிப்பு விளைச்சல் எடுத்தார். இவரது சாதனையைப் பாராட்டி கோவை வேளாண் பல்கலைக்கழகம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 3 - புருனே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி. அப்போது, அந்நாட்டு அரசர் சுல்தான் ஹஸனால் போல்கியாவை சந்தித்தார். அப்போது இந்தியா - புருனே இடையே பாதுகாப்பு, சுகாதாரம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை விவகாரங்கள் தொடர்பாக மூன்று புதிய ஒப்பந்தங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 2 - இந்தியாவில் முதன் முறையாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், தண்ணீருக்குள் ஹோட்டல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் அமைந்த இது, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ஹோட்டலில் 32 பேர் அமர்ந்து சாப்பிடும் விதமாக, இருக்கை வசதி செய்யப்பட்டிருக்கிறது. இருபது அடி ஆழத்தில், சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
Morocco, is soon to have the world's biggest solar power plant. 'Noor', the giant plant is located near the town of Ouarzazate, sprawling across thousands of acres on the Saharan desert. The first phase of this World Bank funded project, 'Noor I', has been officially launched on February 5. The present stage will generate 160 MW of power, enough to electrify, the households in the city continuously for 3 hours. When the next two phases, Noor II and Noor III, are completed by 2018, the plant will be the single largest solar power production project in the world generating 580MW. The installation of the 3 phases, will cover the same area as the country's capital, Rabat.Morocco is currently dependent on imported sources for 97 percent of its energy consumption. This massive project is the outcome of Morocco's pledge to get 42% of its electricity generation from renewable sources by 2020. It is important to note that the United Kingdom, a much richer ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 4 - இந்திய துணை ராணுவப் படையின் தலைவராக, அர்ச்சனா ராமசுந்தரம் பொறுப்பேற்றார். தேசிய குற்றப் பதிவுகள் வாரியத் தலைவராகப் பணியாற்றி வந்த அர்ச்சனா ராமசுந்தரம், துணை ராணுவப் படையின் 60 ஆண்டு வரலாற்றில், முதன் முதலாக நியமிக்கப்பட்ட, பெண் தலைவர் என்கிற சிறப்பைப் பெற்றுள்ளார். டில்லியில், துணை ராணுவப் படை தலைமையகத்தில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அர்ச்சனா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 4 - தென் அமெரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும், 'சைகா' வைரஸுக்கு எதிரான, முதல் தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள பாரத் உயிரி தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள், இரண்டு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து, அதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளனர். இந்தத் தகவலை, அந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர். கிருஷ்ணா இலா தெரிவித்தார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 3 உ.பி. மாநிலம், 'உன்னவ்' பகுதியைச் சேர்ந்த மாணவன் நயன். அவன் பள்ளிக்குப் போகும்போது கடக்கும் இடத்தில் பாதுகாப்பான ரயில்வே கிராஸிங் ஏதும் இல்லை. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்குப் புகார்க் கடிதம் ஒன்றை அனுப்பினான். அந்தக் கடிதம் ரயில்வே துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரயில்வே அமைச்சகம் தலையிட்டு, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என பிரதமர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 5 - தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு, மே மாதத்திற்குள், சட்டசபை பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான பணிகள் குறித்து ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் கமிஷனர் 'நசீம் ஜைதி' தலைமையில், அதிகாரிகள், 9ஆம் தேதி சென்னை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 5 - புதுடில்லி: ரயில் விபத்துகளைத் தடுக்க, 'ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடைமுறைத் திட்டம்' விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ரயில்வே துறையில் ஜப்பானுடன் இணைந்து சில திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிடப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் 'சுரேஷ் பிரபு' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பூமியின் புவி ஈர்ப்பு விசை குறையும் வாய்ப்பு இருக்கிறதா? அப்படிக் குறைந்தால் பூமியின் நிலை என்ன ஆகும்? - எஸ்.ஆர். ரமணன், செம்பட்டி.எல்லாப் பொருட்களுக்கும், அவற்றின் நிறைக்கு (மாஸ் - Mass ) ஏற்ப, ஈர்ப்பு விசை உண்டு. நிறையும், எடையும் ஒன்றல்ல. ஒரு பொருளின் நிறை பூமி, நிலா என எல்லா இடங்களிலும் ஒன்றுதான். மாற்றம் இருக்காது. எடையோ, இடத்துக்குத் தகுந்த மாதிரி மாறக் கூடியது. ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
புறாக்களுக்கு, புற்றுநோய்க் கட்டிகளைக் கண்டறியும் திறமை இருக்கிறதாம்! அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஐயோவா பல்கலைக்கழக (University of California and Iowa) ஆய்வாளர்கள் ஓர் ஆராய்ச்சி செய்தார்கள். இதில், புற்றுநோய் கட்டிகளுக்கான ஸ்லைடுகள் (Slides) புறாக்களுக்கு வரிசையாகத் தொடுதிரையில் (டச் ஸ்கிரீன் - Touch Screen) காண்பிக்கப்பட்டன. இதில், ஆபத்தான கட்டிகள் எவை, ஆபத்தில்லாத கட்டிகள் எவை என்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
'தம்பிரான் வணக்கம்'. இதுதான், தமிழில் அச்சிடப்பட்டு வெளியான முதல் நூல். இது ஒரு கிறிஸ்தவ ஜெப நூல். கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் 1556 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி அச்சடிக்கப்பட்டது. ஐரோப்பிய பாதிரியார்கள் தமிழகத்தில் சமயப்பணி செய்வதற்காகத் தமிழ் கற்றார்கள். பைபிளின் பகுதிகளையும் ஜெபங்களையும் தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டார்கள். 'டாக்ட்ரினா கிறிஸ்டம்'(Doctrina Christam) ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
திரைப்பட அரங்கம், நாடக அரங்கம் ஓகே... சண்டை போடுவதற்காகவே ஓர் அரங்கம் இருக்கிறதா? ஆம். அதன் பெயர் 'கொலோசியம்' (Colosseum). அது இப்போது உலக அதிசயங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.ரோம் தேசத்தில் (Rome) நீள்வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்ட புகழ் பெற்ற கலை அரங்கம் கொலோசியம். சண்டை போடவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காகவே கட்டப்பட்ட அரங்கம். கி.பி. 72ல் வெஸ்பாசியன் (Vespasian) என்ற பேரரசர் இதைக் கட்டத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison), 1847ஆம் ஆண்டு பிப்ரவரி 11ல் ஓஹையோ (Ohio) மாநிலத்தில், மிலன் (Milan) என்னும் இடத்தில் பிறந்தார். பத்தாவது வயதில், தன் வீட்டில் சிறிய தொழிற்கூடம் ஒன்றை அமைத்தார். 'மேதைமை என்பது 1 சதவீதம் உந்துதலும், 99 சதவீதம் வியர்வை சிந்துதலும் (உழைப்பு)” என்றார். “Genius is 1% inspiration and 99% perspiration” என்கிற அவரது சொற்றொடர், பிரபலமானது. தானியங்கித் தந்தி (ஆட்டோமேடிக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
சுவர் கட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். செங்கற்களுக்கு இடையில் சிமென்ட் கலவையைப் பூசுவார்கள், இல்லையா? பசை தடவினால் காகிதம் ஒட்டிக்கொள்ளும். தண்ணீர் கலந்து குழைக்கப்பட்ட சிமென்ட், எப்படி செங்கற்களை ஒட்டுகிறது? 'சிமென்ட்' (Cement) என்பது கட்டடங்கள் கட்டப் பயன்படும் முக்கியமான இணைப்புப்பொருள் (பைண்டர் - Binder). தமிழில் 'சீமைக் காரை' என்கிறார்கள். சாம்பல் நிறத்தில் தூள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
ஒரே கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என எல்லாம் வந்தால் என்ன செய்வீர்கள்? அதாவது, 24 - 4 x 2 + 24 ÷ (8 - 2) இப்படி…இதில், கொடுத்திருக்கிற வரிசைப்படி, முதலில் அடுக்கு, பிறகு கழித்தல், அடுத்து பெருக்கல், பிறகு கூட்டல், வகுத்தல், கழித்தல் என்று கணக்கிட்டால், விடை தவறாகத்தான் வரும். சரியாகப் போடத்தான், 'போட்மாஸ்'' (BODMAS) என்று சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
தண்ணீருக்கு நிறம் இல்லை. ஆனால், தண்ணீர் உறைந்து உருவாகும் பனிக்கட்டி வெள்ளையாக இருக்கிறது. இது ஏன்? அந்த வெண்மை எங்கே இருந்து வந்தது?தண்ணீரின் மேற்பரப்பு சமமானது, மென்மையானது. அதன் மீது படுகிற ஒளியின் சிறு பகுதியே எதிரொளிக்கப்படுகிறது. தண்ணீர்ப் பரப்பில் விழும் ஒளியின் பெரும் பகுதி நீரினுள் புகுந்து செல்கிறது. அதன் காரணமாகவே தண்ணீர் தெளிவாக, நிறமின்றிக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் 'Firefly' (ஃபயர்ஃப்ளை) என்கிறோம். கோலியாப்டிரன் (Coleopteran ) என்ற குடும்பத்தைச் சேர்ந்த மின்மினிப் பூச்சிகளில் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை! இவை வெளிப்படுத்தும் வெளிச்சத்தில் வெப்பம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
இந்த மாலு, பாலு, ஞாநி மாமா, இன்னும் நிறைய பேர் என்னை வாலு வாலுன்னு பேர் வெச்சுக் கூப்பிடறாங்க. கேட்டா, நான் வால் இருக்கற எலிங்கறாங்க. நான் எலி இல்ல. மவுஸ் (Mouse). மவுசுக்கு வால் கெடையாது. வயர் (wire)தான் உண்டு. அது கூட என்னை மாதிரி வை-ஃபை(Wi-fi) மவுசுக்கு கிடையாது. அப்பறம் என்னை ஏன் வாலுன்னு கூப்பிடணும் ? மனுஷங்களுக்குத்தான் வால் இருந்ததுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஏன்னா, நீங்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
மஞ்சு: ஹே சங்கர்! அந்த மரத்துல இருந்து ஒரு பலாப்பலம் பலுத்து பல்லத்துல விலுந்துருச்சுடா.சங்கர்: தப்புத் தப்பா தமிழ் பேசுறே. அந்தப் பழம் உன் தலைல விழுந்து இருக்கணும்… ம: எனக்கு அப்படிதான் பேச வருது. நா என்ன பண்ணட்டும்?ச: ஈஸியாவே சரியாப் பேசலாம். எப்படினு சொல்லித் தரேன். ம: சொல்லிக் குடு, சொல்லிக் குடு… எவ்ளோ ஸ்பீடா பிக் அப் பண்றேன்னு மட்டும் பாரு.ச: 'பல்'லுல இருக்குற 'ல' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
'ஆப்டிக்கல் இல்யூஷன்' (Optical Illusion) கேள்விப்பட்டிருப்பீர்கள். 'மாயத் தோற்றம்' என்று இதை விளக்கலாம். சில பொருட்களைப் பார்க்கும் போது, அவற்றில் இல்லாத ஒரு விஷயம் இருப்பது போல நமக்கு ஒரு மாயத் தோற்றம் கிடைக்கும். உதாரணத்திற்கு இருபரிமாணத் தோற்றத்தில் வரையப்படும் ஓவியங்களில் உள்ள உருவங்கள், நம் கண் முன் இருப்பது போல, ஒரு முப்பரிமாணத் தோற்றத்தைக் கொடுக்கும். இது கூட ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் அவசியம். இதர பாடங்களின் மீது மட்டும் கவனத்தைக் குவித்துவிட்டு மொழிப் பாடங்கள் மீது அசட்டை கூடாது. மொத்த மதிப்பெண்ணை அதிகரிப்பதில் மொழிப் பாடங்களுக்கும் பங்கு இருக்கிறதல்லவா? உயர் படிப்புகளிலும் உச்சம் பெற மொழியறிவே முதல் துணை. ஆகவே, இங்கு தமிழில் கூடுதல் மதிப்பெண் பெற ஆலோசனைகள் சில…தமிழ் முதல் தாள்01. ஒரு மதிப்பெண் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
யானை உரசியதில் கார் வேகமாக ஆடியது. கண்ணன், 'விருட்' என்று எழுந்து உட்கார்ந்தான். கத்தப் போன ரவியின் வாயைப் பொத்தினான் கண்ணன். “டேய்… ஒத்தை யானைடா. கத்தித் தொலைக்காதே. அதுக்குக் கோவம் வந்துரும்” என்றான். கையை மட்டும் நீட்டி டிரைவரின் தோளைப் பிடித்து ஆட்டினான். கொட்டாவி விட்டபடியே கண்ணைத் திறந்த டிரைவரையும், 'உஷ்…' என்று எச்சரித்தான். யானையோ எதையும் கவனித்ததாகத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
நமது முன்னோர் பயன்படுத்தி வந்த பல பொருட்கள் இன்று அதிகம் புழக்கத்தில் இல்லை. (புழக்கம் என்கிற வார்த்தையே புழக்கத்தில் இல்லையே சார்…) பல பொருட்கள் காணாமலும் போய்விட்டன. வாகனங்களிலும் வசிப்பிடங்களிலும் எவ்வளவோ மாற்றங்கள்! அந்தப் பொருட்கள், இடங்கள் எல்லாம் எப்படி இருந்தன என்பதை அறிமுகம் செய்வதே இந்தப் பகுதியின் நோக்கம். 'பட்ட'த்தில் இடையிடையே வந்து உங்களைப் பழைய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
எல்லோரது கைக்கும் மொபைல் போன் வந்துவிட்டது. கைக் கடிகாரம் காணாமலே போச்சு. ஸ்மார்ட் வாட்சுக்கு (Smart Watch) முன், ஸ்மார்ட் வாட்சுக்குப் பின் என காலத்தைப் பிரித்துவிடலாம் போல இருக்கிறது! (அதுதான் 'ஸ்வாமு' 'ஸ்வாபி'!)ஸ்மார்ட் வாட்ச் என்பது 'கையில் அணிந்து கொள்ளக்கூடிய கணினி' போன்றது. ஒருவகை டிஜிட்டல் (Digital) கைக்கடிகாரம். பொதுவான கைக்கடிகாரங்களை விட அதிக பயன்பாடுகளைக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
ஒரு வட்டத்தின் சுற்றளவு அதன் விட்டத்தைப் (டயாமீட்டர் - Diameter -- 'D') போல 'பை'மடங்கு (π) என்று படித்திருக்கிறோம் (πD). கணிதத்தில் 'பை' என்பது மிக அடிப்படையான ஒரு மாறிலி (கான்ஸ்டன்ட் - Constant).'பை'யின் மதிப்பு 3.14 என்பது நமக்குத் தெரியும். (பின்னத்தில் 22/7 என்று குறிப்பிடலாம்.) எளிதாக இருப்பதற்காக முழு எண்ணிற்குப் பிறகு இரண்டே தசம ஸ்தானங்களோடு நிறுத்திவிடுகிறோம். உண்மையில் 'பை' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
உலக 'பை' தினம் மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், 'பை'யின் மதிப்பான '3.14' என்ற எண்ணை, மார்ச் 14 குறிப்பதுதான்.அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)பை தினத்தில் பிறந்தவர். 'பை'யின் தோராயமான பின்ன மதிப்பு '22/7' என்பதால், அதனைக் குறிக்கும் ஜூலை 22ஆம் தேதியையும் கொண்டாட வேண்டும் அல்லவா? இந்த தினத்தை, 'பை அப்ராக்சிமேஷன் டே' (Pi Approximation Day) என்ற பெயரில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
மூங்கில் என்றதும் புல்லாங்குழலும், அதிலிருந்து வருகிற இனிய ஓசையும் முதலில் நினைவுக்கு வரும். வேறு என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறது? கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்..60 ஆண்டுகள் இதன் ஆயுட்காலம். மிகவும் வேகமாக வளரக் கூடியது. ஒரே நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். வீடுகள் கட்டவும், ஏணிகள் செய்யவும், மூங்கில்கள் பயன்படுகின்றன. மூங்கில் கூடைகள், பிரம்பு நாற்காலிகள், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பரதன் மும்முரமாக ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். தாத்தாவுக்கு போரடித்தது. “கொஞ்ச நேரம் விளையாடலாம், வாடா!” என்றார். “வேலை இருக்கு தாத்தா” என்றான் பரதன். “ஹோம் வொர்க் முடிக்கணும்!” “இருவத்தஞ்சு மணி நேரமும் ஹோம்வொர்க்கா?” சலித்துக் கொண்டார் தாத்தா. “தாத்தா, மாத்திச் சொல்லிட்டீங்க. ஒரு நாளைக்கு இருவத்து நாலு மணிநேரம்தானே!”“இப்போதைக்கு இருவத்து நாலு மணிநேரம்தான்!” ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
படுத்துக்கொண்டே யோசித்தான் முரளி. 'அம்மாவுக்காக கடைக்குப் போனபோது, குட்டிப் பெண்ணும், பாட்டியும் ரோடைக் கடக்க உதவி செய்தபோது - இந்த இரண்டு சமயத்திலும் சிரிக்கிற, சந்தோஷமான முகமாக இருந்தது.பூரிக்காக அம்மாகிட்ட சண்டை போட்டபோது கோணலாக இருந்தது. அப்படின்னா யாருக்காவது உதவி பண்ணினா முகம் சிரிச்ச முகமாக இருக்குமா? நான் மறுபடியும் கேட்ட போது அம்மாதானே பூரி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
உரிய விடைகளோடு இலக்கணப் பிழை, எழுத்துப் பிழையின்றி கையெழுத்து தெளிவாக இருந்தால் தமிழ்ப்பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறலாம்.ஒரு மதிப்பெண் புறவய (Objective) வினாக்கள்: செய்யுள் பகுதியில் 10, உரைநடைப்பகுதியில் 10 கேட்கப்படுகின்றன. இவற்றிற்கு உரிய விடையைத் தேர்ந்தெடுத்தல், கோடிட்ட இடங்களை நிரப்புதல் ஆகியனவற்றைத் தயார் செய்க.செய்யுள் பகுதியில் 1,2,3,4,5,8,9 இயல்களில் உள்ள ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
ஜன. 30 - மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், ஜெர்மனியின் கெர்பர், உலகின் 'நம்பர்-1' அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மோதினர். இதில் அபாரமாக ஆடிய கெர்பர் 6 - 4, 3 - 6, 6 - 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக 'கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்றார். இதன்மூலம் கெர்பர், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ. ஒற்றையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
ஜன. 31 - பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அசத்திய நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், ஒருநாள் அரங்கில் தனது 50ஆவது சிக்ஸர் அடித்தார். இதுவரை இவர், 33 இன்னிங்சில் 51 சிக்ஸர் அடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 50 சிக்ஸர் அடித்த வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். இதற்கு முன், வெஸ்ட் இண்டீஸின் ரஸ்சல் 42 இன்னிங்சில் எட்டியதே சாதனையாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
ஜன. 31 - மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி 3 - 0 என முழுமையாக வென்றது. இதன் மூலம் 139 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் 'வாஷ் அவுட்' செய்த முதல் கேப்டன் என்ற பெருமை பெற்றார் தோனி. சர்வதேச 'டுவென்டி-20' போட்டி அணிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இந்திய அணி 'நம்பர்-1' இடத்துக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 1 - மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீரருமான செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச் கோப்பையை தக்கவைத்துக் கொண்டார். அவர் 6ஆவது முறையாக ஆஸி. ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று ராய் எமர்சனின் சாதனையை சமன் செய்தார்.இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவுடன் மோதிய ஜோகோவிச் வென்று, 6ஆவது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 3 - சேலம்: பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான நீச்சல் போட்டி, சேலத்தில் நடந்தது. அதில், சேத்துப்பட்டு கிறிஸ்தவ்க் கல்லுாரி மேல்நிலைப் பள்ளி மாணவி ப்ரீத்தி பங்கேற்றார். அவர், 50 மீ. மற்றும் 100 மீ. 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில் முதலிடம் பெற்று, தங்கம் வென்றார். ஃப்ரீ ஸ்டைல், 100 மீ. பிரிவிலும் முதலிடம் பிடித்த ப்ரீத்தி, மூன்றாவது தங்கம் வென்றார். அவருக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 2 - லக்னோவில் நடைபெற்ற 'சையது மோடி சர்வதேச பேட்மின்டன்' தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். விறுவிறுப்பான பைனலில் சீனாவின் ஹுவாங் யுக்சியாங்கை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
பிப். 5 - அசாம் தலைநகர் கவுகாத்தியில் 12ஆவது தெற்கு ஆசிய விளையாட்டு தொடங்கியது. போட்டியில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கான அணிவகுப்பு நடந்தது. இந்தியா சார்பில் ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோசால் மூவர்ணக்கொடி ஏந்தி வந்தார். இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா 'டிஜிட்டல்' முறையில் ஜோதியை ஏற்றி வைத்தார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST
சர்வதேச 'டுவென்டி - 20' போட்டி வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் யார்?ரிச்சர்டு லேவி (தென் ஆப்ரிக்கா), 45 பந்து, எதிர் - நியூசிலாந்து, இடம் - ஹாமில்டன், 2012 'பிபா' (FIFA) உலக கோப்பை கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்த வீரர் யார்? மிரோஸ்லவ் குளோஸ் (ஜெர்மனி) 16 கோல் (24 போட்டி, 2002 - 2014) ஒற்றையர் பிரிவில் அதிக 'கிராண்ட் ஸ்லாம்' பட்டம் வென்ற வீரர் யார்? ரோஜர் ஃபெடரர் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X