Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
சீனாவில் பல மெகா நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளிலிருந்து, மக்களை இந்நகரங்களுக்கு இடம்பெயர வைக்க, அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இடப்பெயர்வைத் துரிதப்படுத்த, அதிக அளவு உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில், சூகாய் நகரம் மற்றும் ஹாங்காங்கை இணைக்க, 55 கி.மீ. நீளத்துக்கு கடல் வழிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
உருவத்தில் சிறிய கொசுவையும் ரேடார் தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பதை, சீன விஞ்ஞானிகள் சாத்தியமாக்கியுள்ளனர். பீஜிங் தொழில்நுட்ப நிறுவன ஆய்வுக்குழுவினர் உருவாக்கியுள்ள இந்த ரேடாரின் உதவியோடு, 2 கி.மீ.க்கு அப்பால் பறக்கும் கொசுக்களையும் கண்டறிய முடியும். அந்தக் கொசுக்களின் இறக்கை அசைவின் வேகம், பாலினம் ஆகியவற்றையும் அறிய முடியும். 'கொசுக்களின் இடப்பெயர்வைக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
விண்வெளியில், பொதுமக்கள் தங்குவதற்கு சொகுசு ஹோட்டல் ஒன்றைக் கட்டப்போவதாக ஓரியன் ஸ்பேன் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், 'ஸ்பேஸ் 2.0' என்ற பெயரில் விண்வெளி தொடர்பான மாநாடு நடந்தது. அதில், பங்கேற்ற ஓரியன் ஸ்பேன் நிறுவனம், விண்வெளியில் ஹோட்டல் திட்டத்தை அறிவித்துள்ளது. 'வரும் 2021க்குள் விண்வெளியில் ஹோட்டல் கட்டி முடிக்கப்படும். 2022ஆம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
ஆஸ்திரேலியாவில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் பளு தூக்குதல் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம் கிடைத்துள்ளது. இந்தியா சார்பில், 77 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற சதீஷ் சிவலிங்கம், தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சதீஷ், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த முறை ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
Migrating birds appear to have a 'sixth sense' which means they always manage to find their nesting grounds, - a talent that has long mystified scientists. Now researchers have found the secret to this skill. It is down to a protein in the bird's eyes that is sensitive to blue light. This protein lets them 'see' Earth's magnetic field as an overlay on their normal field of view. Experts looked at robins and zebra finches finding Cry4 protein was responsible. For a bird to know roughly where it is in the world, and correct itself if it goes off course, it needs what is known as 'true navigation'. They do this by using the magnetic field to plot their migratory ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. சூரியன், வானவில் போன்றவை பல்வேறு நிறங்களில் தெரியக் காரணம் என்ன?பி.அபர்ணா, 12ஆம் வகுப்பு, கே.எம்.சி. பப்ளிக் சீனியர் மேல்நிலைப் பள்ளி, பெருமாநல்லூர், திருப்பூர்.ரேடியோ அலைகள், கைபேசி செயற்படும் மைக்ரோவேவ் அலைகள், புறஊதாக்கதிர் என, பல்வேறு மின்காந்த அலைகள் இருக்கின்றன. அவற்றைப்போல, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
டெய்சி ஆஷ்ஃபோர்டு (Daisy Ashford) - (3 ஏப்ரல் 1881 - 15 ஜனவரி 1972)இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டெய்சி ஆஷ்ஃபோர்டு. இயற்பெயர் மார்க்ரெட் மேரி ஜூலியா டெவ்லின். மிகச்சிறு வயதிலேயே கதை சொல்லும் திறன் பெற்றிருந்தார். முதல் நாவலான 'இளம் பார்வையாளர்கள்' (The Young Visitors) எழுதியபோது, அவரது வயது ஒன்பதுதான். அவரே மறந்துவிட்ட இந்தப் படைப்பை, அவருடைய நண்பர்கள் பலரும் வாசித்துள்ளனர். எழுதப்பட்டு 28 ஆண்டுகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
நேஷனல் புக் ட்ரஸ்ட் (National Book Trust)சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு மிகச் சிறந்த வாசகர். அவர் கலை, பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களைப் புத்தகங்கள் வழியே நாடு முழுவதும் கொண்டு சேர்க்க விரும்பினார். அதனைத் தொடர்ந்து 'நேஷனல் புக் ட்ரஸ்ட்' நிறுவனம் 1957-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
சாகசக் கதைகளைப் படிக்க எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்! அதிலும் சிறுவர்கள் செய்யும் சாகசம் என்றால் கூடுதல் சுவாரசியம். அமெரிக்க எழுத்தாளரான மார்க் ட்வெய்ன் (Mark Twain) எழுதிய புகழ்பெற்ற புத்தகம் 'டாம் சாயரின் சாகசங்கள்' (Adventures of Tom Sawyer). டாம் சாயர் என்ற சிறுவன் மேற்கொண்ட சாகசங்களை, இந்தக் கதை விவரிக்கிறது.டாம், தன் வளர்ப்புத் தாய் வீட்டில் வளர்கிறான். குறும்புத்தனம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
திறந்த கல்விமுறையை முன்னெடுக்கும் டேவிட் வைலிவழக்கம்போல் நான் லேட். சரியாகச் சொன்னால் அப்பாதான் லேட். இன்று பள்ளியில் ஓபன் டே. பள்ளிக்கு அப்பா வரவேண்டும். பதினோரு மணிக்குள் பள்ளிக்குப் போகவேண்டும் என்றால், அப்பா பத்தரைக்குத்தான் அவசர அவசரமாக அலுவலகத்தில் இருந்து வந்தார். அப்புறம், ஸ்கூலுக்குப் போய் என்னோட வகுப்பு டீச்சரைப் பார்த்துப் பேசிவிட்டு, ரிப்போர்ட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
விஞ்ஞானிகள் என்றாலே ஆண்கள்தானா? பெண்களே இல்லையா? இந்தக் கேள்வி நம்மைப் போலவே நந்திதா ஜெயராஜ், ஆஷிமா டோங்கரா என்ற இரண்டு இளம் பத்திரிகையாளர்களைத் தொற்றிக்கொண்டது. விளைவு, இந்தியா முழுக்க உள்ள பல்வேறு அறிவியல் துறைகளுக்குள் புகுந்து புறப்பட்டார்கள். அவர்கள் கண்டெடுத்த 100 அறிவியல் முத்துகளை 'லைஃப் ஆஃப் சயின்ஸ்' (Life of science) என்ற இணையதளத்தில் தொகுத்துள்ளார்கள். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
உலகின் பழமையான மொழிகளுள் சீன மொழியும் ஒன்று. தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளை எப்படிக் கற்றுக்கொண்டோம்? எழுத்துகளை முதலில் கற்றுக்கொண்டோம். அதன்பின் சொற்களை வாசித்தோம். சீன மொழியை இந்த முறையில் கற்க முடியாது. ஆம், சீன மொழியில் எழுத்துகளே கிடையாது; சொற்கள்தான் உண்டு. சொற்களின் வடிவங்கள், சித்திரங்களாக இருக்கும். எப்படி அந்த மொழியைக் கற்பது? 'மாண்டரின் ஸ்கூல் ஆஃப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
'வீதிக்குப் போகாத' என்று குழந்தைகளைப் பெற்றோர் கடிந்து கொண்ட காலம்போய், 'கொஞ்ச நேரமாவது வெளியில போய் விளையாடிட்டு வா' என்று கெஞ்ச வேண்டியதாக இருக்கிறது. அந்த அளவுக்கு, வீடியோ கேம், 'டிவி'களில் குழந்தைகள் முடங்கிப் போய்க் கிடக்கிறார்கள். வீடியோ கேம்களுக்கு அடிமையாகவே ஆகி விட்டவர்களும் உண்டு. ஓடியாடி விளையாடுவது குறைந்து விட்டது.சென்ற தலைமுறைக் குழந்தைகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
தமிழகத்தின் முக்கியமான 'டூர்' பிரதேசங்களில் ஒன்று, கேரள எல்லையில் இருக்கும் பரம்பிக்குளம். இந்த இடத்தின் சுவாரசியமே இதன் யானைகள் தான். பசுமை மிச்சமிருக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று. சென்னையிலிருந்து கோவை வரை ரயில். பின்னர், ஒரு வேனில் பொள்ளாச்சி வழியாக, பரம்பிக்குளம் பயணம். அங்கே வனத்துறை கெஸ்ட் ஹவுஸில் இரவு தங்கினோம். தனியார் தங்குமிடங்களும் இருக்கின்றன. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
ஏப்ரல் 12, 2011 - உலக விண்வெளி நாள்யூரி ககாரின் ஏப்ரல் 12, 1961இல் முதல் மனிதனாக விண்வெளி சென்றார். இந்தப் பயணம் நிகழ்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக ஆண்டுதோறும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.ஏப்ரல் 13, 1919 - ஜாலியன்வாலா பாக் படுகொலைரௌலட் சட்டத்தை எதிர்த்து, ஜாலியன்வாலா பாக் திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. இதைக் கலைக்க ஜெனரல் டயர் தலைமையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
கஸ்தூரிபா காந்தி11.4.1869 - 22.2.1944போர்பந்தர், குஜராத்சாதாரணமானவராக இருந்து, ஓர் அசாதாரணமான நபரை உருவாக்கினார். இவர் இல்லையெனில் காந்தி, மகாத்மாவாக மாறியிருக்க முடியாது. காந்தி, 'தேசத் தந்தை' ஆனதன் பின்னணியில், இந்தத் தாயின் பங்களிப்பு மிக அதிகம். மகாத்மாவுக்கு இணையான புகழுக்குரிய அவதார மனுஷி கஸ்தூரிபா காந்தி.தன்னைவிட வயதில், சில மாதங்கள் இளையவராக இருந்த, காந்தியுடன் 13 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X