Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
சர்.சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோர் நோபல் பரிசு பெற்று, நாட்டுக்குப் புகழ் சேர்த்து இருந்தாலும், அவர்கள் பிறந்த ஊர்களான, மாங்குடி மற்றும் புரசக்குடி கிராமங்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளன. அதனால், அவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக, அந்த கிராமங்களில் இலவச, 'வை - ஃபை' வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. “இதனால், மாணவர்கள் பயன் அடைவார்கள். இந்த இரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
“ராமநாதபுரம் மாவட்டத்தில் மரங்கள், மலைப்பகுதிகள் குறைவு. இதனால் இங்கே மழை அளவும் குறைவு. மாவட்டத்தைப் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் இந்த 11 லட்சத்து 54 ஆயிரத்து 420 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. சாலையோரங்கள், நீர்நிலைகளின் கரைகள், அரசு அலுவலக வளாகங்கள் என பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்படும். இந்தப் பணியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது, 'சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம்'. இதிலிருந்து பி.எஸ்.எல்.வி. சி34 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இதற்கு முன் 2008ஆம் ஆண்டு, முதல் முறையாக ஒரே நேரத்தில் 10 செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்த இஸ்ரோ, இப்போது தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான திரிகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, புத்தளம், புளியங்குளம் உள்பட 16 இடங்களில் வள்ளுவர் சிலைகளை நிறுவ முடிவு செய்தது வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம். இதற்காக சிற்பி ஜானகிராமன் என்பவரைக் கொண்டு பைபர் கிளாஸ் மூலப்பொருளால் 16 வள்ளுவர் சிலைகளை வடிவமைத்து இலங்கை அரசிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
அண்டவெளியில் நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கிரகம் ஒன்றை நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய கிரகத்திற்கு 'கே2--33 பி' என பெயர் வைத்துள்ளார்கள். சூரியக் குடும்பத்தின் கிரகமான நெப்டியூனை விட, சற்றுப் பெரிதாக உள்ள இந்த கிரகம், அதன் நட்சத்திரத்தை மிக நெருக்கமாகச் சுற்றி வருகிறது. நாசாவின் கெப்லர் விண்வெளி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
புற்று நோயை உருவாக்கும் ரசாயனத்தை பேக்கரி பொருட்களில் பயன்படுத்த இந்தியாவின் இந்திய உணவு பாதுகாப்புத் தர ஆணையம் தடை விதித்துள்ளது. டெல்லியில் நடந்த சோதனையில் 84% பொட்டாசியம் ப்ரோமேட் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆய்வில் பொட்டாசியம் ப்ரோமேட் என்ற ரசாயனம் புற்று நோயை விளைவிக்கும் என்று தெரியவந்துள்ளது. இதை ஆணையத்தின் தலைவர் பவன் குமார் அகர்வால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
Scientists have found a way to use plastic trash to create a cleaner diesel-like fuel that could power vehicles, an advance that may turn landfills into potential energy sources in future. The researchers from the Chinese Academy of Sciences and University of California in the US hope to scale up the technique to allow for it to be used in actually reducing plastic trash. Plastics break down very slowly causing them to pile up in landfills and serving as the source material in artificial island creation in oceans. Scientists have been looking for ways to degrade plastics, particularly polyethylene, the most common kind produced, but until now have not been able to find inexpensive and scalable ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
வரலாற்றில் முதல் முறையாக இந்திய ராணுவ விமானப் படையில் மூன்று பெண்கள் போர் விமானிகளாக இணைந்திருக்கிறார்கள். பாவனா காந்த், அவானி சதுர்வேதி, மோகனா சிங் ஆகிய மூவரும், பல்வேறு கடினமான பயிற்சிகளை எடுத்துக்கொண்டவர்கள். முதல் கட்டத்தில் 150 மணி நேரம் விமானங்களை இயக்கிச் சாதனை படைத்தார்கள். இரண்டாவது கட்டமாக இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஹாக் போர் விமானங்களை 6 மாதங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
கோள்கள் எல்லாம் கோள வடிவில் இருப்பது ஏன்?கி.கேசவன். செங்கப்படை.பூமியை எடுத்துக்கொள்வோம், பூமியில் உள்ள எல்லா பொருட்கள் மீதும் இரண்டு எதிரும் புதிருமான விசைகள் செயல்படுகின்றன. ஒன்று பூமியின் மையத்தை நோக்கிக் கவர்ந்து இழுக்கும் ஈர்ப்பு விசை. இரண்டு பொருட்கள் ஏற்படுத்தும் விலக்குத் தன்மை கொண்ட எதிர்விசை. வெறும் ஈர்ப்பு விசை மட்டும் இருந்தால் பூமியில் கால் வைக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகள் பேசும் போது கவனித்திருக்கிறீர்களா? அவர்களின் பேச்சில் அடிக்கடி பழமொழிகள் பயன்படுத்துகிறார்களா? பழமொழிகள் முன்னோர்களின் அனுபவ மொழிகள். மனிதர்களை நல்வழிப்படுத்த உருவானவை. உலகம் முழுக்க எல்லா மொழிகளிலும் நாடுகளிலும் பழமொழிகள் பயன்பாட்டில் உள்ளன. எழுத்தில் எழுதி வைக்காமல் வாய்மொழியாக வளர்ந்த இலக்கிய வகை என்றே பழமொழிகளைக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
புத்தர் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது போதி மரம். போதி மரத்தடியில் அமர்ந்து புத்தர் ஞானம் பெற்ற கதை நமக்குத் தெரியும்.நமக்குத் தெரிந்த அரச மரம்தான் போதி மரம். இந்த மரத்துக்கு அத்திரு, அத்து(க)மானி, இலணை, கணவம், சுவலை, பணை, திருமரம் என்று வேறு பெயர்களும் தமிழில் உண்டு. ஆங்கிலத்தில் சேக்ரட் ஃபிக் (sacred fig) என்கிறார்கள். சமஸ்கிருதத்தில் அஸ்வதா (ashvatha). வட இந்தியர்களும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
நாஸ்டர்டாமஸ் நினைவு நாள் ஜூலை 2(14.12.1503 - 2.7.1566)கிளி ஜோசியம், எலி ஜோசியம், கைரேகை ஜோசியம், ஆக்டோபஸ் ஜோசியம் என்று ஆரம்பித்து கம்ப்யூட்டர் ஜோசியம்வரை கடை விரிப்பதைப் பார்த்துவிட்டோம். எதிர்காலம் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் இல்லாதவர்கள் யார்? அப்படித்தான் இங்கே ஒரு ஜோதிடர் நம் ஆர்வங்களைத் தூண்டுகிறார். அவர், 500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். தான் வாழ்ந்த காலத்துக்கு, 1500 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
“சிரிப்பு வருது, சிரிப்பு வருது, சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது” என்று பாடிக்கொண்டு வந்தான் பாலு.“சிரிச்சா சிரிப்புதான் வரும். ஓவரா சிரிச்சாதான் கண்ணுல தண்ணி வந்து அழுகை மாதிரி ஆயிடும். எதுக்குச் சிரிக்கறே சொல்லு” என்றேன். “ஒரு ரஜினி - கபாலி ஜோக் கேட்டேன். சிரிப்புத் தாங்கல. இன்னிக்கு 'உலக ஜோக் தினம்' இல்லியா? உனக்கும் அந்த ஜோக் சொல்லலாம்னு வந்தேன்” என்றான் பாலு. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா பிறந்த தினம் ஜூன் 27'வந்தே மாதரம்!' எனும் கீதத்தை இயற்றிய பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவின் பிறந்த தினம் இன்று! சுதந்திரப் போராட்ட காலத்தின், புகழ்பெற்ற எழுத்தாளராகவும், கவிஞராகவும், இதழியலாளராகவும் திகழ்ந்தவர் பங்கிம். தாகூருக்கு இணையான வங்காளப் படைப்பாளியாகப் போற்றப்படுகிறார். பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற பெயரில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
கி.மு. 2700ஆம் ஆண்டில் சீன அரச குடும்பத்தினர்தான் பட்டு (Silk) என்கிற துணி வகையை முதன் முதலில் கண்டறிந்தார்கள். பின்னர் பட்டாடைகளை உற்பத்தி செய்தார்கள். அதை ரகசியமாகவும் வைத்திருந்தார்கள். பிற்காலத்தில் அது படிப்படியாக உலகம் முழுக்கப் பரவியது. சீனர்கள்தான் இன்றும் பட்டு உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறார்கள். இந்தியா இரண்டாமிடம். உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, ஜப்பான், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் 15 மீட்டர் நீளமுடைய மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் நத்தை ஒன்று ஏறிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு நாள் பகலிலும் 5 மீட்டர் மேல்நோக்கி ஏறும். அதுபோல, ஒவ்வொரு நாள் இரவிலும் 4 மீட்டர் கீழ்நோக்கிச் சறுக்கிவிடும். இவ்வாறு, நத்தை ஒவ்வொரு நாளும் ஏறினால், எத்தனை நாட்களில் மரத்தின் உச்சியை சென்றடையும்? யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா?விடை: 11 நாட்கள்விளக்கம்: ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
பெய்தாலும் பேச வைக்கும். பொய்தாலும் பேச வைக்கும். அதுதான் மழை. இந்த வெயிலுக்குக் குளிர்ச்சியாக ஒரு சந்தப்பாட்டு உங்களுக்காக... இப்போது உங்கள் ஊரில் மழை பெய்தால், வெளியில் நீங்கள் பார்க்கும் காட்சியையும் இந்தப் பாட்டின் வரிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வாய்ப்பு!மழைவரும் போலமேகங்கள் சூழவானம் மிரட்டியதுகறுப்பு மேகம்சறுக்கிப் போககாற்று விரட்டியது'ஹோ' என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
30.06.1966: குத்துச் சண்டையில் வெற்றிகரமான ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்தார். இளம் வெடி, இரும்பு மைக் என்ற புனைப்பெயர்களைக் கொண்டிருந்த இரும்பு மனிதன், மைக்கேல் ஜெரார்டு டைசன் பிறந்த தினம்.30.06.1985: ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலேயே அதிக பதக்கங்களை பெற்று வரலாறு படைத்த அமெரிக்க நீச்சல் வீரர். சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளிலும் பல சாதனைகளைப் படைத்துள்ள மைக்கேல் பெல்ப்ஸ் பிறந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
சங்கர்: நீ பிராக்டிஸ் பண்றதப் பார்த்தா பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு ரெடி ஆகுறபோல?முன்னா: கொஞ்சம் ஓடினதுக்கே மூச்சு வாங்குது. இந்த குண்டு உடம்பை வச்சு நான் எங்க ஒலிம்பிக்ல விளையாடுறது?ச: ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் கிரேக்க நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் ஆரம்பிச்ச ஒலிம்பிக்ல கலந்துக்குறதுனா சும்மா இல்ல.மு: நீ சொல்றத கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் 27 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
சமையலுக்கு அம்மா வாங்கி வரும் காய்கறிகளில், உருளைக் கிழங்கு முறைத்துப் பார்க்கும், தக்காளி சிரிக்கும், கேரட் டான்ஸ் ஆடும் இப்படி ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு விதமாக நமக்குத் தெரியும். வெண்டைக்காய்களின் தலைப் பகுதியை வெட்டி, முகத்தில் ஒட்டி யாரையாவது பயம் காட்டி இருப்போம். இப்படி, காய்கறிகளை வைத்து சமையலைத் தவிர எல்லாமே செய்திருப்போம். அப்படி ஒன்றை இன்று நாம் செய்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
ஆந்திரப் பிரதேசம், வாரங்கல் மாவட்டத்தில், லக்னேபல்லி என்ற கிராமத்தில் ரங்கா ராவ் மற்றும் ருக்மிணியம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தேன். என் 3ஆம் வயதில், எங்கள் குடும்பம் வங்காரா கிராமத்திற்குக் குடிபெயர்ந்தது. அதன்பிறகு, ஓஸ்மானியா பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும் மும்பைப் பல்கலையின் கீழ் வரும் ஃபெர்குசன் கல்லூரியில் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றேன். என் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
நம் ஊரில் வெயில் காலம் என்றால்தான் தொப்பியைப் பற்றி யோசிப்போம். மேலை நாடுகளில் தொப்பி அணியாமல் வீட்டைவிட்டு ஒருவர் வெளியேறுவது அவமானத்துக்கு உரிய செயலாகப் பார்க்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தொப்பி என்பது உடையின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது. காலப்போக்கில் ஹாலிவுட் சினிமா நடிகர்களும், பாப் பாடகர்களும், தொப்பி அணிவதைக் கைவிட்டு, சிகை அலங்காரங்கள் மீது கவனம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
அறிவிப்புப் பலகைகள், பெரிய கடைகள், கடிகாரங்கள், சிக்னல்கள் (Signals), ஃபிரேம் (Frame) செய்யப்பட்ட படங்கள் ஆகியவற்றில் மின்மினிப்பூச்சி ஒளி போல அணைந்து அணைந்து ஒளிரும் விளக்குகளைப் பார்த்திருப்பீர்கள். இந்த விளக்குகள் 'ஒளி உமிழ் இருமுனைய விளக்கு' (லைட் எமிட்டிங் டையோடு விளக்கு -/ Light- Emitting- Diode Lamp) எனப்படும். சுருக்கமாக, எல்ஈடி - LED விளக்கு. 'ஒளி உமிழ் டையோடு' (லைட் எமிட்டிங் டையோட்- / Light- ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
ஸ்குவாட்ரண் லீடர் ராகேஷ் சர்மா. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். இது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில், வேதியியலின் முக்கியமான சோதனைகளைச் செய்த வேதி விஞ்ஞானி இவர். இது விஞ்ஞானிகளுக்கே அவ்வளவாகத் தெரியாத செய்தி. விண்வெளி ஆராய்ச்சியில் தற்போது அமெரிக்காவின் நாசா மையம் முன்னிலை வகிப்பது போல, அந்தக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
சின்னச் சின்ன சிலந்திகளைப் பார்த்திருப்போம்! மயில் போல ஆடுகிற வண்ணமயமான சிலந்தியைப் பற்றித் தெரியுமா? அதுதான் மயில் சிலந்தி (Peacock Spider). மயில் போல வண்ணங்களையும், அதைப்போலவே அழகாக ஆடுவதாலும் இதற்கு இந்தப் பெயர் வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் மட்டுமே இவை காணப்படுகின்றன. இந்த மயில் சிலந்தியைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. இவை கடிக்காது. இந்தச் சிலந்திகளால் மனிதனுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
நீரோடையில் பிறந்து கடலை நோக்கிப் பயணித்து கடலில் வளர்ந்து திரும்பவும் பிறந்த இடமான நீரோடைக்கு வந்து முட்டையிட்டு இறந்து போகிற ஒரு மீன் இனம் இருக்கிறது. கேட்க ஆச்சரியமாக இருக்கிறதுதானே! பறவைகள் தன் இனப்பெருக்கத்திற்காக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்கிறது என்பது நமக்குத் தெரியும். அதுபோலவே 'சால்மன்' (Salmon) என்ற மீன் இனம் இனப்பெருக்கத்திற்காக இடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
பருவமழை தொடங்கிவிட்டாலே பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாகத் தாக்கும். பொதுவாக, நாம் குடிக்கும் தண்ணீர் மூலமாகத்தான் பல்வேறு நோய்கள் வருகின்றன. டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை டெங்கு நோய், கடுமையாகப் பாதிக்கும்.டெங்கு காய்ச்சல் (Dengue Fever)ஏடிஸ் ஏஜிப்டி (Aedes Aegypti) என்ற கொசுவால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. DENV ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
103 டெஸ்ட் போட்டிஒரு நாள் போட்டி 23628 சர்வதேச 20-20 125 ஐ.பி.எல். போட்டி விக்கெட்டு 830இந்திய அணியில், பந்து வீச்சாளர்கள் (Bowlers) எத்தனை பேர் வந்தாலும், ஹர்பஜன் சிங் மட்டுமே 'சுழல் கிங்' ஆக வலம் வருகிறார். இவர், 1980 ஜூலை 3ல் பஞ்சாப், ஜலந்தர் நகரில் பிறந்தார். இவருக்கு மொத்தம் ஐந்து சகோதரிகள். எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்த இவருடைய செல்லப் பெயர்கள் என்ன தெரியுமா? பாஜி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
தாஷ்கன்ட்டில் நடந்த சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் பளுதூக்குதலில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணிக்கு ஒலிம்பிக்கில் இடம் கிடைத்தது. இதன் தகுதிப் போட்டியின் 77 கிலோ பிரிவில் சதீஷ் குமார் ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இரண்டாவது தமிழக வீரரானார். இதற்கு முன், டேபிள் டென்னிஸ் பிரிவில் சரத் கமல் இரண்டு முறை (2008, 2012) ஒலிம்பிக்கில் விளையாடி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
துருக்கியில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை 'ரிகர்வ்' பிரிவு கலப்பு இரட்டையர் ஃபைனலில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இந்தியா சார்பில் தீபிகா குமாரி, அடானு தாஸ் ஜோடி பங்கேற்றது. இதில் இந்திய அணி 1 - 5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
லண்டனில், சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. இதன் ஃபைனலில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் போட்டி 0 - 0 என சமநிலை வகித்தது. இதை அடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க 'பெனால்டி ஷூட் அவுட்' முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஹர்மன்பிரீத் சிங் மட்டும் ஆறுதல் அளிக்க, இந்திய அணி 1 - 3 என தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்தத் தொடரில் முதல்முறையாக வெள்ளிப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
பிரான்சில் யூரோ கோப்பை கால்பந்துத் தொடர் நடக்கிறது. இதன் 'பி' பிரிவு லீக் போட்டியில் ரஷ்யா, வேல்ஸ் அணிகள் மோதின. வேல்ஸ் அணியின் துடிப்பான ஆட்டத்திற்கு, எதிரணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. முடிவில், வேல்ஸ் அணி 3-0 என வென்று 'ரவுண்டு - 16' சுற்றுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி 3 'டுவென்டி - 20' போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1 - 1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. இதை 'சேஸ்' செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 135/6 ரன்கள் மட்டும் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
அமெரிக்காவில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் முதல் அரையிறுதியில் அசத்திய அர்ஜென்டினா அணி 4 - 0 என அமெரிக்காவை வீழ்த்தியது. இதில் ஒரு கோல் அடித்ததன் மூலம், அர்ஜென்டினா அணிக்கு அதிக கோல் (112 போட்டி, 55கோல்கள்) அடித்த வீரர் என்ற சாதனையை கேப்டன் மெஸ்சி அடைந்தார். இதற்கு முன், முன்னாள் வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா 54 கோல்கள் (78 போட்டி) அடித்ததே சாதனையாக இருந்தது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
ஒலிம்பிக் அரங்கில் தனிநபரில் அதிக தங்கம் வென்ற வீரர் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் (18, 2004 - 2012)உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையரில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம்? சிந்து (வெண்கலம், 2013, குவாங்சு - சீனா)மத்திய அரசின் பத்ம விபூஷன் பதக்கம் வென்ற முதல் விளையாட்டு வீரர்? தமிழக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X