Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன.சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மாற்றம் காரணமாக பெட்ரோலியப் பொருள் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19 ம், டீசல் விலை லிட்டருக்கு 0.89 காசுகளும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
இந்தியாவின் இஸ்ரோ (ISRO) அமைப்பும் அமெரிக்காவின் நாசா (NASA) அமைப்பும் இணைந்து ஒரு செயற்கைக் கோளை உருவாக்க உள்ளன. சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் காரணிகள், சுனாமி, நில நடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு இந்த செயற்கைக் கோள் பயன்படும். இதற்கு 'நிஸார்' என்று பெயர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் 'கதிமான் எக்ஸ்பிரஸ்' (Gatiman Express) என்ற ரயில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் டில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடையில் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும். டில்லியிலிருந்து ஆக்ராவுக்கு 300 கிலோ மீட்டர் தொலைவு. இந்த ரயிலில் பயணம் செய்தால், ஒன்றரை மணி நேரத்தில் டில்லியிலிருந்து ஆக்ராவைச் சென்றடைய முடியும். இந்த வண்டியின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
தமிழகம் முழுவதும் பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும், இலவச, கட்டாயக் கல்வி கிடைக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்குகிறது. மத்திய அரசின் 'அனைவருக்கும் கல்வி' இயக்கத்தின் எஸ்.எஸ்.ஏ. என்ற திட்டத்தின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக மீன் வளம் குறைந்து வருகிறது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் 'நாசா' தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில், வெப்பநிலை உயர்ந்து கடல் நீர் சூடாகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு 'எல் நினோ' (El Nino) என்று அழைக்கப்படுகிறது. பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பில் வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம்தான் எல் நினோ. El Nino- ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நினைவாக டில்லியில் 'கலாம் அறிவுசார் மையம்' அமைய உள்ளது. இந்த மையத்தில் கலாம் பயன்படுத்திய புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட உள்ளன. மத்திய அரசின் வேண்டுகோளின்படி ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் உறவினர்கள், அவரது உடைமைகளை டில்லி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, சுற்றுலாத்துறை அதிகாரிகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
இந்தியாவில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 5ல் மும்பையிலிருந்து லண்டனுக்கு எஸ்.எஸ். லாயல்டி என்ற பயணிகள் கப்பல், வணிக ரீதியாக முதல்முறையாக இயக்கப்பட்டது. இது நேஷனல் மரைன் அகாடமியில் பதிவு செய்யப்பட்டது. இந்த தினம் கடல்சார் வணிக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இந்த ஆண்டு கடல்சார் வணிக தின விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, இழுவைக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள், தங்கள் மொபைல் போனில், 'டிவி' நிகழ்ச்சிகளை இனி, காண முடியும். நான்கு மெட்ரோ நகரங்கள் உட்பட, 16 நகரங்களில், தூர்தர்ஷனின், 'டிஜிட்டல் டெரஸ்டிரியல் டெலிவிஷன்' (Digital Terrestrial Television - DTTV) சேவை தொடங்கப்பட்டுள்ளது. யு.எஸ்.பி ஓ.டி.ஜி. (USB On The Go) வசதியுள்ள ஸ்மார்ட் போன்,'டேப்லெட்'களில் 'டிவி' நிகழ்ச்சிகளைக் காணலாம். சீரான அலைவரிசைக்கு தேவையான மென்பொருளை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
Jaipur, April 5 - A museum will be opened at Nahargarh Fort in Rajasthan which will showcase wax and silicon figures of famous national and world personalities. The Jaipur Wax museum would provide an opportunity for the visitors to have a closer look at the statues of famous persons, cultural figures, stars from Bollywood, Hollywood, sports, history, music, literature and pop stars. The statues will have an unique background and surroundings, complimenting each figure to enhance the look. An interactive area is proposed to be landscaped outside the venue surrounding the ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி பூமியின் நடுப்பகுதியில் என்ன இருக்கிறது? அங்கு எவ்வளவு வெப்பம் இருக்கும்?ரஞ்சித் குமார், 8ஆம் வகுப்பு ஆ, அரசு மேல்நிலைப்பள்ளி, கருவலூர்பூமியின் மையத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. நட்டநடுவில் 1,220 கி.மீ. ஆரம் அளவு கொண்ட, திட நிலையிலான இரும்புப் பந்து உள்ளது. அதைச் சுற்றி இளகிய குழம்பு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
கொசு... இந்தச் சின்னஞ்சிறு பூச்சி உலகில் இல்லாத இடமே இல்லை. மனித ரத்தம் மட்டுமின்றி தாவரச் சாறுகளையும் இது உணவாக உட்கொள்கிறது.கொசுக்கள் 210 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றி விட்டன. டைனோசர் காலத்தில் இருந்தே வாழ்கிறதோ!?குடும்பம் குலிசிடே (Culicidae) இனம் பூச்சி பெயர் காரணம்: மஸ்கேடாஸ் (Musketas) என்ற ஸ்பானிஷ் வார்த்தைக்கு 'சிறிய பூச்சி' என்று பொருள். இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
கடற்கரையில் விதவிதமான மணல் வீடுகள் கட்டி விளையாடினோம். சென்னையில் மட்டும் பீச் இல்லாமற்போயிருந்தால், நகரத்தில் பாதி பேருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்று ஓர் எழுத்தாளர் எழுதியிருப்பதாக ஞாநி மாமா அடிக்கடி சொல்வார்.திருவல்லிக்கேணியில் இப்போது கண்ணகி சிலை இருக்கும் கடற்கரையருகே போகும்போதெல்லாம் எனக்கு பாரதியார் ஞாபகம் வரும். அவர் வீடு அருகேதானே இருந்தது! ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
நைட்ரஸ் ஆக்ஸைடுக்கு (Nitrous oxide) இன்னொரு பெயர்தான் சிரிப்பூட்டும் வாயு. வாசனையாகவும் நிறமற்றதாகவும் எளிதில் தீப்பற்றாததுமாக இருக்கிறது. இதைச் சுவாசிக்கும்போது சிறிய அளவிலான மயக்கமும் உற்சாக உணர்வும் ஏற்படுவதால் 'சிரிப்பூட்டும் வாயு' என்கிறார்கள். இதன் வேதியியல் வாய்ப்பாடு N2O.ஜோசப் பிரிஸ்ட்லி (Joseph Priestley) என்பவர் இதை 1772ல் கண்டுபிடித்தார். ஆனாலும் அப்போது யாரும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
சுந்தரும் கலையும் காட்டுக்குச் சென்றார்கள். அவர்கள் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கியபோது, தவறுதலாக ஒரு கரடிக்குக் குறுக்கே ஓடினார்கள். ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டார்கள். சிறிது நேரத்தில் கரடி அங்கிருந்து சென்றுவிட்டது. சுந்தருக்குத் தாகமாக இருந்தது. கலையிடம், ''எனது தண்ணீர் வெளியே ஓடிவிட்டது. உன் தண்ணீரை எனக்குத் தருகிறாயா?'' என்று கேட்டான்.1) தவறுதலாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
தேர்தல் என்கிற சொல் உங்கள் காதில் விழாமல் தவிர்க்கவே முடியாது.இப்போது தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் நடக்க இருக்கிறது.சட்டமன்றம் என்பதைப் பற்றிச் சில விஷயங்கள் தெரிந்துகொள்வோம். கட்சி அரசியல் பற்றி இல்லாத விஷயங்கள்!தமிழகத்தில் மொத்தம் உள்ள சட்ட மன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை: 234. தமிழக சட்டமன்றம் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது.இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
சாந்தி: என்ன மஞ்சு, கூலிங் கிளாஸ், குடைன்னு புது ஸ்டைல்ல இருக்கே?மஞ்சு: ஸ்ஸ்ஸபா... வெயில்ல இருந்து எப்படித்தான் தப்பிக்கிறது? சா : உன்னை எல்லாம், குவைத், சவுதி மாதிரி மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு மாசம் அனுப்பி வைக்கணும். ம : ஐ... அந்த நாடுகளுக்கெல்லாம் டூர் போறதா? ஜாலியாப் போவேனே...சா : ம்... ஜாலியா? அந்த மாதிரி எண்ணெய் வளமிக்க நாடுகள்ல வெயில் காலம் ரொம்பக் கொடுமையா இருக்கும்.ம : ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
ராமு என்கிற மாணவன் தன் அத்தை வீட்டிற்கு வந்திருந்தான். அவன் வயல் வரப்புகளை சுற்றிப் பார்க்கும் போது ராஜாவும், விவசாயியும் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டான்.அவர்களின் பேச்சில் இருந்து விவசாயி, அரசனின் ரகசிய ஒற்றன் என்பதை ராமு அறிந்தான். மேலும் ஆர்வம் கொண்டவனாய் அவர்களின் பேச்சை உற்றுக் கேட்க ஆரம்பித்தான்.''நம்மால் எதிரிகளை அழிக்க முடியாது. அவர்களின் படை பலம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
பகைவர்களிடம் தன் நாட்டை இழந்த அரசர், காட்டில் பதுங்கி இருந்தார். தன் நாட்டை மீட்கத் திட்டம் தீட்டினார்.அரசருக்கு உதவி செய்ய நினைத்தார் விவசாயி ஒருவர். தன் நிலத்தில் கிடைத்த மந்திரப் பானை ஒன்றை அரசரிடம் கொண்டுப் போய் கொடுத்தார். அந்தப் பானைக்குள் எதைப் போட்டாலும் அது பன்மடங்காகப் பெருகி விடும் ஆற்றல் கொண்டது. அந்த ஆற்றலைக் கொண்டு நிறைய வீரர்களை உருவாக்கினார் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
நாட்டில் நிலவும் வறுமையைப் பயன்படுத்தி பக்கத்து நாட்டு அரசன் தன் நாட்டின் மீது படையெடுத்து வரும் செய்தியை ஒற்றன் மூலம் அறிகிறார் ராஜா. படையை திரட்ட ஆரம்பிக்கிறார். சிறுவர்களையும் அதற்கு உதவியாய்ப் பயன்படுத்த நினைக்கிறார். அப்படி ஒரு சிறுவனைத் தேர்வு செய்கிறார். அவன் பெயர் ராமு. அவனை அழைத்து, ''பக்கத்து நாட்டில் உள்ள உன் அத்தை வீட்டிற்குச் செல். அங்குள்ள நிலையை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
சோலையூர் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்துவந்தார் வாணவ வர்மன். திடீரென நாட்டில் கடும் பஞ்சம் வந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து பக்கத்து நாட்டு மன்னன் வீரவேல் கேசரி, புறாவின் காலில் ஓலையைக் கட்டி அனுப்பி போருக்காகச் செய்தி அனுப்பினான்.நாட்டில் புகழ் பெற்று விளங்கிய விவசாயி ஒருவரை அணுகி உதவி கேட்டார் மன்னர். விவசாயி படைவீரர்கள் அனைவருக்கும் உணவுக்கான பொறுப்பை, தான் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
ராமு அத்தை வீட்டுக்கு வந்திருந்தான். அந்த சின்ன ஊருக்கு வந்த சில நாட்களிலேயே அனைவரிடமும் புத்திசாலி எனப் பெயர் எடுத்திருந்தான். ஒரு மாலை வேளையில் ராமு தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது ராஜா அந்த வழியாக வந்தார். அங்கிருந்த விவசாயி ஒருவர் மன்னர் வருகையால் மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்து ''வருக அரசே! வருக!'' என வரவேற்றார்.மன்னர் சோகமாக, ''இப்போது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
பார்சல் செய்யும் காக்கி நிற சுருள் காகிதம் பார்த்திருப்போம். அட்டை மாதிரி சற்று தடிமனாக இருக்கும். நெளிநெளியாக இருப்பதனால், இதை சுலபமாகச் சுருட்ட முடியும். இதைக் கொண்டு விதவிதமான கலைநயம் மிக்க பொருட்களைச் செய்யலாம். கிளை மீது அமர்ந்திருக்கும் ஆந்தையாக இதை உருமாற்றப் போகிறோம்.தேவையான பொருட்கள்: பார்சல் சுருள், அலுமினியச் சருகு (foil), பசை, மார்க்கர் பேனா, பச்சை நிற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
01. இந்த ஆளோட அப்பா என்னோட மகன். இந்த ஆள் யார்?பேரன்02. எட்டுப் பேர் நாங்க. எங்க தலைவரைக் காப்பாத்த முன்னாலே போவோம் பின்னாலே வரமாட்டோம். நாங்க யாரு?செஸ் பான்03. ஒருவன் மூழ்கிவிட்டான் நனையவில்லை. எப்படி?புதைகுழி04. தயாரித்தவருக்குத் தேவையில்லை வாங்கியவருக்குப் பயனில்லை உபயோகிப்பவர் பார்ப்பதில்லை. அது எது?சவப்பெட்டி05. காலையில் நாலு கால் மதியத்தில் ரெண்டு கால் மாலையில் மூணு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
ஓர் அழகான குதிரை. அரண்மனை முன் நிற்கிறது. நிறைய அலங்காரங்களுடன் அழகாக, கம்பீரமாக இருக்கிறது. அது ஒருவேளை பஞ்ச கல்யாணிக் குதிரையாகக்கூட இருக்கலாம்.குதிரைகளிலேயே அபூர்வமானதும் உயர் ரகம் எனக் கருதப்படுவதும் பஞ்ச கல்யாணிதான். (பலபேர் பஞ்ச கல்யாணி என்றால் கழுதை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.)மன்னர் கை அசைத்ததும் குதிரை நடக்க ஆரம்பிக்கிறது. கூடவே சில வீரர்கள் பின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
'இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்'. இந்த வாக்கியத்தைச் சொன்னது நான்தான். ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவனான நான், பாஸ்டன் நகரில் 1706, ஜனவரி 17ல் பிறந்தேன். மொத்தம் 17 பிள்ளைகளில் நான் 10ஆவது பிள்ளை. என் அப்பா சோப்பு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
சார்லி சாப்ளின் பிறந்த தினம் ஏப்ரல் 1616.4.1889 - 25.12.1977கருப்புத் தொப்பி, பொருந்தாத ஷூக்கள் அணிந்த வளைந்த கால்கள், கையில் ஒரு நீண்ட குச்சி, யாரோ மையைத் தெளித்துவிட்டது போன்ற துளி மீசை... சொல்லும்போதே ஒரு கேலிச்சித்திரம் மனதில் உருவாகிறது அல்லவா? வசனங்கள் இல்லாமல் தன் சேட்டைகளால் உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்தான் அவர்!சிறு வயதில் வறுமையில் வாடிய சாப்ளின், தனது ஐந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
டாக்டர். அம்பேத்கர் பிறந்த தினம் ஏப்ரல் 1414.4.1891 - 6.12.1956சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் அம்பேத்கர். ஆசிரியர், எழுத்தாளர், சமூக நீதிப் புரட்சியாளர் என, பல சிறப்பு அடையாளங்களைக் கொண்டவர். 'பாபா சாகேப்' என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், மத்தியப் பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரஜோற்பத்தி… இப்படி வரிசையாகச் சொன்னால்… ஏதோ மந்திரம் என்று நினைக்கத் தோன்றும். இவை எல்லாம் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள். ஆனால், பாருங்கள், எல்லாம் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. இந்தப் பெயர்களின் தமிழ்ப் பெயர்களாக நற்தோன்றல், உயர் தோன்றல், வெள்ளொளி, பேருவகை, மக்கட் செல்வம்... எனப் பெயர்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், காலண்டர்களில் இந்தத் தமிழ்ப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
இதோ இப்போது நீங்கள் கொண்டாடப்போவது தமிழ்ப்புத்தாண்டு. அதேபோல தீபாவளி, ரம்ஜான்,கிறிஸ்துமஸ் என எத்தனை எத்தனையோ விழாக்களில் மகிழ்ந்திருப்பீர்கள். விழாக்கள் என்றதும் வண்ணமயமான காட்சியை மனம் ஓவியமாய் வரைகிறது. ஆடிப்பாடி, தின்பண்டங்களைச் சுவைத்து பண்டிகைகளை இனிமையாகக் கழிக்கிறோம். அந்தக் காலத்திலும் நம் முன்னோர்கள் விழா கொண்டாடியிருப்பார்கள் அல்லவா? அப்போது புகழ் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
முற்காலத்தில் அரண்மனைகளையும் வணிகத் தெருக்களையும் பெரிய மதில் சுவர் கட்டிப் பாதுகாத்துக்கொள்வது வழக்கம். இதைக் கோட்டை என்பார்கள். பண்டைய சீனப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசர்கள், ஒரு படி மேலே போய்விட்டார்கள். தாங்கள் ஆட்சி செய்த ஒட்டுமொத்த நாட்டையும் சுற்றி மதில் சுவர் எழுப்பினார்கள். சீனாவின் சுவர் கட்டும் கலாச்சாரம் தொடங்கியது 3,100 வருடங்களுக்கு முன்னர். அப்போது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஒரு பெருஞ்சுவர் உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள கும்பல்கர்க் கோட்டையின் பெருஞ்சுவர்தான் அது. ஆறு அடி அகலமும் 36 கிலோ மீட்டர் தூரமும் உடைய இந்தப் பெருஞ்சுவர் ஆரவல்லி மலைத் தொடரின் மீது அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1100 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. ராஜா ராணா கும்பா என்பவரால் 15ஆம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
நகைச்சுவை கதை எழுதிய பாதிரியார்(வீரமாமுனிவர்)கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி.இத்தாலியைத் தாயகமாகக் கொண்டவர். அங்கே காஸ்திகிலியோன் என்ற இடத்தில் (8.11.1680) பிறந்தவர். ஒரு பாதிரியாராக 1710 இல் கோவாவுக்கு வந்தார்.கொஞ்சம் நகர்ந்து தமிழகத்துக்கும் வந்தார். தமிழ் கற்க ஆரம்பித்தார். கற்கக் கற்க அவருக்கு தமிழ் மீது பெரிய பற்று வந்துவிட்டது. தன் பெயரை தைரியநாதன் என்று வைத்துக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி 'காடு' எனப்படும். சதுப்பு நிலக் காடுகள், பசுமை மாறாக் காடுகள் என காடுகளில் இரண்டு முக்கிய வகைகள். காடுகளின் நில அமைப்பையும், அங்கு வளரும் மரங்கள், தாவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். பசுமை மாறாக் காடுகள், சதுப்பு நிலக் காடுகள், அகன்ற இலைக் காடுகள், மலையகக் காடுகள், முட்புதர்க் காடுகள் போன்றவை காடுகளின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
நம்மை யாராவது தாக்க வந்தால் அல்லது ஏதேனும் மிருகம் துரத்தி வந்தால் நாம் தப்பிக்க முயற்சி செய்வோம் அல்லவா? நம்மைப் போலவே விலங்குகளும் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள சில உத்திகளைப் பயன்படுத்துகின்றன. இந்த உத்திகள் ஆச்சரியமாகவும், சுவாரசியமாகவும் உள்ளன. கரையான்: கரையான்கள் உருவாக்கும் புற்றின் சுவர்கள் கடப்பாரையைக் கொண்டு தகர்க்க முடியாத அளவு பருமனும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
11.04.1869: கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக, தானும் உழைத்தவர். தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்குகொண்டு சிறை சென்றவரும், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியுமான கஸ்தூரிபா பிறந்தார்.13.04.1919: வட இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் இருக்கிறது ஜாலியன்வாலா பாக் திடல். டையர் என்கிற ராணுவ அதிகாரியின் தலைமையில் அங்கே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
பட்டம் வந்தது பாருபடிக்கச் செய்தி நூறுஅட்டைப் படங்கள் ஜோருஅக்கம் பக்கம் கூறு!குட்டிச் செய்தி உண்டுகதைகள் கூட உண்டுவட்டம் போட்டுக் கொண்டுவாசி! பலன்கள் உண்டு!வெங்கி மாமா பதிலும்விதவித மாய்ப் புதிரும்பொங்கித் ததும்பும் பட்டம்படித்தால் தொடலாம் உச்சம்!அன்பைச் சொல்லும் பட்டம்அறிவை வளர்க்கும் பட்டம்இன்பம் கூட்டும் பட்டம்என்றும் படிப்போம் பட்டம்!- துஷ்யந்த் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
சமண சமயத்தைப் பரப்பியவர் மகாவீரர். அஹிம்சை வழியை உணர்த்தியவர். பீகார் மாநிலம், வைசாலிக்கு அருகே உள்ள குண்டல என்ற கிராமத்தில் கி.மு.599ல் பிறந்தார். மகாவீரரின் இயற்பெயர் வர்த்தமானர். 'சாலா' என்னும் மரத்தடியில் மகாவீரர் ஞானம் பெற்றார். இந்தியா முழுவதும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார்.பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் டில்லியில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தாய்லாந்தின் ரட்சனாக் இன்டனான் 21 - 17, 21 - 18 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் லி ஜுருயை வீழ்த்தினார். அதே ஆட்டத்தின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜப்பானின் கென்ட்டோ 21 - 15, 21 - 18 என டென்மார்க்கின் விக்டரை வீழ்த்தி, பட்டம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், உலக டுவென்டி - 20 'கனவு லெவன்' அணியை அறிவித்தது. இதில் கேப்டனாக இந்திய வீரர் விராத் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டார். பட்டியலில் இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஜோ ரூட் மற்றும் வாட்சன் (ஆஸி.), நெஹ்ரா (இந்தியா) ஆகியோருக்கும் இடம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
'டுவென்டி - 20' உலக கோப்பை தொடரில் சொதப்பிய பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதையடுத்து கேப்டன் அப்ரிதி, பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் பதவி விலகினார்கள். 'டுவென்டி - 20' அணியின் புதிய கேப்டனாக சர்பராஸ் அகமது நியமிக்கப்பட்டார். விக்கெட் கீப்பரான இவர், ஏற்கெனவே ஒரு நாள் அணியின் துணை கேப்டனாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில், மயாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர் - 1' வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6 - 3,6 - 3 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் நிஷிகோரியை வீழ்த்தி, கோப்பை வென்றார். இந்த வெற்றியின் மூலம் மாஸ்டர்ஸ் அந்தஸ்து பெற்ற தொடரில் ஸ்பெயினின் நடாலை (27) முந்தி, அதிக பட்டம் (28) வென்ற வீரர் என்ற வரலாறு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
கோல்கட்டாவில் நடந்த 'டுவென்டி - 20' உலகக் கோப்பை பைனலில் முதலில் 'பேட்டிங்' செய்த இங்கிலாந்து அணி 155/9 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி ஓவரில் 4 சிக்சர் விளாசிய பிராத்வைட் வெற்றி தேடித் தந்தார். 20 ஓவரில் 161/6 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இரு முறை உலக கோப்பை (2012,16) பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனை படைத்தது. அதே போல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
இந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், உலக பாட்மின்டன் தரவரிசையில் முதல் 16 இடங்களில் உள்ளவர்கள் மட்டுமே விளையாட முடியும். இதனால், இந்தியாவின் காஷ்யப்(17வது இடம்), மலேசிய மற்றும் சிங்கப்பூர் ஓபனில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால், காயம் (கணுக்கால், அடிவயிறு) காரணமாக இத்தொடரில் இருந்து விலகியதால் காஷ்யப்பின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன்.அஜித் வடேகர் (1974)மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் விளையாட்டு நட்சத்திரம்.பல்பீர் சிங் (ஹாக்கி, 1957)'பார்முலா-1' போட்டியில் அதிக முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர்.மைக்கேல் சூமாக்கர் (ஜெர்மனி, 7 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X