Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
உலகில், அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்கள் வாழும் நகரம் என்ற பெருமையை, முதல் தடவையாக, சீனத் தலைநகர் பீஜிங் பெற்றுள்ளது. பீஜிங்கில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் மொத்தம் 100 பேர் என ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த நியூயார்க் நகரைப் பின்னுக்குத் தள்ளி, பீஜிங் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் நியூயார்க், மூன்றாவது இடத்தில் மாஸ்கோ, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
பி.எஸ்.எல்.வி. சி - 32 ராக்கெட், மார்ச் 10ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் உடன் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1- எஃப் என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இது கடல்வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது. பாதுகாப்பான கடல் பயணத்திற்கும் இது மிகவும் பயனுள்ளதாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
அடுத்த மூன்று ஆண்டுகளில் அஞ்சலக ஏ.டி.எம்.- கள் பல இடங்களில் நிறுவப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அஞ்சலக ஏ.டி.எம். மற்றும் மைக்ரோ ஏ.டி.எம்.- களில் அரசு கவனம் செலுத்தும். அஞ்சல் துறையில் 25 ஆயிரம் டிபார்ட்மென்டல் அஞ்சலகங்களும், 1.3 லட்சம் கிராமப்புற அஞ்சலகங்களும் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
பிளாஸ்டிக் கழிவுகளால் இந்தோனேஷியாவில் ஆறுகளும், கடல்களும் நிரம்புகின்றன. இது அந்நாட்டு சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறைகளைப் பெரிதும் பாதிக்கிறது. இதைத் தடுக்கும் நோக்கத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படும் என்ற திட்டத்தை இந்தோனேஷிய அரசாங்கம் செயல்படுத்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
'ஒலியைவிட அதிக வேகத்தில் செல்ல வேண்டும்; சூழலை மாசுபடுத்தக் கூடாது; அதிக இரைச்சல் கூடாது...' இப்படிப்பட்ட அம்சங்களுடன் அதிவேகப் பயணிகள் விமானத்தைத் தயாரிக்கும் முயற்சியில் நாசா இறங்கி உள்ளது. இதற்காக விமானத் தயாரிப்பாளர்களிடம் விமானத்திற்கான வடிவமைப்பு ஆலோசனைகளைக் கேட்டுள்ளது நாசா. இதில், தேர்வு பெறும் நிறுவனத்தின் வடிவமைப்பைக் கொண்டு, நாசா விண்வெளி ஆய்வுக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
அமைதிக்கான நோபல் பரிசு, 2016ஆம் ஆண்டிற்காக 376 பேர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர். தனி நபர்களில் 228 பெயர்களும், நிறுவனங்களில் 148 பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன. நோபல் பரிசுக்கு அதிகமான பெயர்கள் பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல் முறை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
வாட்ஸாப் அப்ளிகேஷனை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு, பல புதுமையான வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த நிறுவனம் இப்பொழுது வாட்ஸாப் மூலம் ஆவணங்களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே, இதில் வீடியோ, ஆடியோ, படம், தொடர்புகள் ஆகியவற்றை அனுப்ப முடியும். தற்போது, கூடுதலாக பி.டி.எஃப் போன்ற ஆவணங்களையும் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
டிரைவர் இல்லாமல் தானாக இயங்கக்கூடிய கூகுள் கார்கள் ஓராண்டுக்கும் மேலாக சோதனை ஓட்டத்தில் உள்ளன. கலிஃபோர்னியா மாகாணம், மவுன்ட் ஹில் பகுதியில் நடந்த சோதனை ஓட்டத்தில் சாலையில் சென்றிருந்த பஸ் மீது கூகுள் கார் மோதியது. கடந்த 2015 ஜூலை முதல் இதுவரை 14 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. “தவறுகளைத் திருத்தி வருகிறோம், இனிமேல் விபத்துகள் நேரிடாத வகையில் கூகுள் தானியங்கி காரின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
பெரியவர்களுக்கு மட்டுமல்ல, பள்ளிக்குப் போகும் வயதில் இருப்பவர்களுக்கும் டைப் 1 நீரிழிவு (டயபெடீஸ் - Diabetes) நோய், அதாவது சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த வியாதி தாக்கிவிட்டதே என்று, கவலைப்படத் தேவை இல்லை. இந்த நோயின் அறிகுறிகள் பற்றி உங்களுக்கு சொல்லித்தர ரோபோ ஒன்று வரப்போகிறது!ராபின் (ரோபோ இன்ஃபேன்ட் - Robo Infant) என அழைக்கப்படும் இந்த ரோபோவை பிரிட்டன், ஹெர்ட்ஃபோட்ஷைர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
An Indian Researcher named Dr. J Fathima Benazir, from Indian Institute of Sciences, Bangalore has discovered a safest nucleic acid gel for use in DNA/RNA testing. Gel stains are fundamental to DNA/RNA testing. They bind to DNA/ RNA and spot them in testing process. Currently there are 30 such stains available world wide, but unfortunately all of them are carcinogenic. The new gel stain branded as 'tinto rang' is a plant extract and is claimed to be the safest in the world. More over the stain also binds fast to DNA/RNA strands thus reducing the duration of molecular tests. This is likely to cut the time taken to diagnose conditions such as HIV to a day, from 3 to 45 days at present. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் - த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிசக்கரவாகம் எனும் பறவை மழையை மட்டுமே பருகி வாழுமாமே? பாடலில் கேட்டிருக்கிறேன்...!- வா.காயத்ரி, ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.மகாகவி காளிதாசன் தன்னுடைய 'மேகதூதம்' என்ற நூலில் சாதகப் பறவை எனச் சொல்லப்படும் பறவை குறித்துப் பாடியுள்ளார். நீங்கள் சொன்ன சக்கரவாகம்தான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்? எதற்காக வந்தார்கள்? இந்தக் கேள்விகளுடன் ஹிஸ்டரி தமிழ் சேனலில் வேற்று உலகவாசிகள் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதில் வரும் ஈஸ்டர் தீவு பற்றி பார்த்து இருப்பீர்கள்! தென் அமெரிக்காவைச் சேர்ந்த பெரு நாட்டுக்கு கீழே இருக்கும் நாடு 'சிலி'. நீண்ட நேர் கோடு போல, மேலிருந்து கீழ்நோக்கிப் பரவியிருக்கும் ஒரு நாடு. இதன் மேற்குப் பகுதி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
நான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியாளர். இந்திய ராணுவத்தின் லெப்டினன்டாக 1858ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டேன். பல பதவி உயர்வுகளுடன், 1888ஆம் ஆண்டு தலைமைக் கண்காணிப்பு பொறியாளராகி, பெரியாறு அணை கட்டும் பணியின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன். அணை கட்ட அதிக நிதி தேவைப்பட்டதால் என் சொத்துக்களையும் விற்றேன். அணை கட்டும் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததால், 'இந்தியாவின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
நீர் ஊர்தி: ஓர் இடத்தில் இருந்து மக்களையோ, பொருட்களையோ இன்னோர் இடத்திற்கு நீர் வழியாகச் எடுத்துச் செல்லப் பயன்படும் வாகனம். சின்ன ஓடைகளிலும் பெரும் ஆறுகளிலும் கடலிலும் செல்வதற்குப் பல நீர் ஊர்திகள் உள்ளன. இயற்கையின் சூழலில், தண்ணீரின் சலசலப்பில் பயணம் செய்வது அலாதியான சுகம். நம் முன்னோர்கள் பயணம் செய்யவும், வாணிபம் செய்யவும் படகு, கப்பல் போன்ற கலங்களை அதிகமாகப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
பாலுவின் கையில் தடி ஊன்றிக் கொண்டு ரிஹர்சல் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே வந்த ஞானி மாமா அவனைப் பார்த்து 'என்ன பாலு, கால்ல அடியா? நான் வேணா உன்னை உப்பு மூட்டை தூக்கிட்டுப் போகட்டுமா?' என்றார். எனக்கு சிரிப்பு வந்து விட்டது.குட்டிப் பசங்களை முதுகில் தூக்கி வைத்து விளையாடுவதை ஏன் வெல்ல மூட்டை, சர்க்கை மூட்டை என்றெல்லாம் சொல்லுவதில்லை என்று கேட்டேன். 'உப்புதான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
ஸ்பானீஷ் மொழியில் மாரிப்போசா (Mariposa) என்றால் வண்ணத்துப்பூச்சி என்று அர்த்தம். இவற்றின் வாழ்க்கைமுறை ஆச்சரியங்கள் நிறைந்தது. முதலில் சாதாரண சிறு முட்டையாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மாறி, ஊர்ந்து செல்லும் புழுவாக மாறுகிறது. இதற்குமேல் எதுவும் மாறிவிடாது என்று பார்த்தால் பறக்கும் பூச்சியாக மாறிப் பறக்கிறது. இந்தச் செயலை 'வளர்சிதை மாற்றம்' என்கிறோம்.முட்டை (எக் - Egg): ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
Aல் இருந்து Z வரை, பூஜ்ஜியத்தில் இருந்து 9 வரை. இவையெல்லாம் சித்திர எழுத்துகள் அல்ல. வண்ணத்துப்பூச்சியின் இறக்கையிலிருந்து எடுக்கப்பட்ட வடிவங்கள். இந்தப் படங்களை எடுத்தவர் நார்வே நாட்டுப் புகைப்படக் கலைஞர் 'க்ஜெல் சாண்ட்வெட்' (Kjell Sandved). “வாழ்க்கையின் பெரும்பகுதியை, இயற்கை அழகைப் புகைப்படம் எடுப்பதிலேயே செலவழிக்கிறேன்” என்று அவருடைய குறிப்பில் எழுதி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
ஓர் இயல் எண்ணின் இலக்கங்களின் வர்க்க மதிப்புகளைக் கூட்டினால் நமக்கு மற்றொரு எண் கிடைக்கும். இந்தப் புதிய எண்ணுடைய இலக்கங்களின் வர்க்க மதிப்புகளையும் கூட்ட வேண்டும். இப்போது வேறொரு புதிய எண் கிடைக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக இலக்கங்களின் வர்க்க மதிப்புகளைக் கூட்டிக்கொண்டே இருக்கவேண்டும். சில சமயம் எண் ஒன்றில், '1' வர்க்கக் கூட்டல் முடிவடையும். அப்படி, ஒன்றில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
'ஓடுங்க.. ஓடுங்க... இந்தப் பக்கம் மட்டும்தான் குரங்குகள் இல்லை' என்றபடி ஓடத் தொடங்கினான் கண்ணன். பதறி அடித்துக் கொண்டு மற்றவர்களும் பின் தொடர்ந்தார்கள்.குரங்குகள் விடவில்லை. அவர்களை ஆக்ரோஷத்துடன் விரட்டி வந்தன. சிறுவர் கூட்டம் டிரைவரோடு ஓடியது. தங்களால் முடிந்த அளவு வேகத்தைக் காட்டியது.மூன்று புறங்களிலும் அணை கட்டிய விதமாக அந்தக் குரங்குகள் விரட்டின. ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
முன்னா : ஹேய் சங்கர். தாத்தாவுக்கு ஆலங்குச்சி வேணுமாம். எங்க கிடைக்கும்? சங்கர் : நம்ம ஸ்கூல் கிரவுண்ட்லதான் ஆலமரம் இருக்கே. வா போகலாம்.மு: அங்க பான்யன் ட்ரீதான இருக்கு? ச: உன் தலையில கொட்டப் போறேன். ஆலமரத்தோட இங்லீஷ் பேர்தான் அது. மு: சரி சரி. இந்த டீடெய்ல்ஸ் யாரும் சொன்னதே இல்ல. அதான் கன்ஃபியூஷன்.ச: பெர்சியா வளைகுடாவுல 'பனியாக்கள்' அப்படிங்குற வியாபாரிகள் வணிகத்துக்காக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
பொருட்களைப் போட்டு வைப்பதற்கு ஒரு சிறிய கூடை வேண்டும். அல்லது யாருக்காவது கிஃப்ட் தருவதற்கு சின்னக் கூடை தேவைப்படும். கடைக்குச் சென்று, பிளாஸ்டிக் கூடை வாங்குவதை விட நாமே செய்யலாமே! அதுவும் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத பொருட்களில் செய்தால் எவ்வளவு சந்தோஷம் கிடைக்கும். பேப்பரில் எளிமையான அழகான கூடை செய்யலாம்... தேவையான பொருட்கள்: 45 செ.மீ., நீளம், 2.5 செ.மீ., ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
உலக மகளிர் தினம் மார்ச் 8'பள்ளங்களைப் பார்ப்பதல்ல வாழ்க்கை; சிகரங்களைத் தொடுவதே' என்று சொன்ன ஜப்பானியப் பெண் 'ஜூன்கோ டபெய்', தன் 21ஆம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார். கஷ்டங்களை ஜெயிக்க படைப்பிலக்கியம் கை கொடுக்கும் என்று உணர்ந்த ஸ்வீடன் பெண் 'செல்மா' இலக்கியத்திற்கான நோபல் பரிசை முதல் பெண்மணியாகப் பெற்றார். பண்டித ராமாபாய், கவிக்குயில் சரோஜினி நாயுடு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
இந்த கிரேக்க வார்த்தைக்கு 'முக்கோணம்' என்று பொருள். கிரேக்க மொழி அகர முதலியில் (Alphabet) நான்காவது எழுத்தாக இருக்கிறது. முக்கோண வடிவம் கொண்ட நைல் ஆற்றுச் சமவெளியைக் குறிப்பிடுவதற்கு முதலில் 'டெல்டா' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து ஆற்றுச் சமவெளிகளும் அந்தப் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
தமிழ்நாட்டில் முப்பந்தல் என்கிற ஊரில் அதிக வேகத்தில் காற்று வீசுகிறது. அதிகக் காற்று வீசுவதில், ஆசியாவில் முதல் இடத்தையும் உலகில் 2ஆவது இடத்தையும் பெற்று இருக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றி உள்ள மலைப்பகுதி கிராமங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைளை நிறுவி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
மொபைலில் ஆங்ரிபேர்டு கேம் விளையாடுகிறீர்கள். அதில் வரும் ரெட் பேர்டு உங்களை கோவமாகப் பார்க்கிறது. கீச் கீச்சென கத்திக்கொண்டே, அதனுடைய எதிரிகளைத் தாக்கப் போகாமல் கூரிய மூக்குடன் உங்களைத் தாக்க வருகிறது. சட்டென நீங்கள் குனிந்துகொள்ள, அது உங்கள் முதுகுக்குப் பின்னால் போய் விழுகிறது. எப்படி இருக்கும் இந்த விளையாட்டு அனுபவம்.? இதுதான் மெய்நிகர் உண்மை (வர்ச்சுவல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
கணினி அறிவியல்ஒரு மதிப்பெண் வினாக்கள். (75x1 = 75 மதிப்பெண்கள்): ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 3 கேள்விகள் வரும். பாடம் முழுவதையும் ஒருமுறை படிப்பது முக்கியம். Table, Snippets முக்கியம். இரண்டு மதிப்பெண் வினாக்கள் (20x2 = 40 மதிப்பெண்கள்):Vol. 1ல் இருந்து 10 கேள்விகள் வரும். ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் 2 கேள்விகள். Vol. 2ல் இருந்து 15 கேள்விகள் வரும். பாடம் 2ல் 3 கேள்விகள், 5, 6 பாடங்களில் தலா 2 கேள்விகள், 10, 11, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
விளையாட்டுப் பொருட்கள் இருக்கும் அறைக்குள் அமலா நுழைந்ததும், “வா. இங்கே வந்து இந்தக் கண்ணாடி முன்ன நில்லு.” என்று ஒரு குரல் கேட்டது. 'ஹை… மாயா டீச்சர்! எனக்கு முன்னே இங்கே வந்துட்டாங்க!?' அமலா உற்சாகமாகக் குரல் வந்த திசையைப் பார்த்தாள். அங்கே இருந்தவர் மாயா டீச்சர் மாதிரியே இல்லை. கறுப்பாக, குண்டாக, பெரிய கண்கள், பெரிய உதடுகள், சுருட்டை முடி. ஆப்பிரிக்கப் பெண் மாதிரி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
வீட்டுக் காவலில் 1990ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு நவம்பர் 13 வரை இருந்தா. அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு 1991ல் வழஙகப்பட்டது.வாழும்போதே வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடிப்பவர்கள் சிலர்தான். அந்தச் சிலரில் ஒருவர், மியான்மர் (பழைய பெயர் பர்மா) நாட்டின் 'ஜனநாயக தேசிய லீக்' கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi).மியான்மரில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டம் நடத்தியவர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் உலகில் இருந்து விடை பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவரது வயது 53. ஆக்லாந்தில் தனது இல்லத்தில் காலமானார்.வர்ணனையாளர், ஆலோசகர், எழுத்தாளர் எனப் புகழ் பெற்றவர். தொடர் நாயகன் விருதுபெற்ற ஒரே கேப்டன் இவர்(1992 உலகக் கோப்பை). டெஸ்ட் போட்டிகளில் 299 ரன்களில் ஆட்டமிழந்த ஒரே வீரரும் இவர்தான். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
டேபிள் டென்னிஸ் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடந்து வருகிறது. தகுதிச் சுற்றில் இடம் பெற்றிருந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் குரோஷியாவை எதிர்கொண்டது. இதில் தீரம் காட்டிய இந்திய வீராங்கனைகள் மவுமா தாஸ், மனிகா பத்ரா, ஷாமினி ஆகியோர் வெற்றியை எட்டினர். 3 - 0 என்று வென்ற அணி, லீக் ஆட்டத்தில் முதலிடம் பிடித்ததுடன் பிரதானச் சுற்றுக்குத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
தமிழக விளையாட்டு விடுதிகள் / விளையாட்டுப் பள்ளிகளில் இறகுப் பந்து, கூடைப் பந்து, குத்துச் சண்டை, கிரிகெட், கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகளுக்கான பயிற்சிகள் தரப்படுகின்றன. 7, 8, 9, 11 வகுப்பு மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வு ஏப்ரல் 25 முதல் 30 வரை நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளின் 2016 - 17 ஆண்டுக்கான சேர்க்கைக்கு உரிய படிவங்களை மார்ச் 11-ஆம் தேதி முதல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் தேசிய அளவிலான 46-ஆவது குத்துச் சண்டைப் போட்டியில் 52 கி.கி. எடைப் பிரிவில் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சண்முகப்பிரியன் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
வங்கதேசத்தில் நடக்கும் ஆசிய கோப்பை 'டுவென்டி-20' லீக் போட்டியில் இந்திய அணி, யு.ஏ.இ. அணியை எதிர்கொண்டது. முதலில் 'பேட்' செய்த யு.ஏ.இ. அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 81 ரன் எடுத்தது. பின் ரோகித் (39), யுவராஜ் (25*) கைகொடுக்க, இந்திய அணி 10.1 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 82 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஏற்கெனவே வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கையை வென்ற இந்திய அணி, நான்காவது வெற்றியுடன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
பிரீமியர் தொடரில் பங்கேற்கும் டில்லி அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் நியமனம் செய்யப்பட்டார். இவர், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
தென் ஆப்ரிக்கா சென்ற ரிது ராணி தலைமையிலான இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஜெர்மனியுடன் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தது. இருப்பினும், கடைசியாக ஆடிய ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கணக்கில் தொடரை வெற்றியுடன் நிறைவு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
அடுத்த 'ஃபிஃபா' உலக கோப்பை கால்பந்து தொடர் எங்கு, எப்போது நடக்கவுள்ளது? இடம்: ரஷ்யா (2018 ஜூன் 14 - ஜூலை 15) 'டுவென்டி-20' உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர்?இந்தியாவின் யுவராஜ் சிங் (12 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக. டர்பன் - 2007) ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை நட்சத்திரம்? விஜேந்தர் சிங் (பீஜிங் ஒலிம்பிக் - 2008, வெண்கலப் பதக்கம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2016 IST
சுந்தரும் கலையும் காட்டுக்குச் சென்றார்கள். அவர்கள் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கியபோது, தவறுதலாக ஒரு கரடிக்குக் குறுக்கே ஓடினார்கள். ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டார்கள். சிறிது நேரத்தில் கரடி அங்கிருந்து சென்றுவிட்டது. சுந்தருக்குத் தாகமாக இருந்தது. கலையிடம், ''எனது தண்ணீர் வெளியே ஓடிவிட்டது. உன் தண்ணீரை எனக்குத் தருகிறாயா?'' என்று கேட்டான்.1) தவறுதலாக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X