Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
உலகம் முழுவதும், ஸ்மார்ட் போன்கள் விற்பனை, 150 கோடியாகவும் 2020ம் ஆண்டில் 190 கோடியாகவும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில், மொபைல் போன் விற்பனை குறைவாக இருந்தது. இருப்பினும், இந்தியாவில் 2015ல் 16.70 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு விற்பனையான அனைத்து மொபைல் போன்களில், ஸ்மார்ட் போனின் பங்களிப்பு, 61 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
'வேர்ல்டு 2050' என்ற நூல் வெளியீட்டு விழாவில், பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் 'நம் வேலைகளைப் பறிக்கப் போகிறது ரோபோ! இதற்கு, தொழில்நுட்பம் அல்லது உலகமயமாக்கல் என்ற இரண்டு அம்சங்கள்தான் காரணம். இதன் விளைவாகவே, சேவை சார்ந்துள்ள நாடுகளில் தொழில்நுட்பம் ஒதுக்கப்படுகிறது. இந்தியா, வியட்னாம் போன்ற ஏற்றுமதியைச் சார்ந்துள்ள நாடுகளுக்கும், தொழில்நுட்ப மாற்றங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
சென்னை அருகே உருவாக உள்ள, 'ஏரோஸ்பேஸ் பூங்கா'விற்கான சுற்றுச்சூழல் அனுமதியை, மத்திய அரசு தந்துள்ளது. இதனால், பல மாதங்களாக தடைப்பட்டு இருந்த இந்தத் திட்டம் செயல்பட ஆரம்பிக்கிறது. தமிழகத்தில், ஓசூர் உள்ளிட்ட சில இடங்களில் விமான உதிரிபாக உற்பத்தி ஆலைகள் இருந்தாலும், சென்னையில் இல்லாமல் இருந்தது. அதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வல்லம் - வடகால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
'உலகம் முழுவதும், கடந்த மே மாதத்தில் மிக அதிக வெப்பம் நிலவியது, கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவு, மே மாதத்தில் கடுமையான வெப்பம் காணப்பட்டது. வழக்கமாக, மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகமாகவும் மே மாதத்தில் பல பகுதிகளில் வசந்த காலமாகவும் இருக்கும். ஆனால், மே மாதத்தில் கடுமையான வெப்பம் நிலவியது. எல்-நினோ தாக்கம் அதிகமாக இருந்ததற்கு, கார்பன்-டை ஆக்சைடு படலம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
'இந்தியா முழுவதும் தற்போது வெப்ப அலை நிலவி வருகிறது. பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் உள்ள 'பஹலோடி' என்னும் நகரில் அதிகபட்ச வெப்ப நிலையாக 51 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகி இருக்கும் மிக அதிகபட்ச வெப்பநிலை இதுதான். இதற்கு முந்தைய அதிகபட்ச வெப்ப நிலை 1956ல் பதிவாகிய 50.6 செல்சியஸ் ஆகும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
பூமியைச் சுற்றும் சிறு கோள் (Asteroid) ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு '2016 HO3' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சிறுகோள் 100 மீட்டர் அகலத்துக்கு அதிகமாக இருக்காது என்று கருதப்படுகிறது. பூமியைச் சுற்றி நீள் வட்டப் பாதையில் வலம் வருவதைப்போல் உள்ள இந்தச் சிறு கோள், பூமியுடன் சேர்ந்து சூரியனையும் சுற்றி வருகிறது. இந்தக் கோளை பூமியும் சூரியனும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
'ஸ்வச் பாரத்' எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை, நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு மிகத் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட நாடு முழுவதும் 95 இடங்களில் இந்த உரத் தயாரிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நாட்டின் மிகப் பெரிய பிரச்னை, குப்பைக் கழிவுகள் அதிகம் சேருவதுதான். இந்தக் குப்பைக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
A combination of text messages and individual counselling sessions to motivate patients with Rheumatoid Arthritis may lead to improved patient outcomes, scientists have found for the first time. This type of behavioural intervention was effective at reducing daily sitting time by an average of more than two hours in Rheumatoid Arthritis (RA) patients, and also reduced their cholesterol levels. Due to their disease, patients with RA tend to be more sedentary than the general population, which can have serious health consequences, including an increased risk of cardiovascular disease and premature ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
ஃபெவிகால் (Fevicol) பட்டால் இரும்பு ஒரே நாளில் துருப்பிடிப்பது ஏன்?ப.ஜெயக்குமார், 7ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, மாடாம்பூண்டி.ஃபெவிகால் போன்ற செயற்கை பசைகள், பாலிவினைல் அசிடேட் (Polyvinyl Acetate) போன்ற வேதிப் பொருட்களால் ஆனது. இவை ஓரளவு அமிலத்தன்மை கொண்டவை. காற்றில் உள்ள நீர்ப் பசையை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையும் கொண்டவை. எனவேதான், இவற்றைக் காற்றுப் புகாமல் வைக்க வேண்டும். அமிலமும் ஈரமும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
ம.பொ.சிவஞானம் பிறந்த தினம் ஜூன் 26வறுமை காரணமாக மூன்றாம் வகுப்போடு பள்ளிக் கல்வியை நிறுத்தியவர். குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் புரிந்தவர். சிறு வயதிலேயே அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். இப்படிப்பட்ட ஒருவரால் என்னவெல்லாம் சாதித்திருக்க முடியும்?! தெரிந்து கொள்வோம் வாருங்கள்! சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்தவர் ம.பொ.சி. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
மூளைக்கு வேலை தருகிற சவாலான விளையாட்டு 'க்யூப்' (Cube). ஒரே மாதிரியான வண்ணம் ஒரே பக்கத்தில் வருவது போல, சதுரங்களை இணைக்கிற விளையாட்டு.'க்யூப்' விளையாட்டை உருவாக்கியவர் ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக்கலைப் பேராசிரியர் 'எர்னோ ரூபிக்' (Erno Rubik). இவர் புதுமையான ஒரு கன சதுரத்தை 1974ல் உருவாக்கினார். அதை எல்லாப் பக்கங்களிலும் திருப்ப முடியும். ஆனால், தனித்தனியாகப் பிரிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
குமிழி உறைத்தாள்கள் (பபுள் ராப் / Bubble Wrap) கையில் கிடைத்தால் உடைத்து விளையாடி இருக்கிறீர்களா? 'டப்' 'டப்' என்று அவற்றை நசுக்கி விளையாடுவதில் நமக்கு ஒரு ஜாலி... மகிழ்ச்சி... பொருட்களை பத்திரமாக சுற்றி அனுப்புவதற்காக குமிழி உறைத்தாள் பயன்படுகிறது. ஆனால் இவை பொருட்களை அனுப்புவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. நியூ ஜெர்சியைச் சேர்ந்த 'அல் ஃபீல்டிங்' (Al Fielding), 'மார்க் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
“அதிகாரம்ன்னா என்னன்னு சொல்லு பார்ப்போம்” என்று கேட்டான் பாலு. “எந்த அதிகாரத்தைக் கேட்கறே? திருக்குறள்ல வர்ற 133 அதிகாரத்தையா?”“அது, ஒரு புத்தகத்தைப் பகுதிகளா பிரிக்கறது. அதைக் கேக்கல. இந்த வாலு, நான் அது மேல எப்பவும் என் அதிகாரத்தைக் காட்டிகிட்டிருக்கேன்னு சொல்லுது. அந்த அதிகாரம்ன்னா என்ன?”“யோசிக்கணும் பாலு” என்றேன். யோசித்தேன்.சுற்றிப் பார்த்தால் எங்கேயும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
'அல்ஜீப்ரா' எனும் வார்த்தைக்கு 'மீட்டெடுத்தல்' என்று பொருள். இது ஒரு அரேபிய வார்த்தை. 'சமன்படுத்துதல்' மற்றும் 'முழுமை பெறுதலுக்கான கணக்கீடுகள்' என்ற அர்த்தத்தில் இது விளங்குகிறது. கணிதத்தில் அல்ஜீப்ரா எனும் சொல்லை 'இயற்கணிதம்' என்கிறோம். சமன்பாடுகளின் தீர்வுகளைப் படிப்படியாகக் கணக்கிடும் முறையை, பெர்சிய நாட்டுக் கணித மேதை அல்-கவாரிஸ்மி தெளிவாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
வெளவால் பறவையா? அது பறக்கும் தன்மையுள்ள விலங்கு. பாலூட்டிகளில், பறக்கும் சக்திகொண்ட ஒரே உயிரி வெளவால்தான்.உலகில் கோடிக்கணக்கான உயிரிகள் இருக்க, அதற்கு எல்லாம் இல்லாத சிறப்பு வெளவாலுக்கு மட்டுமே இருப்பது ஆச்சரியம்தான். வௌவால்களில் ஆயிரக்கணக்கான இனங்கள் உண்டு. பகலில் உறங்கி இரவில் மட்டுமே இரை தேடும். கூட்டமாக மரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும். உணவுக்காக 50 கிலோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
அந்தப் பாட்டிக்கு என்று யாருமே இல்லை. ஓர் ஆள் என்றாலும் சாப்பிட வேண்டும் அல்லவா... சமைத்துக்கொண்டு இருந்தாள் பாட்டி. உழை கொதித்தது. பாட்டி அரிசியில் இருந்த கள்ளைக் களைந்து போட்டாள். சிறிது நேரத்தில் பொங்கி வந்தது. தீயைக் குரைத்து எறியவிட்டாள். சோறு நன்கு குலைந்து போகும் முன் ஒரு தட்டால் மூடி, கஞ்சியை வடித்தாள். நீர் ஊற்றி அடுப்பை அணைத்தாள். அடுப்பின் கறியை ஓர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
உலகம் முழுக்க தினமும் ஆயிரக்கணக்கான பூக்கள் மலர்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றின் பெயர்கள்தான் நமக்கு சட்டென்று ஞாபகத்துக்கு வரும். அப்படி ஞாபகத்தில் வரும் சில பெயர்களைச் சொல்லுங்கள் என்று கேட்டால் மல்லி, முல்லை, சாமந்தி, கனகாம்பரம், மகிழம்பூ, தாமரை, இருவாட்சி, தாழை (தாழம்பூ), ரோஜா என்று சொல்லலாம். இவற்றில் ஒன்றின் பெயர் மட்டும் பழங்காலத்தில் கைதை என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
பள்ளியில் மாணவர்கள், 'பட்டம்' இதழைக் கையில் வைத்தபடி ஏதோ விவாதித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் சென்று, விசாரித்தேன். அவர்கள், பெரிய சிலைகள் பற்றிய வெளியாகி இருந்த செய்தியைக் காண்பித்து, “மிஸ், இந்தச் சிலைகளின் அருகே சென்றால் அதன் பீடம் பெரிதாகவும், உச்சிப் பகுதி மிகச் சிறிதாகவும் தெரியும். சற்றுத் தொலைவில் இருந்து பார்த்தால் உச்சிப் பகுதி பெரிதாகவும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
சாந்தி: தக்காளி சாதம், தக்காளிச் சட்னி, தக்காளிக் குருமான்னு காஸ்ட்லி லஞ்ச் கொண்டுவந்துருக்கியே... ரொம்ப வசதியா மஞ்சு?மஞ்சு: அட! தக்காளியை என்னவோ தங்கம் மாதிரிப் பேசறே?சா: தக்காளி விலை சதம் அடித்துள்ளதால், மக்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளார்கள்.ம: ஓ தலைப்புச் செய்தியாவே ஆயிடுச்சா? எங்க வீட்டுத் தோட்டத்துலயே தக்காளி விளையுது. அதனாலதான் இன்னைக்கு தக்காளி ஸ்பெஷல்.சா: ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
வெட்டாமல், ஒட்டாமல், தைக்காமல் பொம்மை செய்ய முடிந்தால் எவ்வளவு ஜாலியாக இருக்கும். அப்படி ஒரு சுலபமான முறையில் ஸ்நோமேன் பொம்மை செய்து பார்ப்போமா...தேவையான பொருட்கள்: வெள்ளை நிற பிளாஸ்டிக் பந்துகள், சிறியது -1 பெரியது -1. வெள்ளை நிற சாக்ஸ் -1. தகவல் பலகைக் குத்தூசி (சிவப்பு நிறம்) - 1, மணி பொருத்திய குண்டூசிகள், கருப்பு - 2, வெள்ளை 2, நீலம் - 2, கருப்பு நிற சட்டைப் பொத்தான்கள் - 2, சிவப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
நான் ஆட்சி செய்தது இந்தியாவாக இருந்தாலும் பிறந்தது இங்கிலாந்தில் உள்ள விண்ட்ஸர் என்ற இடம்.ஆரம்பகாலக் கல்வியை வீட்டிலேயே கற்று, அதன் பிறகு, ஹெர்ட்ஃபோர்டுஷயரில் இருந்த லாக்கர்ஸ் பார்க் பள்ளியில் சேர்ந்தேன். பிறகு கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியில் பொறியியல் பயின்றேன். அப்போதே, 1920ல் கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றேன்.அதற்கு அடுத்த வருடமே இளவரசர் எட்வர்டு உடன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
மலைகளின் அரசி ஊட்டி - தெரியும்! பழங்களின் ராணி?அந்தப் பழத்தை நீங்கள் அப்படியே கழுவிச் சாப்பிடலாம். அல்லது சாறாக செய்து குடிக்கலாம். உலர்ந்த பழமாகவும் சாப்பிடலாம். பாயாசம், ஐஸ்கிரீம் போன்றவற்றிலும் கலந்து உண்ணலாம்.அந்த பழம், 'பழங்களின் ராணி' என்று பெயர் பெற்றிருக்கும் திராட்சை!இது கொடியில் காய்க்கும் கனிவகை. கொத்துக் கொத்தாய்க் காய்க்கும். மெல்லிய தோலும் உள்ளே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
இசை இன்பத்திற்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. ஒலியின் ஒழுங்கு செய்யப்பட்ட வடிவமே இசை. இசை என்ற சொல்லுக்கு இசைதல் என்று பொருள். மனிதனை மட்டுமல்ல மற்ற உயிரினங்களையும் இசையச் செய்கிற ஓர் அரிய விஷயம்தான் இசை.இந்துஸ்தானி, கர்நாடகம், கஜல், மேற்கத்திய இசை, கிராமிய இசை என எத்தனையோ இசை வகைகள் உள்ளன. இந்திய இசை, இன்னிசையை (Melody) அடிப்படையாகக் கொண்டது. ராகம், தாளம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
நெருப்புக் கோழிகளின் பூர்வீகம் ஆப்பிரிக்கா. நெருப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெப்பப் பிரதேசத்தில் தாக்குப் பிடிக்கும் விதத்தில் இதன் உடலமைப்பு உள்ளதால் இந்தப் பெயர் வந்தது.நெருப்புக் கோழியின் விலங்கியல் பெயர் 'ஸ்ட்ருதியோ கேமெலஸ்' (Struthio Camelus).குதிரைகளுக்குப் பூட்டுவது போல சேணங்கள், கடிவாளம் பூட்டி நெருப்புக் கோழிகளை வண்டி இழுக்கச் செய்வதை மேலை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
சர்வதேச யோகா தினம் ஜூன் 21“ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். வயசானதால ஓய்வு எடுக்கப் போய்ட்டாராம். அதனால, ஆட்சிப் பொறுப்பை ஏற்க இன்னொரு ராஜா வந்தாராம்”. இதே கதைதான் நம் உடலுக்கும்! நாம் குழந்தையாக இருக்கும்போது வேலை செய்த சுரப்பிகள் 10 வயதிற்குள் தம் வேலையை முடித்துக்கொள்கின்றன. அதன் பிறகு, மற்ற சுரப்பிகளை வேலை செய்யத் தூண்ட வருகிற ராஜாதான் பிட்யூட்டரி. சுரப்பிகளின் ராஜா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
பொசு பொசுவென்று உடல் முழுக்க முடிகளுடன் பார்க்க ஒரு பொம்மையைப் போல் இருக்கும் முயல் குட்டிகளை நம் எல்லோருக்கும் பிடிக்கும். பொம்மைகளைப் போலவே வெள்ளை, கறுப்பு, பழுப்பு என பல்வேறு நிறங்கள் முயலுக்கு. யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாது. துன்புறுத்தாது. பயந்த சுபாவம் உள்ள தாவர உண்ணி. காடு, புதர், பொந்துகளில் வசிக்கும். ஆண் முயல் டோ (doe) என்று அழைக்கப்படுகிறது . ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
இசையமைப்புக்காகத் தரப்படும் கிராமி அவார்டுககளை 25 முறை வாங்கியவர். வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருதையும் 1996ல் பெற்றவர். ஆஸ்கார் விருதையும் அடைந்தவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செவ்விசை உலகில் குன்றாமல் ஒளிவிடும் ஒரு பெயர் ஸ்டீவி வொண்டர்.பெற்றோரின் ஆறு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர். பிறப்புக்காகக் குறித்த நாளுக்கு ஆறு வாரங்கள் முன்பே பிறந்தார். ஆகவே, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த 15ஆவது யூரோ கோப்பை தொடர் ஜூன் 10ஆம் தேதி பிரான்ஸில் தொடங்கியது. இந்தத் தொடர், ஜூலை 10வரை நடக்கவுள்ளது. வண்ணமயமான தொடக்க விழாவுக்குப்பின், முதல் லீக் போட்டியில் பிரான்ஸ் - ருமேனியா அணிகள் மோதின. இதில், பிரான்ஸ் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
ஹராரேயில் நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 123 ரன்களுக்குச் சுருண்டது. இதை 'சேஸ்' செய்த இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் (63*), பைஜல் (55*) என்று அசத்த, 21.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 126 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று கோப்பையையும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
பிரேசிலில் ஒலிம்பிக் போட்டி (ஆகஸ்ட் 5 - 21) நடக்க உள்ளது. இதில், டென்னிஸ் இரட்டையர் பிரிவில் மிக நீண்ட இழுபறிக்குப் பின், அனுபவ பயஸுடன் சேர்ந்து விளையாட சக இந்திய வீரர் போபண்ணா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ஏழாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்று, சரித்திரச் சாதனை படைக்க இருக்கிறார் பயஸ். பெண்கள் இரட்டையரில் சானியா - தாம்ப்ரே ஜோடியும், கலப்பு இரட்டையரில் சானியா - ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில், 'ரேசர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்' தடகளப் போட்டிகள் நடந்தன. இதன் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 9:88 வினாடியில் கடந்த ஜமைக்காவின் 'மின்னல் வேக மனிதன்' உசைன் போல்ட் முதலிடம் பிடித்தார். இதன் மூலம், இந்த ஆண்டில் (ஜூன் 7) பிரான்ஸ் வீரர் ஜிம்மி விக்காட் எடுத்துக்கொண்ட 9:86 விநாடிக்கு அடுத்துக் குறைவான நேரம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
சிட்னியில் ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் செய்னா, சீனாவின் சன் யூவைச் சந்தித்தார். இதில் ஆதிக்கம் செலுத்திய செய்னா 11-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினார். இதன்மூலம், 2014க்குப் பின் இந்தத் தொடரில் 2ஆவது முறையாகப் பட்டம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
'டுவென்டி - 20' பெண்கள் உலகக் கோப்பையில் அதிக முறை பட்டம் வென்ற அணிஆஸ்திரேலிய அணி (3 முறை, 2010, 2012, 2014)உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம்அஞ்சு பாபி ஜார்ஜ் (2003, பாரிஸ், நீளம் தாண்டுதல், வெண்கலம்)ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய வீரர்சுஷில் குமார் (மல்யுத்தம், 2008 - வெண்கலம், 2012 - ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X