Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
வேகமாக வளரும் மக்கள்தொகை, குறைவான நீர் ஆதாரங்கள் ஆகிய இரண்டுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலை நீடித்தால், 2050ல் உலகின் மக்கள்தொகையில் 25 சதவீதம் பேருக்கு, சுத்தமான குடிநீர் கிடைக்காது. மக்கள்தொகை நெரிசல் மிகுந்த நாடுகள், அதிகம் பாதிப்புக்கு ஆளாகக்கூடும்.சரியான முறையில் நீர்வளத்தை பங்கிட்டுக்கொள்வதே, வருங்காலத்தில் உலக அமைதிக்கான வழியாக இருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில், தமிழக வீராங்கனை ஜென்னிதா ஆண்டோ தங்கம் வென்றுள்ளார்.திருச்சி, பொன்மலைப் பட்டியைச் சேர்ந்த இவர், போலியோவால் பாதிக்கப்பட்டவர். இதனால் இரண்டு கால்களும், ஒரு கையும் செயலிழந்து போனது. ஆனாலும், சிறுவயதிலிருந்தே செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். இவரை ஊக்கப்படுத்தி, மாவட்ட, மாநிலப் போட்டிகளில் பங்கேற்கச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
பிளாஸ்டிக் மக்கவே மக்காது என்று தெரிந்ததும், பலரும் அதன் பயன்பாட்டைக் குறைத்து வருகிறோம். அதேசமயம், நமது கவனத்தையும் மீறி, பிளாஸ்டிக் குப்பைகளை உருவாக்குகிறோம். அதில் பால் பாயின்ட் பேனாவும் உண்டு. பள்ளிப் பருவம் தொடங்கி, நாம் உபயோகிக்கும் பேனாக்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது, சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் மாசு அளவில் பெரியது. இதனை உணர்ந்த ஒரு பள்ளி மாணவி, தனது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
திலாப்பியா (Tilapia) என்ற மீன் வகை ஒன்று உள்ளது. இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா நாடாகும். நன்னீரில் வளரும் மீன் இனம் இது. தீக்காயங்களுக்கான சிகிச்சையில், காயங்கள் விரைந்து ஆறுவதற்கு, இந்த மீனின் தோல் மிகுந்த பயனளிக்கிறது. பிரேசிலில் மருத்துவர்கள் இம்மீனின் தோலை வெட்டி எடுத்து, சுத்தம் செய்து, தீக்காயங்களுக்கு கட்டுப்போட பயன்படுத்துகின்றனர். இம்மீனின் தோல், காயங்களில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
பார்க்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு, கதை கேட்கும் அனுபவத்தை ருசிகரமாக மாற்ற முடிவு செய்த சில மாணவர்கள், 'கதை சொல்லும் சுவர்' ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தில் உள்ள சாய் சர்வதேசப் பள்ளி மாணவர்கள், ஒடிசா பார்வையற்றோர் சங்கப் பள்ளியில் பயின்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கியுள்ள இந்தப் புதுமையான திட்டம் நல்ல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
சுத்தமான பி.எஸ்.4 எரிபொருள் என்கிறார்களே, பி.எஸ். என்றால் என்ன?ரா.ரமணன், 6ம் வகுப்பு, சேரன் குளோபல் மெட்ரிக் பள்ளி, சேடபட்டி, திண்டுக்கல்.Bhrath Stage' என்பதன் சுருக்கமே BS. கார், லாரி, ஸ்கூட்டர் போன்ற வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்தும்போது, புகையை உமிழும். அப்போது அதனுடைய புகை அளவைக் கட்டுப்படுத்தும் தர அளவை BSIII, BSIV, BSV எனக் குறிப்பிடுகின்றனர். இத்தகைய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற கேள்வியை நாம் விளையாட்டாகக் கேட்டிருப்போம். முட்டை எப்படி உருவாகிறது? முட்டை அமைப்பு மிகவும் சிக்கலானது. ஆனால் சீரானது. கருப்பையிலும், முட்டைக் குழாயிலும் முட்டை உருவாகிறது. கோழிக்கு உடலின் இடது புறத்தில் ஒரே ஒரு கருப்பை உள்ளது. சில பறவைகளுக்கு இரு கருப்பைகளும் முட்டைக் குழாய்களும் இருப்பது உண்டு. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
பச்சைப்பசேல் என செழிப்புடன் வளரும் தாவரமே கண்கொள்ளா அழகு என்றால், அதில் பூக்கும் மலர்கள் அதைவிட அழகு. மலர்கள் செறிந்த தாவரம், நமது மனதைக் கொள்ளைகொண்டு போகும் அல்லவா? மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. மலருக்கு அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என்ற ஏழு வகை வளர்பருவங்கள் உண்டு என, இலக்கியம் கூறுகிறது. வாழ்த்துவதற்காக அளிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
உலகில் இருக்கிற புல், பூண்டு முதல் மனிதன் வரை, எல்லாவற்றிற்கும் உயிர் உண்டு எனத் தத்துவஞானிகள் கருதுகின்றனர். இதனை அறிவியல்பூர்வமாக நிரூபித்தவர் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ். அவர், தாவரங்களுக்கு உயிர் உண்டு; அவை சுவாசிக்கின்றன; உணவு உட்கொள்கின்றன என்பதை ஆய்வு செய்து நிரூபித்தார். நுண்ணிய மின் கருவிகளைக் கொண்டு, தாவரங்களின் உயிர் அணுக்களை ஆராய்ந்து இம்முடிவினைக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
கடற்கரையில் கைக் காற்றாடி வாங்கினோம். கடற்கரையில்தான் இந்த மாதிரி விளையாட்டுப் பொருட்கள் கிடைக்கின்றன. சோப் நுரையில் குமிழ்கள் ஊதும் கருவி, எனக்குப் பிடித்த இன்னொரு விளையாட்டுக் கருவி. நானும் பாலுவும் யார் ஊதிய குமிழ் பெரிசாக வருகிறது என்று போட்டி போட்டு ஊதுவோம்.பட்டம், கைக்காற்றாடி எல்லாம் கடையில்தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் நாமே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
தற்கால இந்திய வரலாற்று ஆசிரியர்களில் மிக முக்கியமானவர் ராமசந்திர குஹா. 1947-க்குப்பின், இந்திய வரலாறு முடிந்துவிடவில்லை என்பதை தீவிரமாக நம்பும் இவர், தற்போதைய தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல், பழங்குடியினர், அரசியல், கலாசாரம், மானுடவியல் தொடர்பான வரலாற்று நூல்களை எழுதி வருகிறார். அமெரிக்காவின் 'ஃபாரின் பாலிசி' என்னும் புகழ்பெற்ற இதழ், இவரை உலக ஆளுமைகளுள் ஒருவராகத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
சென்னையின் மையப்பகுதி. அன்றாட வாழ்க்கைக்கு ஆட்டோ ஓட்டினால் தான், வருமானம் வரும் என்ற நிலை. ஒரே அறைதான் மொத்த வீடும். இங்கிருக்கும் சிறுவன் ஒருவன், விபத்தாலும் மற்ற பல காரணங்களாலும் முதுகெலும்பு முறிந்து எதிர்காலமே கேள்விக்குறியாக இருப்பவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும், சக்கர நாற்காலியில் பல ஊர்களுக்குச் செல்கிறான். 12 வயது நிரம்பிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
பெரும்பாலானோருக்கு ஒரே ஒரு பெயர்தான். சிலருக்கு மட்டும் பள்ளியில் ஒரு பெயர், வீட்டில் ஒரு (செல்லப்) பெயர் இருக்கும்.ஆனால், அந்தக்காலத்தில், நிலைமையே வேறு. ஒருவருடைய செயற்பாடுகள், சிறப்புகளைப் பொறுத்து, அவர்களுக்குப் பல பெயர்கள் சூட்டப்படும்.எடுத்துக்காட்டாக, தமிழ் பக்தி இலக்கியத்திற்குப் பல இணையற்ற பாடல்களை வழங்கிய திருநாவுக்கரசருக்கு எத்தனை பெயர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
வெயிலுக்கு பாட்டி மரத்தடியில் உட்கார்ந்து இருந்தாள். மரத்தின் இழைகள் (1) கீழே உதிர்ந்து கிடந்தன. வயதானால் நாமும் ஒரு நாள் இப்படித்தான் உதிர்ந்து போவோம் என்று நினைத்தாள் பாட்டி. அவள் தளை (2) யில் இருந்த சருகை தன் கரங்களால் தட்டி விட்டாள். அந்த வழியாகச் சென்ற மோர்க்காரியை அளை (3) த்தாள். வெயிலுக்கு தாகமாக இருக்கிறது, கொஞ்சம் மோர் கொடு என்றாள். மோர் குடித்த பாட்டி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
ஒரு நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதை நன்னூல் குறிப்பிடுகிறது. நூல் அமைய, பத்து அழகான விஷயங்களை அது குறிப்பிடுகிறது. அந்த பத்து விஷயங்களை உள்ளடக்கி எழுதப்படும் நூல், அழகுடையவை என்றும் கூறுகிறது. அந்தப் பத்து அழகான விஷயங்கள்தான் என்னென்ன?* சொல்வதைச் சுருங்கச் சொல்லுதல்.* சுருங்கச் சொல்லிய போதிலும், கற்பவர்க்கு புரியுமாறு இருத்தல். * கற்பவர்க்கு இனிமை பயக்குமாறு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
ஜூன் 12, 2002 - உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள்உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான குழந்தைகள் மிகவும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைத் தவிர்க்கும்பொருட்டு, உலகில் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஜூன் 13, 1944 - பான் கி மூன் பிறந்த நாள்ஐக்கிய நாடுகள் சபையின் எட்டாவது பொதுச் செயலாளர். இரண்டு முறை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
கக்கன் | 18.6.1908 - 23.12.1981 | தும்பைப்பட்டி, மேலூர், மதுரை.எத்தனை தலைவர்கள் வந்தாலும் போனாலும், ஒரு சிலரை மட்டுமே இந்த வரலாறு நினைவில் வைத்திருக்கும். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலைவர்களில் கக்கனும் ஒருவர். காலம் பல கடந்தும், இவர் மீது அளவில்லாத மதிப்பும், மரியாதையும் இருக்கக் காரணம் அவரது எளிமையான பண்பு நலன்கள்தான். சாதாரண மனிதராக இருந்ததுடன், சாதனை மனிதராகவும் இருந்தார்.பல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
பள்ளிப் படிப்பை முடித்து, உயர்கல்விக்குச் சேர விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வு பெரும்பாலும், மருத்துவம், பொறியியல் சார்ந்த துறைகளாகவே உள்ளன. உயர்கல்வியில் வேறு துறைகளில் படிக்கும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. 'மருத்துவமும் பொறியியலும்தான் உங்கள் முதல் தேர்வா அல்லது வேறு துறைகளா?' என்ற தலைப்பில் மாணவர்களின் கருத்துகளை அறிய 'நீங்களும் பங்கேற்கலாம்' என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X