Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
ஹரியாணா மாநிலத்தில், வங்கிக்கொள்ளையில் ஈடுபட முயன்ற கொள்ளையர்களை, இரண்டு பெண்கள் மடக்கிப்பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். அவர்களுக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குருகிராம் நகர் பகுதியில் அமைந்துள்ள, பதுஷாபூர் எஸ்.பி.ஐ., கிளையில், துப்பாக்கியுடன் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர். தாக்குதலுக்கு உள்ளான போதும், அந்தப் பெண்கள் கொள்ளையர்களை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
ரயிலில் பயணிகளுக்கு உணவு தயாரித்து விற்பனை செய்வதற்கு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.தற்போது, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், நாளொன்றுக்கு 11 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விற்பனையாகின்றன. இந்நிலையில், உள்ளூர் மக்களின் தொழில்வாய்ப்பை மேம்படுத்தவும், பயணிகளுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், ரயில்வே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
பூமி மற்றும் நிலவுக்கு இடையே லிஃப்ட் அமைத்து, மனிதர்களை குடியேற்றலாம் என்று யோசனை அளித்த சென்னை மாணவரை, நாசா பரிசளித்துப் பாராட்டியுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த சாய் கிரண் (18 வயது), தற்போது சென்னையில் படித்து வருகிறார். மனிதர்களை விண்வெளியில் குடியேற்றுவதற்குத் தேவையான யோசனைகளை வரவேற்று, அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா, போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இதில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திபூர் புலிகள் சரணாலயத்தில், பிரபலமானது 'பிரின்ஸ்' புலி, (12 வயது). கடந்த 2013ம் ஆண்டு, பிரின்ஸ் ஒரு காட்டெருமையை வீழ்த்தும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பிரின்ஸ் பிரபலமானது. பந்திபூர் வனப்பகுதியில் அதிக முறை (27 தடவை) புகைப்படம் எடுக்கப்பட்ட புலி என்ற பெருமையை பெற்றிருந்த பிரின்ஸைக் காண, ஏராளமான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
Psychologists have created world's first universal charts for normal amount of crying in babies during first three months. On average, babies around the world cry for around 2 hours per day in first two weeks, peak at 2 hours 15 mins at six weeks - and crying reduces to 1 hour 10 minutes by week twelve. Their study found that babies cry more in Britain, Canada and Italy, than the rest of the world, according to new research. In Denmark, Germany and Japan, parents deal with the least amount of crying and ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிரயிலில் பயணம் செய்யும்போது, மரம் போன்றவை நமக்கு எதிர்த் திசையில் நகர்வது போல உணர்வது ஏன்? வி.சாந்தகோபாலன், மதுரை.இது ஒருவகை காட்சித் தோற்றம் அல்லது காட்சி மயக்கம். ரயில் சீரான வேகத்தில், அலுங்காமல் குலுங்காமல் மெதுவாக நகரும் சமயத்தில் மட்டுமே, இந்த காட்சித் தோற்றம் ஏற்படும். நிலையத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
மனித மனம் விசித்திரமானது. நம்பிக்கைகளாலும், அனுபவத்தாலும் இது இயக்கப்படுகிறது. நாம் எதைப்பற்றியெல்லாம் அதிகம் யோசிக்கிறோமோ, எண்ணுகிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம். நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல செயல்கள் நம்மையும், நம் வாழ்வையும் மேம்படுத்தும். நாம் பொது விஷயங்களை எப்படிப் பார்க்கிறோம், அவற்றை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது, நம் மனதைப் பொறுத்தே அமைகிறது. மனதை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
'த்ரி' என்றால், மூன்று என்று அர்த்தம். மூன்று கோணங்களைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்திருக்கும் இந்த ஆசனம்.செய்முறை:* நேராக நிமிர்ந்து கொண்டு, கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். * வலது காலை அகட்டி 3 அல்லது 4 அடி அகலத்துக்கு தள்ளி வைத்துக் கொண்டு, மூச்சை உள்ளிழுத்தவாறே, கைகளை பக்கவாட்டில் உயர்த்தி தோள் வரை கொண்டு செல்லவும். * மூச்சை வெளிவிட்டுக்கொண்டே, மெதுவாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
“என்ன செய்கிறாய் பாலு?'' என்று கேட்டார் ஞாநி மாமா. அவருக்கு எப்பவுமே கரகரப்பான குரல். “வாய்ஸ் எக்சர்சைஸ்” என்றான் பாலு. “என்ன திடீரென்று?” என்றேன். “இந்த வாரம் உலக குரல் தினக் கொண்டாட்டம் வருகிறது. அதற்கு ஒரு பாட்டு பாடப் போகிறேன். குரலைத் தயார் செய்துகொண்டிருக்கிறேன்.” என்றான் பாலு.“பாடுவதற்கு ஏற்ற இனிமையான குரல் இல்லாதவர்கள் எல்லாம் குரல் தினம் கொண்டாடுகிறீர்களா? ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
நாமெல்லாம் சிங்கம், புலி, கரடியை வனவிலங்கு காட்சியகங்களுக்குப் போய் ரசிக்கிற கோஷ்டி. வனங்களுக்கே சென்று, அங்கேயே கரைந்துபோவது இன்னொரு கோஷ்டி. சூர்யா, இதில் இரண்டாவது வகை. புலிகள் காப்பகத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டு, இயற்கையியலாளராக உருவாகியிருக்கும் இளைஞர் 'வைல்ட்லைஃப் போட்டோகிராபர்' சூர்யா. தான் பார்த்து, உணர்ந்த காடுகளின் வாழ்க்கை குறித்து, வழிகாட்டி நூல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
சுப்பைய சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை). ராமானுஜனுக்குப் பிறகு, கணிதத்தில் சிறந்து விளங்கிய இந்திய மேதைகளில் முக்கியமானவர். பிறந்த தேதி: 5.4.1901.இடம்: தென்காசி அருகே வல்லம் கிராமம். தொடக்கக் கல்வி: குற்றாலம் அருகே இலந்தூர் கிராமம். உயர்நிலைப் பள்ளிக் கல்வி: எஸ்.எம்.எஸ்.எஸ். அரசுப் பள்ளி, செங்கோட்டை.இன்டர்மீடியட் கல்வி: ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
கேரளாவின் வயநாடு மாவட்டத்திலிருந்து உருவாகும் கபினி ஆறு, கிழக்கே கர்நாடக மாநிலத்தின் நரசிப்பூரில் சென்று காவிரி ஆற்றுடன் கலக்கிறது. மைசூரிலிருந்து ஐம்பது மைல் தொலைவில் உள்ள சர்கூரில் அமைந்திருக்கும் கபினி நீர்த்தேக்கப்பகுதியும், கபினி கழிமுகமும், நாகரஹோளே என்றழைக்கப்படும் காடுகளை வளமாக்குவதோடு, காட்டுயிர்கள் அடர்த்தியாக இப்பகுதியில் வாழவும் வழி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
சில விளையாட்டுகளை எத்தனை முறை விளையாடினாலும் அலுக்காது. அதுபோன்ற ஒன்றுதான், 'மெல்ல வந்து கிள்ளிப் போ' விளையாட்டு. ஊகிக்கும் திறனை மேம்படுத்துவதே இந்த விளையாட்டின் சிறப்பம்சம். இரண்டு அணிகள் விளையாடும் இவ்விளையாட்டில், ஒவ்வொரு அணியிலும், 5 லிருந்து 10 நபர்கள் வரை இருக்கலாம். உதாரணத்திற்கு, மொத்தம் 14 பேர் இருக்கிறோம் என்றால், தலா ஏழு, ஏழாக 'ஏ' மற்றும்'பி' அணி என ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
ஏப்ரல் 11, 1869: கஸ்தூரிபா காந்தி பிறந்த நாள்மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவி. அவருடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார். இந்திய விடுதலைப் போரில் பங்குபெற்று, பலமுறை சிறை சென்றார்.ஏப்ரல் 12, 2011: உலக விண்வெளி நாள்ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின், 1961, ஏப்ரல் 12ல் முதல் மனிதனாக விண்வெளிக்குச் சென்று பூமியை 1 மணி 48 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
சார்லி சாப்ளின் - 16.04.1889 - 25.12.1977அவனும், அவனுடைய தாயாரும், கலை அரங்குகளில் பாடல் பாடி நடித்தால்தான், மொத்தக் குடும்பமுமே உயிர்வாழ முடியும் என்ற துயரநிலை. ஒருமுறை அவனது தாயாரால் பாட முடியாமல் போக, அவன் பாடத் தொடங்கினான். அவன் பாடிய பாடலைக் கேட்ட ரசிகர்கள், காசை அள்ளி வீசினர். அப்படி வீசப்பட்ட காசுகளை எடுப்பதும், பிறகு பாடுவதுமாக இருந்த அவனது செய்கை, அத்தனை பேரையும் சிரிக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
யூடியூப் என்ற வீடியோ தளம், இன்றைய மாணவர்களிடையே மிகவும் பிரபலம். உண்மையில் யூடியூப் பார்ப்பது, ஆக்கபூர்வமானதா, அடிமைப்படுத்துகிறதா என்பதை, கொளத்தூர் எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்த வாரம் விவாதிக்கிறார்கள்.சிராஜுதீன்: வெறும் டெக்ஸ்டா படிக்கிறதைவிட, ஏதாவது எக்ஸாம்பிளோட குறிப்பா விஷுவலாக படிக்கும்போது, சீக்கிரமாகவும் எளிமையாகவும் புரிஞ்சுக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 10,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X