Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
“பெண்களால் ராணுவத்தில் ஆண்கள் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்க முடியும். ராணுவத்தில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில் உள்ள உள்கட்டமைப்புப் பிரச்னைகள் சரி செய்யப்படும். முப்படைகளுக்கும் தளபதிகளாக பெண்கள் நியமிக்கப்படும் காலம் விரைவில் வரும்'' என்று மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் நம்பிக்கை தெரிவித்தார். டில்லியில் நடைபெற்ற 'ஃபிக்கி' (FICCI) ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை 'சென்னை உயர்நீதிமன்றம்' என மாற்றலாம் என்பது உட்பட முக்கிய உயர்நீதிமன்றங்களின் பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் பெயரை கொல்கத்தா உயர்நீதிமன்றம் எனவும், பாம்பே உயர்நீதிமன்றத்தின் பெயரை மும்பை உயர்நீதிமன்றம் எனவும் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. புது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
வியாழன் கிரகத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக 'ஜூனோ' (JUNO) என்கிற விண்கலம் தயாரிக்கப்பட்டது. இதை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ஒரு மில்லியன் டாலர் செலவில் தயாரித்தது. இந்த விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள 'கேப் கேனவெரல்' (Cape Canaveral) விண்வெளி மையத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பயணித்து 290 கோடி கி.மீ. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
இந்தியாவின் முதல் உயிரி எரிபொருள் (Bio Diesel) பேருந்து பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடுகிறது. டீசல், பெட்ரோல் ஆகிய எரிபொருள்களுக்கு அவ்வப்போது தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையை சமாளிக்கும் விதத்தில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத உயிரி எரிபொருள் (Bio Diesel) பயன்படுத்தி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையால் அங்குள்ள அணைகள் வழியாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. சராசரியாக 2000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது நீர்வரத்து 4000 கன அடியாக அதிகரித்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
பெரம்பலூர் மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் தமிழக அளவில் முதல் முறையாக ஆசிரியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' (Bio Metric) வருகைப் பதிவேடு ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது, தமிழகத்தில் முதல் முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கும் 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
Artificial Pancreas - a device which monitors blood glucose in patients with diabetes and automatically adjusts levels of insulin entering the body - is likely to be available by 2018, scientists say. Currently available technology allows insulin pumps to deliver insulin to people with diabetes after taking readings from glucose meters, but these two components are separate. It is the joining together of both parts into a 'closed loop' that makes an artificial pancreas, researchers of the University of Cambridge in the UK ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
மலேசியா நாட்டின் தபால் துறை, தமிழ் மொழியில் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. வெள்ளை நிற வட்ட வடிவத்தின் மையத்தில் அலங்காரத்தில் பயன்படுத்தப்படும் தென்னை ஓலை, மாவிலைத் தோரணங்கள் போன்ற வடிவமைப்பில் 'நன்னெறிப் பண்பு' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இதன் வடிவமைப்பாளர் வேலு பெருமாள் பெயரும் இந்த அஞ்சல் தலையில் இடம்பெற்றுள்ளது. தமிழுக்கு மலேசிய அரசு வழங்கியுள்ள கவுரவமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிசூரியன் காலையில் சிவப்பு மஞ்சளாகவும், மதியம் வெள்ளையாகவும் இருப்பது ஏன்?சு.கோகுல்,7ஆம் வகுப்பு, ஜெ.ஜி. வித்யாலயா,சென்னை- 33.சூரிய ஒளி என்பது நிறமாலை நிறங்களின் கலவை. காற்றில் ஒளி பரவும்போது காற்று மூலக்கூறுகளால் ஒளி சிதறடிக்கப்படும். இந்த ஒளிச்சிதறல் ஒளியின் அலைநீளத்தைப் பொருத்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
மெலிந்த அழகிய உடலமைப்பும், நீண்ட மெல்லிய வாலும் உடையவை வாலாட்டிக் குருவிகள். பறவை இனத்தில் 'மோடாசிலிடா' (Motacillidae) குடும்பத்தைச் சேர்ந்தவை. வாலை அடிக்கடி ஆட்டிக்கொண்டே இருக்கும். நீர் நிலைகளின் கரைகளில், சதுப்பு நிலங்களில், புல்வெளிகளில் இவை வாழும். சிறு பூச்சிகளை, புழுக்களைத்தேடி உணவாக உட்கொள்ளும். இவற்றில் பெரும்பாலானவை மழைக்காலத்தில் வலசை வருபவை. (ஓர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
அன்றாட வீட்டுப் பணிகள், பள்ளிப் பயிற்சிகள், ஆடைகள் உருவாக்குதல், தோட்டப்பணிகள், தொழிற்சாலைகள் எனப் பலவிதங்களில் கத்தரிக்கோலைப் பயன்படுத்துகிறோம். இந்த கத்தரிக்கோல் எப்போது, யாரால் உருவாக்கப்பட்டது? கத்தரிக்கோல் எகிப்து நாட்டில் கி.மு.1500ல் கண்டுபிடிக்கப்பட்டது. மெசபடோமியாவில் சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே கத்தரிக்கோல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இங்கிலாந்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
சூரியக் குடும்பத்தில் மிகப் பெரியது வியாழன் கிரகம் (ஜூபிடர் - Jupiter). சூரியனிலிருந்து ஐந்தாவது வளையத்தில் இருக்கும் இந்தக் கிரகம் பூமியைவிட ஆயிரம் மடங்கு அதிகமான கொள்ளளவு கொண்டது. வியாழன் கிரகத்தின் மேற்பரப்பு திடமாக இல்லாமல் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் நிரம்பியுள்ளது. இதனால் இது 'வாயுக் கிரகம்' என அழைக்கப்படுகிறது. திரவ நிலையில் உள்ள உலோகத் தன்மை வாய்ந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
பள்ளி வாகனங்களை அன்றாடம் பார்க்கிறோம். மஞ்சள் நிறத்தை ஏன் பள்ளி வாகனங்களுக்குத் தேர்ந்தெடுத்தார்கள்? மஞ்சள் நிறம் மற்ற நிறங்களைவிட அதிவேகமாக நம் கவனத்தை ஈர்க்கக்கூடியது. சிவப்பைவிட மஞ்சள், 1.24 மடங்கு விரைவாக நம் புறப்பார்வையை ('பெரிபெரல் விஷன்' - Peripheral Vision) ஈர்க்கிறது. அது மட்டுமல்ல, காலை, மாலை வேளைகளில் மஞ்சள் வண்ணமே பளிச்சென்று தெரியும்.கொலம்பியா பல்கலைக்கழகப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
ஒரு வாரமாக எல்லா இடத்திலும் இதே பேச்சுதான். அம்மா தன் சிநேகிதிகளுடன் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பா, டி.வி. பேப்பர் எல்லாம் பார்த்துவிட்டு "ஒரே குழப்பமாக இருக்கிறது" என்கிறார். பள்ளிக் கூடத்தில் கூட என் சிநேகிதர்கள் எல்லாரும் இதைப் பற்றியேதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.ஸ்வாதி பற்றித்தான் எல்லாப் பேச்சும். எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்தது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பெரும்பாலான மக்களுக்கு பிரிட்டன் என்றால் இங்கிலாந்துதான் நினைவுக்கு வரும். ஆனால், பிரிட்டன் என்பது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளையும் உள்ளடக்கியது. இதுவே கிரேட் பிரிட்டன் (Great Britain) எனப்படுகிறது. இதன் முழுப்பெயர் 'யுனைட்டட் கிங்டம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
சில தாவரங்கள், சில இடங்களில் மட்டுமே வளரும். குறிப்பிட்ட வகைத் தாவரங்களை வேறு இடங்களிலும், அவற்றிற்குத் தேவையான தட்ப வெட்ப சூழலைச் செயற்கையாக உருவாக்கி வளர்க்கலாம். அப்படி உலகெங்கிலும் இருக்கும் தாவரங்களைக் கொண்டுவந்து வளர்க்கும் இடம்தான் தாவரவியல் பூங்கா. தற்போது உலகில் ஏறத்தாழ 1,700 தாவரவியல் பூங்காக்கள் உள்ளன. இவற்றில் சுமார் 80,000 தாவர வகைகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
ஆதிகாலம் முதற்கொண்டு மனிதனின் செல்லமான வளர்ப்புப் பிராணியாக இருப்பவை நாய்கள். காவலுக்கும், வேட்டைக்கும் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழும் நாய், 'மனிதர்களின் நண்பன்'. கிரேக்க மன்னர் அலெக்ஸாண்டர் எவ்வளவு புகழ் பெற்றவரோ அவ்வளவு புகழ்பெற்றது அவருடைய நாயும்! அலெக்ஸாண்டரின் நாயின் பெயர் 'பெரிடாஸ்' (Peritas). ஒரு சிங்கத்தையும் யானையையும் கொல்கிற அளவிற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
“மெளவல் தெரியுமா?” என்று கேட்டால் நம்மில் சிலர் விழிப்போம். அது என்ன பூ? எப்படி இருக்கும்? நம் தோட்டத்திலேயும், சாலையோர மரங்களிலும் மலர்ந்து சிரிக்கும் மரமல்லிக்குத்தான் 'மெளவல்' என்று பெயர் . இந்தப் பூவிற்கு 'வஞ்சகம்' என்றொரு பெயரும் இருக்கிறது.இப்பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். மிகுந்த வாசனை உடையது. உதிரும் பூக்களை, குறிஞ்சி நில மகளிர் குவித்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
முன்னா: “அரம் செய்ய விரும்பு... ஆறாவது சினம்...”ஷங்கர்: “டேய் முன்னா… என்னடா சொல்லிட்டு இருக்க?”முன்னா: “ஆத்திசூடியை நாளைக்கு ஒப்பிக்கணும்டா… அதான் மனப்பாடம் பண்ணிட்டு இருக்கேன்.”ஷங்கர்: “அடேய்… உன்னை அரத்தால அடிக்க... அது 'அறம் செய விரும்பு, ஆறுவது சினம்… ஏண்டா இப்படித் தமிழைக் கொலை பண்றே…”முன்னா: “ஓ... அறம்னு சொல்லணுமா? அரம்னு சொன்னா இப்ப என்ன கெட்டுப்போச்சு… ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
ஸ்வெட்டர் பின்னும் உல்லன் நூலில் விதவிதமான மெது பொம்மைகள் செய்யலாம். இந்த வாரம் குட்டிக் கோழிக் குஞ்சு செய்து அழகு பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. மஞ்சள் நிற உல்லன் நூல்2. கூக்லி கண்கள்3. ஆரஞ்சு நிற ஃபோம் தாள்4. மெல்லிய குச்சிகள் அல்லது பேனா ரீபில் 25. கத்தரிக்கோல்6. பசைஇரண்டு விரல் அகலத்திற்கு உல்லன் நூலை 100 சுற்றுகள் சுற்றிக்கொள்ள வேண்டும். சுற்றுகளின் உட்புறமாக, மேலும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் உள்ள பரால் (Parral) என்ற நகரில் 1904ல் பிறந்தேன். 'ரிக்கார்டோ எலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்டோ' என்பது என் இயற்பெயர். பிறந்த சில நாட்களிலேயே தாயை இழந்தேன். எனது தந்தையார் ரயில்வேயில் கூலித் தொழிலாளியாகப் பணி புரிந்தார். எட்டு வயதில் கவிதை எழுதத் தொடங்கினேன். அந்தக் கவிதை இறந்துபோன என் தாயைப் பற்றியது. சிறு வயதிலேயே பிரபல கவிஞனாக ஆனேன். என் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
இயற்கை வழங்கியுள்ள மிகப் பெரிய கொடை சூரிய சக்தி. உயிர்களின் சூழல் முதல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை வரை சூரிய சக்தி உதவியில்லாமல் எதுவும் நடப்பதில்லை. சூரிய ஒளியை கண்ணாடி லென்ஸ் மூலமாகக் குவித்து காகிதத்தை எரிய வைத்துப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறோம். சூரிய சக்தியை மின் ஆற்றலாக மாற்றி மின் சாதனங்களைப் உபயோகிக்கும் வளர்ச்சியை தற்காலத்தில் நாம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
பூச்சிகள் என்றாலே ஏதோ அருவருப்பான விவகாரம் என்று பலர் நினைப்பது உண்டு. ஆனால், பூச்சிகள் இன்றி மனித இனமும், பிற விலங்கினங்களும் வாழ முடியாது என்பதே உண்மை. மரம், செடி, கொடி மற்றும் பிற விலங்கினங்கள்தான், நமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன என்பது நமக்குத் தெரியும். செடி, கொடி, மரங்களில் காய் கனிகள் காய்த்து, நம் உணவு மேஜைக்கு வரவேண்டும் என்றால், மகரந்தச் சேர்க்கை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
சில வகைக் கனிகளின் வாசனையே ஈர்க்கும். இப்படிச் சொன்னதுமே உங்களுக்கு மாம்பழம் நினைவுக்கு வருகிறதா? குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது மாம்பழம்.உலகின் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் விளையும். இந்தியா, பாகிஸ்தான், சீனா, பர்மா போன்ற ஆசிய நாடுகளில் இதன் விளைச்சல் அதிகம். மாங்கனி உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகில் பாதியளவு மாம்பழம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
'மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்நுணலும்தன் வாயால் கெடும்.'இது பழமொழி நானூறில் இடம்பெற்றுள்ள கடைசி இரு வரிகள். நுணல் என்பது தவளையைக் குறிக்கும். தவளை வயல் வரப்புகளில் மறைந்து வாழ்ந்தாலும் சும்மா இருக்காது. அவ்வப்போது தன் கரகர குரலால் சத்தம் எழுப்பியபடி இருக்கும். இதனால் தவளையின் இருப்பிடத்தை அறியும் பாம்பு போன்ற உயிரிகள் தவளையை இனம் கண்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
'செவ்வாய் கிரகத்தில் வசிக்க ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்!' பூமியில் இருந்து பல கோடி மைல் தூரத்தில் இருக்கும் இடத்துக்குப் போக ஏன் இத்தனை பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்? 'வரும் காலத்தில் பூமியில் வசிக்க இடம் இருக்குமா, அப்படி இல்லாமல் போனால் எங்கு வசிப்பது?' என்பது போன்ற கேள்விகள்தான் காரணம்! ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையால் பூமி நிரம்பி வழியும் காலம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
தாவரங்களிலேயே மிகவும் தடிமனான தண்டுப்பகுதி இதற்குத்தான் உள்ளது. இது பாவ்பாப் மரம். ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியாவில், மழைப்பொழிவு குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே இவை வளர்கின்றன. வறண்ட பகுதிகளில் வளர்வதால், தண்ணீரை உறிஞ்சித் தண்டில் சேமித்து வைத்துக்கொள்ளும். இதனாலேயே இவற்றிற்கு, உருண்டு திரண்ட பிரமாண்டமான தண்டுகள் உள்ளன. உச்சியில் கிராப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
காமராசர் பிறந்த தினம் ஜூலை 15தமிழ் நாட்டின் ஒரு மூலையில் இருந்த விருதுபட்டி என்னும் ஊர், ஒரு மனிதரால் பெருமை பெற்றது. அவர் காமராசர். பின்னாளில் அந்த ஊரின் பெயர் விருதுநகர் என்று மாறியது. காமராசருக்கு 'காமாட்சி' என்று பெயர் வைத்தனர். தாயார் செல்லமாக 'ராசா' என்று அழைத்தார். இரண்டும் சேர்ந்து பின்னாளில் காமராசர் ஆனது.ஆரம்பக் கல்வி மட்டுமே பயின்ற காமராசர் சுதந்திரப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்றில், உலகின் 'நம்பர் - 1' மற்றும் 'நடப்பு சாம்பியன்' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சாம் குயரே (41ஆவது இடம்) மோதினார்கள். இதில் ஏமாற்றிய ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார். இதனால், 'காலண்டர் கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வெல்லும் ஜோகோவிச் கனவு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
வெஸ்ட் இண்டீஸில், கரீபியன் பிரிமியர் லீக் தொடர் நடந்தது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த லீக் போட்டியில் டிரினிடாட் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் பார்படாஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அசத்திய டிரினிடாட் அணியின் ஹசிம் ஆம்லா, டுவைன் பிராவோ ஜோடி 'டுவென்டி - 20' அரங்கில் 5ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற சாதனை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
பிரான்ஸில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் முதல் அரையிறுதியில் போர்ச்சுகல், வேல்ஸ் அணிகள் மோதின. இதில் அபாரமாக செயல்பட்ட கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நானி தலா ஒரு கோல் அடிக்க போர்ச்சுகல் அணி 2 - 0 என வெற்றி பெற்றது. இதனால், இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக (2004, 2016) ஃபைனலுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி. ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடிவருகிறார். கடந்த 2007 முதல் 2009 வரை விளம்பர வருமானத்தில் ரூபாய் 30 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக, பார்சிலோனா நீதிமன்றத்தில் மெஸ்சி மீது வழக்கு தொடரப்பட்டது. முடிவில், மெஸ்சி மற்றும் இவரின் கணக்கை கவனித்து வந்த தந்தை ஜார்ஜ் ஹொராசியோவுக்கு தலா 21 மாத சிறை தண்டனையுடன் அபராதமும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
மும்பையில் இந்த மாதம் 12ஆம் தேதி தேசிய 'சீனியர்' ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் துவங்குகிறது. இதில் இந்திய வீரர்களான சவுரவ் கோசால், ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள். தமிழக வீராங்கனையான தீபிகா கடைசியாக 2011ல் இந்தத் தொடரில் விளையாடினார். இதன்பின், பரிசுத்தொகையை காரணம் காட்டி பங்கேற்கவில்லை. தற்போது 5 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தீபிகா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
கனடாவின் கேல்கரி நகரில், கனடா ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாய் பிரனீத், தென் கொரியாவின் லீ ஹியுன் மோதினர். இதில் அசத்திய சாய் பிரனீத் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், இந்தத் தொடரின் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.* ஆண்கள் இரட்டையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் மானு அட்ரி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
பெண்கள் 800 மீ. ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தவர்டின்டு லூகா (கேரளா, 1.59.17 நிமிடம், கான்டினென்டல் கோப்பை, 2010) அனைத்து உலகக் கோப்பை கால்பந்து தொடரிலும் பங்கேற்ற ஒரே அணி பிரேஸில் (1930 - 2014) செஸ் போட்டியில் 'கிராண்ட்மாஸ்டர்' பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை விஜயலட்சுமி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X